பக்கங்கள்

சனி 14 2014

வயிற்றுவலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத பெண்.(1)

  முன் கதையை படிக்க-http://valipokken.blogspot.com/2014/06/blog-post_2883.html


தொடர்ச்சி.............

தான் ஏமாற்றப்பட்டதையும் தான்  ஒரு நொடியில் சபலத்துக்கு ஆளாகி பித்து பிடித்து ஏமாந்து போனதையும் , சாகப்போற நாளில் இப்படி மதியிழந்து மானங்கெட்டு போனதையும் நினத்து புலம்பியவாறு நடந்து வந்து கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

வீடு போய் சேர்ந்தபோது, மணி ஒன்னாகி இருந்தது.  சத்தமில்லாமல் தன் படுக்கையில் படுத்தார். தூக்கம் வருவதாக இல்லை.

அவளின்மேல் கோபமும் ஆத்திரமும் தான் வந்தது. “சும்மா கிடந்த சங்கை, ஊதி கெடுத்து விட்டாளே” என்று.. ஒவ்வொரு விசயத்திலும் தாம் ஏமாறுவதே ஒரு விதியாஃ? போய்விட்டதே என்று வேதனைப்பட்டார்.

இப்படியாக கண்டதை நிணைத்து குழம்பியவாறு அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.  விழித்து போது மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது.

காலையில் எழுந்தபோது  வீட்டிலுள்ளவர்கள் கேட்டபோது .வயிற்றுவலி வந்ததால் நடந்து கொண்டு இருந்தாக தெரிவித்துக் கொண்டு, பல் துலக்கி அன்றைய உண்வை முடித்துவிட்டு பேப்பரை பார்த்துக் கொண்டு இருந்தார்

பேப்பரை பார்த்து முடித்துவிட்டு ஆப் பன்னி வைத்திருந்த செல் போனை ஆன் செய்தார்.  அதில் இருபதுக்கு மேலான மிஸ்டு கால் பதிவாயிருந்தது. அவள்தான் அந்தக கடையிலிருந்து கொடுத்திருந்தாள்.

அதைப் பார்த்து சிறிது நேரம் அமைதியாக இருந்தவர். சட்டென்று எழுந்து அவள் வீட்டை நோக்கி நடந்தார்.

முதலும் முடிவுமாக, சபலத்துக்கு ஆளாகி ஏமாந்தது போதும் அதனால் மனம் சஞ்சலப்பட்டு தவித்ததும் போதும் அவளின் சங்காத்தமே வேண்டாம் என்ற முடிவோடு அவள் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் வீட்டுக்குள் சென்றவுடன் ,அவள் அவனுடைய மகனுக்கு பத்து ரூபாபை கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு. இவரைப் பார்த்து என்னா? எத்தன தடவ போன் அடிக்கிறது. அவ்வளவு  நேரமா பேசிக் கொண்டு இருப்ப...என்றாள்

காமும் காதலும் நிறைந்திருந்த வயதில்கூட நான் இப்படி அலைந்ததில்லை. பாழாய் போன வயிற்றுவலியைக் காட்டி எனனை பித்து பிடிக்க வச்சு ஏமாத்திட்டலே.... என்றார்.

..ஏ.....ஏ  இல்ல........... என் வீட்டுக்காரரின் தங்கச்சி வந்திருந்தாங்க...... அதனால்தான் வர வேண்டாம் என்று சொன்னேன் என்றாள்.

பொய் சொல்லாதே............ எனக்கு எல்லாம் தெரியும். நீ அந்தக் கடையில் இருந்து  எனக்கு போன் செய்ததை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் என்றுவிட்டு அவரே தொடர்ந்து பேசினார்.

“ஏம்மா..நானாவாக ஓங்கிட்ட வந்தேன். நீதானே! என் வயித்துவலியை தீர்ப்பதாக சொல்லி , நைய்யா.நச்சு, ஆசைகாட்டி எனக்கு சபலத்தையும் ஏற்ப்படுத்தின, உனக்கு என் மேல்  இரக்கமுமில்லை காதலுமில்லை, உன்னிடம் நேர்மையுமில்லை ,சுத்தமுமில்லை என்றார்.

அவரின் பேச்சை கேட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தவள். சொன்னா, நீ. நம்ப மாட்ட...  என்கணவரின் ஞாபகம் வந்துவிட்டது. அவருக்கு துரோகம் செய்கிறோமே என்று பயமும் மன உளச்சலும் வந்துவிட்டது. அதனால்தான் மனது மாறி . என் கனவரின் தங்கை வந்தாக பொய் சொல்லி வர வேண்டாம் என்று சொன்னேன் என்றாள்.

திரும்பவும் பொய் சொல்கிறாய், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்கிறாய்., உன் கனவனைத் தவிர வேறு யாரிடமும் போயிருக்க மாட்டாய் என்று நிணைத்துதான். உன்னுடைய வற்புறுத்தலுக்கு மயங்கினேன். ஆனால் நீ கில்லாடியாய் இருப்பாய் என்று நேற்றுதான் தெரிந்தது....

அவள் பேச வாய் எடுத்தபோது. வேண்டாம் எதுவும் பேச வேண்டாம். நான் கொடுத்த பணத்தை  கொடுக்க வேண்டாம். ஆளை விட்டால் போதும். நான் புத்தி கெட்டு போனதற்கு தண்டனையாக இருக்கட்டும். இனி நீ எனக்கு போன் பன்னக்கூடாது.

