வியாழன், நவம்பர் 03, 2011

தீபாவளி கொண்டாடிய டாஸ்மாக் குடிமகன்களும்,சாதியை கேட்ட உதவி ஆய்வாளர் போலீசும்

தீபாவளி தீபாவளின்னு தீபாவளியை புத்தாடை உடுத்தி வெடி வெடித்து மத்தாப்பு  கொளுத்தி பொரும்பாண்மை மக்கள் மக்கள் கொண்டாடி இருந்திருப்பார்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி யிருப்பார்கள்  அதில் டாஸ்மாக் குடிமக்களும் தீபாவளியை கொண்டாடி யிருப்பார்கள்

தீபாவளியை கொண்டாடாமல் புறக்கணித்த சிறு பாண்மையினருள் நானும் ஒருவர். என் தெருவில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு டாஸ்மாக குடிமகன்கள் கொத்தனார் வேலை பார்க்கிறார்கள். அண்ணன் தம்பிகள் இருவரும் நான் வீட்டில் இல்லாத தீபாவளியன்று என் வீட்டு சிமெண்ட் தண்ணீர் தொட்டி, பட்டியக்கல்,ஒதுங்குவதற்க்காக தட்டியால் கட்டப்பட்ட மறைவிடம் போன்றவற்றை நாசமாக்கி எனக்கு வலியை ஏற்படுத்தி னார்கள ..

தண்ணீர் தொட்டியை சுக்கு சுக்கலாக உடைத்தும் பட்டியக்கல்லை பெயர்த்து எடுத்தும் மறைவிடத்தட்டியை பிய்த்து எறிந்தும் ஒளிவு மறைவற்ற சுத்தமான
தமிழ் வார்த்தைகளால் அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் ஏகவனத்தில் வசைபாடியும் என்னை குறிப்பிட்டு,சுத்த ஆம்பிளையென்றால் வெளியே வாடா,நான் இல்லாததை தெரிந்துகொண்டு வீர வசனம் பேசியும் அன்றை தீபாவளியை ரெம்ப ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார்கள். தனியாக இருந்த என் மருமகளும் பேத்தியும் பயந்து போய் வீட்டிற்குள முடங்கிவிட்டனர்.

டாஸ்மாக் குடிமகன்களின் தீபாவளி கொண்டாட்டம் சற்று தணிந்த பின் தெருவின் நான்கு ரோட்டின் சந்திப்பில் அம்பேத்கர் சிலைபாதுகாப்புக்கு இருந்த போலீசிடம் என்மருமகள் இரு டாஸ்மாக்களின் தீபாவளி கொண்டாட்டத்தைப் பற்றி புகார் கூறியபோது,  பாதுகாப்புக்கு வெளியில் நின்ற போலீசும் வேனுக்குள் இருந்த போலீசும் புகார் மனு எழுதி கொடுத்தால்தான் நாங்கள்வருவோம் என்றனர். போலீஸ் ஸ்டேசனில் போயி சொல்லுமாறும் ஸ்டேசனிலிருந்து சொன்னால்தான் நாங்கள் வருவோம் என்றனர்.

இந்த விபரத்தை செல்போனில் எனக்கு தெரிவித்தவுடன். 100க்குபோன் அடித்து
சொல்லுமாறு கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்த மருமகனிடம் சொல்லிவிட்டு அடைமழையாய் பெய்த பெருமழையில் நனைந்தபடி போலீஸ் ஸ்டேசனுக்குஸ்கூட்டியில்சென்றேன்.செல்லும்வழியின்பாதியிலே தெப்பமாக முழுவதும் நனைந்துவிட்டேன். 

ஈரத்துடன் நெடு நேரமாக  இருந்ததால் கை விரல்கள் பெருத்து பற்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. மழையும் பட் பட்டென்று தலையில் அடிக்க,தீபாவளியன்று உலக அதிசியமாகஇரவு 7மணியளவில் திறந்திருந்த பெட்டிக்கடையின்முன வண்டியை நிறுத்திபுகார் மனு எழுத பேப்பர் வாங்கினேன்..50பைசா இல்லாததால் பேப்பர்க்கு நனைந்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன்.சில்லரை இல்லையென்று பேப்பர் கொடுக்க மறுத்தார்.

பத்து ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பேப்பரை வாங்கி புகார்
மனு எழுத ஆரம்பித்தேன். மழையினால் விரல்கள் மரத்துப் போயிருந்தன.
நடுக்கமும் ஏற்பட என்னால் சரியாக எழுதமுடியவில்லை..குப்பையை கிளரிய கோழி மாதிரி எழுதி எழுத்து பிழையுடன் கழுத்தைச் சுற்றி மூக்கை தொட்டகதையாக எழுதி முடித்தேன். எழுதியதை நனையாமல் இருக்க வண்டியின் சீட்டின் அடியில் வைத்து போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சேர்ந்தேன்

வாசலில் நின்ற போலீசு, சப்இன்ஸ்பெக்டர் அம்மாவிடம் மனுவை கொடுக்க
சொன்னார்.அந்த  அம்மாவிடம் மனுவை  கொடுத்தபோது  கைகள்  குளிரால்
நடுங்கின். அந்த அம்மா.மனுவை வாங்கும் போது.குளிரால் கைகள் நடுங்கியதால் அதனால்  சரியாய் எழுத முடியவில்லை என்றேன்.

