புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும்போது செல் ஒலி எழுப்பி விடுகிறது.. யாராச்சும் வரச் சொல்லி பேசுவாங்க.. வருவதற்கு ஒரு நேரத்த சொல்லி செல் போன நோண்டிகிட்டு இருக்கும்போதே திரும்பவும் தலை ஆட்டம் கண்டுவிடும். திரும்பவும் படுத்து சிறிது நேரம் தூங்குவேன்..
பகலில் நாயாய் மாடாய் அலைந்து விட்டு, இரவில் ஏழு மணிக்கு தொடங்கின்ற வேலை இரவு மூன்று மணிவரை முடியும். சில நேரங்களில் அந்த வேலை முடிந்துவிடும் .சில வேளைகளில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிடும் கால் பங்கு வேலை பாக்கியிருக்கும் அந்த வேலையை முடித்து விட்டு தூங்கலாம் என்று எண்ணிலாலும், தயார் படுத்தினாலும் முடியாது சோர்வு தட்டி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு.
கொரனா காலத்திலும் கொரனா முடிந்த காலத்திலும் வேலை இல்லாத காரணத்தால் வேலை பார்த்து வந்த மருமக,மருமகன்கள் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் ஒரே ஆளாக பகலில் அலைவதும் இரவில் வேலை செய்வதுமாக பழகிக் கொண்டேன்.
உண்ணுவதும் உறங்குவதும் விதிப்படி இல்லாமல் வேலையின் நிலைமையை ஒட்டி மாறிவிட்டது. ஒற்றைவழி வரும் வருமானத்தை வைத்தே ! கொரோனா வுக்கு முன் வாங்கிய மிஷின் லோனும் . எனது சாப்பட்டுக்கும் யாரிடமும் கையேந்தாமல் பயன் படுத்தி வருகிறேன்.
வேலை இருக்கும் நாளெல்லாம் வேலை நாள்.. வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாட்கள்...அந்த விடுமுறை நாட்களில்தான் எத்தனை வேலைகள்
துணி துவைப்பது. இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது... அலுவலகத்தை சுத்தம் செய்வது இப்படி வரிசையாக வேலை வந்தபடியே இருக்கும்.
தனிமரம் தோப்பாகாதுதான். என் அக்கா பிள்ளைகளை வளர்த்து அவர்களை ஆளாக்கி தனித்தனியாக செட்டில் ஆக்கி விட்ட காலம் அதிகம் கடந்து விட்டதால் ..நான்தோப்பாகுறதுக்கு எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இருப்பினும் அதற்க்காக நான் வருத்தப்படவும் இல்லை ஏக்கப்படவுமில்லை.
தனிமரமாக இருந்து வாழ்ந்து மடிவதுதான் என் நிலைமை என்றாகிவிட்டதால் அதற்க்காக கவலைப்படுவதுமில்லை. இருக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.
பகல் நேரத்தில் தூங்கும் குட்டி தூக்கத்தினால் கனவு எதுவும் வருவதில்லை. செய்து கொண்டு இருந்த வேலைதான் மண்டைக்குள் குடைச்சலாக இருக்கும் இரவு இரண்டு மூன்று மணிக்கும் தூங்கும் நேரத்தில் தான் எனக்கு கனவு அதிகமாக வரும் அப்படிவரும் கனவுகள் சில நினைவுக்கும் வரும் பல நினைவுக்கு வராமல் மறைந்து சம்பவம் நடந்து முடிந்த பின்தான் கனவாக வந்தது நினைவுக்கு வரும்.
கண்ட கனவுகளில் பத்துக்கு எட்டு ஒன்பது கண் முன்னே நடந்துவிடும். ஒன்று இரண்டு கனவுகள் நடந்து முடிந்து பின்புதான்....
அம்பானி. அதானி,டாட்டா. பில்லா மாதிரியான பணக்கார அதிபதிகளாக ஆகும் கனவெல்லாம் வந்ததில்லை..இனி வரப்போவதுமில்லை..அந்த கனவுக எல்லாம் வந்தாலும் பலிக்கப் போவதில்லை.