நான் ஏமாந்தது போதும் . நாமிருவரும் பார்க்கவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் என்று விட்டு வெளியே வந்தபோது. அவள் தடுத்தாள் ப்ளீஸ் ப்ளிஸ்  என்றவாறு  அவரின் கையைப் பிடித்தாள்

அவள் பிடித்த கையை விடுவித்தவாறு  ஒரு கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்தவராக  வருத்தமும் ஏக்கமும் இல்லாத  மன நிம்மதியோடு அவள் வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

வந்ததும் முதல் வேலையாக மனத்தக்காளி கீரையை சாப்பிடச் சொன்ன நண்பரை பார்த்து.. “வயிற்றுவலி தீர  மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத இந்த பெண்”ணைப் பற்றி யும் தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத  வீரத்தையும் சொல்வதற்கு புறப்பட்டார்.

(முடிந்தது.)

http://valipokken.blogspot.com/2014/06/blog-post_2883.html
முன்கதை இணைப்பு.


வெள்ளி 13 2014

வயிற்றுவலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத பெண்.

அவருக்கு நீண்ட காலமாக வயிற்றுவலி மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வரும்பொழுது வயிற்றுவலி மறைந்துவிடும். சில நாட்கள்.அல்லது சில மாதங்கள் கழித்து காணாமல் போன வயிற்றுவலி திரும்பவும் வந்து தொல்லை கொடுக்கும். திரும்பவும் மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்பொழுது மறைந்து விடும். இப்படியாக பத்து வருடங்கள் கடந்து வந்தார்.

பத்து வருடங்களாக வயிற்றுவலியுடன் சண்டையிட்டு கொண்டு இருந்த பொழுதில் ஒருநாள் வயிற்றுவலியின் ஆதிக்கம் அதிகமாயி அதன் கை ஓங்கி இருந்த நேரம்.

தனியார் மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, என்டோஸகோப்பி மூலம் வயிற்றை படம் பிடித்து பார்த்த பொழுது வயிற்றில் 46 செண்டிமீட்டர் அளவுக்கு புண்கள் ஏற்பட்டு இருந்தது.

பத்து வருடங்களாக  வயிற்று புண்ணால் அவதிப்பட்டு வந்தால் வயிற்றுப் புண் புற்று நோயாக மாறும் என்று மருத்துவர் சொன்னார்.

ஆனால். அவருடைய வயிற்றுப்புண் புற்று நோயாக மாறவில்லை என்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் வயிற்றுப புண்னை ஆற்றிவிடலாம் என்றார். இதோடு அவரிடம்   எந்தப் பழக்கமும் இல்லாததால் குறுகிய காலத்திற்க்குள்ளே சரி பண்ணி விடலாம் என்றார். மருத்துவர்.

இரண்டு வாரங்கள்  கழித்து  வீட்டுக்கு வரும்பொழுது வாரத்திற்கு ரெண்டாயித்துக்கான மருந்து மாத்திரைகளை ஒரு மாதத்திற்கு விடாமல் சாப்பிட்டு வருமாறு பணித்தார்.

பணக்கஷ்டம் இருந்தும்   முன்பு வாங்கி வைத்திருந்த சிறு சிறு நகை நட்டுகளை அடகு வைத்து மாத்திரை சாப்பிட்டு வந்ததினால்   சில மாதங்களாக வயிற்றுவலி தலை காட்டவில்லை.

நான்கு மாதங்கள் கடந்து ஐந்தாவது மாதம்  இடையில்  வேலையின் போது ஒரு வெயிட்டான  பொருளை தூக்கிய போது தலை காட்டாமல் இருந்த வயிற்றுவலி திரும்பவும் வந்து விட்டது.

இந்தத்தடவை மருத்துவம் பார்க்க, வருமானம் இல்லை. வந்த வருமாணம் வீட்டின் சாப்பாட்டு செலவுக்கே போதவில்லை. அரசு மருத்துவமனையைில்
சிகிச்சை கிடைக்காதால்தான் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லவும் மனம் விருமபவில்லை.

  தன்னைப் போல் கல்யாணம்  ஆகாமல் தியாகியாக  பேரு பெற்ற இன்னொரு வயிற்று வலிக்காரர் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மனத்தக்காளி கீரையை தினசரி உணவுடன் சேர்த்து  ஒரு வேளை உணவை இரு வேளையாக பிரித்து சிறிது சிறிதாக உண்டுவந்தார். முன்பு போல் கடுமையான வேலைகள் எதுவும் செய்யாமல்  இருந்துவந்தார்.

காலையில் எழுந்தவுடன் தாகம் இல்லாத போதிலும் இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு, சிறிது துாரம் நடை பயிற்சி செய்துவிட்டு அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ,வாங்கி வந்த செய்தி தாள்களை   படித்து கொண்டு நாட்களை கடந்து கொண்டு இருந்தார்.

இவர் வீட்டுக்கு எதிர் வீட்டீல் வாடகைக்கு குடியிருக்கும் நான்கு குழந்தைக்கு தாயான பெண் ஒருத்தி, அவரின் வயிற்றுவலியை பற்றி விசாரிப்பதும் சில ஆலோசனைகளை சொல்வதுமாய்  இருந்து அவருக்கு அருகில் வந்து அமர்ந்து அவர் படித்து முடித்த செய்தி பேப்பர்களை படிப்பதுமாய் இருந்தாள். சில நேரங்களில் அவளின் கனவனும் வந்தமர்ந்து வயிற்றுவலியை விசாரிப்பதும் அதனைத் தொடர்ந்து செய்தி தாள்களை படிப்பதுமாய் இருந்தார்கள்

ஒருநாள். அவரிடம், உங்கள் வயிற்றுவலி தீராதற்கு காரணம் என்ன வென்று தெரியுமா? என்று கேட்டாள் அவள்.

