செவ்வாய் 25 2019

அதிகாலை கனவு-31

சென்னையில் தண்ணீர் பஞ்சம்

வடக்கே போகும் ரயில்







சரியாக 9 மணிக்கு ரயில் ஏறினார்
ரயிலும் சரியாக 9.30 நகர்ந்தது
கொடை ரோடு சந்திப்பில்
தன் செல்போனில் அலராம் வைத்தார்
பின் படுக்கையில் படுத்து
குறட்டை விட்டு தூங்கினார்
ரயிலும் சவுண்டு விட்டபடியே
ஓடிக் கொண்டு இருந்தது.

சரியாக மணி 4க்கு அலாரம் அடித்தது
எழுந்தவர் கண்களை துடைத்துக் கொண்டு
அருகில் இருப்பவர்களை சுற்றி
நோட்டம் விட்டார் எல்லோரும்
தூங்கிக் கொண்டு இருப்பதைக்
கண்டார். சட்டென்று எழுந்து
கழிப்பறையை நோக்கி ஓடினார்.
இரவில் சாப்பிட்டதில் சிலவற்றை
வெளியேற்றினார். பின் டாய்லெட்
சவரில் உடம்புக்கு மட்டும் சிறு
குளியல் போட்டார் பின் வெளியே
கண்ணாடியில் முகம் பார்த்து
தன்னை ஒப்பனை செய்து
கொண்டார். இருக்கைக்கு வந்து
செல்போனை நொண்டினார் ரயில்
எக்மோர் வந்து நினறது.. இவர்
 ரெம்ப பிரஸ்சாக ரயில
விட்டு இறங்கி வந்தார்
சென்னையில தண்ணீர் பஞ்சமாம்
அட போங்கடா பித்துகுளி பசங்களா..

என்று விசில் அடித்தபடியே
தான் செல்ல வேண்டிய இடத்துக்கு
சென்றார்...அடப் பாவி  இது
எனக்கு தெரியாமப் போச்சடா
வெட்டியா மெரினா பீச்சுக்குல
போனேன் என்று ஒருவர் திட்டியதை
கேட்டு கண் விழித்த எனக்கு
பின்னாளில் எப்பவாவது பயன்படும்
உபயோகப்படும் என்பதால் உடனே
குறிப்பெடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன்...........

4 கருத்துகள்:

  1. பரவாயில்லையே இப்படியும் உபயோகப்படுத்தலாமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எந்த விசயமுமே.. தாமதமாகத்தான் தெரிய வருகிறது நண்பரே..!!

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...