செவ்வாய் 06 2017

ஓய்வும்..... ஊதியமும்.......

என்னை மறந்த
பால்ய நண்பர்
ஒருவர் தன்
மகனின் திருமண
நிகழ்ச்சியின் போது
அவரின் நிணைவுக்கு
வந்த என்னை
பார்க்க என்
இல்லம் தேடி
வந்தார் வந்தவர்
தான் ஓய்வு
பெற்று விட்டேன்
என்ற தகவலுடன்
தன் மகனின்
திருமண அழைப்பிதழை
கொடுத்து விட்டு
உனக்கு ஓய்வு
இல்லையா என்று
கேட்டு விட்டு
பின் அவரே
சொந்த வேலை
புரிவோருக்கு ஓய்வு
என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம்
என்பதும் கிடையாது
என்று முன்
மொழிந்தார் ஓய்வு
பெற்ற அரசு
ஊழியரான நண்பர்.

8 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் ஒருநாள் ஓய்வுண்டு நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இப்போது வேலைக்கு சேரும் யாருக்கும் ஓய்வூதியம் இல்லாமல் ஆகிவிட்டதே ,தோழரே :)

    பதிலளிநீக்கு
  3. இப்படிப் பலர் வஞ்சகமாய்ப் புகழ்வர்.

    பதிலளிநீக்கு
  4. அரசுப் பணி என்பரே, ஓய்விற்காகவும், ஓய்வூதியத்திற்காகவும்தானே

    பதிலளிநீக்கு
  5. தன்மானமுள்ள மனிதனாக இருந்து சுயமாக உழைத்து சம்பாதிப்பவனுக்கு ஒய்வு தேவையில்லை காரணம் அவனுக்கு பிடித்த தொழிலை செய்வதால் அவனுக்கு சோர்வு வருவதில்லை ஆனால் அடுத்தவனுகு அடிமையாக இருந்தவன் கடைசிகாலத்திலாவது சுதந்திரமாக இருக்கட்டும் என்று கருத்திதான் ஒய்வு தருகிறார்கள் ஆனால் ஒய்வு பெற்ற பின் வீட்டில் அடிமையாக கருதி வேலை வாங்குவார்கள் என்பது உறுதி tm 4

    பதிலளிநீக்கு
  6. சொந்த வேலை புரிவோருக்கு
    ஓய்வு என்பதும் இருக்காது
    ஓய்வு ஊதியம் என்பதும் கிடையாது
    ஆனால்,
    உள்ளத்தில் நிறைவு கிட்டுகிறதே!

    பதிலளிநீக்கு
  7. ஓய்வு என்பது வேலைக்கு மட்டுமே! உடலுக்கு அல்ல!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...