அவரும் எனக்கு  வயதாகிவிட்டது என்றும் சிறு வயதில் சரியான நேரத்திற்கு உணவு கிடைக்காமல்  கடுமையாக வேலை செய்தும் வங்கொலையா பட்னியாக கிடந்ததாலும் வயிற்று சுறுக்கத்தால் உணவு கிடைத்தும் சாப்பிட முடியாத காரணத்தையும் சொன்னார்.

இதெல்லாம் காரணமாக இருந்தாலும்  வேறு ஒரு காரணத்தால்தான் உங்களுக்கு வயிற்றுவலி வருகிற்து.  வந்தாலுமம்  தீர மாட்டுகிறது என்றாள்.

என் சிறு வயதிலிருந்தே என்னிடம் எந்தப் பழக்கமும் இல்லையே. பட்னியாய் இருந்ததைத்தவிர என்றார். வேறு என்ன காரணமாக இருக்கும் நீயே சொல்லு என்றார்.

உங்களை என் சிறு வயதிலிருந்தே எனக்கு தெரியும். உங்களிடம் எந்த பழக்கமும் இல்லையென்று... இந்த வயிற்றுவலிக்கு காரணம் நீங்கள் கல்யாணம் முடிக்காமல் இருந்ததுதான் காரணம் என்றாள்.

அப்படியா!! நான் கல்யாணம் முடிப்பதற்கு என் குடும்ப நிலை  இன்றைக்கு இருப்பது மாதிரி அன்றைக்கு இல்லையே என்றார். தொடர்ந்து அவரே பேசினார்.

“ கலியாணத்துக்கும் வயிற்றுவலிக்கும் என்ன சம்பந்தம் ”

நீங்கள் கல்யாணம் முடிக்காமல் இருப்பதினால்தான் உங்களுக்கு வயிற்றுவலி  வருகிறது. என்றாள்.  அவள் சொல்வதில் விபரம் ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அவளே, கல்யாணம் முடிக்கலேன்னாலும் யாரிடமாவது போயி சூட்டை தனித்திருக்கனும் என்றாள்.

அதெல்லாம் தப்பாச்சே என்று அவர் சொல்லிகிட்டு இருந்தபோது

அவள் கனவன் வந்து அமர்ந்து. ”ஏண்ணே, நீங்க கல்யாணம் முடிக்கல” என்று கேட்டான்.

இவர், அதுவா, அது பெரிய கதை என்றார்.என்னைப் பார். நான் அழகா இருக்கேனா.. என்று  கேட்டார்.

”அழகாய்த்தான் இருக்கீங்க ” ஏன் ?கேட்டிங்க   என்று அவன் கேட்டபோது.

இந்த அழகன் ஒரு ஒலக அலகியை  காதலித்தான்.. அந்த ஒலக அழகியை வேறு ஒருத்தன் கட்டிக்கிட்டான். அதிலிருந்து இந்த அழகன் அவள் நிணைவாகவே இருந்ததால் கல்யாணம் முடிக்காமல் மறந்து போய்விட்டான் என்றார் அவர்.

 அவன்.“நிஜமாகவா ணே என்று கேட்டபடி, அவன் மனைவியைப் பார்த்தான் .

அட, நிஜமாத்தான்யா....பொய்யா சொல்லப்போறேன் என்றார் அவர்

அவனின் மனைவி, சிரித்துக் கொண்டே, பொய் சொல்றார். காதல் கீதல் எதுவும்  கிடையாது , அதப்பத்தி அவருக்கு  தெரியாது ..  வேலை வேனை்னு அலைஞ்சகிட்டு இருப்பாரு. இவர் காதல் பன்னியிருந்தா எங்களுக்கு தெரியாம இருக்குமா?? என்றாள்.அவள்.


அவன் மனைவி சொன்னதை கேட்டுவிட்டு, திரும்பவும்  அவன் அவரிடம் கேட்டான்.

.மாமா மகள்கள், அத்தை மகள்கள் யாரும் இல்லையாணே என்றான்.

மாமா மகள்கள் எனக்கு மூத்தவர்களாக இருந்தார்கள். அத்தை மகள்களும் எனக்கு மூத்தவர்களாக இருந்தார்கள். அவர்களை என் தந்தையின் தம்பிகள் அவர்களை கட்டிக்கிட்டார்கள் என்றார்.

அண்ணே , ரெம்ப கொடுமை ண்ணே என்றபடி, வேலைக்கு செல்வதாக ,சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான். அவன் பின்னே சென்ற அவள்  திரும்பி வந்து சாப்பிட்டாச்சா என்று அவரிடம் கேட்டாள்.

உங்ககிட்டதானே இந்நேரம் வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள சாப்பிட்டாச்சா என்று  கேட்டா என்ன அர்த்தம் என்று கேட்டார்.

ஆமாமா... பழக்கத்திலே கேட்டுட்டேன். என்றாள். நீ வேலைக்கு போகவில்லையா என்று அவர் கேட்டபோது, வேலை இல்லை என்றும் இவர் வேலைக்கு போகக்கூடாது என்கிறார் என்றாள்.

