வெள்ளி 08 2017

கேணப்பய ரோட்டுல......

“சார்....வணக்கம்....இந்த ஊரு எங்க சார்...போகுது...”

“இந்த ஊரு எங்கேயும் போகாதுப்பா......”

“இல்ல..சார், இந்த ரோடு எந்த ஊருக்கு போகுதுன்னு கேட்டேன் ..”

“அப்படியா.... நீ எந்த ஊருக்குப்பா...போகனும்”

“சொக்க தேவன் பட்டி..சார்”

“இது அந்த ஊறுக்கு போகாதுப்பா...”

“ அப்ப... இது போகும் ஊரு பேரு என்ன..சார்...”

“உனக்கு, சொக்கி தேவி பட்டி தெரியுமா..?”

“தெரியாதே சார்”

“எனக்கு தெரியும்”“அந்த ஊருல என்னய... இறக்கி விட்டா, நீ போற ஊரு தானா வந்திடும்..”

“அப்படியா..சார்....

அட....ஆமாப்பா......”


சரிங்க சார், கோபித்துக் கொள்ளாமல்  இப்படியே உட்கார்ந்து இருங்க...பக்கத்தில போயி வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வந்துடுறேன்......சார்..”

என்னப்பா..இது,சொக்கத்தேவன்பட்டிக்கு போற....பெட்ரோல் போடாமயா..போற....

உங்கள பார்த்த பிறகுதான் தெரிய வந்தது சார், பக்கத்தில சொக்கி பட்டின்னு சொன்னீங்களே.............

“அதுக்கென்னப்பா.... நீய் ஒரு உதவி செய்யப்போற..... பதிலுக்கு நா..ன் ஒரு உதவி செய்யப் போறேன்...நீ வர்ரவரை காத்து இருக்கேன் பா...”

நீதி----- கேனப்பய ரோட்டுல...... ஓசி பய  நாட்டாம......



5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...