சனி 03 2018

நினைவலைகள்-12..









மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு....................


மானமும் அறிவும் மனிதருக்கு அழகு க்கான பட முடிவு






போனவாரத்திலிருந்தே..தீபாவளி ..தீபாவளி..என்றுதான் எல்லோருடைய மூளையிலும் ஒவ்வொரு விதமாக கண்டிப்பாக பதிவாகி .இருக்கும்.. என் மூளையிலும் தீபாவளி பதிவாகி இருந்தது.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நானோ என் தாயரோ கொண்டாடியது இல்லை. அன்று என் வீட்டில் அடுப்பு எரியாது... ஆனால்.. என் வீட்டில் இட்லி. வடை. திண்பண்டங்கள் ..சுவிட்காரம் சில.. கிடைக்கும்  இட்லியே பார்க்காத... சாப்பிடாத எனக்கு  தீபாவளிக்கு  கிடைத்துவிடும்.. 

அன்றிலிருந்து இரண்டு நாள் அல்லது மூன்று நாளைக்கு இட்லிதான்.. மட்டன்  கொழம்பை மட்டும் என் தாயார் அவ்வப்போது சுட வைத்து கொடுத்து விடுவார்.. என் தாயார் இல்லாத நேரங்களில் நானே சுடவைத்து சாப்பிட்டு விடுவேன்.

புது சட்டையும் எனக்கு கிடைத்துவிடும்... துவைத்தால் சாயம் போய் விடும்.. புண்ணியத்துக்குவிடுகிறேன். கொடுத்த மாட்டை பல்ல குத்தி பார்க்க கூடாது என்று என் தாயார் சொல்வதால்... கிடைத்தே போதும் என்று இருந்துவிடுவேன்.

அது சரி...கஞ்சிக்கே.. அல்லாடும் எனக்கு இட்லி வடை சுவிட்காரம் எல்லாம் எப்படி கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழவே வேண்டாம். அதை நானே சொல்லி விடுகிறேன்.   அதாவது வந்துங்க...எங்க அம்மா வேல செய்யுற வீட்டிலிருந்து கொடுப்பாங்க.... எங்கம்மாவுக்கு சேல கொடுக்கும்போதே..எனக்கும் என் அக்காவுக்கும் துணிகள் எடுத்து கொடுத்து விடுவாங்க.... அந்த  வீட்டு எஜமானர்களின் தயவில் எங்களுக்கும்.. தொழிற்சாலையில்   போனஸ் கொடுப்பது மாதிரி.....
ம்...
நாள் நாள் ஆக எனக்கு தீபாவளி என்றாலே... அதன் மீது  எனக்கு ஒரு வெறுப்பு வந்துவிட்டது.. இல்லாத குறை என்பதைவிட...தீபாவளியை வைத்து காசு பணம் இருக்கிற பக்கிகளை விட.... இல்லாத பக்கிகள். பெண்கள் .செய்யிற அலும்பு பெரும் அலும்பாக இருக்கும்.  காசு இல்லையே தீபாவளி எதுவும் வேண்டாம் புறந்தள்ளாது..... கடனுக்காக நாயாய் பேயாய் அலையும்..கடனும் கிடைத்துவிட்டால்  வாங்கிய கடனுக்கு மேலேயே செலவு செய்யும்... ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்த கதை மாதிரிதான்.. தீபாவளி  முடிந்தவுடன்
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட அதக்கும் நாயாய் பேயாய் வேலை செய்யனும்

இப்படியான பார்வை எனக்கு. யாரும் சொல்லாமலே  எனக்கு தோன்றியது.
அதனால் என் தாயாருக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல... நான் சாகும் இப்படிபட்ட மோசமான அறிவுக்கும் நடப்புக்கும் சம்பந்தமே இல்லாத கேடு கெட்ட விழாக்களை இதுவரை கொண்டாடிதில்லை.. இனிமேலும் கொண்டாடுவதில்லை....

நண்பர்கள். உறவினர்கள்.. தீபாவளிக்கு கவனி என்று கேட்கும்போது... தீபாவளி தமிழன் கொணடாட வேண்டிய விழா இல்லை என்று அவர்களை ஒட விடுவதில்லை... நான் தீபாவளியை கொண்டாடுவது இல்லை... கொண்டாடுபவர்கள்தான்  கொண்டாடாதவர்களை கவனிக்க வேண்டு்.ம் என்று நசூக்காக சொல்லி விட்டு நகர்ந்திடுவேன்

வீம்புக்கு நான் ஏன்? தீபாவளியை கொண்டாடுவதில்லை என்று வாதம் புரிபவர்களிடம்.... பாரதிதாசனின் இந்தக் கவிதையைச் தான் பாடித்து சொல்வேன்..

