செவ்வாய் 30 2015

முடிந்தவரை நடை ராஜா...முடியவிட்டால் சேர் ஆட்டோ....!!!!!!

படம்-www.tamilpaper.net
 

எண்ணப்பா...வீரா   ! ஹெல்.மெட் வாங்கிவிட்டாயா... அவகாசம் இன்று முடிவடைகிறதப்பா...என்று   ஏரியா..அண்ணன் . கேட்க...

“இவிங்க நிணச்சு நிணச்சு சொல்லுவாங்கேன்னுதாண்ணே..வண்டி வாங்கும்போதே ஹெல்மெட்டையும் சேர்த்து வாங்கிட்டேண்ணே...அத இனி பயன்படுத்திக்க வேண்டியதுதாண்ணே..” பதிலுரைத்தான்.

“ நீ...தப்பிச்சிட்டேடா” என்றார் அண்ணன்..

அடுத்தவரை கேட்டபோது , அவர் சொன்னார்.

“ காசு கையில இல்லாததால மாசக் கடைசியில வாங்கலாம்னு போயி விலய கேட்டா”...650 ரூபாய்க்கு வித்தத...2500ரூபான்னு சொன்னாங்கண்ணே... அதனால வாங்கம வந்திட்டேண்ணே...”

“ நீ தப்பாம..தண்டம் கட்டியே ஆவணும்டா” என்றார் அண்ணன்.

 எக்ஸல் ஹெவ்வி டூட்டியில போயி  கடை கடைக்கு சரக்கு போடும் ஈஸ்வரனை கேட்டபோது....... தன் கோபத்தை பழைய  பாடலை தனக்கேற்றார்போல் வார்த்தைகளை சேர்த்து பாடலாகவே பாடி விட்டார்.

கடவுள் மனிதனாக
பிறக்க வேண்டும்
அவன் தன் தலையில்
 ஹெல்மெட்டை அணிந்து
 டூ வீலர் ஓட்ட
வேண்டும் ரோடென்றால்
என்னவென்று புரிய
வேண்டும், பாவி
அவன் அந்த
வேதனையை பட
வேண்டும்......”

அண்ணனைத் தவிர அந்தப் பாடலைக் கேட்டு சிரித்தார்கள்.

அண்ணன் சொன்னார்.  சத்தியமா கடவுள் மனிதனாக பிறக்க மாட்டாருப்பா..... உன் பாடல்படி ஹெல்மெட் எல்லாம் அணிந்து ஓட்டமாட்டாருப்பா..... அவரு ரேஞ்சே தனிப்பா.....


எல்லோரையும் கேட்ட , அந்த அண்ணனைப் பார்த்து வண்டியே இல்லாத ஒருத்தன் கேட்டான். அண்ணே..நீங்க.. ஹெல்மெட்” டு வாங்கிட்டீங்களா....???

நீ இப்படி கேட்பேன்னு எனக்கு தெரியுமடா.... என்ற அண்ணன் பாட்டாலே பதில் சொன்னார்.

“சட்ட திட்டம் எதுவும்
எனக்கு சரியில்ல- இந்த
சண்டாளப் பய நாட்டுலே
நான் டூ வீலர் ஓட்ட
வழியில்ல.......
சட்ட திட்டம் எதுவும்
 எனக்கு சரியில்ல...”

-பெட்ரோலும் நாளுக்கு நாளு ஏறுது... தண்டமும் கூடுது.-அதனால நான் வாங்கிய டூவிலர வித்துட்டேன்..டா..... ”முடிந்த வரைக்கும் நடை ராஜா.. ” முடியாவிட்டால் சேர் ஆட்டோ” டா.. அதுவும் முடியவிட்டால் அரசு போக்கவரத்து 50 ரூபா பயணச்சீட்டுடா என்று சொன்ன அண்ணன் ஒரு கருத்தையும் சொன்னார்.


படம்-www.yarl.com

படம்-www.vinavu.com


கஞ்சா இழுத்தவன், தண்ணி அடித்தவன்கள் ,எப்படி அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறானோ.அதேபோல..டூ வீலர் ஓட்டி பழகியவனும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது.. அதுபோல வழிபறி தண்டம் வசூலிப்பவனும் விடமுடியாது..தண்டம் அழகாமல் தப்பித்து விடவும் முடியாது. ஆகு தண்டம் அழுக விரும்பாதவர்கள் எல்லாம் வாய் பொத்தி மெய் வருத்தி, தண்டத்தை(ஹெல்மெட்)தலையில் மாட்டித்தான் அவதிப்படனும் என்றார்.