அந்த அம்மாவோ,போதும் போதும் என்றுவிட்டு மனுவில் செல் நம்பரை எழுது
என்றார். கூடவே எந்த ஏரியா என்றார்.

நான்,ஏரியாவையும் அம்பேத்கர் சிலைக்கு பாரவுக்கு இருக்கும் போலீசையும்
சொன்னேன். நான் சொல்வதை அந்த அம்மா,கேட்காமல்  மேஜையின் மேல்
தலையை கவிழ்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த அம்மாவுக்கு அருகில் பேன்
ஓடியதால் மேலும்  குளிரால் நடுங்கினேன்.

தலையை கவிழ்ந்து கொண்டியிருந்த மேடம், செல் போனை நோண்டிவிட்டு
“நீங்க என்ன சாதி ” என்று கேட்டார். சொல்வதா,வேண்டாமா?தர்க்கம் செய்ய
லாமா?என்று அமைதி காத்தேன்

மீண்டும் அந்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மேடம்,“என்ன சாதின்னு
கேட்டார்கள். சட்டென்று மாட்டுகறி தின்ற சாதின்னு சொன்னேன்.

“இந்தா ,இந்த  மாதிரியெல்லாம் பேசக்கூடாது.” என்று  மனுவை  என்னிடமே
நீட்டினார். சாதியை சொன்னால்தான் நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு போலீசுக்கும் ஒவ்வொரு சாதி சிந்தனை போலிருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினைக்காக பொது  இடத்தை  தனது இடம்   என்று  சொல்லி  சாக்கடை இனைப்பு கொடுப்பதை  தடுத்த  தெரு நாட்டாமை   சாதியை  மனுவில்  குறிப்பிட்டதை அன்று  பதவியில்  இருந்த ஆய்வாளர் ,.யாருய்யா சாதிய கேட்டா என்று சத்தம் போட்டார்.

இப்போ,இந்த அம்மா சாதிய கேட்குது. சாதிய சொல்லாமல்..ஏரியாவை சொன்னேன். நான் சொன்னதைக்  கேட்டதும் திரும்பவும் மேஜையில் தலையை கவிழ்த்தது.

 இரண்டு காவலர்கள் வந்தார்கள்..என்னை விசாரித்தார்கள்.புகார் கொடுக்க   வந்துள்ளேன் என்று சொன்னதும் எந்த ஏரியா,என்ன தொழில் செய்றாய் என்று விலாவாரியாக கேட்டார்கள்..முடிந்தபின் தனியாக உட்கார்ந்து இருந்த இரு வரிடம் சென்றனர்.அவர்கள் ஏதோ சொன்னதும் லத்தியால் இரு காவலரும் சரமரியாக அடித்தனர்.இந்நிலையில்

வயர்லெஸ்ஸிருந்து ஒலிஎழும்பி,கரகரன்னு ஒருகுரல் ஏதோ சொல்லியது
உதவி ஆய்வாளர் மேடம்,100க்கு போன் செய்தீர்களா? எனகேட்டார்.ஆமாங்க
என் மருமகள் போன் செய்தார்கள் .அவர்கள் வந்து பார்த்துவிட்டு ஸ்டேசனில்
சொல்லுங்கள் என்றுவிட்டு போய்விட்டார்கள் என்றேன்.இரு காலர்களை  கூப்பிட்டு  ஏதோ சொன்னார்.அந்த மேடம்

அதில் ஒருவர்,தொட்டியை உடைத்தவர்கள் இருக்கிறார்களா? ஓடிவிட்டார்
களா? என்று கேட்டார்.தெரியவில்லையே! நீங்க ஸ்பாட்டுக்கு சென்று பார்த்
தால் தெரியும் என்றேன்.

சாதி கேட்ட உதவி ஆய்வாளர் மேடம்,நீங்க. என்ன செஞசீங்க ,அவிங்க உடைக்கிறதுக்கு ”என்றார்.

மேடம், என்   மருமகன் விபத்தில் ஆஸ்பத்திரியில் இருப்பதால் ,ஆஸ்பத்திரி
யிலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன். அவர்களைப்பற்றி நான் எதுவும் கூற வில்லை. மேடம்.

மூனு,பட்டை வாங்கிய ஏட்டையா போலீசு, செல்போனை ஆப் செய்துவிட்டு
ஸ்பாட்டை பார்த்தாச்சு . உடைத்தவர்கள் போதையில் இருப்பதால் இரவில்
அழைத்து வரக்கூடாது. ஆகையால் காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று
அனுப்பி வைத்தார்.

என்ன சாதின்னு கேட்ட உதவி ஆய்வாளரை பார்த்து .வர்ரேன் மேடம் என்று  சொல்ல பார்த்த போது “செல்போனில் கத்திக் கொண்டு இருந்தார்

3 கருத்துகள்:

  1. பிரச்சனைக்காகவே சி(ப)ல ஜென்மங்கள் உருவாக்கியவை இந்த சா...க்கடை....

    பதிலளிநீக்கு
  2. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு