வியாழன் 08 2017

ஒரு வாக்கு...வாதம்....

நண்பர் இருவர்
பலர்  வந்து
நிற்பதையும் மறந்து
காரசாரமாக விவாதித்து
கொண்டு இருந்தனர்

எதைப்பற்றி என்று
உற்றுக்கேட்டேன் அது
நீட் தேர்வை பற்றியது

நீட் தேர்வு ஏழைகளுக்கு
எதிரான புதிய மனு
நீதி  நீட் தேர்வு
ஆனது மருத்துவக் கல்வியை
பணக்கார வீட்டு வாரிசுகளின்
தனிச் சொத்தாக்கி விட்டது
என்றார் ஒருவர்.......

ஆமாமா...ஏழைகள் படித்து
போனாலும் முதல் வேலையாக
அந்த ஏழைகளுக்குத்தான் மருத்துவம்
பாப்பாங்கே....அட போங்க சார்..
அவனவன் சுயநலம் படிச்ச
வங்களாகத்தான் இருக்காங்க
என்றார் மற்றவர்.......

ஒருவர் மறுக்க மற்றவர்
எதிர் வாதம் செய்ய
இப்படியாக வாக்கு
வாதம் முற்றி வளர்ந்து
கொண்டே போய்க்
கொண்டு இருந்தது..
முடிவதாகவும் தெரியவில்லை
நிறுத்தவும் முடியவில்லை




7 கருத்துகள்:

  1. அரசின் நிலைப்பாடும் இப்படி முடிவு தெரியாமல்தானே இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வாக்குவாதத்திற்கு மருந்தில்லை ஜி...

    பதிலளிநீக்கு
  3. ஏழைகள் படித்து
    போனாலும் முதல் வேலையாக
    அந்த ஏழைகளுக்குத்தான் மருத்துவம்
    பாப்பாங்கே.//
    இந்த வகையான மூட நம்பிக்கைகள் பல தமிழர்களிடம் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. நீங்களும் நீட்டா ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி விட்டீர்களா :)

    பதிலளிநீக்கு
  5. வாக்கு வாதம் முற்றினால்
    விளைவு...?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...