காலை உணவு ரெடி என்ற தகவல் வந்ததும். அவளிடம் சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்குள்ளேயே அமர்ந்துவிட்டார். மாலையில் பழைய இடத்தில் வந்து அமர்ந்தார். பள்ளிகூடம் சென்ற பிள்ளைகள் , இவர் வீட்டின் பின்புறமாகத்தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.. இவர் அமர்ந்திருந்தபடியே அவர்களைப பார்ப்பதும், அவளின் மகன் இவரிடம் வந்து அமர்ந்து விளையாடுவதும் இருந்தான்.

அவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் அவள் வந்தாள். கை செய்கையால் வயிற்றுவலியை பற்றிக் கேட்டாள் இவருக்கு எரிச்சலாக இருந்தாலும் இலேசாக வலித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.

உங்க வயிற்று வலி தீர, ஒரு வழியிருக்கு, ஆனா அதுக்கு காசு செலவழிக்கனும் என்றாள்.

எல்லா வைத்தியமும் பார்த்தாகிவிட்டது. இதற்கு ஒரே மருந்து. நேரம் தவறாமல் ஒரப்பு, புளிப்பு இல்லாமல்  சாப்பிடுவதும், வெயிட் துாக்காமல் இருப்பதும் கவலைப்படாமல் இருந்தால் வயிற்றுவலி  குணமாகும் என்றார்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் நான் சொல்வதும் நடந்தால்தான் வயிற்றவலி தீரும் என்றாள்.

நீ சொல்ற வழி! என்னவழி ! என்றார். ஒங்களுக்கு விளக்கமா சொல்லனும் போல... என்றாள்.  புரியாமத்தான் கேட்கிறேன்   சொல்லு என்றார்.

சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு ,மெதுவாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் வாய் பொளந்தார் அவர். அப்படியா..! யார் கிடைப்பா...... அப்படியே கிடைத்தாலும் காசும் இடமும்  வேண்டுமே இந்த வழியெல்லாம் எனக்கு ஆகாதும்மா. வேறு வழி இருந்தா சொல்லு என்றார்.

இவர்கள் குசு குசு  வென்று பேசிக் கொண்டு இருப்பதைப்பார்த்து அவளின் அக்கா , அருகில் வந்து  “என்ன பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்” என்று கேட்டாள்.

 சும்மா பேசிக் கொண்டு இருப்பதாகவும் செல்போனில்  அவளுடைய மகன் படத்தை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும்  தெரிவித்தாள்.  வேறு ஒரு பெண் அவளை கூப்பிட்டதும்அவளின் அக்கா சென்றுவிட்டாள்.

“என்ன நான் சொன்னது புரிஞ்சுச்சா” என்றாள்.

அவர் தலையாட்டிக்கொண்டு, ”ஆசையிருக்கு தாசில் பண்ண, ஆனா அதிர்ஷ்டம் இல்லையே” என்ன செய்ய என்று அவர் சொன்னபோது புரியாமல் அவள் விழித்தாள்.

காசு பணத்துக்கு எங்கே போவேன் என்று அவர் சொன்னபோது,. ஆஸ்பத்திரிக்கு மட்டும் பத்தாயிரம் இருபதாயிரம்ன்னு செலவழிக்கிறீங்க நிரந்தரமாக வயித்துவலி தீக்கிறதுக்கு ஆயிர ரூபா செலவழிக்க  காசு இல்லியாக்கும்   என்று அவள் சொன்னபோது

ஊசலாடியபடி இருந்தவர் சபலத்துக்கும் வயித்துவலி தீர்ந்துவிட்டால் நல்லது அல்லவா?  என்றும் ஆசைப்பட்டார்.

சரி, அந்த ஆஸ்பத்திரிக்கு செலவழித்தது மாதிரி, இந்த ஆஸ்பத்தரிக்கும் கொடுத்திடலாம். இடத்துக்கு எங்கே போவது என்றபோது......

இடத்துக்கு ஒன்றும் கவலையில்லை. மோதல்ல காச கொடு, மற்றது நானாச்சு என்றாள்.

இப்பவரைக்கும் “ங்“ என்று மரியாதையாக பேசியவள். தான் சரி, என்றதும் ஒருமையில் பேசுகிறாளே என்று ஒரு கணம்  நிணைத்தார்.

சரி,ரெண்டு நாள் பொறு நீ கேட்ட பணத்தை ரெடி பண்ணி  வந்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு ரெண்டு மூனு நாள, அவள் சொன்னதின் ஞாபகத்திலே பித்து பிடித்து போய் இருந்தார்.   அதிலிருந்து அவருடைய வேலை ஒழுங்கு முறை அடியோடு குலைந்தது.  சபலத்துக்கு ஆட்பட்ட நாயாய் போனார்.

அவளை பார்க்கும் போதெல்லாம் இவருடைய பார்வையும் மாறியது.. அவளும் இவருக்கு போதை ஏற்றினாள். அவள் அவளுடைய வீட்டீற்குள் இருக்கும்போது இவர் பார்த்தால் மாராப்பு இல்லாமல் இருப்பதும்  உள்ளாடையுடன்  இவருக்கு கா்ட்சி அளிப்பதுமாய் இருந்தாள்.

“கானாதவன் கண்டவன் மாதிரி” என்ற பழமொழி இவரப் பார்த்துதான் சொன்னார்களோ...... என்னவோ,  காணாததை கண்டு ரெம்பவுமே பித்து பிடித்து போய்விட்டார்.

தன்னுடைய வயிற்றுவலி தீர வேண்டும் என்ற தீவிர ஆசையில் முன்பின் விளைவுகள் எதுவும் தோன்றவில்லை, குடிக்காத மயக்கத்தில் இருந்தார்.

