திங்கள் 29 2018

நினைவலைகள்-11..

ஒரு புத்தகத்தால் முறிந்த நட்பு.....
...












அவர் கேட்டார்...என்ன..முன்பெல்லாம் காந்தி கடையில உக்காந்துகிட்டு..மணிக்கனக்காக ரெண்டு பேசி சிரிச்சிகிட்டு இருப்பீங்களே!...இப்ப அந்தக் கடைய பக்கமே உன்ன காணல..... சண்டையா... என்றார்.

நான் தெரியாத மாதிரி எந்தக் காந்தி என்றேன்..

அட..நா....என்ன ரூபா நோட்டுல இருக்கிற காந்திய பத்தியா..கெட்கப்போறேன்.. பித்தளை பாத்திர கடை வச்சிருக்காரே...அந்தக் காந்தியக் கேட்டேன்.. என்ன சண்டையா....என்றார்.


ஓ.....அந்தக் காந்தீயா...... சண்டையெல்லாம் ஒன்னுமில்ல....அவரு வியாபாரியா..நடந்துகிட்டாரு..... அதனால நான் அவரு கடைக்கு போறதில்ல..அவருடன் பேசுறதில்ல..என்றேன்...

என்ன வியாபாரியா நடந்துகிட்டாரா...அட..கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லேன்...

உங்களுக்கு இன்னைக்கு வேல இல்லையா....?

வேல இருக்குதுப்பா.... கொஞ்சம் ஓய்வு எடுத்துகிட்டாத்தானே... தொடர்ந்து வேல செய்ய முடியும்.... அதுல உன்ன வேற பாத்துட்டேன்.  என் கிட்ட பேசாம போக முடியுமா...???

எனக்கு வேல இருக்குதுல........

வேல...வேல...ன்னு என்னத்த கண்ட... எட்டு மணி நேர வேல, எட்டு மணி நேர ஓய்வு, எட்டுமணி நேர பொது விவகாரம் என்பது உனக்கு தெரியாதா...???

எனக்கு என்ன 24 மணி நேரமும் வேல செய்ய ஆசையா...??? முன்ன சீக்கிரமாய் முடித்த வேலைகள்...இப்ப முடிக்க ரெம்ப நேரமாகுது...வேலை கொடுக்கும் வாடிக்கையாளர்கள்கூட  காலையில கொடுத்துட்டு .மாலையில கேக்குறாங்க.....எல்லாரும் பரபரப்பா ஆயிட்டாங்க....அவுகளுக்கு ஈடாக..என்னால் வேலை செய்ய முடியவில்லை... எங்க வீட்டில இருக்கிறவிங்களப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே....சரி...அதவுடுங்க... காந்தி கடைக்கு நான் போகாததைப்பத்தி சொல்றேன்.


காவல் கோட்டம் என்ற புத்தகம் தெரியுமல......

தெரியுமே..!!.சிபிஎம் காரரு.. எழுதினது..மேலமாரட்வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி என்று எப்படிபெயர்வந்தது என்று மதுரையைப் பத்திய வரலாற்றை எழுதியிருக்காருன்னு  கேள்விப்பட்டு இருக்கேன்...ம்ம்ம் சொல்லு...

அந்தப் புத்தகம் வெளிவந்து ரெண்டு வருசத்துக்கு மேலாச்சு.... மதுரை புத்தகக் காட்சியில..அவர் இரண்டு செட் வாங்கியிருக்காரு. புத்தக ஆசிரியர்கிட்ட கையெழுத்தெல்லாம் வாங்கியிருக்கேன் என்று சொன்னாரு... ஒரு கட்டத்தில் நான் , எனக்கும் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கி வரச் சொன்னதாக பொய் சொல்லி..அதனால் ரெண்டு செட் வாங்கி வந்தேன்... ஒரு புத்தகத்துக்கு 600ரூபாய் கொடு என்று என்னிடம் கேட்டார்.

உங்களிடம் நான் “ காவல் கோட்டம் ” புத்தகம் வாங்கி வரச் சொல்ல வில்லையே..!என்றபோது...இல்ல.. நீ வாங்கி வரச் சொன்னாய் என்று சத்தியம் செய்தார்... சரி..நான் சொன்னதாகவே  இருக்கட்டும் நாளைக்கு வந்து பேசிக் கொள்வோம்..என்று சொல்லிவிட்டு போன் அழைப்பில் பதில் பேசிக் கொண்டு சென்று விட்டேன்.

அப்போதே... அந்தப் புத்தகத்தைப்பற்றி போனில் பேசிய நண்பரிடம் விசாரித்தேன்...அவர் புத்தகத்தை..புத்தக கண்காட்சியில் 300 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அவரிடம் அந்தப் புத்தகம் சும்மா்தான் இருக்கிறது.. வரும்போது வாங்கிச் செல் என்றார்

மறுநாள் காலையில் காந்தியை சந்தித்து..நான் வாங்கிவரச் சொன்னது உண்மையோ? பொய்யோ.. எதுவாக இருக்கட்டும் தங்கள் சொல்லுக்காக அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்கிறேன்.. இப்போது 400ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள்.. மீதியை இரண்டொரு நாளில் தந்து விடுகிறேன் என்றபோது..

நான் சொல்வதை மறுத்து விட்டு..இல்லை..நான் வியாபாரி என்பது உன் மர மண்டைக்கு புரிய மாட்டுகிறது.  மொத்தமாக கொடு என்றார்.  இப்போது காசு இல்லை  பிறகு வந்து கண்டிப்பா கொடுத்துவிடுகிறேன் என்றபோது உடன்பட மறுத்துவிட்டு கொச்சையாக பேசினார்...

அவரின் வியாபார புத்தியைப்பற்றி  யோசித்த நான்..அவர் வாங்கியதாக சொல்லப்பட்ட ரெண்டு புத்தகத்தையும் என் முன் காட்டுங்கள்... எனக்காக நீங்கள் வாங்கியிருந்தால் உடனே முழுப்பணத்தையும் உடனே தந்துவிடுகிறேன் என்றபோது  இப்போது மட்டும் எப்படி பணம் வரும் என்று கேட்டார்.

அவருக்கு அருகில் உள்ள தவனைக் கடையைக் காட்டி..தவனைக்கு வாங்கியாவது எனக்காக வாங்கியதாக சொல்லப்பட்ட புத்தகத்திற்குரிய மொத்த பணத்தையும் கொடுத்துவிடுகிறேன் என்ற போது.. அந்த இரண்டு புத்தகத்தையும் காட்ட மறுத்துவிட்டார். ஒரு புத்தகத்தை மட்டுமே காட்டிவிட்டு ஒரு புத்தகம் ஒரு நண்பர் படிக்க வாங்கிச் சென்று இருக்கிறார் என்றார் எப்பொழுது தருவார் என்றபோது... அவர் வெளியூர் சென்று இருக்கிறார் அவர் வந்தப்பின்தான் கிடைக்கும் என்றார். படிக்க வாங்கிச் சென்றவரின் செல் நம்பரை கேட்டபோது....அதெல்லாம் சொல்லமுடியாது
புத்தகத்தை வாங்கு..வாங்கவில்லையா.... போய்கிட்டே  இரு... என்றார்.

இப்படி  அந்தக் காந்தி அடுக்கடுக்காக பொய் பேசியதோடு என்னையும் கொச்சையான வசவுகளால் திட்டியதால்.... உன் சகவாசமும் வேண்டாம் உன் புத்தகமும் வேண்டாம் என்று வந்துவிட்டேன்... சில மாதங்கள் என்னை கூப்பிட்டபோதும்  நட்பு..நண்பர் என்பது என்னவென்று தெரியாத வியாபாரிடம் நட் பு கொள்ள தேலையில்லை என்பதால் அவரோடு பேசுவதில்லை.. அவர் கடைக்கு போவதுமில்லை.....  இதுான் காரணம்

ஓ.....ஓ...ஓ..கதை..அப்படி போகுதா....அப்பச்சரி.....அப்பச்சரி..... நா..வேற..மாதிரி நிணச்சேன்....


வேற மாதிரின்னா...”

“அது உனக்கு வேண்டாமே....”


சரி..சரி..இனி நான்  போகலாமா....???

ஒரு..டீ..குடிச்சிட்டு போகலாமே...சாரி..நீதான் டீ குடிக்க மாட்டில.... வடை. பஜ்ஜி எதாவது.....


சரி..உங்களுக்காக......காசு.......


நான்..கொடுத்துகிறேன்.......மறுக்காமல் வா.....


இருவரோடு..கூடுதலாக இருவர்  சேர்ந்து...சீனிக்கு பதிலாக..சர்க்கரையை பயன்படுத்தும் டீக் கடைக்கு சென்றோம்.


5 கருத்துகள்:

  1. காவல் கோட்டம் பற்றி குறிப்பிட்டது நன்று!

    பதிலளிநீக்கு
  2. சொல்லிப்போகும் எழுத்தலைகள்!

    பதிலளிநீக்கு
  3. அவர் வியாபாரி என்பதை நிரூபித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  4. வியாபாரிகளுக்கு மனோநிலை வித்தியாசமானது. சமூகத்தின் உண்மை நிலையை பதிவு செய்யும் அத்தனை படைப்புகளுக்கும் எனது பேராதரவு உண்டு.. தொடர்ந்து பதிவிடுங்கள். போலியான பிம்பத்தையை இவர்கள் இதுவரை பதிவு செய்து வைத்துள்ளார்கள்...

    வேற மாதிரி நினைச்சவரு... என்ன நினைச்சாருனு கேட்டு ஒரு பதிவும் போடுங்க..

    பதிலளிநீக்கு
  5. பலரை நாம் நண்பர் என்று நினைத்துத்தான் பழகுகிறோம், ஆனால் போகப் போகத்தான் அவர் நண்பரா அல்லது நட்பைப் பயன்படுத்திக் கொள்கின்ற வணிகரா என்பது நமக்குப் புரியவரும்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...