பக்கங்கள்

சமூகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 15 2026

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். 

இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கில் ஆஜராவதற்கு சிவப்பு சால்வையை தோளில் அணிந்து கொண்டு சென்றிருந்தேன் முதலில் நமது வழக்கறிஞர் தோழர் என் உடன் வந்த மாவட்ட தோழர்களிடம் நீதிபதியிடம் வரும்போது தோழரை துண்டை எடுத்து விட சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் அவரிடத்தில் நாங்கள் சொல்ல முடியாது என்று கூறியதாக என்னிடத்தில் தெரிவித்தார்கள் . பிறகு நீதிபதியின் அறைக்குள் சென்று நின்ற போது நீதிமன்ற பணியாளர் எனக்கு பின்னால் இருந்த தோழர்களிடம் சொல்லி தோளில் உள்ள துண்டை எடுக்குமாறு கூறினார் .நான் எடுக்கவில்லை 

.ஆனால் மாஜிஸ்திரேட் என்னை பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. இடுப்பிலே கட்டி இருந்த துண்டை தோளில் போடுவதற்காக எங்களுடைய மூதாதையர்கள் நடத்திய போராட்டம், எதிர்கொண்ட பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, எல்லாவற்றிக்கும் மேலாக உயிர் தியாகம் இவற்றின் காரணமாகத்தான் தோளிலே தூண்டு ஏறியது என்கிற வரலாற்று காவியத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை

 நீதிமன்றத்தில் தோளில் துண்டு அணியக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? விதிகள் ஏதாவது இருக்கிறதா? எதற்காக இப்படி துண்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. 

நீதிபதியே சொல்லி இருந்தாலும் நான் தோளிலிருந்து துண்டை அகற்றி இருக்க மாட்டேன் . ஏனென்றால் அது நாங்கள் போராடிப் பெற்ற உரிமை .அதை ஒரு போதும் இழக்க முடியாது. 
 
சிபிஐஎம் மாநிலக் குழு செயலாளர் தோழர் Shanmugam Perumal

🔥 - பதிவர் தோழர் பீமா
தோழர் Shanmugam Perumal



செவ்வாய் 03 2024

ஆயிரம் கண்ணுடையா(ன்)ள் அல்ல.......

 ஆயிரம் கண்ணு உடையாள் அல்ல...ஆயிரம் கை உடையா(ன்)ள்


என்னடா தினுச தினுசா
எறக்குறாங்கே!
நம்ம கண்ணுமுன்னாலே இப்படினா.....
ரொம்ப காலத்துக்கு முன்னாலே என்ன செஞ்சிருப்பாக்கே|7

செவ்வாய் 11 2015

“இந்து”தீயரின் கனவு அறிவிப்புகள்.......


படம்-puduvairamji.blogspot.com

2022ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம்
மெகாவாட் சூரிய ஒளி பெற
இலக்கு நிர்ணயிப்பு..

நகரத்தில் இரண்டு கோடி வீடுகளும்
கிராமத்தில் நான்கரை கோடி வீடுகளும்
கட்டித் தரப்படும் ………

நாள்ஒன்றுக்கு 30 கிலோமீட்டர்க்கு
சாலை அமைக்கப்படும் …….

இதுமட்டுமா......

ஏழு கோடி கழிப்பறைகள் கட்டி
முடிக்கப்படும் என்று மேக் இன்

நாயகர்கள் அறிவித்து உள்ளார்கள்.

கேப்பையில் நெய் வடிகிறது
என்று சொன்னால் நம்புகிறவர்கள்
நம்பி நம்பியே  சாகலாம்.......



வெள்ளி 14 2012

அவனொரு.........................

அவன்........

சிரிக்கத்தான்
முயன்றான்
சிரிப்புத்தான்
வரவில்லை

சிந்தித்தால்
வருமாமே...
சிந்தித்தான்
முடியவில்லை!

சிரிக்கவும்
சிந்திக்கவும்
தெரிந்தவன்
மனிதனென்றால்.......

சிரிக்கவும்
சிந்திக்கவும்
முடியாத....

சினிமா,
பொறுக்கிஅரசியல்
போதை மிகுந்த
அவனொரு..........டாஸ்மாக் குடிமகன்



ஞாயிறு 11 2012

கதையல்ல.நிஜம்.................

முப்பதாண்டுக்கு
முன்னல்...............

தெரு நாட்டமைக்கும்
தெரு முக்கியிஸ்தர்கும்
போர்..................................

எதற்கு ....போர்.............?

நாட்டுக்கட்டை
ரோசம்மா............
நாட்டாமையின்
வீட்டுக்கு.....குடி
வந்தாள்...................

பக்கத்திலே.............
வசித்தவர் தெரு
முக்கியஸ்தர்..........

நாட்டுகட்டை.......
ரோசம்மாவை  யார்?
வைத்துக் கொளவதில்
நாட்டாமைக்கும்.......
முக்கியஸ்தர்க்கும்.........
போர்............... போர்......

போருக்கு காரணமான
ரோசம்மாவுக்கு............
ரெண்டு பேரும்.........
வேண்டுமாம்.!!!!!!!!!

ஏனென்றால்..............??
அவளுக்கு பிறந்தில்
அய்ந்தும் பொட்டையாம்
கணவனோ... குடிமகனாம்.

போர்.............முடியவில்லை.


முப்பதும் நாற்பதும்
சேர்ந்து எழுபது
ஆண்டுகள் கழித்து...

நாட்டுக்கட்டை ரோசம்மாவும்
அவளது வாரிசு ஏழும்..........
ஒரு படையாக.......................

தெரு பொம்பள நாட்டாமை
திம்சு கட்டை காமாயியும்
அவளது வாரிசு ஏழும்..
இன்னொரு படையாக.........

நாட்டுக்கட்டைக்கும்
திம்சு கட்டைக்கும்
சண்டை..........சண்டை..........

ஏன்? எதற்கு? என்றால..........
“சின்னப்பயல்” பட்டம்
பெற்ற நாட்டாமையை
யார்? வைத்துக் கொள்வது
என்று...........................

“சின்னப்பயல்” கிழட்டு
நாட்டாமையோ.............
சிறுசுகளை கொஞ்சுது.


அதிகாரம் பெற்ற
நாய்களோ............
சமரசம் பேசுது.........

அட,சே.........இதுக்கும்
வரலாறு திறும்புதாம்....

ஞாயிறு 30 2012

இப்படியும் ஒரு மூடப்பழக்கம்.....


நகராட்சியில் அது பறச்சேரியாக இருந்தது. மாநகராட்சியில் அது பறய தெருவாக அழைக்கப்பட்டது. அந்தப்பறயத் தெருவுக்கு ஒரு நாட்டாமை அந்த நாட்டாமைக்கு பல வைப்பாட்டிகளில் ஒரு வைப்பாட்டியின் மகள் அவள்.

அவள் பார்ப்பதற்கு அழகில்லாதவள். சுமார் என்றும் சொல்வதற்கும் லாயயிக்கில்லாதவள். தமிழ்நாட்டு அத்தாவைவிட சற்று குண்டானவள் பெருத்த மார்பகங்களை கொண்டவள். அதோடு வயிறும் அதன் பங்குக்கு முட்டி மோதிதள்ளிக் கொண்டு இருக்கும். அவளுடைய மாறாப்பு மார்பகத்தையும்.வயிற்றையும் எப்போதாவதுதான் மூடியிருக்கும்.

அந்த பறயதெருவிலுள்ள ஆம்பிள பொம்பிள அனைவருக்கும் ஆம்பிள பொம்பள நாட்டாமையைவிட அவள்தான் பவரானவள். இவளுடன் சண்டையிட்டு மோதி  ஜெயிக்க முடியாத அளவுக்கு பராக்கிரமம் பெற்றவள்.

இவள் கம்பெடுத்து சண்டையிட்டு வெற்றி வாகை சூடும் விராங்கனையல்ல  ஒலக வாயி, ஒலக ஒலிப்பெருக்கி என்று பெயரெடுத்தவள் அந்த பறய தெருவில் குடியிருக்கும் சீமான் சிமாட்டிகளின் கள்ளக்காதல்.களவாணிக் காதல் திருட்டுக்காதல் போன்றஎல்லாதிரை மறைவு அயோக்கியங்களும்,
களவானி தனங்களையும் தெரிந்து வைத்திருந்ததால்........

இவள் சண்டையிடும் போது  சண்டையிடுபவர்களின் அத்தனை கயவாளி தனங்களையும் ஒலிபெருக்கியாய்  நேரடி வர்னனையுடன் ஒளிவு மறைவு இன்றி தேனாறும் பாலாறுமாக ஓடும். தன்னை மதிக்காமல் இருககும்
நேர்மையாளர்களின் வீட்டில் இரவில் கல்லெறிவாள்.பொய்யாக அவதூறாக அவர்கள் மீது போலீஸில் புகார் செய்து அலைய வைப்பாள். இதனால் அவள் அந்தத் தெருவில் பொம்பள தாதாவாக வலம் வந்தாள்.

வாழ்க்கை சக்கரத்தில் ஒரு நாள்  இவள் மண்ணெண்னெயில் வெந்து இறந்து போனால். எப்படி இறந்தாள் என்பது மர்மாகத்தான் இருக்கிறது.இவள் ஒரு டாஸ்மாக் குடிமகள். இதோடு போதை மாத்திரை பழக்கமுள்ளவள்.

இவள் இறந்த சிலநாட்கள் கழித்து இவள் வீட்டிற்குள் கழுதை ஒன்றை விட்டு கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து கதவை திறந்து கழுதையை தெரு வழியேஇழுத்துச்சென்றார்கள்-
அவளின் கனவனும் தம்பியும்......................

கழுதையை வீட்டுக்குள்ளே பூட்டியது எதுக்குஎன்றால். மூன்று நாட்களாக அடைக்கப்பட்ட கழுதை கத்தியிருந்தால் அவள் பேயாக அந்தவீட்டிலே இருக்கிறாளாம், கழுதை கத்தாதினால் அவள் பேயாக இல்லையாம்..........

தற்கொலையோ, கொலையோ நடந்த வீட்டில் இறந்தவர்கள் பேயாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய கழுதை மூலம் கண்டுபிடித்த
 அந்த மகா விஞ்ஞானியின் பேரும் ஊரும்  தெரிவில்லை. தெரிந்திருந்தால்
அவருக்கு கோயில் கட்டி சுவத்தில சாத்தி வச்சுருக்கலாம்...................

சனி 28 2012

இந்தியாவின் மோசடி தந்தை.......................

ஒரு கதை சொல்வார்கள். “எதிரே வந்தவனை.அய்யா கும்பிடுறேனங்க”
என்று ஒருவன் சொன்னானாம். அதுக்கு எதிரே வந்தவன்.“ ஒங்கப்பன்
பட்ட கடன அடையுடா என்றானாம். வணக்கம் சொன்னவனும் அப்பன்
பட்ட கடன அடச்சனாம். மரியாதைக்காக  ஊர் பேர் தெரியாத வணக்கம் சொன்னவன். தெரிந்தோ தெரியமாலோ தன் அப்பன் பட்ட கடனை அடை
த்து நேர்மையாக இருந்தான். ஆனால் உலகம் போற்றுவதாக சொல்லப்
படும் ஒரு தந்தை தன் மகன் பெற்ற கடனை அடைக்காமல் முயலாமல்
செய்த மோசடி தனத்தை பாருங்கள்........


அரிலால் என்று பெயர். அரிலாலுக்கு படிப்பு சரியாக வரவில்லை. அதனால் டாஸ்மாக கடை வருவதற்கு முன்னமே அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது
இதனால் அவர் தன் தாயிடமும் ககோதரனிடமும் பண உதவி கேட்பார்.


இந்த அரிலால் சோலாப்பூரில் ஒரு மில்லில் வேலை செய்தார். அந்த வேலை
பிடிக்காமல், “சுயராஜ்ய ஸ்டோர்” எனற் பெயரில் ஒரு கடையை நடத்தினார்.
அதில் எதிர் பார்த்தபடி வருமானம் இல்லாததால் கடையை இழுத்து மூடினார்.


அரிலாலுக்கு கடன் உதவி செய்த ஒருவர். அரிலாலுவின் தந்தைக்கு ஒரு
கடிதம் எழுதினார். அய்யா, உங்களுடைய நேர்மையையும் கட்டுப்பாட்டை
யும் கண்டுதான். தங்களைப் போலவே தங்கள் மகன் இருப்பாரென்று 
எண்ணிஅவர் கடைக்கு  தாமதமானாலும் எப்படியும்  வாங்கிய கடனை 
திருப்பி கொடுத்து விடுவார் என்று நம்பி கடன் கொடுத்தேன்..இப்பொழுது கடையை மூடிவிட்டார். ஆகையால் தாங்கள் தங்கள் மகன் பெற்ற கடனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஆனால், துரோகத்துக்கு பேர்போன அந்தத் தந்தையோ,அந்த கடிததுக்கு
பதில் எதுவும்  தெரிவிக்காமல்,தன்னுடைய பத்திரிகையான“யங்
இந்தியா”வில்...........இப்படி...


எனக்கும் அரிலாலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனை நம்பி
யாரும் கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால். அதற்கு நான்
பொருப்பல்ல... இப்படிக்கு.என்று ஒரு செய்தி வெளியிட்டார் அந்தத் தந்தை
அறிக்கைக்கு முன் கொடுத்த கடனுக்கு வழி என்ன என்று அந்த வக்கீல்
தந்தை  பதில் ஒன்றும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.


அரிலாலின் தந்தையின் அகிம்சை வழியும் மாலைப்பொழுதினில் நடத்தும்
பஜனையும் பகவத்கீதையின் உபதேசங்களுமே  ஆங்கிலேயேடமிருந்து
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் தந்தாக பீற்றிக் கொள்ளும் நேரத்தில்
தன் மகன் பெற்றக் கடனுக்கு ஒரு வழி சொல்லாமல் அறிக்கை வெளியி
யிட்டு  மோசடி செய்த ஒரு“ மோசடி தந்தை” இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த  தேசந்தந்தை  என்று சொல்லுவதும் மோசடிதான். இந்திய  சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த மோசடி தந்தையாகத்தான்
 இருந்திருக்கிறார்.

   

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...