ஒரு வழியாக  , அவளின் நச்சரிப்பு தாள முடியாமல்    கடன் வாங்கி ஆயிரம் ரூபாயை கொண்டு வந்து அவளிடம் கொடுத்து , எப்போது வச்சுக்கிறலாம் என்றார்.

பொறுமையா....இரு. நான் சொல்றேன். என் வீட்டிலேயே வச்சுக்கிறலாம் . யாருக்கும் தெரிந்திடக்கூடாது. யாரும் இல்லாத போது  சொல்றேன் அப்போது வச்சுக்கிறலாம் என்றாள். அவர் கொடுத்த பணத்தை மராப்பை விளக்கி தன் அங்கங்களை அவர் பார்க்கும்படி, இடது பக்க ஜாக்கெட்டுக்குள் வைத்தாள் .

சபலத்துக்கு ஆட்பட்டு மயக்கத்தில் இருந்தவருக்கு  அதைக் நேரில் கண்டதும் மெய்சிலிர்த்துப்போனார்.

மறநாள் காலையில் அவளை பார்த்தபோது அவளைக் காணவில்லை. அவள் வீடு பூட்டியிருந்தது. மாலையில் பார்த்தபோது  வீடு பூட்டியிருந்தது. மறுநாள் காலையிலும் பார்த்தபோதும் வீடு பூட்டியிருந்தது. அவளின் அக்காவிடம் கேட்டபோது . விசேசத்திற்க்காக ஊருக்கு சென்று இருக்கிறாள். வருவதற்கு ஒருவாரம் ஆகும் என்று சொன்னாள் அவள்.

சபல மயக்கத்தில் இருந்தவருக்கு லேசாக பொறி தட்டியது. அவள் ஊருக்கு போக காசு வேண்டிதான் அவள் தன்னை சபலத்துக்கு ஆட்படுத்தி விட்டாளோ என்று தோன்றியது. வந்த பொறியும்  காணாததை காணப்போகும் சபலத்தால் அந்தப் பொறியும்  வந்த வேகத்திலே மறைந்து போயிற்று.

ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவள் வீடு பூட்டியே கிடந்தது.என்னவென்று தெரிந்து கொள்வதற்க்காக  அடுத்த வீட்டாரிடம் கேட்டபோது.

அவளின் அக்காவுக்கும், அவள்  வாடகைக்கு குடியிருந்த   வீட்டுக்காரியின் மகனுக்கும் அடிதடி சண்டையானதால் அவளை உடனே வீட்டைக் காலி செய்யச் சொல்லி அவள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்துவிட்டார்கள்.

ஊருக்கு போனவள் திரும்பி வந்தபோது இரவோடு இரவாக வீட்டைக் காலி செய்து  அய்ந்தாறு தெரு தள்ளி  மாடியில் உள்ள வீட்டுக்கு குடி போய்விட்டாள்  என்று தெரிந்தது. குறிப்பாக எந்த வீடு என்று தெரியவில்லை அவருக்கு.......

ஒரு மாதம் கழித்து யாரிடமும் விசாரிக்காமல் , புதிதாக குடியிருந்த அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டார். வீட்டிற்கு சென்றபோது அவளின் கனவன் இருந்தான். இவரைக் கண்டதும்

வாங்கண்ணே ! வாங்கண்ணே!என்று வரவேற்றான். வீடு காலி பண்ணின விபரத்தை சொன்னான். அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , அவன் மனைவியை கானாததால் அவளைக கேட்டார். அவள் அம்மா வீட்டீற்கு சென்றதாக சொன்னான். நான் வந்து போனதாக சொல் என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து  காலை  பதினோறு மணி வாக்கில் அவரது செல்லுக்கு  ஒரு போன் கால்வந்தது. அவள்தான் பேசினாள்.

நான்தான் பேசுகிறேன் என் வீட்டுக்கு வரவும் என்று சொன்னாள். ஆவல் மேலோங்க அவர் சென்றார். குளித்து முடித்து அழகாக கா்ட்சி அளித்தாள். அந்தக் அழகைக்கண்டவுடன் இந்த அழகில்லாதவனுக்கு இந்த அழகியா.... நமக்கும் அதிர்ஷ்டம இருக்கிறது என்று சந்தோசம் கொண்டார்.

அவளிடம்  ஆசையாய் நெருங்கியபோது, வேண்டாம் பக்கத்து வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். அதுவும் இப்பொழுதுதான் குளித்தேன். இரவு பத்து மணிக்கு வா..!!  என்றாள். அவள் கனவனை பற்றி கேட்டபோது வெளியூர் வேலைக்கு சென்று விட்டதால் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்றாள். அவருக்கு ரெம்பவும் சந்தோசமாக இருந்தது.

அப்படிச்சொல்லிக் கொண்டே உரிமையுடன் அவரின்  சட்டைப்பையில் கையைவிட்டு  அதில் இருந்த இறு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு  பத்து மணி ! மறந்து விடாதே! என்றாள்.

சே... ஏமாத்திட்டா.. ன்னு...சந்தேகப்பட்டமே என்று தனக்கத்தானே சொல்லிக் கொண்டு , இரவு பத்து மணியை  எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்

இரவு  ஒன்பது  ஆயிற்று ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் . அவள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையின் அருகில் நின்று கொண்டு பத்து மணிக்காக காத்துக் கொண்டு இருந்தார்.

அவளின் வீட்டை பார்த்துக் கொண்டு இருந்தவர்க்கு, கொஞ்சம் திகைப்பாக இருந்தது. அவளும், வேறு ஒருவரும் இவர் நின்று கொண்டு இருந்த கடைக்கு வந்து கொண்டு இருந்தார்கள். இவர் அவர்கள் வருவதைக் கண்டதும் கடையைக் கடந்து  இருட்டான பகுதியில் நின்று கொண்டு அவர்களை கவனித்தார்.