இப்போதிலிருந்து
கனவு-1
என்னைத் தேடி இரண்டு காவலர்கள் வருகிறார்கள். என் வீட்டுக்கு வரும் தெருப் பாதை இருட்டாக இருப்பதால் செல்போன் டார்ச்லைட்டில் என் வீட்டிற்கு வருகிறார்கள். உறங்கி கொண்டியிருக்கும் என் முகத்தில் டார்சலைட் வெளிச்சத்தை அடித்தவாறே என்னை எழுப்பினார்கள். திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தேன். தூக்கம் கலையாமல் என்ன விபரம் என்றேன். எழுந்து வெளியே வரச் சொன்னார்கள்.
துண்டால் முகத்தை துடைத்துவிட்டு மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தபடியே என்ன விபரம் என்று கேட்டடேன். என்மீது புகார் கூறப்பட்டதாக அதை விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். புகாரை தெரிவித்தார்கள் என்ன புகார் என்று தெரியவில்லை. நான் மறுத்தேன் தெருவில் உள்ள பாப்பாத்தி மக மகன்கள் என்னை சுட்டிகாட்டி வந்த காவலர்களிடம் புகார்களை தெரிவித்தார்கள். நான் என்னவென்று தெரியாமல் முழித்தேன்.. சிறிது நேரத்தில் காலர்களில் ஒருவர் என்னை நிலையத்துக்கு வரும்படி கையோடு அழைத்து சென்றார். திடிரென்று ஒன்னுக்கு வரவே உறக்கத்திலிருந்து விழித்துவிட்டு வேகமாக கழிப்பறையை நோக்கி ஓடினேன். கழிப்பறையில் சாமி கும்பிட்டுகிட்டு இருக்குபோது கனவில் வந்தவை வரிசையாக வந்தன. என்ன புகார் மட்டும் தெரியவில்லை. வந்த கனவுப்படி எதிர்ப்பாரத்தபடியே இருந்தேன்
காலையில் கண்ட கனவு அன்று இரவு நடப்புக்கு வந்துவிட்டது.
நான் வெளியில் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் என் வீட்டுக்கு வந்தபோது என் வீட்டு மேற்கு புறத்தில் பாப்பாத்தி. மகள்களில் இருவர். மகன் இருவர் பேரன் பேத்திகள் கூட்டமாக குழுமியிருந்தனர். என்னவென்று நான் விசாரித்தேன். என் பேத்தி வளர்க்கும் இரண்டு நாய்களில் ஒன்று பாப்பாத்தி கடைசி மகளின் மகனை அதாவது பேரனை கடித்துவிட்டதாம்.. நாய் கடித்த காயத்தை பார்க்கலாம் பாப்பத்தி பேரனை கூப்பிட்டேன். மறுத்துவிட்டார்கள். பின் நான் என்ன செய்யவேண்டும் என்றேன். ஒன்னும் செய்ய வேண்டாம் என்றார்கள். சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் கனவில் கண்டபடி செல் அடித்தபடி என்னிடம் வந்தார்கள். அவிழ்த்து விட்டுஇருந்த சட்டை பட்டனை மாட்டியபடி நான்தான் என்றேன். வந்தவர்கள் இரண்டு பேரும் சவுண்டு விட்டார்கள் நாய் வளர்த்தால் கட்டிபோட்டு வளர்க்கனும் என்றார்கள். நான் அமைதியாக வீட்டுக்குள்ளே கட்டிபோட்டுத்தான் வளர்க்கிறேன். ஒன்-பாத் போவதற்க்காக நாய் வந்தபோது கடித்தவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்றுவிட்டு அமைதியானேன்
சிறிது நேரத்திற்கு பிறகு வந்த காவலர்களில் ஒருவர் சொன்னார். நாய் கடித்துவிட்டது. அதற்குண்டான ஆஸ்பத்திரி செலவை கொடுத்துவிடுங்கள் என்றார். சரி என்றேன். வந்தகாவலர்கள் என் பெயர் வயது அப்பா பெயர் கேட்டவர்கள் சாதியை கேட்டார்கள் தோழர் என்றேன். பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பாப்பாத்தி கடைசி மகளிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று எவ்வளவு என்று சொல் ஜிபே-ல் அனுப்பி வைக்கிறேன்.என்று விட்டு அப்பாடா ஒரு கனவு பலித்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி..ஆஸ்பத்தரி தொகையை எதிர்பார்த்தபடி காத்திருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை