படம். http://www.vinavu.com/2014/06/30/mouliwakkam-building-collapse-photos/
உலகமயமாக்கத்தின் ஆசியுடன்
பெருக்கப்பட்ட நகரமயமாக்கலால்
கட்டப்பட்டு வந்த பதினோரு மாடி
கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இடித்த இடிக்கும் பெய்த
மழைக்கும் தாக்கு பிடிக்காமல்
இடிந்து விட்டதாக சொன்னான்.
பொறியாளன் ஒருவன்.
சொன்னவனும் கட்டிடத்திற்கு
முதல் போட்டவனும் அச்சாரம்
கொடுத்தவனும் கட்டிய கட்டிடத்
தோடு புதைந்திருந்தால்.............
கட்டிடம் இடி இடித்ததாலா..
பெய்த மழையிலாலா இடிந்தது
என்ற உண்மை வெளிவந்திருக்கும்.
எந்த பரிதவிப்பும் இல்லாமல்
கொலைகாரர்கள் உள்ளே
உலாவுகிறார்கள் பாதுகாப்பாக.....
பஞ்சம் பிழைக்க வந்த
பஞ்சைகளோ! வெளியே
பரிதவிக்கிறார்கள் பாதுகாப்பு
இல்லாமல்........
பஞ்சையர்களின் துக்கம் பதினாறு
நாட்களில் முடிந்து விடும்...
இந்த சுயநல பிண்டங்களுக்கோ
குறைவொன்றுமில்லை எப்போதும்
கொண்டாட்டத்துடனே இருப்பார்கள்
அடுத்து வளர்ச்சி என்ற பெயரில்
உயிர்பலி வாங்குவதற்கு.!!!