அவருடைய செல் ஒலித்தது. அவள்தான் பேசினாள்.. அந்தக் கடையிலுள்ள ஒரு ரூபா காயன்ஸில்  அவள் பேசுவதை கவனித்தார். இன்னைக்கு வர வேண்டாம், என் வீட்டுக்காரரின் தங்கச்சி  வந்திருக்காங்க... அதனால நீ வர வேண்டாம் என்றாள்.

இவர் நிஜமாகவா,... பொய் சொல்லலியே என்றார்

சே...சே.....ஓங்கிட்ட பொய் சொல்வேனா..... காலையில நான் போன் பன்னுறேன் அப்ப வா........ என்றாள். தப்பித்தவறி வந்திடாத... பிரச்சினையாகிவிடும்  எச்சரிக்கை செய்து  விட்டு போனை வைத்தாள்..பின் அருகில் நின்ற நபரை கூட்டிகிட்டு தன் வீட்டிற்க்குள். சென்றாள்.

இவருக்கு ஏமாற்றமும் கோபமும் வந்தது.  அந்தக் கடையின் வழியே வந்து சிறிது நேரம் நின்று விட்டு, சோகத்துடன்  தன் வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்து.............

வியாழன் 12 2014

வருங்கால பொறியாளர்களை கொன்ற நிகழ்கால பொறியாளர்கள்.

படம்bharathithambi.com.














ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார்  பொறியியல் கல்லூரியில் இரண்டாம ஆண்டு படித்துக் கொண்டு இருந்த வருங்கால பொறியாளர்கள்.

செமஸ்டர் தேர்வு முடிந்த பின், கல்விச்சுற்றுலா வுக்கு இமாச்சல பிரதேசத்துக்கு சென்றவர்களில் 24  வருங்கால பொறியாளர்கள் பிரேதமானார்கள்.

 இமாச்சலத்தில் உள்ள சூலு-மணாலிக்கு சென்ற வருங்கால பொறியாளர்கள் மாண்டியில் உள்ள பிரபல பியஸ் ஆற்றங்கரையில் ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டு இருந்தனர்.

திடிரென்று பியஸ் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வந்தது. ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்த வர்களில் ஆறு பெண்கள் உள்பட  24 வருங்கால பொறியாளர்களை , ஆற்றின் வெள்ளம் இழுத்துச் சென்று காவு வாங்கியது.

பியஸ் அணை ஆற்றிலிருந்து மின்சாரம் பயன்படுத்திய தண்ணீரை எந்தவித முன்னறிவிப்பு எதுவுமின்றி   பணியில் இருந்த நிகழ்கால பொறியாளர்கள் திறந்து விட்டதால்  வருங்கால பொறியாளர்கள் பலியானார்கள்.

இதனால் வருங்கால பொறியாளர்களை கொன்ற துக்கு பரிகாரமாகநிகழ்காலபொறியாளர்களில் ஒருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்டால். பாவம் ஒழிந்து திரும்பவும் பாவங்கள் செய்தாலும்  தீமைகள் அண்டதாம்.............பாவத்தை போக்கும் அத்தாரிட்டிக்காரர்கள் சொன்னது.

இந்த வழியிலும் வசூலை அள்ளிக் குவிக்கலாம்.




கோச்சடையான் படத்தை அதிக திரையரங்குகளில் ஓரே சமயத்தில் திரையிட்டு, ரசிகமாமணிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி
விட்டு, அந்த ரசிக கண்மணிகள் கண்களை கசக்கி முழிப்பதற்கள் வசூலை வாரி வளச்சு அள்ளுவது இன்றைய மார்க்கெட் முறை.

இந்த மார்க்கெட் முறையை ஒதுக்கி வைத்துவிட்டு,  ஆந்திராவின் வாரிசு நடிகர் ஒருவர். இதற்கு எதிரான் மார்க்கெட் முறையை பின்பற்றி வசூலை குவித்துவிட்டார்.

அப்பன்.மகன்.பேரன் மூவரும் சேர்ந்து நடித்த குடும்ப படத்தை அந்த நடிகர்  வேண்டுமென்றே குறைந்த திரையரங்குகளில் திரையிட்டார். இந்தப் படத்துத்துக்கு ஆந்திரா முழுவதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் அந்த நடிகர்  எதற்கும் அசைந்து கொடுக்காமல் பொறுமை காத்தார்.

அந்த பொறுமைக்கு பிறகு, படம் ஒளியைவிட வேகமாக ஹிட்டாகியது.
 பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்வது மாதிரி, தியேட்டர் அதிபர்கள்  அந்த நடிகரை மொய்த்தார்கள், அய்யா.சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் படத்தை வாங்கி வெளியிட்டார்கள்.

படமும் வெற்றி பெற்று வசூலை குவித்து கொண்டு இருக்கிறது.

ஐந்து மாதங்களில் 130 படங்கள் தமிழிலில் வெளியான எந்தப் படமும் குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையும் அடையவில்லை.  அதனால் கணவு தொழிற்சாலை  முதலாளிகள், எப்படி ரசிக மாமணிகள் மீது மிளகாய் பொடியை துாவி வசூலை அள்ளி குவிக்கலாம் என்று  அடுத்த ரவுண்டில் யோசிப்பார்கள் 

புதன் 11 2014

மனிதர்களில்அநேகம் பேர்களை உபயோக மற்றவர்களாக்குவது எது???

www.venkkayam.com
















சில மனிதர்களின் லாபத்திற்க்காக
முழுச் சமுதாயத்தின் வாழ்ககை
நிலைகளை துன்பம் நிறைந்த தாக்கிறது
அதுதான் தனி உடமை என்ற முதலாளிக் கொள்கை.

