செவ்வாய் 11 2011

யார் விவரமானவர்கள்?

ஒருமுறை மூன்று நண்பர்களுக்கிடையே காரசாரமான
விவாதம் நடந்தது.

அதில் ஒருவர் சொன்னார். மக்கள் எல்லாம் முட“டாள்கள்
இல்லை. அவரவர் வளர்ச்சி மட்டங்களுக்கு தக்கப்படி விவர
மாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
அவர்கள் கொடுக்கிற இலவசங்களை வாங்கிக் கொண்டு சந்
தர்ப்பகேற்றபடி வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள்.
சுயநலமே.தன் நலம் என்று பிழைக்க தெரிந்தவர்களாகத்தான்
இருக்கிறார்கள் என்றார்.

மற்றொருவர் சொன்னார்.படித்தவர்கள்தான் விவரமாக
இருக்கிறார்கள். படிக்காதவர்கள் இன்னும் அடி முட்டா
ளாகத்தான் இருக்கிறார்கள்.எந்தக் கட்சி ஆளுது.விலை
வாசி,அடக்குமுறைதெரியவில்லை. இவர்களை வைத்து
தான் எல்லா ஊழல் கட்சிகளும் தங்களுடைய ராஜபாட்டை
செவ்வனே நடத்துகின்றன.இந்த மக்களும் செக்குமாட்டுத்
தனமா. ஓட்டையும்போட்டுவிட்டு பேசாமல் வெந்ததை
தின்டு விதி வந்தால் சாவோம் என்ற கணக்கில்தான் தங்கள்
வாழ்நாளை ஓட்டுகின்றனர்.இவர்களுடைய அறியாமையை
யும் மடத்தனத்தையும் ஒவ்வொரு கட்சி வேட்பாளாரும்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
எனவே வேட்பாளர்கள்தான் விவரமானவர்கள் என்றார்.

மூன்றாமவர். வாக்காளர்களில் எல்லோருமே அறிவாளிகள்
கிடையாது.தற்குறிகள்தான் அதிகம்.வேட்பாளர்களில் ஒரு
சிலரைத்தவிர பெரிய அறிவாளிகள் கிடையாது. அவர்களுக்கு
சேவை மனப்பாண்மையெல்லாம் எதுவும் கிடையாது.பதவி
யும் புகழும்தான். சொத்து சேர்ப்பதற்கும் சேர்த்த சொத்தை
பெருக்குவதற்கும்தான் தேர்தலை பயன்படுத்திக் கொள்கி
றார்கள் என்றார்.

இந்த மூன்று பேர்கள் சொல்வதில் எது உண்மை? யார் விவர
மானவர்கள். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்குங்க.
நீங்க என்ன சொல்ல வரீங்க. கொஞ்சம் விளக்கு மாத்துல
விளக்குங்களே!

2 கருத்துகள்:

  1. அந்த நேர கோபம், உடனே வேறு ஒருவருக்கு வாக்களித்து தனக்கு தானே ஆப்பு அடித்துக் கொள்ளும் பழக்கம் மனிதர்களுக்கு... ஜன நாயகம் என்ற பெயரில் இன்றைய தேர்தல் முறையும் சரியில்லை.. 39 சதவிகிதம் ஓட்டு வாங்கினால் போதும், மீதி 61 பேர் இவர்கள் வரக் கூடாது என்று பல பேருக்கு போட்ட ஓட்டு மரியாதை இல்லாமல் போய் விடும்...
    படித்தவர்களும் விவரமானவர்கள் என்று சொல்ல முடியாது... ஏனெனில் அவர்களுக்கு அரசியல் பாடம் முழுவதும் கற்று தருவதில்லை... மேலும் அவர்களும் படித்து தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு புத்தகங்கள் சுலபமாக கிடைப்பதும் இல்லை... படிக்க கூடிய அளவுக்கு சுலபமாகவும் இல்லை.. இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.. கற்றது கைமண் அளவு... மேலும் தான் கற்றது தான் உண்மை என்று அதில் விடாப் பிடியாய் தொங்குவது... ஏன் தலைவன் சொன்னால் சரியாக தானிருக்கும் என்று கண்மூடித்தனமான விசுவாசம்...

    பதிலளிநீக்கு
  2. மக்கள் முட்டாள் என்பதை விட அறியாமையில் உள்ளனர் என்பதே சரியானது, கிரிக்கெட்டும், சினிமாவும்,டி.வியும் அதுல காட்ற நியூசையும் பாக்குற வரைக்கும் ஒருநாளும் அவன் தெளிவு பெற முடியாது. அவனுக்கு எல்லாமே பொழுதுபொக்கா இருக்கு.

    படிச்சவன் எவனுக்கு புத்திசாலித்தனம் இருக்கு? படிச்சவங்க எந்த மாதிரியான மாற்றத்தை இந்த நாட்டுக்கு கொடுத்திருக்காங்க? அப்படியே அவன் எதையாவது மாத்தினாலும் மாத்தினதுக்கு அவனுடைய படிப்பு காரணமுன்னு சொல்ல முடியுமா? படிச்சவன் ஆபிசுல கூலி வேலை பாக்குறான், படிக்காதவன் உடலுழைப்பால கூலி வேலை பாக்குறான். படிச்சவன் புத்திசாலித்தனமா காரணம் சொல்லி மாத்தி, மாத்தி ஒட்டு போடுறான். படிக்காதவன் பெரிய புத்திசாலித்தனமான காரணம் ஏதும் சொல்லாம ஓட்டு போடுறான். படிச்சவன் படிக்காதவன் இரண்டு பேருமே தற்குறிதான்.

    வேட்பாளர் எல்லாம், விவரம் தெரிஞ்ச வியாபாரி. சனநாயக சந்தையில பணம் செய்ய தெரிஞ்ச வியாபாரி. திறமையுள்ளவன் இந்திய அளவுல வியாபாரம் செய்யுறான். திறமை குறைவானவன் லோக்கல்ல வியாபாரம் செய்றான்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...