செவ்வாய் 19 2017

வாயை அடைப்பது இதுதானோ...????



இந்தியாவில்  ஆர் எஸ்எஸ்ன் நீட் தேர்வு வருவதற்கு முன்னாடி இந்தியாவின் முதல்  பெண் டாக்டர் ஆக ஆனவர் முத்து லெட்சுமி அவர்கள். அவர் எம்எல்சியாக  தேர்வு செய்யப்பட்டப் பின்..தந்தை பெரியாரை சந்தித்து, உங்களுக்காக நான் சட்டசபையில் எதாவது செய்ய வேண்டுமா ? என்று கேட்டார்.

அதற்கு பெரியார் சொன்னார்“ எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். பெண்களை தேவதாசிகள் என்று சொல்லி கோவிலில் பார்ப்பான் விபச்சாரத் தொழில் செய்து சம்பாதிக்கிறான். முடிந்தால் அதை தடுக்க குரல் கொடுங்கள் என்றார்.

முதல் பெண் டாக்டர் முத்து லெட்சுமி அவர்களும் சட்டசபையில் அதைப்பற்றி கேட்டார்.

அதைக் கேட்ட காங்கிரசை சேர்ந்த சத்தியமூர்த்தி  என்ற பார்ப்பனர்.. அது கடவுளுக்கு செய்யும் தொண்டு, அதில் சட்டத்தில் இடமில்லை என்று வாதிட்டார்..

பின் டாக்டர் அம்மையார் பெரியார் சொல்லியதை சொன்னார். நல்லது அது கடவுளுக்கு செய்யும் தொண்டுதான்... இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் செய்தார்கள்..இனி மேல் உங்கள் வீட்டுப் பெண்கள் அந்தத் தொண்டை செய்யட்டுமே...? என்றவுடன் வாயடைத்து போனார் பார்பனர் சத்திய மூர்த்தி......

3 கருத்துகள்:

  1. சரியான சாட்டை அடி ,சத்தியமூர்த்தி இதைக் கேட்டதும் செத்தமூர்த்தி ஆகியிருப்பாரே :)

    பதிலளிநீக்கு
  2. கேள்வி கேட்பதற்கு மட்டுமல்ல பதில் சொல்லவும் திறமை வேண்டும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...