பக்கங்கள்

சனி 06 2012

அம்மா..........தாயே...........புண்ணியவதி.............




அம்மா........................தாயே............
புண்ணியவதி...................................

உன்ணோட இருண்ட
கால ஆட்சியில்............

பகலில் வெயில் கொடுமை!
இரவில் கொசுத் தொல்லை!

மூன்றாவதாகவும்..........நீயே
வந்து ஆளுடீயம்மா.............

பகலில் இம்சை கொடுக்கும்
ஈக்களும்.........................................
இரவில் இரத்தத்தை உறிஞ்சும்
கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உன்னை வாயார............................
வாழ்த்துமடீயம்மா...............

நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,

 

புதன் 03 2012

சில்லரைக்காக.....................சென்றேன்.

வருடத்துக்கு ஒருமுறை
வரும் வாடிக்கையாளர்
தன்வீட்டுப் பிள்ளைகளின்
பாடப் புத்தகங்களை அடடையிட்டு
செப்பனிடக் கொடுத்தார்.

செப்பனிட்ட புத்தகத்தை
பெற்று  அய்ந்து நூறு
முழு நோட்டை நீட்டினார்.

என்னிடம் சில்லரை இல்லை
ஞானம் ஸ்டோர்க்கு சென்றேன்
உதட்டை பிதுக்கினார்.
உதடனின் டீக்கடையில்
நீட்டினேன் கைவிரித்தார்
.
கடைசியாக முத்துராசு
கடைக்கு போனால்..
மல்டிபார்க்கு போகச்
சொன்னார்.

போவதற்கு தயக்கம்
வாடிக்கையாளாரை
காக்க வைத்த தவிப்பு
ஒருபக்கம்.................

துணிந்து சென்றேன் மல்டி
பார் ஒயின“ஷாப்புக்கு
சில்லரையை வாங்கி
வரும்போது........

டாஸ்மாக் குடிமகன்
இருவரில்  ஒருவன்
சொன்னான்..............


பார்றா...........தோழரும்
ஒயின்ஷாப்புக்கு வர்ராருடா!!!!.......


செவ்வாய் 02 2012

ஒரு வேள.......... கேட்கலைன்னா.....................!!!!


..
.எனக்கு காது கேட்பதில் பிரச்சினை.  ஆங்கில மருத்துவ சிகிச்சையில்
ஸ்கேன்,டெஸ்ட்,லொட்டு.லொடுக்கு எல்லாம் முடித்தப்பின் வலது காது
அவுட் என்றும் இடது காதும்சீக்கிரமே அவுட்டாகிவிடும் என்று பயமுறுத்தி
சில ஆயிரங்களை செலவழித்துவிட்டு ஒன்னும் செய்ய முடியாதுன்னு கைகழுவி விட்டனர்.

    நானும் விக்கிரமாதித்தனாக சளைக்காமல் ஒவ்வொரு முயற்சியாக மேற்ககொண்டு வந்தேன். 

காதில் காதொலி வைத்துக்கொண்டால் கேட்கும் என்ற சந்தேகத்தின் பேரில் டெஸட் செய்து காதொலி விற்கும் கடைக்குச் சென்றேன். 

காதொலி துல்லியமாக கேட்கும் ஆனால் பத்திரமாக தண்ணி
கிண்ணி படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.(கிண்ணி என்பது
டாஸ்மாக்கை குறிப்பது.டாஸ்மாக் குடிமகனாக எண்ணை நிணைத்து
சொல்லிவிட்டார். 

நான் அசல் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் குடிமகன்
என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை) அதோடு காதொலி விலை பதிணைந்து ஆய்யிரத்துக்கும் மேல் ஆகும் என்று என்றார்கள் கடன்பட்டு காதொலி வாங்கினாலும் அதை கவனமாக பாதுகாப்பது முடியாத
காரணம். 

