சனி, அக்டோபர் 27, 2018

நினைவலைகள்-10.

ஒருஅழைப்பு-ஒரு விசாரிப்பு--ஒரு வேண்டுதல்............


ஏய்.. க்கான பட முடிவு


வழக்கமாக நான் செல்லும் பாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு விட்டதால்.. இந்த பக்கம் உள்ளவர்கள்..அந்தப் பக்கமும், அந்தப் பக்கம் உள்ளவர்கள் இந்தப் பக்கமும் இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ.... செல்லமுடியாதாவாறு பள்ளமாகி இருந்ததை ..மாநகராட்சிக் காரர்கள் சரி செய்வதற்க்காக மேலும் பள்ளமாக தோண்டி விட்டார்கள். ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் அந்தப் பள்ளத்தை சரி செய்து கொண்டிருந்ததால்.....

வங்கிக்கு செல்வதற்க்காக...குறுக்கு..மற்றும் நெடுக்கு மாற்றுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது.. ஒரு குரல்..

“ஏய்.....என்று கூப்பிட்டது.... கேட்பதில் கோளாறு எனக்கு இருந்ததால் ..என்ன குரல்... எங்கிருந்து வருகிறது.. நிதானமாக கவனிக்க ஆரம்பித்தபோது..

“ஏய்..” ஒன்னத்தானப்பா...  ” என்று ஒரு வீட்டின் வாசலில் நின்று நடுத்தர பெண் ஒருவர் என்னைச் கைநீட்டிக் கூப்பிட்டார்.

“ சுதாரித்து. புன்னகையை காட்டியபடி அவர்களை நோக்கி..“ என்னங்க அம்மா” என்றபடி சென்றேன்.

“என்னாது அம்மாவா...?” “நான் என்ன உனக்கு அம்மவா..? என்றார்கள்..

சட்டென்று.. பின்வாங்கி “ என்னங்கக்கா” என்றேன்...

அவுகளும் மீண்டும்..“ நான் உனக்கு அக்காவா” என்றார்கள்..

நானும் சற்றும் சளைக்காமல்...“ என்னங்க..மேடம்” என்றேன்..”

அட..இங்கிலிசுல பேசுற“““ என்றபடி..“ அது....சரி...உங்கம்மா நல்லா இருக்காங்கலா..என்றார்..

“ நல்லா இருக்காங்க மேடம்.”

“ உன் ..னக்காவும் உன் மச்சானும் இங்க இருக்காங்கலா..?ஃ ஊறுல..இருக்காங்கலா...”

“ அக்காவும் மச்சானும் வெளி நாட்டுல.. இருக்காங்க மேடம்..”--சிரிக்காமல் சொன்னேன்..

“நல்லா இருக்கட்டும்.... நல்லா இருக்கட்டும்.... அதுசரி.... நீ..எனக்கு ஒரு உதவி செய்யனுமே...!!! செய்வியா...???


“ என்ன உதவி மேடம்... சொல்லுங்க மேடம்..”

“என் மகன்.. படிச்சுபுட்டு சும்மா இருக்கான்.... உன் ஆபிஸ்ல.. அவனுக்கு ஒரு வேலை கொடேன்....”

“ உங்க மகன்  எவ்ள..படிச்சிருக்கான்..மேடம்..”

“ அவன் பத்து வரை படிச்சிருக்கான்பா....”

” அவருக்கு கம்யூட்டர்ல டைப் அடிக்க தெரியுமா..மேடம்..”

“அதெல்லாம் அவனுக்கு தெரியாதுப்பா..”

“வேல கிடைக்காது மேடம்”

“ அட, ஏப்பா..”

“மேடம், என் ஆபிசுல கம்யூட்டர்ல.. டைப் அடிக்கிற வேலதான் இருக்கு, மிஷின் ஓட்டுவதற்கு,. பைண்டிங் செய்வதற்கெல்லாம் ஆளு இருக்கு மேடம்”

“உனக்கு தெரிந்த கம்பெனியில  கேட்டு சேத்துவிடுப்பா...”

“ கேட்டு சொல்றேன் மேடம்”

“ மறந்திட மாட்டியில.....”

“ மறந்திட்டா..இந்தப்பக்கம்  வர்றயில.... “ஏய்.... இந்தாப்பா....ன்னு  கூப்பிட்டு கேளுங்க  மேடம்”

“ ம்..ம்...ம்..  சரிப்பா...”

..
இரண்டு மாதத்திற்கு மேல் பெரும் பள்ளம் சரி செய்யப்பட்டதால்.... நான் அந்த குறுக்கு நெடுக்கு சந்தில் செல்வதில்லை...அந்த நிகழ்ச்சியையும் மறந்துவிட்டேன்..


இன்று ரோட்டில்... செல்கையில்..ஒருத்தர்.. வேறு ஒருவரை   ஏய்..இந்தாப்பா என்று குரல் கொடுத்த போது..    அந்த “ஏய்”  மேடம்”நினைவுக்கு வந்து போனாங்க....

4 கருத்துகள்:

.........