திங்கள் 29 2015

இரண்டில் ஒன்றைத் தொடு....???

படம்-tamil.filmibeat.com


இடப்பிரச்சிணையில்
விசாரணைக்காக காவல்
நிலையத்தில் காத்திருந்த
போது....................

இந்தியப் பிரஜையும்
தமிழ்நாட்டு குடிமகனுமான
ஒருவர் இரண்டு
விரலை நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடு என்றார்

என்ன என்று
கேள்வி கேட்டபோது
முதலில் தொடு
பிறகு சொல்கிறேன்
என்றார் அவர்.

மறு பேச்சில்லாமல்
இரண்டில் ஒன்றைத்
தொட்டேன் அவர்
முகம் மலர்ந்தார்.

இப்படி நின்ற
நான்கு பேர்களிடம்
இரண்டு விரல்களை
நீட்டி ஒரு விரலைத்
தொடச் சொன்னார்.

அவர்களும் கேள்வி
எதுவும் கேட்காமல
இரண்டில் ஒன்றைத்
தொட்டார்கள் அகம்
மலர்ந்த அந்த
தமிழ்நாட்டு குடிமகன்.
...........

சத்தம் போட்டுச்
சொன்னார் ஆர்.கே
நகர் இடைத் தேர்தலில்
அவருடைய அம்மாமதான்
வெற்றி அடையுமாம்..

வெள்ளி 26 2015

மனிதனை மனிதக் குரங்காக மாற்ற முயல்கிறது மரக்கறி கூட்டம்...!!!!!