ஏற்கனவே வயிற்றுவலி. சுற்றி இருக்கிற மக்களின அன்புத்(சண்டைச்ச்சரவு) தொல்லை. அந்த அன்பினால் காதொலியை பதம் பார்த்துவிட்டால் என்னாவது. இது சரிப்பட்டு வராதுன்னு நானே முடிவு கட்டிவிட்டேன்

   காது செவிடானவர்களின் அனுபவத்தைக் கேட்டால் அதி பயங்கரமாக
இருந்தது. எங்காவது எதாவது வெடித்து நாசவேலை நடந்தால் அது
நக்சலைட் வேலையாக.சதியாக இருக்குமோ என்று போலீஸ் கக்கியதை
வாந்தியெடுக்கும் ஊடகங்கங்கள்.பத்திரிக்கைகள் மாதிரி இருந்த்து.
செவிடானவர்களின்  சொன்ன அனுபவம் அய்யோ! போதும்ய்யா!!! என்று
 அதிலிருந்து அவர்கள் அனுபவத்தை கேட்பதை விட்டுவிட்டேன்.

   தோழர் ஒருவர் சொன்ன அக்குபிரஷர் முறையை விட்டு விட்டு செய்து  வந்தேன் (மறதியால்).ஒருநாள் பேப்பரில் பொண்டாட்டி செத்த துக்கம் தாளாமல் செத்து போன கோவை சாமிகிரி சித்தரின் வாரிசுகள் நடத்தும் காதொலி சிகிச்சை மையம் கிளை பற்றிய செய்தியை படித்தேன். வேலை இல்லாத நாட்களில் ஒரு நாள் சிகிச்சை மைய்யத்துக்கு சென்றேன்.
     


வரவேற்பு பலமாக இருந்த்து. மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். என்முறை வந்த்து......“அய்யா என்...பெயர்..................எனக்கு வயது 52 ஆகுது...எனக்கு ஒலிஅளவை நார்மலாக கூட்டி வைத்து பேசினால்தான் மனிதர்கள் பேசுவது கேட்கும்.ரகசியமாகவோ, பல நாள் கஞ்சிக்கு குடிக்காதவர்கள் போல் பேசினாலோ,திருடர்கள் மாதிரி பேசினாலோ கேட்காது,

அதே சமயத்தில் மேடையில கூச்சலிடும் கட்சிகாரர்கள் மாதிரி கத்தி பேசினால் விளங்காது..காதுக்காக .ஆங்கில மருத்துவ முறையில் எல்லா சோதனையும் செய்தாகிவிட்டது. நீங்கள் சோதனை செய்ய வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளலாம் என்று முதலிலே எல்லாவற்றையும் ஒப்பிவித்துவிட்டேன்.
    காதொலி சித்தர் வாரிசும் என்னை பரிசோதித்தார். பல கேள்விகளை கேட்டார்.பல வற்றுக்கு உண்மையான காரணங்களையும்.சில வற்றுக்கு பொய்யான தகவலையும் கூறினேன். எதனால் காது கேட்கவில்லை என்ற கேள்விக்கு  சுதந்தரம் வாங்கி தந்த அகிம்சா மூர்த்தி பிறந்த நாட்டிலே “போலீஸ்காரனுங்க பொய் கேசுல புடுச்சுட்டு போயி. செவுள பேத்த கதைய சொல்லல... சொன்னால்...ஏன்? அடிச்சாங்கன்னு கேள்வி வரும். அதுக்கு பதில் சொன்னால்.அதிலிருந்து இன்னொரு கேள்வி வரும்..... இப்படியே...........இப்ப.... அதுவா.... முக்கியம்... காது கேட்க வைக்கிறதுல முக்கியம்.........ஒருவழியாக சாமிகிரி சித்தரின் வாரிசும் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

“உங்களக்கு காது கேட்க வைத்துவிடலாம்”.......

“சந்தோசம்”..... அதுக்கு எவ்வளவு செலவாகும்.......

“ஒரு பதிணைந்தாயிரம் செலவாகும்.”..

என்னையறியாமல் பொளந்த வாயை கையால் மூடிக்கொண்டேன்.
சித்தரின் வாரிசே பேசினார்..

“பணத்தை மொத்தமாக கட்டிவிடவேண்டும். பணத்தை கட்டிவிட்டு
கோவையிலுள்ள தலைமை மருத்துவமனையில் ஒரு வாரம் தங்க
வேண்டும். உங்களுக்கு காதில் மருந்து விட்டவுடனே. காது கேட்க
ஆரம்பித்துவிடும் என்றார்.

