ஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு)
சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச்சின்னம் தமிழக அரசால்18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு என திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
குயிலி....யாரிந்த குயிலி...?
1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக் கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும், வேலுநாச்சியார்,மருது பாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று சிவகங்கையை மீட்க நடைபெற்ற போரில் சிவகங்கை அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்த முதல் தற்கொலை போராளியாக..வீரத்தாயாக தமிழகத்தில் அறியப்பட்டவர் குயிலி............!!!
இந்த குயிலியை சாதி வெறி குல தெய்வத்தின் வழி வந்த சாதி வெறியர்கள் வீரத்தாய் குயில (மறவர் / தேவர்) எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்றும்.. சுய சாதி யர்களான அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் என்றும்.. இல்லையில்லை நாங்கள் நேரடி கள ஆய்வு செய்ததில் குயிலி (ஆதிதிராவிடர்/ பறையர்) சாதியைச் சேர்ந்தவர் என்றும்..இல்லவே இல்லை..குயிலி எங்கள் தேவேந்திர குல வேளாளா (பள்ளர்/மள்ளர்) பெண் என்று ஒவ்வொரு சாதி வெறியர்களும் சுயசாதியர்களும் குயிலி எங்கள் குல சாதிப் பெண் என்று உரிமை கொண்டாடி அதற்க்காக பல நூல்களும் படைத்தும் இணையதளங்களிலும் குறிப்பிட்டு குயிலி எந்த சாதிக்கு சொந்தம் என்றுஅந்தந்த சாதிக் கட்சிகளும் அமைப்புகளும் உரிமைப் போர் நடத்திக் கொண்டு வரும் வேளையிலே
மேலே கண்ட தோழர் மயில்வாகனன் அவர்களின் ” ஒப்பனைகளின் கூத்து” ஒரு ஆய்வு நூல் ஒன்று சாதி வெறியர்களுக்கும், சுயசாதியர்களுக்கும் மொத்தமாய் ஆதாரபூர்வமாக.. சரியான ஆய்வை . தெளிவுபடுத்தியுள்ளார்.
குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்கிறது அந்த நூல்... குயிலி எந்தச் சாதியையும் சேர்ந்தவரல்ல என்றால் சாதி வெறியர்கள் நிறைந்த, சுய சாதியர்கள் நிறைந்த நாட்டிலே.. என்ன அர்த்தம்....குயிலி ஒரு கற்பனை பாத்திரம் என்பதுதான் பல்வேறு வகைப்பட்ட, எதையும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவி உள்ளார்.
அப்படி..என்ன ஆதாரம், ஆய்வு என்று நக்கல் பேசுபவர்கள். மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து” என்ற புத்தகத்தை வாங்கி வாசித்து தெரிந்து கொள்ளலாம்.....
வரலாறு அறியாமல்
நாட்டுப்பற்று உருவாகது
நாட்டுப்பற்று இல்லாமல்
குடிமக்கள் வாழும்
நாடு எக்காலமும்
உருப்படாது..உருப்படாது....!!!!!!!!!!!!!
“ மேற்கண்ட ”ஒப்பனைகளின் கூத்து” ஓர் ஆய்வு நூலை என்னையும் படிக்கத் தூண்டிய ஆய்வாளர் தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்களுக்கு நன்றியும்!! வாழ்த்துக்களும்!!!

