வினவு


முன்னாள் குடியரசு தலைவரும், சங்கர மடத்தின் தலைமைச் செயலருமானா ஆர்.வி தமது இளமையின் ரகசியம் மரக்கறி உணவுதானென்றும், புலால் உணவையே தடை செய்ய வேண்டுமென்றும் சமீபத்தில் பேசியிருக்கிறார். ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து. அது ஒருபுறமிருக்க, கிடா வெட்டுத் தடைச் சட்டம் வந்ததிலிருந்து சைவம், ஜீவகாருண்யம் பிரச்சாரம் தீவிரமாகியிருக்கிறது. நமது நாட்டில் புலால் உணவு சாப்பிடாதவர்கள் அதிகம் போனால் பத்து சதவீதம் பேர். இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.
ஆர். வெங்கட்ராமன்
ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து.
உண்மையைச் சொன்னால் குரங்கு மனிதனாக மாறியதற்கான காரணங்களில் மிக முக்கியமானது புலால் உணவு. இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்து என்கிறார் எங்கெல்ஸ்!
மனிதனை மனிதக் குரங்காகப் பின்னுக்கு இழுப்பதுதான் பாசிசம் என்பது தோழர் ஜூலியஸ் பூசிக்கின் மதிப்பீடு. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பார்ப்பன பாசிஸ்டுகள் நம்மை மரக்கறிக்கு இழுக்கிறார்கள் போலும்! பஜ்ரங் தள் என்பது குரங்குப் படைதானே!
எனினும், தமிழ் மக்களை அவ்வளவு சுலபமாகக் குரங்காக்க முடியாது. காரணம் நாகரிகம். இசை, கலை, மொழி ஆகியவற்றைப் போல உணவுப் பழக்கமும், சுவையறிவும் ஒரு பண்பாட்டின் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல். அவ்வகையில் தமிழ் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சில அரிய செய்திகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் குரங்காக மாற்றப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.
புலால் உணவு
இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் புலால் உணவை, அதாவது ஊன் உணவைப் பழக்கமாகக் கைக் கொண்டிருந்தனர் என்பது சங்கப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன. “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுப் படி அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து உண்ட செய்தியைச் சொல்லுகிறது. மதுரைக் காஞ்சியும் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று தமிழர்கள் ஊன் சோறு உண்டதை உவப்பக் கூறுகிறது. அதாவது, அந்தக் காலத்தில் பிரியாணிக்கு அழகிய தமிழ்ச் சொல் ஊன்சோறுத. ஏதோ நெய்தல் நிலத்திலும், மலை சார்ந்த குறிஞ்சி வாழ் மக்கள் மட்டும்தான் தாவர உணவு மட்டுமின்றி, புலால் உணவுக்குப் போயினர் என்று யாரும் பொய் சொல்ல முடியாது. உழுதும், பயிரிட்டும் வாழ்ந்த மருத நிலத்து மக்களும் ஆமைக்கறியின் ருசி தெரியுமா உனக்கு, வேண்டுமானால் மருதநிலத்தில் வந்து தங்கிப்பாரு என்பது போல அழைக்கின்றனர்.
மீன் பொரித்தல்
“மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்”
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள். கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவை வேண்டுமா? “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’க்கு வாருங்கள். மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரிக்கும் பக்குவம் வேண்டுமா? “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலை வரிகளை சங்கராச்சாரிக்குப் படிக்கக் கொடுங்கள். அவரும் தண்டத்தைப் போட்டுவிட்டுக் கொண்டத்தைக் கேட்டுக் கத்த ஆரம்பித்து விடுவார்.
குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு குறமகள், “வலி பொருந்தி ஆட்டுக்கிடாயின் குருதியோடு கலந்த தூய வெள்ளரிசியைப் பலியாக சிதறுகிறாள்” என்று திருமுருகாற்றுப்படை பழந்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையைச் சொல்கிறது. மலைகளில் ஏறி தேன் சேகரித்து, முயல் வேட்டையாடி உழைப்பில் ஈடுபட்டிருந்த உண்மையான முருகனுக்கு ஊன் உணவே பிடித்தமானது.
முருகன், ஸ்கந்தனான பிறகு உண்டைக்கட்டியே அவனுக்கும் உணவாகி விட்டது. இப்போது, சுடலை மாடன், ஸூடலை மாடஸ்வாமியாக மாற்றப்படுகிறார். இனி கிடாவெட்டும் கிடையாது. வெறும் பொங்கல்தான். அவாள் “சுத்தம்” செய்ய விரும்புவது சுடலை மாடனை அல்ல – சூத்திர, பஞ்சமரைத்தான்.
– சுடர்விழி
இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகப் பயன்பட்ட நூல், வாசகர்கள் படிக்க வேண்டிய நூல்.
தமிழர் உணவு
நூலாசிரியர் : சே. நமசிவாயம்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்

வியாழன் 25 2015

முதலில் நீங்கள் திருந்துங்கள்...!!!!



Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
சுருக்கம்:-


1-- மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட், பிரட், புரோட்டா சத்து இல்லை, என்பதால் அல்ல; அதில் விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்

அழிவை காண்பீர்கள்; விழித்து கொள்ளுங்கள் .


2-- சாக்லெட் வேண்டாம்; வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3-- pizza,burgers தவிர்க்கவும்


4-- கோதுமை அரைத்து பயன்படுத்துங்கள்; கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது


5-- பழங்கள்  கொய்யா, வாழை, விதை உள்ள திராட்சை, Melons அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்


6-- corn flakes, oats வேண்டாம்; கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும்


7- சீனி  வேண்டாம்; தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கல்கண்டு பயன்படுத்தவும்


8-- black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.


9-- இனி யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்;  கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்


இது என்னுடைய வேண்டுகோள். நாம் தான் முதலில் திருந்தவேண்டும். பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளுவோர், விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.


 பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு, பணம் அல்ல;ஆரோக்கியமும்  குணமுமே. உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு. Hyper activity because of this types of food also; 

அனைவருக்கும், இவை அனைத்தும் தெரிந்த விஷயம்தான்; இனியும் நீங்கள் தூங்ககூடாது', பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருப்போர் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வையுங்கள்,; வாழவேண்டும், ஆரோக்கியத்துடன்.அனைவரும் வாழ வையுங்கள்...

புதன் 24 2015

ஏய்....யோகா......உன்னால்..என்னவெல்லாம்.....தீரும்,,,,,???