“பணத்தைப்பற்றி ஒன்றும் கவலையில்லை, பணத்தை பொரட்டி விடலாம்

ஆனா...... ஒரு சின்ன சந்தேகம்.........கேட்கட்டுமா?..........

கேளுங்க...என்பதற்கு அறிகுறியாக  தலையை ஆட்டினார்.

“ஒருவேள............ கேட்கலைன்னா

.“கேட்கும்”.............

நல்லது கேட்கும்..“ ஒருவேள .........கேட்கலைன்னா,.......இழுத்தேன்” 

கேட்கும்”.........

இடையில் சிறிது நேரம் பேச்சு நின்றது

நான் எதுக்கு கேட்கிறேன்னா........ ஆங்ங்கிலமருத்துவரு. கேட்காத காதை
கேட்க வச்சுரும்லாம்ன்னு சொல்லி செலவ இழுத்துவிட்டுட்டு கைய விரிச்சுட்டாரு..அந்தக்கடனே இன்னும் அடைபடல...,அதனலதான்......

ஒரு வேள  கேட்க.......லைன்னா........

“கேட்கும்”......-ஒரே பல்லவியையே சொன்னாரு....

அடுத்தாக.கேளாத ஒருவர் அவர் முறைக்காக என்னை உரித்துவிடுவது
போல் பார்த்தபடி கண்ணாடி போட்ட வாசல் அருகில்  தயராக நின்று கொண்டு இருந்தார்.

நிலமையை. உணர்ந்த நான் பணத்தை ரெடி பண்ணிவிட்டு வறுகிறேன்
என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு விடை பெற்றேன்

ஒரு...... வேள...........கேட்கலைன்னா.......................

 திரும்பவும் ஏமாறுவதுதான்  என்று எனக்கு புரிஞ்சு போச்சு. 

திங்கள் 01 2012

செத்துப்போவதற்கு 1008 காரணங்களில் இதுவும் ஒன்று........



   மதுரையை சேர்ந்தவர் முனிஸ்வரன் இவருடைய மகன் வசந்த குமார்
வசந்தகுமார்.ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில்
உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல் பிரிவில்
நான்காம் ஆண்டு படித்துவந்தார். மொத்தம் 22 பாடத்தில் அரியர் வைத்
திருந்தார்.
   
   பலமுறை முயன்றும் அரியரை குறைக்க முடியவில்லை. இதனால்
தனக்கு இனிமேல் படிப்பு வராது என்று முடிவெடித்து. கல்லூரிக்கு
செல்ல மறுத்துள்ளார்.
    
   தந்தை முனிஸ்வரனோ.அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் இன்று
நல்ல நிலமையில் உள்ளதைக் கண்டும் கேட்டும்( 100க்கு 20பேர்)
தன் மகனும் அந்த நிலமைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்
தன மகனை கல்லூரிக்கு சென்று படிக்க கட்டாயப்படுத்தியுள்ளார்
தந்தையின் வற்புறுத்தலால் (மிரட்டலால்) வேண்டா வெறுப்பாக
கல்லூரிக்கு சென்று வந்தார்.
   
   ஒரு நாள் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்த வசந்தகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு  வீட்டில் யாரும் இல்லாத
நேரத்தில் நையிலான் கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து
கொண்டார்
   
   இது குறித்து தந்தை முனிஸ்வரன் புகார் செய்ய, வழக்கம்போல்
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்தி வெளியிட்டது.
   
   அரியரை முடிக்க முடியாமல் தோல்வி கண்ட வசந்தகுமார். வாழ்வின்
வசந்த்தை முடித்துக் கொண்டதுபோல 1870 காலி பணியிடங்களுக்கு
ஒன்பது லட்சம் பேர் தேர்வு எழுதிய வேலையற்றவர்கள் நிறைந்த
நாட்டில் அய்யோ! நான் தேர்வு எழுதியும் எனக்கு வேலை கிடைக்க
வில்லையே! என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கும்
அடுத்தக் காரணமும் கிடைத்துவிடும்.
       
        ஒருசிலரை வாழ வைக்கும் தனியுடமையை அழித்து
        பலரை வாழ வைக்கும் பொதுவுடமை படைக்க மடிவதே
        பல வழிகளில் சிறந்த ஒரே வழி!!!!!!!!

