வியாழன் 07 2021

காவலர்கள் வசூலுக்கு சென்று இருக்கிறார்கள்.....!!!

 



போலீஸ் உங்கள் நண்பன்

அப்படி நிணைத்துதான் காவல்

நிலையம் போனார் அங்கே..

 பேருக்கு இரண்டு மூன்று

பேர்கள்  மட்டுமே இருந்தார்கள்


காவல் நிலைய ரைட்டர்

 என்பவரிடம் புகார் மனுவை

கொடுத்தார் அதை வாங்கி

படித்தவர்  இல்லை பார்த்தவர்

இரவு ஏழு மணிக்கு 

மேல் வரச் சென்னார்

கேள்வி கேட்பது  காவலர்க்கு

பிடிக்காது என்று நண்பர்

சொல்லி தெரிந்து கொண்டதால்

 மேற்க் கொண்டு எதுவும்

கேட்காமல் தலையை மட்டும்

ஆட்டி விட்டு நகர்ந்தார்...


வெளியில் வந்து நின்றவரிடம்

கேட்டார் அய்யா காவல் 

நிலையத்தில் காவலர்கள் இல்லையே

ஏன்? ...அதற்கு அவர்

பதில் சொன்னார் காவலர்கள்

வசூலுக்கு சென்று இருக்கிறார்கள்

என்று.. ஆச்சரியம் மேலிட

வசூலுக்கா  என்று  கேட்டு

வாய் பொளந்தார். சட்டென்று

அவருக்கு நிணைவுக்கு வந்தது.

தலைக்கவசம்..முகக்கவசம்

இல்லாமல் இல்லையில்லை 

அணியாமல் இரு சக்கர

வாகனத்தில் சென்ற போது

நட்டநடு ரோட்டில் வந்து

 இடை மறித்து இழுத்து

சென்று ஸ்பாட் ..ஆன்லைன்

என்று அபதாரம் போட்டது

சொன்னவரிடம்  விடைபெற்று

 காவல் நிலையத்தை விட்டு

 நடையை கட்டினார்.


காவலர்கள் வசூலுக்கு சென்று

இருக்கிறார்கள்.................



4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நான்கு சக்கர வண்டிகளைவிட இரு சக்கர வண்டிகள்தான் அதிகம்.. அதிகமான அவர்கள் பேருக்குகூட சின்ன போராட்டம் கூட செய்யமாட்டுறாங்க.....அவ்வளவு பெரிய மனசு..

      நீக்கு
  2. கேடு கெட்ட காவல்த்துறை வழிப்பறிப்பாளர்கள்.என்று திருந்துவார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்பறிப்பாளர்களை எதிர்த்து நிற்காதவரை வழிப்பறிப்பாளர்கள் திருந்துவதற்கு வழியே இல்லை...

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...