படம்-tamilyogas.blogspot.com


ஏய்...யோகா......
உன்னால்.. ஏறின
விலை வாசியை
குறைக்க முடியுமா...?

மின்சாரத்தை தொட்டால்
ஷாக் அடிக்கும்
அப்போது..இன்று
மின்சார பில்லை
பார்த்தவுடன் ஷாக்
அடிக்காமல் இருக்க
செய்ய முடியுமா..??

இல்லாதவருக்கு பசி
பட்டினி இல்லாத
நிலையை ஏற்ப்படுத்த
முடியுமா.....???

இந்நாட்டை கூவி
கூவி ஏலம்
போட்டு விற்பதை
தடுக்க முடியுமா...????

 கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும்
ஆட்சியில் அமருவதையாவது
தடுக்க முடியுமா....?????

இல்ல...
ஓட்டுக்கு துட்டு
தருவதையாவது
தடுக்க முடியுமா.....??????

சரி விடு, டாஸ்மாக்
யோகாவையாவது
உன்னால் தடுத்து
நிறுத்த முடியுமா......???????

ஏய்...யோகா....
இது மாதிரி
கேட்பதற்கு நிறைய
இருக்கிறது.நான்
கேட்பது இருக்கட்டும்
நீ சொல்லு
யோகா உன்னால்
என்னவெல்லாம் தீரும்..............????????

திங்கள் 22 2015

எது யோகா......????

நேற்று நாடு முழுவதும்
ஒரே ஓலம் யோகா
யோகா என்று.........
நேற்று அவாள்கள்  செய்தது
யோகாவா... சிந்தித்தால்
பைத்தியம் பிடிக்கும்
மனம் நொந்தால்
புலம்பல் வரும்

இதோ படத்தில்
இவாள்கள் செய்தது
தான் யோகா....
இவாள்களின் யோகா..
மனிதர்கள் உணர்ந்து கொள்ளும்
யோகா....அ்ல்ல.. அல்ல
அதையும் தாண்டி....
 புனிதமான யோகா.......!!!!
அதை அனுபவித்தவர்களுக்கே
அந்தப்புனிதம் புரியும்.....

குறிப்பு:-
முதலில் படத்தை பார்த்து
புரிந்து கொள்ளுங்கள்
பிறகு குரு இல்லாமலே
தாங்கள் யோகா கற்றுத்
தெளியலாம்.
Embedded image permalink
படம்-

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-suvanappiriyan.blogspot.com

படம்-suvanappiriyan.blogspot.com

டாஸ்மாக்  யோகா க்கான பட முடிவு
படம்-tamil.thehindu.com

படம்-suvanappiriyan.blogspot.com

படம்-www.maalaimalar.com

படம்-www.tamilcnnlk.com
படம்-sirippupolice.blogspot.com








ஞாயிறு 21 2015

முதுகெலும்பு இல்லாதவர்களால் முதுகெலும்பு வளைக்கப்பட்டவர்கள்.!!!




படம்-www.siruppiddy.net



எனக்கு மூத்தவர்அவர், அவர் என்னை அண்ணே.. என்று கூப்பிடுவதை கண்டவுடன் அவருக்கு அருகில் சென்றவுடன் அந்த அண்ணன். இப்படிச் சொன்னார்.

“அண்ணே....! நாட்டுல நடக்கிற எத்தனையோ அநியாயத்தை நீங்க சொன்னிங்க.... இப்ப..நா சொல்ற  அநியாயத்தை நீங்க கேளுங்கண்ணே என்று அவர் சொன்னவுடன். அவர் ஜூலை-1 அநியாயத்தைதான் சொல்லப் போறார்ன்னு எனக்கு தெரிந்தது. தெரிந்ததை வெளிக் காட்டிக் கொள்ளாமல்..

என்னண்ணே... நீங்க புதுசா நடக்காத அநியாயத்தவா ...சொல்லப் போறீங்க... ம்ம் சொல்லுங்கண்ணே அந்த அநியாயத்த... என்றுவிட்டு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு இருந்தவர்களை அவர்க்கு அருகில் வரவழைத்தேன்.

அவர்...அந்த  அநியாயத்தை பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தார்.

அண்ணே.... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து. சென்னையில இருக்கிற நீதிமன்றம் உத்தரவாம்ண்ணே... !!!

நம்மை ஆள்வது அரசா...???நீதிமன்றமா???ன்னு  எனக்கு ஒரே புதிரா இருக்கு்ணணே.....!!!!

கணக்கை தப்பா போட்ட நீதிபதிய வேலைய விட்டு தூக்க முடியல......????

குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்தவன தண்டிக்க முடியல....????

60 கிலோமீட்டர் வேகத்தில போற வாகனத்தின் உரிமையை ரத்து செய்ய முடியல....????

சாலை விபத்துக்கு முதல் காரணமான டாஸ்மாக்கை மூடச் சொல்லி ஒரு உத்தரவு போட முடியல...?????

தனியார் வாகன உற்பத்திய குறைத்து, பொது பேருந்து போக்குவரத்தை ஊக்குவிக்க ஒரு ஆணை இல்ல.....????

வாய் பொளந்து  நாறிக் கிடக்கும் சாலைகளை செப்பனிடச் சொல்வதற்கு திராணியில்ல........

டிவிஎஸ் எக்லெல்ல  மெதுவாக போயி வரும் எங்களை போன்றவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ணணே....


சும்மவா  கொடுத்தான் எட்டு போட்டு காட்டியும் அதுல சூத்த..இதுல சூத்த ன்னு சொல்லி பலதடவை அலையவிட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றால்... தலைக்கவசம் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்தாம்ண்ணே..

அவர் சொல்லி முடித்ததும் இனனொருத்தர் தன்பங்குக்கு சொன்னார்.
ஏற்கனவே, இப்படி சொன்னானுக... தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுவது நம்ம தொழிலுக்கு ஆவாதுன்னு தெரிந்ததும் நானும் இப்படி புலம்பித்தான் தொழிலையும் விட்டுட்டேன். அதோடு வண்டியையும் வந்த விலைக்கும் வித்திட்டேன்.

அதுசரிப்பா..அவுக ஞாயப்படியே பாப்போமப்பா...... தலைக்கவசம் அணிந்த சாலை விபத்திலிருந்து தப்பிக்கலாம் என்றால்.. ரோட்டில ஓரமாநடந்து போறவன் ஏம்ப்பா .சாகுறான்......என்றார் வேறு ஒருவர்.

இத..அவிங்கிட்டதான் கேட்கனும் என்றார் இன்னொருத்தர்.

இப்படியாக ஒவ்வொருத்தரும் தங்கள் புலம்பலையும் வயித்தெரிச்சலையும் கொட்டி தீர்த்தனர். ஒன்றிரண்டு பேர்களைத் தவிர பெரும்பாலானவர்கள். தலைக்கவத்திற்கு எதிராகவே தங்களின் ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார்கள்.

யாணை வாங்கிவிட்டவர்கள் அதற்கு தினி போடமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்களை “முதுகெலும்பு இல்லாதவர்கள்”, அவர்களின் முதுகெலும்பை வளைத்துவிட்டதாகவே தெரிந்தது.

சனி 20 2015

தீய சக்திகளின் சதி வீழ்ந்தது...!!!!!!!!!

படம்-tamilsnow.com

 நீதி வென்றது
தலைக் கவசம்
விற்பனை உயர்ந்தது
50 பேர் சென்ற
சாலையில் இன்று
5000 பேர்கள் தலை
கவசம் அணியாமல்
குண்டும் குழியும்
செம பள்ளமும்
இல்லாத  வழவழப்பான
சாலையில் இரு
சக்கர வாகனத்தில்
பகுமானமாக சென்ற
தீய சக்திகளின்
சதி வீழ்ந்தது.

தலைக் கவசதயாரிப்பு
காரனின் பிராத்தனை
பலித்தது சூது கவ்விய
தலை கவசம் சட்டத்தின
மூலம் வென்றது.

தலைக் கவச தயாரிப்பு காரனுக்கும்
காப்பீடு செய்தும் விபத்தில்
இழப்பீடு வழங்காமல் வித்தாரம்
பேசும் காப்பீட்டுக்காரனுக்கும்

சாலையின் நடுவே நின்று
வழி மறித்து 100ம் 200மாய்
வசூலித்த அங்கீகார வழிப்
பறிகாரனுக்கும்  கூடுதலாக
வழிப்பறி செய்வதற்கு
கிடைத்த வெற்றி!!!