சில மனிதர்களின் தன்னலத்தை
நிறைவேற்றாமல் முழுச் சமுதாயத்தின்
சுக வாழ்க்கையை அதிகப்படுத்துகிறது
அதுதான் பொது உடமை என்ற உழைப்பாளி கொள்கை

முதலாளிக் கொள்கையின் உயிர்நாடி லாபம்
அதுதான் அநேகம் பேர்களை உபயோகமற்றவர்களாக்கிறது


செவ்வாய் 10 2014

வைரங்களுக்கு அதிக விலை மதிப்பு ஏற்ப்படுவது ஏன்?

கோஹினூர் வைரம்

















ஏன் என்றால். பூமியைத் தோண்டுவது மிகக் கடினமான வேலை. சுரங்கத்தில் பல நாள் தோண்டி உழைத்தபின்.

ஒருநாள் ஒரு வைரம் கிடைக்கிறது. அதாவது பலநாள் உழைப்பு..அந்த ஒருநாள் பலனில் அடங்கி இருக்கிறது.

ஆகையால். அந்த வைரத்தின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது.

அரைநாள் உழைப்பில் “ கோஹினூர்” வைரம் கிடைத்து விடுமானால் அதன் விலை மதிப்பு அதிகமாய் இருக்காது.

 அதாவது உழைப்பை வைத்து  வைரங்களின் விலை மதிப்பு அதிகமாயிருக்கிறது


திங்கள் 09 2014

குண்டாந்தடி போலீசை எலக்ட்ரிக் சாக் போலீசாக காட்ட வரும் படம்

devendrarkural.blogspot.com












தமிழில் வரும்  படங்கள் எல்லாமே. குண்டாந்தடி போலீசை. மக்களை மதிக்கும்  போலீசாகவே காட்டுகிறார்கள். அதில் கதாநாயகன் அப்பு அழுக்கு அற்றவராகவும், அநி யாயத்தை எதிர்த்து  சட்டத்தையே மக்களுக்காக வளைப்பவராகவுமே நடித்துள்ளனர்.

இந்தவரிசையில் இன்னுமொரு காதுல பூ சுத்துற படமாக வருவதுதான் “ அவரு வழி தனி வழி”

இந்தப் படத்தில் இந்தியன் பொலீஸ் அதாவது தமிழன் போலீஸ், மக்கள் அல்லது  கட்சிகளின் ஆர்ப்பாட்டம் ,மறியல், ஊர்வலம் போ ன்ற போராட்டங்களில் போலீசு சொல்வதை கேட்காதவர்களை, அவர்களுக்கு பணியாதவர்களை தமிழனின் இண்டர்போல் போலீசு..லத்திசார்ஜ்சில் முதலில் குண்டாந்தடியால் அடிக்கும் பின் சரளைகற்களை குவித்துக் கொண்டு , போராட்டகாரர்கள் மீது குறி பார்த்து எறியும். அதன்பின்  கண்ணீர்புகை குண்டு வீசும்  இடையிலோ, முடிவிலோ துப்பாக்கி சூடு
நடத்தி போராட்டத்தை ஒடுக்கும்.

இந்த போலீசின் இந்த போராட்டத்தில்  அதாவது துப்பாக்கி சூட்டில் செத்தவர்களை நாய்மாதிரி தூக்கி  வந்து  வண்டியிலே போடும் இதை வசதியாக திரைக்கதையில் மறைத்துவிட்டு, இதில் குண்டாந்தடி போலிசு மக்கள்  நடத்தும் போராட்டங்களில்  போது படும்பாட்டை “என்வழி தனிவழியில்”  படம் பிடித்து காட்டுகிறார்களாம்.

அதற்க்காக குண்டாந்தடி போலீஸ் படும்பாட்டை போக்குவதற்க்காக மேலை நாடுகளில் உள்ள   போலீசு இத்தகைய போராட்டங்களின்போது எலக்டரிக்கன் என்பதை பயன்படுத்தி. பேராட்டக்காரர்கள் மேல் எலகட்ரிக்சாக் வைத்து அவர்களை சுய நிணைவை இழக்க வைத்து, அப்படி

சுய நிணைவை இழந்தவர்களைஅலுங்காமல் குலுங்காமல்  மேற்க்கண்ட குண்டாந்தடி அடி, சரளை கற்களை குவிக்காமல் எறியாமல், துப்பாக்கி தூக்காமல் துப்பாக்கி குண்டு வீணாகாமல், எந்த வித கஷ்டமில்லாமல் போரட்டக்காரர்களை கைது பண்ணி  சிறைக்கு கொண்டு செல்ல பயன்படுவதே எலக்ட்ரிக்கன் என்ற எலக்ட்ரிக்சாக் என்பது..

இது இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளிலும் இருப்பதாகவும். அதை இந்தியாவுக்கும் தமிழன் போலீசுக்கும் கொண்டு வந்து தமிழன் போலீசின் சிரமத்தை குறைக்க வேண்டும் என்ற மெஜெசை சொல்லி  போலீசு மேலே ஒரு மரியாததையை ஏற்ப்படுத்துறாங்களாம்.

இதுதான் ”என்வழி தனிவழி”  படத்தின் திரைக்கதையாம்.




ஞாயிறு 08 2014

தந்தைக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த மகன்....


படம்ohoproduction.blogspot.com











ஒரு ஊரில் ஒரு அப்பன் ஒருவன் இருந்தான். அந்த அப்பனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.

அந்த அப்பன் ஒரு நாள் சாகும் தருவாயில் இருந்தபோது. தன் மகனை அழைத்து  சொன்னான்.

மகனே நீதான் எனக்கு உண்மையான மகன். நான் சேர்த்த வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தும் உனக்குத்தான். நீ கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்  மற்றவர்களிடம் ஈவு,இரக்கம் பார்க்காமல் இந்த சொத்துக்களை சம்பாதித்தேன.

இதனால் எனக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. பொறுக்கி, கொள்ளக்காரன், கொலகாரன் என்று பெயர்களை பெற்றேன்.

இந்தப் பெயர்கள் அப்போது எனக்கு பெருமையாக இருந்தாலும் போய் சேர வேண்டிய நாளில் இந்தப் பெயர்களால் எனக்கு மன நிம்மதி இல்லை.

அதனால் என் மகனான நீ. என் மனக்குறையை போக்கும் விதமாக இந்த சொத்துக்களை  பயன்படுத்தி என்க்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் விதமாக பயன்படுத்தி என் மனக்குறையை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

 கண்களில் நீர் வழிய ,சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பன் சாகப்போகும் நிலையை கண்டு அமைதியாக இருந்த மகன். தந்தையின் கரத்தை பிடித்து

தந்தையே.. தங்களின் மனக்குறையை போக்கி உங்களுக்கு நற்பெயரை வாங்கித் தருவதே..உங்கள் மகனின் லட்சியம். உங்களுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கி நற்பெயரை நிலைநாட்டுவதே என் கடமை என்றான்.

 மகனின் நம்பிக்கையான வீர வசனத்தால் சந்தோஷம் அடைந்த தந்தை மனம் நிம்மதி அடைந்தவனாக போய்ச்சேர்ந்தான்.

தந்தையை புதை்த மண்ணின் ஈரம் காய்வதற்குள் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற  எந்தெந்த வழிகளை கையாலாம் என்று தன் நலம் விரும்பி மற்றும் அடியாட்களுடன் வினவினான.

தங்களின் தந்தையின் ஒவ்வொரு பிறந்த நாள் மற்றும் நிணைவு நாட்களில் இந்த ஊரு மக்களுக்கு தான தருமங்கள் செய்து அன்னதானமிடலாம் என்று ஒருவன் முன்மொழிந்தான்.

இது சரிப்படாது. இந்த ஊரு மக்கள்  இன்னிக்கி நம்மகிட்ட வாங்கித் தின்னுபட்டு, நாளைக்கு வேறு ஒருத்தன் நம்மளைவிட அதிகமாக கொடுத்தால் அவன் பக்கம் சாய்ந்து விடுவார்கள். என்றும் பிறந்த நாளும் இறந்த நாளும் அருகருகே இருப்பதால். இலவசத்தை வாங்கிக்கொண்டு மறந்து விடுவார்கள் என்றான்  வேறு ஒருவன்.

உடனடியாகவும் செய்தாகவேண்டும் தந்தையின் நற்பெயரும் நீண்ட நாள்  நிநிலைக்க வேண்டும் அதற்கு வழி என்னவென்று மகனும் யோசனையில் ஆழ்ந்தான்.

அப்போது, தந்தை செய்த  அநியாயத்தை விட மகன்  செய்யும் அதிகமான அநியாயம்தான் தந்தையின் அநியாயம் மறைந்து தந்தைக்கு பேறும் புகழும் நிலைக்கும். அதனால் தந்தையைவிட மகன் பஞ்சாமா பாதங்களை செய்தால் மக்கள் மகனை தூற்றி தந்தையை போற்றுவார்கள் என்று சொன்னான் அடி ஆட்களின் ஒருவன்.

மகனுக்கு அதுவே  சரியாக தென்பட்டது. தன் பெயரைவிட தன் தந்தையின் பெயரே நிலைக்க விரும்பினான.உடனே அந்தச் செயலை செயல் படுத்தினான்.

அந்த ஊரிலுள்ள பெண்களின் தாலியில் இருந்த தங்கத்தையும் தங்கச் செயினையும் பறித்தான். தந்தைக்கு எதிராக இருந்தவர்களை அடித்து விரட்டினான். தன்னை எதிர்த்தவர்களின் வீட்டுப் பெண்களை மானபங்கம் செய்தான். இவனுடைய அக்கிரமங்களை கண்டு கொதித்து எழவில்லை எல்லோரும்  ஊருக்கு வந்தது நமக்கும் வந்தது என்று  இப்படி புலம்பினார்கள்

எப்பா சாமி தந்தையைவிட மகன் படு கொடுமைக்காரனாக இருக்கானே.. இவன் தந்தையே பராவாயில்லையே என்று  நிணைக்க வைத்தான் நாளடைவில். இவனின் தந்தை நல்லவனாப்பா, நேர்மையான ஆளப்பா! என்றும் சொல்ல வைத்தான்.

இப்படியாக இந்த மகன் தன்னுடைய பராமக்கிரக செயல்களால் தன் தந்தையின் கெட்டப் பெயரை போக்கி நற்பெயரை ஏற்ப்படுத்தினான். தன் தந்தைக்கு கொடுத்த வாக்கையும் தன் லட்சியத்தையும் நிறைவேற்றிய மகனாக வலம் வந்தான்.
.


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...