பக்கங்கள்

வியாழன் 08 2017

ஒரு வாக்கு...வாதம்....

நண்பர் இருவர்
பலர்  வந்து
நிற்பதையும் மறந்து
காரசாரமாக விவாதித்து
கொண்டு இருந்தனர்

எதைப்பற்றி என்று
உற்றுக்கேட்டேன் அது
நீட் தேர்வை பற்றியது

நீட் தேர்வு ஏழைகளுக்கு
எதிரான புதிய மனு
நீதி  நீட் தேர்வு
ஆனது மருத்துவக் கல்வியை
பணக்கார வீட்டு வாரிசுகளின்
தனிச் சொத்தாக்கி விட்டது
என்றார் ஒருவர்.......

ஆமாமா...ஏழைகள் படித்து
போனாலும் முதல் வேலையாக
அந்த ஏழைகளுக்குத்தான் மருத்துவம்
பாப்பாங்கே....அட போங்க சார்..
அவனவன் சுயநலம் படிச்ச
வங்களாகத்தான் இருக்காங்க
என்றார் மற்றவர்.......

ஒருவர் மறுக்க மற்றவர்
எதிர் வாதம் செய்ய
இப்படியாக வாக்கு
வாதம் முற்றி வளர்ந்து
கொண்டே போய்க்
கொண்டு இருந்தது..
முடிவதாகவும் தெரியவில்லை
நிறுத்தவும் முடியவில்லை




செவ்வாய் 06 2017

ஓய்வும்..... ஊதியமும்.......

என்னை மறந்த
பால்ய நண்பர்
ஒருவர் தன்
மகனின் திருமண
நிகழ்ச்சியின் போது
அவரின் நிணைவுக்கு
வந்த என்னை
பார்க்க என்
இல்லம் தேடி
வந்தார் வந்தவர்
தான் ஓய்வு
பெற்று விட்டேன்
என்ற தகவலுடன்
தன் மகனின்
திருமண அழைப்பிதழை
கொடுத்து விட்டு
உனக்கு ஓய்வு
இல்லையா என்று
கேட்டு விட்டு
பின் அவரே
சொந்த வேலை
புரிவோருக்கு ஓய்வு
என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம்
என்பதும் கிடையாது
என்று முன்
மொழிந்தார் ஓய்வு
பெற்ற அரசு
ஊழியரான நண்பர்.

ஞாயிறு 04 2017

இதை என்னவென்று சொல்வார்கள்.............

என்றைக்கும் இல்லாததுமாக
அன்றைக்கு அவர்
அதிகாலையில் எழுந்தார்
பல் துலக்கினார்
முகம் கழுவினார்
தேநீர் அருந்தினார்
பின் தனது
தொந்தியை குறைக்க
நடைபயிற்சி சென்றார்

சென்றவர் வெகு
நேரமாகியும் வீடு
திரும்பாததால் அவரை
வீட்டிலுள்ளவர்கள் தேடிச்
சென்றார்கள் அவர்
நடை பாதையில்
வெட்டுப் பட்டு
ஊயிர் துறந்து
அலங்கோலமாக கிடந்தார்
இதை என்வென்று
சொல்வார்கள்.....சதி
என்றா அல்லது
விதி என்றா..........

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...