வாழ்க! அடிமைகளின் தேசம்!!
வளர்க!!! கொள்ளையர்களின் ராஜ்ஜியம்!!!!

வெள்ளி 19 2015

அடிமைகளை உருவாக்கும் தேசம்

படம்-www.lawyersundar.com


தீர்ப்புகளை மட்டுமே சொல்ல
வேண்டிய நீதிமன்றங்கள் சட்டங்களை
உருவாக்குகின்றன....

சட்டங்களை உருவாக்கும்
ஆட்சி மன்றங்களோ...தீர்ப்பை
எழுதுகின்றன...

மேற்கண்ட இரண்டையும் அம்பல
படுத்த வேண்டிய பத்திரிக்கைகளோ
ஒரு பக்க சார்பாய் அம்மனமாக
நின்று ஜால்ரா தட்டுகின்றன.

இவற்றின் எல்லாவற்றுக்கும்  மரண
அடி கொடுக்க வேண்டிய உழைக்கும்
மக்களோ அடிமையைாய் உருவாக்கப்பட்டு
கிடக்கின்றனர்.........

ஆக...இந்தியா அடிமைகளை உருவாக்கும் தேசம்.!!!!

புதன் 17 2015

' வேங்கடகணபதி "

படம்-kadugu-agasthian.blogspot.com

உண்ட மயக்கம் தீர உறங்க முடியாத அவஸ்தையில் கல்லாப்பெட்டி முன் அமர்ந்து நெளிந்து கொண்டிருந்தேன்.  தலைக்குமேல் மின்விசிறி ரீங்காரத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தது.  வெளியே போய் ஒரு புகை போட்டு வரலாம் என எழுந்தபோது ,  கையில் கைத்தடியுடன் ஒரு பெரியவர் கடைக்குள் நுழைந்தார். 


யாரோ ஒரு வாடிக்கையாளர் என்ற நினைப்பில்,  "வாங்க சார்" என அழைத்து "என்ன வேணும்" என்றேன் .

அவரோ பதில் ஏதும் கூறாமல் ஓரமாக இருந்த ஒரு ஸ்டூலை கடை நடுவே இருந்த மின்விசிறிக்கு நேராக வைத்து அமர்ந்து கொண்டார்.
"கொஞ்சம் இந்த பேன போடுறீங்களா?" என்றார்.

சற்றே எரிச்சலுடன் கடைப்பையனுக்கு சாடை காட்டவும், அவன் மூலையில் உள்ள சுவிச்சை தட்டினான்.

இப்போதாவது என்ன வேண்டும் என சொல்வார் என அவரை நோக்கினேன். படிய வாரிய பாதிக்கும் மேல் வெளுத்த தலை, தினமும் மழிக்கும் முகம், கண்ணாடி, சற்று பூசினாற்போல உடம்பு.  65 - 70 வயது இருக்கும்.  அரைக்கை சட்டையும் பேண்டும்.இரண்டு நிமிடங்களில் எழுந்த அவர், "ரொம்ப தேங்ஸ் சார்" எனசொல்லியபடி நடையை கட்டினார்.

வியாபாரம் செய்யாமல், தம்மடிக்கவும் விடாமல் , வெறுமனே காற்று வாங்கிச் சென்ற அவர் மீதான கடுப்பில் "யார்டா இது" என பையனிடம் எரிந்து விழுந்தேன்.

பேன் சுவிச்சை அணைத்த படியே, "தெரிலணே, அப்பாவுக்கு தெரியும் போல.  வந்து பேசிட்டுருப்பாரு"  என்றான்.

அதற்கு பிறகும் ஒருசில முறைகள் அந்த பெரியவர் வந்தார்.  வரும் போதெல்லாம் நடப்பவையும் ஒரே விசயம் தான்.  அதே போல மதியம் 2 - 3 மணி உச்ச வெய்யிலில் தான் வருவார்.  இரண்டு நிமிடங்கள், அதிகபட்சம் மூன்று நிமிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.  வேறு எதுவும் -அப்பா எப்படி இருக்கிறார், வியாபாரம் எப்படி இருக்கு -  எதுவுமே பேச மாட்டார்.

