புதன் 26 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-92.


செத்த பொணம் பேசுமோ...????











மாப்பில...இன்னிக்கு செய்தி பாத்தியா மாப்பில...

“இல்லீயே...மாமா.... என்ன விசேசம் மாமா...”???

“அது ஒன்னமில்ல மாப்பில....இந்த ஆதார் கார்டு இருக்குல..”

“ஆமா இருக்கு...சொல்லுங்க மாமா”

“ ஆதார் அட்டய..... நீட், தேர்வுக்கு, சிம் கார்டுக்கு, பேங்க்கு எல்லாம்  இனி கொடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாங்கே மாப்பில.....”

“ அட போங்க..மாமா....அந்த அட்டைய வாங்கி எல்லா வேலையையும் முடிச்சுபிட்டு சொல்லி என்ன பிரயோசனம்  மாமா..” செத்த பிறவு பொணத்த எரிச்சா..என்ன..? பொதைச்சா என்ன ? மாமா...”

“அட.. இது எனக்கு தெரியாம போச்சு மாப்பில... கடசி நாளு வேற குறிப்பிட்டு  இந்த அட்டைக்காக எச்சரிக்க எல்லாம் செய்தது நீங்க சொன்ன பிறகுதான் மாப்பில ஞாபகத்துக்கு வருது மாப்பில..”

“ இப்பவாவது வந்திச்சே மாமா..?  ஏன்டா என்ன பொதைச்சிங்க..? ஏன்டா என்ன எரிச்சிங்கன்னு   செத்த பொணம் எந்திரிச்சு. கேட்காவா போகுது மாமா...”

“அது எப்படி மாப்பில... கேட்கும்... அதான் செத்த பொணமாச்சே மாப்பில...” “நீ.சொல்றது கரெட் மாப்பில...”. 


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...