அன்று ஒருநாள் இதே மாலை வேளையில்... எனக்கு ஏற்ப்பட்ட மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக முன்பு போல 50 ரூபா டிக்கெட் எடுத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் தெரியாத இடத்துகெல்லாம் பயணித்ததுபோல.. இப்போது பயணிக்க முடியவில்லை காரணம். இப்போது50 ரூபா பயணசீட்டு ரத்தாகிவிட்டது.. அதனால் நகரத்து வீதிகளில் நடந்து கொண்டு இருந்தேன்.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போயி வீதிகளில் இருக்கும் மூடப்பட்ட கடைகளின் வாசல் திண்டில் அமர்திருந்த போது அந்தக் காட்சியைக் கண்டேன்
அருகில் இருந்த கடை ஒன்றில் தாயும் மகளும் வந்தார்கள். தாயானவர் தன் மகள் கேட்டதை..பிடித்த மானதை வாங்கிக் கொடுத்தார்.. மகளானவர் தாய் வாங்கிக் கொடுத்ததை ஆசையோடு சுவைக்கத் தொடங்கினார். வாங்கிக் கொடுத்த தாயானவர் தன் மகள் திண்பதை கண்டு உள்ளம் பூரித்தவராக..தன் நாக்கீல் எச்சில் ஊற.. தன் மகள் திண்பதில் கொஞ்சம் கேட்கிறார்.
அந்த மகளோ..போம்மா..என்று விட்டு முன்னே ஓடுகிறார். அந்தத்தாய் கெஞ்சிக் கொண்டே பின்னே ஓடுகிறார்.
அந்தத்தாய்க்கு மகளானவர் கொடுத்தாரா? அந்தத் தாய் மகளிடம் பெற்ற சுவைத்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் காட்சி எனது வாழ்வின் சிறுவயதில் ஏற்பட்ட நிகழ்வையும் அதற் முதற் கொண்டு இன்றுவரை நான் கடைபிடித்துவரும் நடைமுறையை எனக்கு மீண்டும் நிணைவூட்டியது....
பிறந்த சில வருடங்களில் தந்தையை தூக்கி முழுங்கியவன் என்ற அவப் பெயர் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் என் தாய் சீராட்டி-பாராட்டி வளர்க்காவிட்டாலும்அடுத்தவர்களிடத்தில்கையேந்தாமல்..இல்லாததால் .கிடைக்காததை நிணைத்து ஏக்கம் கொள்ளாமல் வளர்த்தார்.
ஒரு நாள் என் தாய் தான் வேலை பார்க்கும் எஜமான் வீட்டில் நடந்த விழா நிகழ்ச்சியில் கிடைத்த சிறந்த உணவை..அதாவது இன்றும் என்னால் சாப்பிடாத சுவையான உணவை தான் உண்ணாமல் பத்திரமாக எனக்கு கொண்டு வந்து கொடுத்தார்
வீடு தங்காமல் ஊர் சுற்றி விளையாட்டு பிள்ளையாய் இருந்த என்னை தேடி கண்டுபிடித்து..அடிக்காமல் திட்டாமல் இழுத்து வந்து எஜமானர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை கொடுத்து உண்ணச் சொன்னார்
அடியும் திட்டும் விழாததால் அச்சம் தஎன்வினைப்ர்த்தபோலவே நான் கையும் கழுவாமல் முகத்தையும் சுத்தம் செய்யாமல். விளையாட்டு ஆர்வத்தால் பசியை மறந்திருந்த எனக்கு அந்த சுவை மிகுந்த உணவை மிகவும் ஆவலோடு லபக் லபக்கென்று என் தாயாரின் வார்த்தையில் செல்வதென்றால் கொள்ளை போயிறுமோ என்ற பயத்தில் வயிற்றில் தள்ளிக் கொண்டு இருந்தேன்.
நான் ஆசை ஆசையாய் சாப்பிட்டு முடித்தது. என் தாய்க்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ,மனதில் சிறு வருத்தம் இருந்தது எனக்கு தெரியவில்லை.
பிற்பாடு திருமணம் முடிந்து சென்ற என் சகோதரி சொன்ன பிறகுதான் என் தாயின் வருத்தம் தெரிந்தது.
அன்று சிறந்த..சுவை மிகுந்த உயர்தர உணவை பார்த்திராத..சுவைத்திடாத என்னைப் போலவே..என் தாயாரும் பாரத்திராதவர், சுவைத்திடாதவர். அபூவர்மாக அன்று கிடைத்த உணவில் சிறிதளவு என் தாய்க்கு வைப்பேன் என்று நிணைத்திருந்தார். அந்த நிணைப்பில் நான் தெரியாமல் மண்ணை அள்ளி போட்டுவிட்டேன்.
பசியிலும். சுவையிலும் என் தாய்க்கு எதுவும் மிச்சம் மீதி எதுவும் வைக்காமல் நான் ஏமாற்றி விட்டதை என் தாய் என்னிடம் கூறவில்லை.
திருமணமாகி சென்ற என் சகோதரியை காணச் சென்றபோது அவரின் அருமை தம்பியைப் பற்றி வேடிக்கையாய் சொல்லியிருக்கிறார்.
அய்யா வீட்டிலிருந்து கொடுத்த உணவைதொட்டுக் கூட பாரக்காமல் உன் தம்பிக்கு கொண்டு வந்தேன். கடைசியில் கொஞ்சுண்டு மிச்சம் வைப்பான் என்று அவன் கையையும் வாயையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். உன் தம்பி ஒரு பருக்கை கூட விடாமல் சாப்பிட்டு விட்டாண்டி என்றார்.
என் சகோதரி சொன்ன பிறகுதான் என் மண்டைக்குள் உரைத்தது. அக்காவிடம் மன்னிப்பு கேட்ட கையோடு அம்மாவிடமும் மன்னிப்பு கேட்டேன். என் தாய் தன் மகளை திட்டினார். அவள் பொய் சொல்கிறாள் நம்பாதிடா என்றார்.
அன்றிலிருந்து ஒரு முடிவு எடுத்தேன். அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். என் வீடாக இருந்தாலும் வெளியிடமாக இருந்தாலும் என் தாய், மற்றும் சகோதரி, அவரின் பிள்ளைகள் என்று மற்றவர்களுக்கு உணவு இருப்பதை உறுதிப்படுத்திய பின்புதான் நான் உணவருந்வதையே பழக்கமாக்கி கொண்டேன்.
அதாவது பந்திக்கு முந்துவதல்ல....பிந்துவதையே வழக்கமாக்கிக் கொண்டேன்.
அருமையான கொள்கைப்பிடிப்பு நண்பரே மனம் கனமாகி விட்டது.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்கு//என் தாய் சீராட்டி-பாராட்டி வளர்க்காவிட்டாலும் அடுத்தவர்களிடத்தில்கையேந்தாமல்.. இல்லாததால் .கிடைக்காததை நிணைத்து ஏக்கம் கொள்ளாமல் வளர்த்தார்.//
மிகவும் அருமையாக வளர்த்துள்ளார். பெருமைக்குரிய தாய்.
மனம் கனத்து விட்டது நண்பரே..
பதிலளிநீக்கு