பிறகெல்லாம் அவர் வரும்போது "வாங்க" என அழைப்பதைக் கூட விட்டுவிட்டேன். வருவார், ஸ்டூலை எடுத்துப் போட்டு அமர்வார், பையன் பேன் போடுவான்,  காற்று வாங்கிவிட்டு "தேங்ஸ் சார்" கூறிவிட்டு போய்விடுவார்.

ஒரு முறை அவர் வந்த போது, வழக்கம் போல் ஸ்டூலை எடுக்காமல் நேரே கல்லாவில் இருந்த என்னிடம் வந்தார்.

"என் பாக்கி எவ்ளோன்னு பாருங்க" என்றார்.

ஒன்றும் புரியாமல் விழித்த என்னிடம் , "போன வாரம் அப்பாட்ட சாமான் வாங்கினேன்.  பாக்கி கொடுக்கணும்.  எழுதி வெச்சுருப்பாரு பாருங்க.  நாப்பது ரூவான்னு நெனைக்கிறேன்.  எம் பேர போட்டு சீட்ல எழுதி வெச்சுருப்பாரு.  பேரு வேங்கடகணபதி" என்றபடி ஸ்டூலில் அமர்ந்தார்.
அவர் கூறியபடி சீட்டு இருந்தது.  அவர் வாங்கிய பொருட்களின் விபரம், அவற்றின் விலை, மொத்த தொகை ரூ.390/-, வாங்கிய பணம் ரூ.350/-, பாக்கி ரூ.40/- என எல்லா விவரங்களும் சீட்டில் இருந்தது.

சீட்டை பார்த்துவிட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்.  "டவுன் பஸ்ஸுக்கும் காப்பி சாப்பிடவும் அன்னிக்கி பணம் வேண்டி இருந்திச்சி.."
என சொல்லிவிட்டு, வழக்கமான "தேங்ஸ் சார்" கூறிச் சென்றார்.

பிறகெல்லாம் அவரது வருகை அரிதாகி விட்டது.  மாதம் இரண்டு மூன்று முறைகள் வந்து கொண்டிருந்தவர் , மாதம் ஒருமுறை வருவதே பெரிது என்றானது.

மொட்டை வெய்யிலில் ஒரு நாள் தன் மனைவியுடன் வந்தார்.  அவர் மனைவிக்கு அவரைவிட உடல் உபாதைகள் அதிகம் போலும்.  கணவரின் கையை பிடித்துக் கொண்டு தள்ளாடி நடந்து வந்தார்.   வழக்கம் போல அமர்வதற்கு இரண்டு ஸ்டூலை எடுத்து வைத்தார் பெரியவர்.  அந்த அம்மாள் பெரியவர் போன்று இல்லை.  நொய் நொய் என  வாய் ஓயாமல் எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தார்.  உங்க கூட பொறந்தவங்க எவ்வளவு பேர், ஏன் இன்னும் கல்யாணம் முடிக்கல ,  கடைக்கு கரண்டு பில் எவ்வளவு வருது,  இந்த பொருள் என்ன விலை, இது, அதை கொஞ்சம் எடுத்துக் காட்டுங்களேன் .

காட்டினேன்.  அதற்கான விலையைக் கேட்ட போது, பேரம் பேசுவதற்கு உதவியாக  விற்பனை செய்து வரும் விலையில் இருந்து 50/-ரூபாய் அதிகமாக கூறினேன்.  அந்த அம்மாள் பெரியவரை பார்த்து , "இத எடுத்துக்கலாமாங்க" என கேட்டார்.  பெரியவரோ பதில் ஏதும் கூறாக கூறாமல் மணிப்பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

என்னால் மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை.  தேவையின்றி விலையை அதிகமாக சொல்லி விட்டோமே என்று குடைந்தது.  எனினும் கூடுதலாக விலை சொன்னதை ஒப்புக்கொள்ளும் மனமில்லை.  நம்பிக்கை போய்விடுமே , அடுத்து வர மாட்டார்களே என்ற கவலை.  அமைதியாக பணத்தை கல்லாவில் போட்டேன்.

