புதன் 20 2017

இ்ரண்டாவது வருட நிணைவு நாளில்............

இரண்டு வருடங்களுக்கு முன்பு 20/9/2015-ல் இரவு 8 to 8,30 மணியளவில் என்னை பெற்று பாதுகாப்பாக வளர்த்த என் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தார்
அவர் பிரிந்த இரண்டாவது நிணைவு நாளாகும்.

என்தாய் இறந்தபின் இந்துக்குரிய எந்த மதச் சடங்குகளையும் செய்யாமல் எவ்வித சச்சரவு ஏற்படாமல் தகனம் செய்தேன்.. இடுகாட்டில் புதைப்பதற்கு இடம் இல்லாததால் எரியூட்டப்பட்டார்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து..என் தாய் ஆனையிடும் வேலைகளை எனக்கு பிடிக்காமல் எதிர்மறையான கருத்து இருந்தாலும் அதை அவர் முன் வெளிக்காட்டாமல்அவர் இறக்கும் வரை அதை செய்து முடித்தேன் .இறப்பதற்கு முன்பு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் இருந்த போது அவர் அருகில் அதிக நேரம் இருப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு காரணம் எனக்கு ஏற்பட்ட பயம்தான்..

அந்த பயத்துக்கு காரணம் இதுதான்....விபத்தால் இடையில் பார்வையிழந்த என் அக்காவையும் அக்காவின் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிக் கொண்டமாதிரி வேறு எதாவது கோரிக்கை வைத்து வேண்டினால் என்ன செய்வது என்ற பயம்தான். என் தாயார் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் அவர் அருகில் சென்ற நான்... அவர் பூதவுடலை சுடுகாட்டில் எரியூட்டும்வரை அவர் உடலை விட்டு அகல வில்லை....

என் சிறு வயதில் அவரிடம் வாங்கிய அடி உதையினாலும்  என் உடலோடு பயம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அந்தப் பயம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்தாயார் இறந்த பின் எனக்கு  குளிர் விட்டு போச்சு என்ற கதையாக... என் அக்காவின் கணவராலும்.அவர்களின் பிள்ளைகளாலும் ஏகப்பட்ட கஷ்டத்தையும் துயரத்தையும் அனுபவித்த நான்... வேண்டாத செலவுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைய அவர்களுடன் போராடினேன். அவர்கள் என்னிடம் முரண்பட்டே வந்தார்கள்.... நானும் நிலக்கடலைக்கு ஆசைப்பட்ட குரங்குபோல  கடலையையும் விட முடியாமல் கையையும் எடுக்க முடியாமல் தவித்து வந்தேன்...

நான் செய்து வந்த தொழிலிலும் என்னோடு முரண்பட்டே வந்தார்கள்..கடுமையாக உழைத்து வந்தேன். என் தாயார் இறந்து இரண்டு வருடங்களில்      சலிப்பும் வெறுப்பும் புலம்பலும் அதிகமாகிக் கொண்டே வந்ததது...

முழுக்க நணைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழிக்கேற்ப.. எனது தாயாரின் இரண்டாவது நிணைவு நாளில் பயத்தை விட்டொழித்து திடமான ஒரு முடிவு எடுத்து விட்டேன்...இந்த இரண்டாவது நிணைவு நாளிலிருந்து என் தொழின் அனைத்து நிலைகளையும்  வேலைகளையும்வரவு செலவு அணைத்தையும் என் மருமகன்களிடம் ஒப்படைத்துவிட்டேன்...விருப்பம் இருந்தால் உணவு கொடுங்கள்... இல்லையென்றால் ஆளை விடுங்கள்...என் தாயாரின் வேண்டுகோளின் படி உங்கள் விருப்பத்கேற்றபடி இதுநாள்வரை  நடந்து கொண்டேன்.. என் விருப்பத்திற்கு  வர நீங்கள் தயாராக இல்லாத போது  இனி நான் உங்கள் விருப்பதற்கு ஏற்றாற் போல் நடக்க முடியாது.

என்னைவிட்டால் உங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் மேற்படி தொழிலை நீங்களே ! ஏற்று உங்கள் விருப்பபடி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு... அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்து விட்டேன் என் தாயார் இல்லாத தைரியத்தில்....குடும்பமே இல்லாத...சுதந்திரமனிதனாக  ஆகிவிட்டேன்.

என்னைக் கேன.... கிறுக்கன் ,லூசு ,மக்கு,என்று பலவாறு திட்டிய நண்பர்களுக்கும் தியாகி. உன்னைப்போல் எவனும் இல்லை என்று பாராட்டிய தோழமைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்    நன்றி!



7 கருத்துகள்:

  1. எல்லாம் அவன் செயல் என்று மனதை தேற்றிக்கொள்ளுங்கள் ஜீ!

    பதிலளிநீக்கு
  2. ஆகி வந்தா இந்த மடம்,இல்லேன்னா அடுத்த மடம் என்பார்களே ,நீங்க எடுத்த முடிவே சரி :)

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தியாகம் நான் முழுமையாக அறிந்தவன் நண்பரே...

    இனிவரும் காலங்கள் தங்களுக்கு சந்தோஷமாக இருக்கட்டும்.

    தாயை கடைசிவரை சந்தோஷமாக வைத்துக்கொண்டவர்கள் உலகில் கொஞ்சம் நபர்களே அந்த வட்டத்துக்குள் நீங்களும் இருப்பது எனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. //என் அக்காவின் கணவராலும்.அவர்களின் பிள்ளைகளாலும் ஏகப்பட்ட கஷ்டத்தையும் துயரத்தையும் அனுபவித்த நான்... வேண்டாத செலவுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைய அவர்களுடன் போராடினேன்.//
    இது இந்தியாவில் நடைபெறும் இன்னொரு கொடுமை.
    உங்களுக்காக வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொருவர் வாழ்விலும் இவ்வளவு வலிகளா? நான் மட்டும்தான் இந்த உலகில் கஷ்டப் படுவதாக நினைத்து கொண்டிருந்தேன்.ஆனாலும் கார்த்தியின் பிரிவு துயர் கொடுமையானதுதான்.
    உங்கள் கஷ்டங்களுக்கு விடிவு கிடைத்து நிம்மதியாக வாழ பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    கார்த்திக் அம்மா

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் சிந்தித்து எடுத்த முடிவு சரியாகத்தான் இருக்கும் நண்பரே
    ஆனாலும் தங்களுக்கு என்று ஒரு நிதி ஆதாரத்தை நிலையாய் வைத்துக் கொண்டால்,நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தியாகம் பாராட்டத் தக்கது த ம 4

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...