திங்கள் 25 2013

ரோட்டிலும்,தரிசு இடங்களிலும் மலம் கழித்தது காந்திக்காலம்?இப்போ..ஆத்துபக்கம் ஓடுவது இந்தியாவின் வல்லரசு காலம்?...

புதன், ஆகஸ்ட் 15, 2012

முன்னுரை,தெளிவுரை மற்றும் பதவுரை (உலக கழிப்பறை தினத்திற்க்காக.மீள்பதிவு)

இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி. கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலை மற்றும் தண்ணியான மலம் காளியாத்தா,மற்றும்
மாரியாத்தா,திறந்த வெளிகழிப்பிடமே பெரியகோயில்.அடுத்ததெளிவுரைகள் தங்கள் மடல் கண்டு

இது இட்டுக்கட்டிய கதையல்ல சொந்த அனுபவத்தில்.நடந்தவை. காந்தி வாங்கி தந்த சுதந்திர இந்தியாவிலிருந்து வல்லரசு இந்தியா வரை  நடந்து கொண்டு இருப்பவை. ...........




காலைபொழுது விடிந்து சற்று வெளிச்சம் வந்தாலும் தெருவிலுள்ள
ரோட்டிலுளள விளக்குகள் அனைக்கப்படாமல் இருந்தன. மக்கள்
 நடமாட்டம் இல்லையென்றாலும், டீக்கடையில் அய்ந்தாரு மனிதர்கள் இருந்தனர். ஒருசில பெண்கள் தத்தம் வீடுகளின் வாசல்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுயிருந்தனர்.

அவருக்கு காலையில்தான் நன்றாக தூக்கம் வரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரோ,அல்லது பின்னரோ, தாமதமாக தூங்கினாலும் காலை தூக்கம்தான் நிம்மதியான தூக்கமாக இருந்தது.

அந்த நிம்மதியான தூக்கத்தை கெடுப்பதறக்காக இயற்கையும்
அவரின் தெருவிலுள்ள மக்கள் அவருக்கு இடைஞ்சல் கொடுப்பது போல்
தன் பங்குக்கு இடைஞ்சல் கொடுத்தது. அது அவரை சாமி
கும்பிடுவதற்கு அதிகாலையில் எழுப்பி விடும்.ஓரளவு சமாளித்து
பார்ப்பார் முடியாது. அருள் வந்துவிடும்

கட்டியிருக்கும் கையிலியால் கண்களை துடைத்துக் கொண்டு,முகம் கழுவுவதற்குகூட தாக்கு பிடிக்க முடியாமல், அவசர அவசரமாக எழுந்து சைக்கிளை, எடுத்துக் கொண்டு உருட்டிக்கொண்டே தெருவைக் கடந்து 

 (தெருவில் சைக்கிள் ஓட்டிச் செல்லக்கூடாதென்று தெரு நாட்டாமையின் உத்தரவு) 

மெயின் ரோட்டுக்கு வந்த பின் சைக்கிளில் ஏறி ஒருசில தெருவை கடந்து விவசாயம் இல்லாமல் காய்ந்து பொட்டலாக கிடக்கும் இடத்தைத் தேடி ஓடி.,அந்த பொட்டல் வெளியில் சாமியை கும்பிட்ட பிறகுதான் அவருக்கு
பரபரப்பும். கைகால் சோர்வும் அருளும் குறைந்து சகஜ நிலமைக்கு வருவார்.


இவர் சைக்கிளில் வேகமாக வயற்காட்டு பக்கம் வருகிறார் என்றால் சாமி கும்பிடுவதற்குத்தான் என்று தெரிந்து சட்புட்னுன்னு ஒதுங்கி கொள்வார்கள். 

