பக்கங்கள்

சனி 23 2016

திருடர்கள் மொழியில் வளர்ச்சி என்றால்...


கஞ்சி ஊத்த வக்கில்ல
என்னடா அரசாங்கம் நாட்ட
வெளி நாட்டுக்கு வித்துபுட்டு
என்று பாடினார்கள் புரட்சிப்
பாடகர் கோவனும் அவர்தம்
கலைக் குழு தோழர்களும்

பசி வந்தால் பத்தும்
பறந்து போகும் என்றார்கள்
பசியால் பட்டு அறிந்தவர்கள்

எயிட்ஸ் ஏபோலா போன்ற
உயிர்க் கொல்லி நோய்களை
விட பசியால் மாண்டவர்கள்
ஏராளம் என்கிறது அய்க்கிய
நாட்டு அமைப்பு 2013-ல்
வெளியிட்ட அறிக்கை ஒன்று

அன்றைய இந்தியாவில் 1970ல்
இருந்தே வறுமையை ஒழிப்போம்
ஒழிப்போம் என்று குயிலாகவும்
கூவினார்கள் காக்கையாகவும் கரைந்தார்கள்
இன்றுவரை பசியும்  ஒழியவில்லை
வறுமையும் ஒழியவில்லை இன்றுவரை

தேர்தல் திருடர்கள் மொழியில்
பசியும் வறுமையும் வளர்வதைத்தான்
 அவர்கள் வளர்ச்சி வளர்ச்சி
என்று அவர்கள் மேடைதோறும்
கூவுகிறார்கள்.கரைகிறார்கள் பிதற்றுகிறார்கள்.


வெள்ளி 22 2016

30,000-ம் பேர் பார்த்துள்ள ஒரு பாடல்.....



ஊத்திக் கொடுத்த உத்தமியை அடுத்து இப்போது போங்கு..அம்மா போங்கு பாடலுடன் களமிறங்கியிருக்கிறார்..மகஇக.வின் புரட்சிப்பாடகர் கோவன்


இன்னொரு தேசதுரோக வழக்கு !!   வாருங்கள்! பாருங்கள் !!  கேளுங்கள்!!! பகிருங்கள்!!!!






பாடல் வரிகள்:
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க
கடைய பாதியா வடய பாதியா
டைமு பாதியா கொறக்க போறியா?
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க
ஃபுல்லு குவார்ட்டரு அப்புறம் கட்டிங்கு
டிரிங்ஸ வுடுறேன்னு சொன்னா சீட்டிங்கு
போங்கு – மச்சான் போங்கு
போங்காட்டம்…. ஆடு றீங்க
படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு கேட்டு டேபிள் தட்ட கேனையா நாங்க
மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க
பிராந்தி பீரு கணக்கு சொல்லுறீங்க
குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க
உனுக்கும் எனுக்கும் பிரிச்சனை ஏங்க – தில் இருந்தா
வில்லேஜிக்கி சிங்கிளாக போங்க
ஒரு கடைய பச்சப்பாசு பசங்க
மூடசொன்னதுக்கே முப்பது நாளு சிறைங்க – சசி
பெருமாள டவரில் ஏத்திட்டீங்க – எலெக்சனுக்கா
சீன போடுறீங்க
பச்சை ரத்த கலரு ஓல்டு மாங்கு
குட்சு தமிழ்நாடே சோகமான சாங்கு
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க-அம்மா
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க
நாங்களே பூட்டிக்கிறோம் கொட நாடு போங்க
போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

நன்கொடை
நன்கொடை

வியாழன் 21 2016

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சித்தலைவரை நெகிழச் செய்த கதை,

உலக பாட்டாளிகளி வர்க்கத்தின் மாபெரும் தலைவரும் ஆசானுமான  உழைப்பாளிகளின் புரட்சித் தலைவருமான தோழர் லெனின் 1892- நவம்பரில் ஒரு பத்திரிக்கையை யதேச்சையாக படித்த போது அந்த பத்திரிகையில் வந்த சிறுகதை  பாட்டாளிகன் புரட்சித்தலைவரை நெகிழச் செய்துவிட்டது. அவரது மனமும் கனத்துப் போனது.

அவரது நிணைவில் ஜார் கொடுங்கோல் அரசால் தூக்கிலடப்பட்ட தன் அண்ணன் அலெக்சாந்தரும். அண்ணனின் நினைவால் இறந்து போன தன் தந்தையும். மருத்துவ மனையில் துடிதுடித்து இறந்த தங்கை ஒல்காவும் வந்து போயினர்.

தன் குடும்ப நிகழ்வோடு, அந்தக் கதை ஒத்துப் போனதால்..அந்தச் சிறுகதை அவரை நெகிழச் செய்துவிட்டது என்பது மிகையில்லை..


அந்தக் கதை.

150 மைல்களுக்கு அப்பால் ரயில்வே நிலையம் இல்லாத ஒரு நகரம். அந்த நகரத்திலே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு மருத்துவமனை ஒன்று இருக்கிறது.

அந்த மருத்துவ மனையில் ஆறாவது வார்டில் ஜவான்புரேமோவ் என்ற பெயருடைய மனநலம் பாதிக்கப்பட்டவன் ஒருவன் இருந்தான். அவன் அதிகம் படித்தவன். அதோடு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்.

அவனது குடும்பத்தில் ஒரு நாள் அவனது அண்ணன் மரணமடைந்தான்  அடுத்தாக .அவனது தந்தையும் இறந்து போனார். அவனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜவானுக்கு வந்தது.

ஜவானுக்கு சோதனைக்காலம்.அண்ணனும் தந்தையும் அடுத்தடுத்து இறந்து போனதால்  ஜவான் மனநலம் பாதிக்கப்பட்டு  பைத்தியமாகிப்போனான். ஜவான் மனநலம் பாதிக்கப்பட்டுப் போனதால் ,அந்த மனநல மருத்துவமனையில் நோயாளியாக “வார்டு என்று ஆறு”-ல் சேர்க்கப்பட்டு இருந்தான்.

அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர். தினமும் அதிகாலை வரை புத்தகம் படிப்பார். அந்த மருத்துவருடைய ஆசை எண்ணம் எல்லாம் எதுவென்றால்  “தன்னைப் போன்ற ஒரு படிப்பாளி ஒருவருடன் உலகத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் குறித்து உரையாட வேண்டும் என்பதுதான்.

அந்த மருத்துவ மனையில் அப்படி யாரும் இல்லாததால்.. பைத்தியமான ஜவான்தான் அந்த மருத்துவருக்கு கிடைத்தான்.

ஜவானும், அந்த மருத்துவரும் நிறைய பேசினார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த மருத்துவரும் பைத்தியமாகிப்போனார்..அந்த டாக்டரும் அதே மருத்துவமனையில் “ வார்டு எண் ஆறு” -ல் நோயாளியாக சேருகிறார். சிலநாளில் அந்த மருத்துவரும் இறந்து விடுகிறார்.

அந்த கதை,,“ வார்டு எண் ஆறு” என்ற தலைப்பில் ஆண்டன் செக்காவ் எழுதிய சிறுகதைதான்.

புதன் 20 2016

நல்லவேளை நிர்வாணத் தேர்வு நடத்தவில்லை...

நாட்டைக காக்கும்
ராணுவப் பணிக்கு
நடந்த எழுத்துத்
தேர்வில் பிட்
அடிக்கும் அசாம்பா
விதத்தை தடுக்கும்
முகமாக ஜட்டியோடு
தரையில் அமர்ந்து
தேர்வு எழுத
பணித்தார்கள் ராணுவ
தேர்வு அதிகாரிகள்
படம்-www.tamilkingdom.com





செவ்வாய் 19 2016

சொல்....நீ...நாத்திகனா...??????????

ஏய்.................நில்
 நல்ல நாளும்
அதுவும்  மா
மீனாட்சி கல்யாண
நாளில் பயம்
என்று ஒன்று
இல்லாமல் காலில்
செருப்பு அணிந்து
கோயில் முன்
செல்கிறாயே... சொல்
நீ.....நாத்திகனா.....????

திங்கள் 18 2016

அமெரிக்காவே.சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...

மண்டியிட்டும் வளைந்தும்
வணங்கும் அமைச்சர்களின்
வேட்பாளர்களின் படங்களைப்
 சற்றுப் பாருங்கள்...............

பார்த்தால்..........

மனிதகுல வரலாற்றிலேயே
முன் எப்போதும்
இல்லாத அளவுக்கு
அடிமைகள் இப்போது
அதிகமாக உள்ளதாக
அமெரிக்க ஆய்வு
அறிக்கை  சொல்வது
இந்த விசயத்தில்
சரியாகத்தான் இருக்கும்

படம-www.kannotam.com


படம-namathu.blogspot.com


தலைப்பைச் சேருங்கள்

அரங்கேறும் புதிய தீண்டாமை..


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...