"ரொம்ப தேங்ஸ் சார்" போய்விட்டார்கள்.   வேலைகளின் ஊடாக ஒரு சில மணிகளில் ஏமாற்றிய உறுத்தல் காணாமல் போனது.
நெடு நாட்களுக்குப் பின் அதிசயமாக மாலை வேளையில் பெரியவர் வந்தார

கையில் ஒரு கிப்டு பார்சலை திணித்து , "அப்பா கல்யாண பத்திரிகை கொடுத்தாரு ,  உடம்பு சரியில்ல , வர முடியல.  வாழ்த்துக்கள் .  அப்பாட்ட சொல்லிருங்க." சென்று விட்டார்.

பார்சலை பிரித்துப் பார்த்தேன்.  சுவிச்சை போட்டால் 'ஓம், ஓம்' என ஜெபிக்கும் மிசின் .   நமக்கு இது எதற்கு என உடனிருந்த வேறு ஒரு நண்பருக்கு கொடுத்து விட்டேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு தான் மண்டையில் உரைத்தது ,  ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்காமல் அனுப்பி விட்டோமே என்று.  கல்யாணத்திற்கு வந்திருந்தால்,  சாப்பாடு போட்டிருப்போம்.   ச்சீ..  நம்மை பற்றி என்ன நினைப்பார் என தோன்றியது.

அடுத்த முறை கடைக்கு வந்த பெரியவர்,  நேராக என்னிடம் வந்து, தயங்கித் தயங்கி ," இங்க, பக்கத்துல ரேடியோ ரிப்பேர் செய்ய வந்தேன்.  50/- ரூவா கொறையுது.  தந்தீங்கன்னா அடித்த வாட்டி வரும்போது திருப்பித் தந்துர்றேன் " என்றார்.

யோசிக்காமல் கல்லாவில் இருந்து பணத்தை எடுத்தேன்.  முன்பே அவரிடம் 50/- ரூபாய் கூடுதலாக வாங்கியதும் நினைவிற்கு வந்தது.
பணத்தை நீட்டினேன்.  " எம்பேரு வேங்கடகணபதி. எழுதி வெச்சுக்கங்க.  அப்பாக்கு தெரியும்" .  பணத்தை வாங்கிக் கொண்டார்.  "ரொம்ப தேங்ஸ் சார்".

நான் எழுதி வைக்கவில்லை.  

அந்த பணம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என விட்டுவிட்டேன்.   வந்தால் சிரமம்.  மீண்டும் மீண்டும் பணம் கேட்கக்கூடும்.  வராவிட்டால்,  50/- ரூபாயோடு போய்விடும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.

அதே போல பெரியவரை கொஞ்ச நாட்களாகவே காணவில்லை.  அவரை மறந்தே கூட போய்விட்டேன். 

அன்று ஏதோவொரு வேலையாக கடையில் கணக்குப்பிள்ளையை அமர்த்திவிட்டு வெளியே போய்விட்டு, மாலை  கடைக்கு வந்தேன்.

நடந்த வியாபாரம், கொடுக்கல், வாங்கல் வரவு விபரங்கள் எல்லாம் என டீ  குடித்துக் கொண்டிருக்கும் போது கணக்குப்பிள்ளை, "வேங்கடகணபதிங்குறது யாருய்யா?" என்றார்.

"கட கஸ்டமர் தான் கணக்குப்பிள்ளையா.  வந்துருந்தாரா.  50/-ரூவா அவர் தரணும்"

"அவர் சன் வந்துருந்தாரு.  பணத்த குடுத்துட்டாரு.  அவரு இல்லியாம்யா".
"என்ன கணக்குப்பிள்ளையா"

"கிட்னி பெயிலியராம்.  4 மாசம் ஆஸ்பத்திரில  இருந்தாராம்.  அப்பத்தான் கடைல காசு வாங்குனத சொன்னார். கொஞ்சனா முன்ன முடிஞ்சுருச்சாம்." 

டீ தொண்டைக்குள் இறங்க மறுத்தது.  கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டே இருந்தார்.

"பற்று சீட்டு எதுவும் காணல .  அதான் பணத்த தனியா கிளிப்புல வெச்சுருக்கேன்........


---பால்ராஜ்


திங்கள் 15 2015

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்?

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில்,Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு: 
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

 நன்றி!!!http://kalaiy.blogspot.in/  கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...