ஜாமீன் கிடைப்பதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது செய்யக் கூடாது
வெள்ளி 13 2021
தாமதமாக தெரிந்து கொண்டவை.....
வியாழன் 12 2021
நாயும் நரியும்.....
பொதுவாக நாயின் குணம்
தன்னை வளர்ப்பவர்களிடம்
விசவாசமாக இருப்பது.
அதே சமயம் வேறு
ஒருவர் ஒரு எலும்பு
துண்டை போட்டால்
அவருக்கும் வாலை ஆட்டும்.
நரி பற்றி தெரியாத போதும்
மனிதர்களின் செயல்களில்
நரிதான் அதிகமாக உதாரணமாக
காட்டப்பட்டுள்ளது. அவன்
நரித்தனம் மிகுந்தவன்.
ஆக.. வாழ்க்கையில்
நாயும் நரியும்
சேர்ந்தே நல்லவர்களை
ஏமாளியாக்கி இருக்கின்றன..
ஏமாளிக்கு பேரு தியாகி....
----------------------------------------------
ஏதோ சொல்ல தோன்றியது.
திங்கள் 09 2021
வாழைப்பழத்தில் விஷ ஊசி ஏற்றும் நவரசா..எதிரி ??.
ஞாயிறு 08 2021
கனவு தொல்லை.........
சிவப்பு நிறத்தில் ஒட்டியிருந்த போஸ்டரை படித்ததால் நானும் முகம் தெரியாத ஒரு நபருடன் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்படுகிறேன். சிறையின் வெளி வாசலில் பெரிய தொட்டி அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. காவலர் ஒருவர் எனை அழைத்து தொட்டியின் மறு புறத்தில் ஒரு பைப்பை சொருகிவிடச் சொல்கிறார். எதற்கு என்று கேட்டுகிறேன். அதற்கு அவர் இங்கிருந்துதான் கர்நாடாகவுக்கு தண்ணீர் சப்ளை ஆகிறது என்றார். நான் தொட்டிக்கு அருகில் வந்து பைப்பை மாற்றிட முயலும்போது இன்னொரு காவலர் என்னிடம் கேள்வி கேட்கிறார். இங்கிருந்துதான் கர்நாடாகவுக்கு தண்ணீர் சப்ளை ஆகிறதாம் தெரியுமா, என்று சொல்கிறேன்.யார் சொன்னது என்றபோது. சொன்னவரை கைகாட்டுகிறேன். சொன்னவரும் கேட்டவரும் வாக்கு வாதத்தில் இருப்பதை பயன்படுத்தி தப்பித்து வருகிறேன்.
யாரோ கூப்பிடுவது போல் கேட்கிறது. திரும்பி பாரக்காமல் ரயில்வே மைதானத்தை ஒட்டியுள்ள அகலமான பெரிய கிணற்றில் நீச்சல் தெரியாதபோதும் வேகமாக படிக்கட்டில் இறங்கிச் சென்று தண்ணீருக்கு அருகில் அமர்ந்து கொள்கிறேன். தண்ணீரை உற்று பார்க்கும் பொழுது உள்ளே ஒருவர் மிதப்பது தெரிகிறது. கைதட்டி அவரை மேலே வரும்படி சைகை காட்டுகிறேன். மேலே வந்தவர் திருநங்கையா..? திருநம்பியா தெரியாமல் ரெண்டும் கெட்டனாக தெரிந்தார். சிறிது நேரத்தில் என் கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டு தண்ணீர்க்குள் இழுக்கிறார். மூச்சு திணறுகிறது.அங்கிருந்து தப்பித்து இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே..என்ற புலம்பலுடன். அவரிடம் விடுபட்டு வேறு ஒரு படிக்கட்டில் ஏறி தப்பித்துவிடுகிறேன் அவர் அழுது கொண்டே மீண்டும் தண்ணீருக்குள் முழ்கி விடுகிறார்.
இருட்டாகி விடுகிறது. மெல்ல நடந்து வருகிறேன். சிறுநீர் கழிக்க தூண்டல் வருகிறது. இ.பி. ஆபிசுக்கு அருகில் ஒரு சின்ன சந்து போகிறது. அந்த சந்தின் ஒருபக்கம் கற்கள் ஊன்றி கம்பிகளால் வேலி போடப்பட்டுள்ளது. வேகமாக போகிறேன். வடக்காக சென்று மேற்காக திரும்பி தெற்காக கம்பி ஓரத்தில் நின்று சிறுநீர் கழிக்க முயல்கிறேன் வடக்காக வரும்போது கருப்பு அங்கி அணிந்த பெண் தண்ணீர் குடத்துடன் வந்து கொண்டிருந்தார்.. அவர் வருவதற்குள் சிறுநீர் கழித்துவிடலாம் என்று முயலுகிறேன். சில வினாடில் அந்தப்பெண். என் பின்பக்கம் வழி இருந்தும் நான் சிறுநீர் கழிக்கும் முன்பக்கமாக வந்து “நிறுத்து. நிறுத்து” என்ற சத்தத்துடன் செல்கிறாள். அது யாரென்று தெரியவில்லை. அய்யோ பெண் என்று பதற்றத்தடன் சிறுநீரை பெரும்பாடு பட்டு அடக்குகிறேன். முழிப்பும் வந்துவிட்டது. எழுந்து ஒடி அடக்கி வைத்த சிறுநீரை நிதனமாக கழிக்கிறேன்..
மேற்க்கண்ட கனவுகள் நினைவில் வந்தவை மட்டுமே.....
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
