செவ்வாய் 12 2017

தேவையில்லா...விபரம்.....

அந்தக் காவல் நிலையத்தில்
 ஒருவர் தந்த புகாரின்
 மீதான விசாரனை செய்த
சார்பு ஆய்வாளர் எதிராளியின்
முகவரியை கேட்டதோடு அவரின்
சாதியை கேட்டார். அவரோ
எனக்கு சாதி இல்லை
என்றபோது கோபப்பட்ட
சார்பு ஆய்வாளர் அதெப்படி
பிறக்கும்போதே சாதி இருக்கும்
போது நீ சாதி இல்லை
என்று எப்படி சொல்லலாம்
என்று வானத்துக்கும் பூமிக்கும்
குதித்தார்..............................

மீண்டும் குற்றம் சாட்டப்
பட்டவர் சொன்னார் அய்யா
நான் பிறக்கும் போதும்
பள்ளியில் சேர்க்கும் போதும்
சாதி இருந்தது உண்மைதான்
நான் இப்போது தோழராகி
விட்டதால் எனக்கு சாதி
என்பது இல்லை..எனது
பெயரும் வீட்டு முகவரியும்
என் தந்தை பெயரும்
செல் போன் எண்ணுமே
தங்களுக்கு போதுமானது என்றதும்
அந்த சார்பு ஆய்வாளரின்
சத்தம் முனுமுனுப்பாக
மாறி அமைதியாகி விட்டது.

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...