பக்கங்கள்

வியாழன் 05 2021

சொகுசாய் வாழும் சாமியார்கள்...



 சொகுசாய் வாழும்

சாமியார்கள் தான்

எளிமையாய் வாழ

ஏழைக்கு உபதேசம்
செய்கிறார்கள்!! பக்கா
ஏமாற்றுக்காரர்கள்
இந்த சாமியார்கள்

கடவுள் எதையும் 
செய்ய வாய்ப்பில்லை 
என்று அந்த அர்ச்சகர், 
பூசாரிகளுக்கு தெரியும், 
அப்பாவி பக்தர்களும் 
அது தெரியாமல் 
மேற்படி தரகர்களுக்கு 
காணிக்கை, தட்சணை 
செலுத்தி கடவுள்
 தங்கள் கோரிக்கையை 
நிறைவேற்றுவார் என்கிற 
ஒரே நேர்க்கோடு 
பலரின் உண்டியல் 
நிறைய காரணமாகிறது.

செவ்வாய் 03 2021

நீதிபதி குமாரசாமியை நினைக்க வைத்த குறும்படம்..

4x3=8  என்று  ரெண்டு இட்லி  தின்று  மர்மமான  முறையில் செத்துப்போன இரும்பு பெண்ணின் ஊழல் வழக்கில் நாலு மூனு எட்டு என்று தீர்ப்பு சொன்ன பெங்களுரு நீதிபதிதான் இந்த குறும்படத்தை பார்த்தபோது முதலில் எந்தவித சிரமம் இல்லாமல் நினைவுக்கு  வந்தது.

முழுவதையும் பார்த்த பின்புதான்

 ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்  ?

ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்?

கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன?

 அரசு என்றால்  என்ன?

பாசிசம் என்றால் என்ன?

ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்?

உண்மைகளை பேசும் வழிமுறைகள் என்ன?

இன்னும் இவை போன்ற பல கேள்விகளுக்கு (எனக்கு) மிக எளிமையாக ஆறே நிமிடத்தில் புரிய வைத்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில்



 

நன்றி!       செங்கொடி


திங்கள் 02 2021

நாமும் நம்புவோமாக!

 

ரொமிலா தாபர், அருந்ததி ராய், அருணா ராய் உள்ளிட்ட 500 அறிஞர்களும் எழுத்தாளர்களும், இதழியலாளர்களும், செயற் பாட்டாளர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி என். வி. இரமணா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் :
1.எந்தவொரு இந்திய நிறுவனமாவது பெகாசஸை விலைக்கு வாங்கியுள்ளதா? அப்படி என்றால் அந்த நிறுவனம் எது? அதற்காக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது? (ஒரு கைபேசியை ஒட்டுக் கேட்க ஆகும் செலவு 1.5 கோடி எனச் சொல்லப்படும் நிலையில் இது முதன்மை பெறுகிறது.)
2. அப்படி வாங்கப்பட்டது உண்மை என்றால், ஒட்டுக் கேட்கப்படுபவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்? அவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன?
3. இவ்வாறு ஒட்டுக் கேட்பதை ஏற்றுக் கொள்வதற்கான நியாயப் படுத்தல்கள் தாம் என்ன? இவ்வாறு பெறப்பட்ட விவரங்கள் எந்த அரசமைப்பு அதிகார அமைப்பிடம் வழங்கப்பட்டது?
4. இதழியலாளர்கள், அரசியல் வாதி கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், வழக்குரைஞர்கள், கல்விப் புலமையாளர்கள், (உச்ச நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்) உள்ளிட்ட பலருடைய குற்றச் செயல்பாடுகளை எந்த அரசமைப்பு அதிகார அமைப்புக் கண்காணித்தது, மதிப்பீடு செய்தது?அதன் விளைவாகத்தான் அவர்கள் ஒட்டுக் கேட்கப்பட்டார்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதற்கான வழிவகைகளை உச்ச நீதிமன்றம் செய்யும் என அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
அவர்களோடு இணைந்து நாமும் நம்புவோமாக!
- கலைவேலு பதிவு
நன்றி : ஜீவசுந்தரி

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...