சில நாட்களில் நன்றாக தூக்க கலக்கத்தில் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தில் என்னதான்  வேகமாக  சென்றாலும்  அருள்முற்றி
உள்ளாடைகளிம்.கைலிகளிலும் சாமி கும்பிட்டுவிடுவார்

உடம்புக்கு முடியதா நாட்களில் காளியாத்தா,மாரியாத்தா நிலைமை இதைவிட மோசமாகிவிடும். அவரின்மேல்  அவருக்கே ஆத்திரம் வந்துவிடும்.தன் இயலாமையை எண்ணி தன்னைத்தானே மோசமாக திட்டிக்கொள்வார்

காளியாத்தா-மாரியாத்தா சாமி கும்பிட்ட நாட்களில் ஓடும் பம்பு செட்டைத்தேடி நாயாய் அலைந்து அதில் ஓடும் பம்ப் செட்டில் சாமி 
கும்பிட்ட துணிகளை அலசி குளித்துவிட்டுதான் வீட்டுப்பக்கமே வருவார்.

இப்படி பலமுறை நடந்துள்ளதால் பலமுறை எச்சரிக்கையாக இருந்து வந்தார். அவர் குடியிருக்கும் வழக்கிடைச்சொத்தில் அவருடைய 
தந்தைவழி பங்காளிகளுடனும் தெருநாட்டாமைகளிடமும் அடிதடியில் இறங்கி போலீஸ் வழக்கு என்று அழைந்து சென்று விடாப்பிடியாக 
போராடிபணக்கஷ்டத்துடன் உறுதியாக நின்று வீட்டுக்கருகில் கோயில் 
(கழிப்பறை)கட்டி முடிக்கிற வரைக்கும் காளியாத்தா மாரியாத்தாவுக்கு பயந்து எச்சரிக்கையாகவே இருந்து வந் தார்.

முன்னோரு காலத்தில்அவர் குடியிருக்கும் தெருப்பகுதி பறைச்சேரியாக இருந்தது .மாநகராட்சியின் கடைசி வார்டாக இருந்தாலும் ,நகரத்தை ஒட்டிய கிராமாமாகத்தான் இருந்தது. அதுவும் வல்லரசு இந்தியாவில் பறையத்தெருவாகவே வளர்ச்சி அடைந்தது. 

அவருக்கு பதிணைந்து வயதிற்குமேல் இருக்கும்போது,அவரின் வீட்டைச்சுற்றி பகலிலும் இருட்டாக.. குட்டி பனைமரங்கள் நிறைந்த பனங்குட்டிகளும் தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புகளும் இருந்தன.

அனறைய காலங்களில் ஆண்களும் பெண்களும் சாமி கும்பிடுவதற்கு பகலில் பனங்குட்டியையும் இரவில்தென்னந்தோப்புக்கு நடுவே செல்லும் ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தார்கள.

அப்போதெல்லாம் எந்த சாமி அருள்வந்தாலும் கும்பிடுவதற்கு எந்தவித சிரமும்ஏற்ப்பட்டதில்லை.இரவில் சாமிகும்பிடும்போதுகூடசினிமா பார்த்துவிட்டுஆட்கள் ரோடு வழியாகவரும்போதுகூட எழுந்து நின்று 
ஆட்கள் சென்ற பின் சாமி  கும்பிடுவதில்கூட சிரமம்  ஏற்ப்
பட்டதில்லை



இரவில் சாமி கும்பிட்ட இடத்தை பகலில் போய் பார்த்தால்   ஒரே சாமி குவியல்களாத்தான் இருக்கும். அந்தரோட்டில் லாரி வந்தால் சனங்கள் கும்பிட்ட சாமிகள் எல்லாம் லாரி டயரில் ஒட்டி சிறிது தூரத்துக்கு
ஒரே சாமியாகத்தான் சிதறி இருக்கும். செருப்பில்லாமல் நடக்கமுடியாத அளவுக்கு சாமிகள் இருக்கும் .இதில்  சாமிகளின் வாசனை வேறு தூக்கியடிக்கும்.

நாகரிகமும் மக்கள் தொகையும் வளர வளர, பனங்குட்டியும், தென்னந்தோப்பும் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறி காந்திதெரு, முத்துதெரு,நேதாஜி தெரு என்று பல தெருவாக மாறிவிட்டன. 
இப்படி மாறின பிறகுதான் சாமி கும்பிடுவதற்காக சொந்த(கழிப்பறை) கோயிலின் அவசியம் தெரிந்தது. 