  நரகனைக் கொன்ற நாள்
நல்விழா நாளா?
நரகன் யார்
நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை 
அழைக்கின்றாரே!

இராக்கதன் என்றும்
இயம்புகின்றாரே!

அசுரன் என்றால்
தமிழன் என்றல்லலோ பொருள்?
பழக்கம் தனில் ஒழுக்கம்
இல்லையேல..
கழத்துப் போயினும்
கைக்கொளல் வேண்டாம்
தீபாவளியை தீ வாளி என
விடேல்


இராமனின் அப்பனுக்கு
 அறுபதாயிரம் பொண்டாட்டி
நம்பினாய்...........

ரிஜியின் மனைவி
கள்ள உறவால்

சிவனின் உறுப்பறுந்து
“சிவலிங்கம்”
உருவானது   அதையும்
வணங்குகிறாய்..

பார்வதி அழுக்குரண்டை
 பிள்ளை வினாயகன்
கதை நம்பி
கொண்டாடுகிறாய்

ஆணுக்கும் ஆணுக்கும்
 பிறந்த பிள்ளை
“அய்ப்பன்” என்றதும்

அய்யம் கேட்காமல்
இருமுடி சுமந்து
பொருளை இழக்கிறாய்.

சீதை பத்தினி
அவளை தொடாமல்
காத்த இராவணன்

உன்குல எதிரியென
பூனூல் சொல்நம்பி
“ராமலீலா” 
 மகிழ்கிறாய்

பூமி கடலுக்குள்
பன்றி அவதாரம்
மீட்பு  காதல்
கலவி...்”


“நரகாசூரன்”
பிறப்பு இறப்பு
கொண்டாட்டம்
“தீபாவளி”

ஒரு நாள்
கூத்துக்கு மீசை
இழந்த கதையாய்
கடன் சுமக்கிறாய்

இப்படி
நுற்றுக்கணக்கில்
கதைகள் அள்ளி
விட்டாலும்......

அனைத்திலும் தேவர்
அசுரர் போர்
கருவாயிருக்கும்...
யார் அசுரர்
யார் தேவர்
எவர் நலன்
காக்கும் கதைகள்

எதுவும் புரியாமல் 
 அல்லது புரிந்தும்
கொண்டாடும் எம்
இழிச்ச வாய்
தமிழ்மக்களே!

எப்படி உங்களை
மீட்போம் என
மனம் தளராமல்

ஆயிரம் ஆண்டுகள்
அறிவீணத்தை ஈரோட்டு
சுடர்கொண்டு எரித்து

மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு
என்பதை விதைத்து

பகுத்தறிவுடன்
சுய மரியாதை
வாழ்வுக்காய்
சூளுரைப்போம்..


--கேட்கிறவர்.. நட்பாக இருந்தவராக இருந்தால்...வாழ்த்துவார். பின்னாளில் .தொடரவார்.... மனித மாக்காளக இருந்தால்... என்னை ஏற இறங்க பார்ப்பார். சிறிது நேரம் முறைப்பார்..... பிறகு தன் பொன்னான வாயால் ஒரு கடியோ..அல்லது பல கடியோ கடித்துவிட்டு  ..திரும்பி பார்க்காமல் சென்று விடுவார்...





6 கருத்துகள்:

  1. கவலையை விடுங்கள்.. கதை சொல்வதில் அவர்கள் கில்லாடி என்றால்.. அதை அப்படியே நம்பி அடிமைகளாய் வாழ்வதில் நாம் கில்லாடிகள்..

    பெரியார் சொல்லியும், பாரதிதாசன் சொல்லியும் கேட்காதவர்கள் நாம் சொல்லியும் கேட்க மாட்டார்கள்.. இருந்தாலும் சொல்லுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவதான்..திரும்பத் திரும்ப சொல்வது நண்பரே!.

      நீக்கு
  2. சொல்லி வைப்பது நமது கடமை எனகொள்வோம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறிய படி சமூகத்தின் நமது கடமையாக சொல்வோம் நண்பரே!!

      நீக்கு
  3. மானமும் அறிவும்
    மனிதர்க்கு அழகு
    என்பதை விதைத்து

    பகுத்தறிவுடன்
    சுய மரியாதை
    வாழ்வுக்காய்
    சூளுரைப்போம்

    பதிலளிநீக்கு
  4. பகுத்தறிவுடன்
    சுய மரியாதை
    வாழ்வுக்காய் வாழ்நாள் முழுவதும்
    சூளுரைப்போம்--நண்பரே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...