புதன் 14 2017

வினா எழுப்ப அனுமதி தந்தால்........

வகுப்பறையில்  ஒரு நாள்
“உயிருள்ளவை நகரும் ”என்றார்
ஆசிரியர்...  அப்போது..

ஜன்னல் வழியே எட்டி
பார்த்த மாணவன் ஒருவன்
“ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு
உயிர் இருக்கிறதா” என்று
கேட்டான்............

யோசித்தார் ஆசிரியர் பின்
“அதனை உயீருள்ள ஒருவன்
ஓட்ட வேண்டியதாய் இருக்கிறது
என்று விளக்கினார்.............

மற்றொரு மாணவன் நேற்று
மரத்திற்கு உயிர் இருப்பதாக
சொன்னீர்களே! மரம் நகரவில்லையே
என்று கேட்டான்.

ஆசிரியர்  மீண்டும் யோசித்தார்

 வினா எழுப்ப அனுமதி
தந்தால் இப்படி அறிவு
பூர்வமான கேள்விகள் வரும்

என்பதனை தவிர்க்கவே
அதனை அனுமதிப்பல்லை..

கேள்வி கேட்க கற்றுத்தர
வேண்டிய கல்வி இன்று
கேள்விக்கிடமின்றி மக்களை
காயடிக்க பயன்படுகிறது.


நன்றி! வினவு..     கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் நேர்முகத்திலிருந்து

4 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே
    கேள்விகளால் நிரம்பி வழிய வேண்டிய இடம் வகுப்பறைதான்

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வேண்டியது மனிதனின் கடமை நண்பரே

    பதிலளிநீக்கு
  3. சந்தேகம் போக்கும் ஆசிரியர்களும் உண்டு :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான எண்ணம்
    மாணவர் கேள்வி கேட்டால்
    ஆசிரியர் பதில் தருவரோ?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...