இதைத்தான் மகஇகதோழர்கள்,கருவக் காடெல்லாம் கட்டிடமா ஆச்சு, வெளிக்கு போவதேபெரும்பாடாச்சுன்னு  பாட்டாலே..ஃ... வல்லரசு இந்தியாவின் வளர்ச்சியை பொளந்து காட்டினாங்க.........

அந்தத் பறையத் தெருவுக்கும் ஒரு தாதா வும் நாட்டமையும் இருந்தார்கள் ஆம்பிள நாட்டாமை மின்சார வாரியத்திலும் பொம்பள நாட்டாமையின் கனவர் பென்னரிலும் வேலை யில் இருந்ததினால் அவர்கள் மட்டுமே சொந்தமாக கோயில் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு சாமி கும்பிட வழியில்லை .கோயில் கட்ட வசதியுமில்லை.

அந்த தெருவைச்சுற்றி குடியிருப்பு கட்டிட வீடுகள் வந்ததினால் அவர் குடியிருக்கும் தெரு  தனித்தீவாக்கப்பட்டது.அந்த சேரி மக்களுக்காக இலவசமாக பொதுக்கோயில்(பொது கழிப்பறை) மாநகராட்சியால் கட்டப்பட்டது இந்தக் கோயில் சேரியிலுள்ள தெருமக்களுக்கு மட்டும்
தான் என்பதால் கிரில் கதவு டன் பூட்டு போடடு சாவி தெரு நாட்டாமை    
வசம் ஒப்படைக்கப்பட்டது.

தெரு நாட்டாமைக்கும் அவருக்கும் ஏற்ப்பட்ட சொந்த இடப்பிரச்சினையில்  தெருநாட்டாமை அவருடைய வழக்கிடைச் சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்தோடு தெரு நாட்டாமையையே எதிர்த்தால் பொது கழிவறையை
வர் பயன்படுத்தவும் தடைபோட்டு இருந்தார் நாட்டமை..

அதனால்
முன் பகையை காரணம்காட்டி அவருக்கும் அவரின் குடும்பத் தார்க்கும் பொது கோயிலை (கழிப்பறையை)பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது.

அவருடைய சகோதரியின் மகள்கள்  பொது கழிப்பறையின்  சாவியைக்கேட்டால் சாவியை மறைத்து வைத்து விட்டு 
காணவில்லை என்பார்கள்.தெருவிலுள்ள மற்றவர்களிடம்    
உண்மையாக  காணவில்லையா?என்று கேட்டால் ஆம்பிள 
நாட்டாமை, மற்றும் பொம்பள நாட்டாமையின் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருவதால்  தங்களை காலி பண்ணச் சொல்வார்கள் என்ற பிரச்சினை வரும் என்பதால் உண்மையை  சொல்லமாட்டார்கள்.

  இரு நாட்டாமைகளுக்கு சொந்தமாக கோயில் இருந்தாலும்  கோயிலின் செப்டிங் டேங்கு நிரம்பி விடும் என்பதால்  பொதுக்கோயிலுக்குதான் அவர்களும் ,அவர்கள் குடும்பத்தாரும் சாமி கும்பிட வருவார்கள்.

இரண்டுமூன்றுவருஷம்தான்அந்தபொதுக்கோயிலும்உயிர்வாழ்ந்தது..
தண்ணிவசதி  இல்லாததாலும்  போதிய பராமரிப்பு இல்லாதாலும்.மனித சாமிகளும் மலைபோல குவிந்து  நாற்றம் ஏற்பட்டு யாருக்கும்
பயன்படாமல்போய்விட்டது..தற்போது அந்தக் கோயில் இடிக்கப்பட்டு
 பாதாள சாக்கடைதிட்டத்தின் கழிவு நீரேற்று நிலையமாக மாறிவிட்டது

இப்போது அவர் அறைநூற்றாண்டு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.சமீபத்தில்தான் நாண்கு தொட்டிகள் கொண்ட கழிவறையை கட்டி யள்ளார். அந்தக் கோயிலை கட்டவிடாமல் அவரின் பங்காளிகளும் தெரு நாட்டாமையும் அவர்களின் வாரிசுகளும் கொடுத்த இம்சைகளுக்கும்
 நாட்டமைக்கும் நாட்டாமையின் மகன்களில் ஒருவர் விடுதலை சிறுததையில் முக்கிய  பொருப்பில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாக போலீசின் மிரட்டலுடன் ஆள்பலமும்  பணபலமும் இல்லாமல் போராடினார்.

பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி அனுமதி பெற்று இணைப்பு கொடுக்க முயன்றபோது இரு தெரு நாட்டாமைகளும் அவர்களின் வாரிசுகளும் கூட்டமாக வந்து இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டனர் 

வேலையாட்களை மிரட்டிவிரட்டினர். மநகராட்சியிடம் கேட்டபோது அது  பொது பாதையென்று சான்று அளித்தனர்..ஆண் நாட்டாமையோ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க கூடான்னு  என்றும், பாதையானது 
தங்களுக்கு மட்டுமே பொதுவானது என்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக் கூடாதுதென்று டவுன் முனசிப் கோர்ட்டில்அவர்மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரனைக்கு வந்த பொழுது விசாரனைக்கு வராமல், உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்தரியில் இருந்ததாக பொய் சான்று வாங்கிதந்து வழக்கை மீண்டும் நடத்த மனு  செய்துள்ளார் வருடம் ஒன்று ஆகியும் வழக்கு விசாரனைக்கு வரவில்லை. ஒன்றோடு மூன்றாக வழக்கு  நிலுவையில்..........

பொது இடத்தை தனதுஇடம் என்று எந்த ஆவணமும் இல்லாமல் வழக்கு போட்டு இழுத்தடிக்கும“ கில்லாடிகளா இருக்கிறார்கள்.

பல்வேறு இன்னல் தொல்லைகளுக்கிடையில்சொந்தமாக கோயில் 
கட்டிய பிறகும் பரபரப்பும் அருளும் தீர்ந்தபாடில்லை அவருக்கு. 
காலையில் எழுந்து கோயிலுக்கு போனால் அவரின் தாயாரோ,
சகோதரியோ யாரவது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். 

திறந்வெளி கோவில்களும் வீடுகளாக மாறிவிட்டதால் இருபது நிமிட நேரத்தில் சைக்கிளில் ஆற்றுக்கு சென்று இயற்கையின் அவஸ்தையை (சாமி கும்பிடுவது)போக்கி விட்டு ஆற்றினிலே குளித்துவிட்டு நிதனமாக பரபரப்பு இல்லாமல் வீடுவந்து சேருவார். இதுவும் தெரு நாட்டாமைகளுக்கும் நாட்டாமையின் வாரிசுகளுக்கும் பிடிக்கவில்லை.

பொறாமையாக இருக்கும். எவ்வளவு இம்சை கொடுத்தும் அசையாமல்
இருக்கிறானே என்று... தொடர்ந்து அவஸ்தையை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்..  இதோடு அவர்கட்டிய கழிவறை நிரம்பி விட்டால் அதை அப்புறப்படுத்துவதற்கும்  தடை ஏற்ப்படுத்துகிறார்கள். 

 இவர்களோடும் இவர்களின் வாரிசுகளோடும் ,  இயற்கையோடும்  
வரும் சண்டையில்  தொடர்ந்து போராடிக் கொண்டு வாழ்ந்து வருபவர்க்கே இவ்வளவு இம்சைகள் இருக்கும்போது,வாடகைவீட்டில் குடியிருப்போரும் குடிசையில் குடியிருப்போருக்கும் இம்சைகள் இல்லாமலா இருக்கும்.

இத்தகைய இம்சைகளைப்பற்றி தெரியாதவர்கள் அறியாதவர்கள் 2000,மூனாயிரம் செல்போன்கள் வைத்திருப்பவர்களைப்பார்த்து செல்போன் இருக்கு! கழிப்பறை இல்லை என்று ஏளனமாக பதிவர்கள் பதிவிட்டடு இருக்கிறார்கள். கழிப்பறை கட்டுவதற்கு இருக்கும் இம்சைகள் போல் செல்போன் வாங்குவதற்கு இம்சைகள் இருந்தால்  எல்லோர் கைகளிலும் செல்போன் இருக்குமா..................... ?????

 உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கும் வல்லரசு இந்தியாவில்.!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...