ஞாயிறு 30 2012

இப்படியும் ஒரு மூடப்பழக்கம்.....


நகராட்சியில் அது பறச்சேரியாக இருந்தது. மாநகராட்சியில் அது பறய தெருவாக அழைக்கப்பட்டது. அந்தப்பறயத் தெருவுக்கு ஒரு நாட்டாமை அந்த நாட்டாமைக்கு பல வைப்பாட்டிகளில் ஒரு வைப்பாட்டியின் மகள் அவள்.

அவள் பார்ப்பதற்கு அழகில்லாதவள். சுமார் என்றும் சொல்வதற்கும் லாயயிக்கில்லாதவள். தமிழ்நாட்டு அத்தாவைவிட சற்று குண்டானவள் பெருத்த மார்பகங்களை கொண்டவள். அதோடு வயிறும் அதன் பங்குக்கு முட்டி மோதிதள்ளிக் கொண்டு இருக்கும். அவளுடைய மாறாப்பு மார்பகத்தையும்.வயிற்றையும் எப்போதாவதுதான் மூடியிருக்கும்.

அந்த பறயதெருவிலுள்ள ஆம்பிள பொம்பிள அனைவருக்கும் ஆம்பிள பொம்பள நாட்டாமையைவிட அவள்தான் பவரானவள். இவளுடன் சண்டையிட்டு மோதி  ஜெயிக்க முடியாத அளவுக்கு பராக்கிரமம் பெற்றவள்.

இவள் கம்பெடுத்து சண்டையிட்டு வெற்றி வாகை சூடும் விராங்கனையல்ல  ஒலக வாயி, ஒலக ஒலிப்பெருக்கி என்று பெயரெடுத்தவள் அந்த பறய தெருவில் குடியிருக்கும் சீமான் சிமாட்டிகளின் கள்ளக்காதல்.களவாணிக் காதல் திருட்டுக்காதல் போன்றஎல்லாதிரை மறைவு அயோக்கியங்களும்,
களவானி தனங்களையும் தெரிந்து வைத்திருந்ததால்........

இவள் சண்டையிடும் போது  சண்டையிடுபவர்களின் அத்தனை கயவாளி தனங்களையும் ஒலிபெருக்கியாய்  நேரடி வர்னனையுடன் ஒளிவு மறைவு இன்றி தேனாறும் பாலாறுமாக ஓடும். தன்னை மதிக்காமல் இருககும்
நேர்மையாளர்களின் வீட்டில் இரவில் கல்லெறிவாள்.பொய்யாக அவதூறாக அவர்கள் மீது போலீஸில் புகார் செய்து அலைய வைப்பாள். இதனால் அவள் அந்தத் தெருவில் பொம்பள தாதாவாக வலம் வந்தாள்.

வாழ்க்கை சக்கரத்தில் ஒரு நாள்  இவள் மண்ணெண்னெயில் வெந்து இறந்து போனால். எப்படி இறந்தாள் என்பது மர்மாகத்தான் இருக்கிறது.இவள் ஒரு டாஸ்மாக் குடிமகள். இதோடு போதை மாத்திரை பழக்கமுள்ளவள்.

இவள் இறந்த சிலநாட்கள் கழித்து இவள் வீட்டிற்குள் கழுதை ஒன்றை விட்டு கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து கதவை திறந்து கழுதையை தெரு வழியேஇழுத்துச்சென்றார்கள்-
அவளின் கனவனும் தம்பியும்......................

கழுதையை வீட்டுக்குள்ளே பூட்டியது எதுக்குஎன்றால். மூன்று நாட்களாக அடைக்கப்பட்ட கழுதை கத்தியிருந்தால் அவள் பேயாக அந்தவீட்டிலே இருக்கிறாளாம், கழுதை கத்தாதினால் அவள் பேயாக இல்லையாம்..........

தற்கொலையோ, கொலையோ நடந்த வீட்டில் இறந்தவர்கள் பேயாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய கழுதை மூலம் கண்டுபிடித்த
 அந்த மகா விஞ்ஞானியின் பேரும் ஊரும்  தெரிவில்லை. தெரிந்திருந்தால்
அவருக்கு கோயில் கட்டி சுவத்தில சாத்தி வச்சுருக்கலாம்...................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...