பக்கங்கள்

வியாழன் 20 2014

ஒருசத்தியம் பொங்கச்சோறாச்சு..........

தமிழு அருவி மணியன் என்ற காங்கிரஸ்காரர்.. காங்கிரஸில் கோலோச்சியபோது கல்லா கட்ட வழியில்லாததால்.. நெடு......மாறன் மாதிரி  காங்கிரசில் இருந்து விலகி.......தமிழு.......தமிழன் என்று பழங்கதைகளுடன் பல புதுக்கதைகளை அருவியாய் அவிழ்த்துவிட்டு........ இந்திய கரன்சி நோட்டிலுள்ளவரின் பெயரில் காந்தீய மக்கள்  இயக்கத்தை தொடங்கினார்.

அன்று அந்த இயக்கத்தை தொடங்கியபோது  தமிழில் சொன்னார்.காந்தீய மக்கள் இயக்கம்   தேர்தலில் போட்டியிடாது, பதவி சுகத்தை அனுபவிக்க மாட்டேன் .என்று....சனங்கள் நம்புவதற்க்காக  சத்தியமும் செய்தார்.

 இன்று அந்த சத்தியம் பொங்கச்சோறு என்றாகிவிட்டது

காந்தீய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் கொள்ளை என்னவென்றால். தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்றுவது..ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கவது.

இதை செயல்படுத்துவதற்க்காக  2016ல் வரும் சட்டமன்ற தேர்தலில் குதிப்பது தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சிஅமைப்பது, கூட்டணி ஆட்சியில் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமுல் படுத்துவதற்க்கானதாக இருக்குமாம். இதற்க்காக 18 வகையான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.

அப்போ்.............

சத்தியம் என்னாச்சு..............தமிழுஅருவி மணியன்கிட்ட கேளுங்க.......அது    பொங்கச்சோறாச்சு.........என்ற விபரம் தெரிய வரும்..








புதன் 19 2014

ஏழு பேர் விடுதலை... பரிகாரமும் புன்னியமும்......

பக்தர்கள்  வல்லமை பொருந்தியதாக கருதும்  தெய்வத்திடம், தாமும் தன் குடும்பமும் நோய்நொடி இல்லாமல் எந்தவித கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்று வேண்டுவார்கள். வேண்டுதல் நிறைவேற இன்னது செய்வதாக நேர்ந்து கொள்வார்கள்.

பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றி விட்டால், தாங்கள் ஒப்புக் கொண்ட நேர்த்திக்கடனை மொடடை போடடோ,தீ மிதித்தோ, தேங்காய் உடைத்தோ, உண்டியலில் காணிக்கை செலுத்தியோ இப்படி தங்களின் பொருளாதார வசதிக்கேற்ப நிறை வேற்றுவார்கள்.

 இந்த வேண்டுதலிலே இன்னொரு முறை யும்உண்டு அது .கொலை , .கொள்ளை,ஊழல் அதிகார துஷ்பிரயோகம், பொய்யும் புரட்டுமாய் பேசுவது, நம்பியவர்களை ஏமாற்றுவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது  அடுத்தவன் சொத்தை அபகரிப்பது  -இப்படியான ஏகப்பட்ட காரியங்களை செய்தவர்கள் .தாங்கள் செய்த இந்த பாவங்களினால் உண்டாகும் தீமைகளிலிருந்து தம்மையும் தம் குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்வதற்க்காக பரிகாரம் செய்வது.......

இந்த பரிகார முறையானது. அன்னதானம் செய்வது, கோயில் கட்டுவது, தெய்வத்துக்கு தங்கம் வெண்கல மணி அணிவிப்பது.எடைக்கு எடை கொடுப்பது இப்படியான பல வழிமுறைகள்.

இத்தகைய பரிகாரத்தை செய்தால் செய்த தீமைகளின் கொடுமையிலிருந்து பாவங்களிலிருந்து தப்பித்து,  செய்த பாவங்கள் மறைந்து பேரும்புகழோடு புன்னியமும் கிட்டும். இது பெருவாரியான மக்களின் நம்பிக்கையாக செயல் பட்டு வரும் முறைகள்.

 இதே போலத்தான்  சமூகத்தில் உலாவி வரும் பெரிய மனிதர்களில் சிலர்.  புன்னியம் தேடிக் கொள்வதற்க்காக பரிகாரம் செய்கிறார்கள்.அந்த பரிகாரத்தில்  ஒன்று தான்  “மூவர் தூக்கு ரத்து” என்ற பரிகாரம்.

இந்த பரிகாரம் செய்து  பெற்ற புன்னியத்திலும் பங்கு கேட்டு.சிலர் இடைசொருகலாக சேர்கிறார்கள். சிலர் செய்த பாவத்தை போக்காமல்
மேலும் பாவங்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

சிலர்  செய்த பாவத்துக்கு பரிகாரத்தை நிறைவேற்றுவதாக
அறிவிக்கிறார்கள் அவர்களின் அறிவிப்பில்.தெய்வங்களைவிட பகதர்கள்தான் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து மகிழ்ச்சிக கடலில் மிதக்கிறார்கள்.

அந்த பக்தர்களின் மகிழ்ச்சிகள்  மூன்று நாட்கள் கழித்து “ஏழு பேர்கள் விடுதலை” என்ற உண்மையான பரிகாரத்தில்தான்  இருக்கும். அப்பொழுதுதான் பரிகாரம் செய்தவர்களுக்கு பேரும் புகழும் அடங்கிய புன்னியமும் கிடைக்கும். பக்தர்களின்  மகிழ்ச்சியும் நீடிக்கும்.


செவ்வாய் 18 2014

தேர்தல் ஆணையத்தை கலைக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!!!

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்குமாறு, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பெருங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர். தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக “தேர்தல் நீதிமன்றம” அமைக்க வேண்டும்

இந்த தேர்தல் நீதிமன்றத்தில் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளை தேர்தல் மன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்

வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது,வாக்காளர் பட்டியல் தயாரிப்பது புகாருக்கு ஆளாகும் எம்பி,எம்எல்ஏயை தகுதியிழப்பு செய்வதுடன் தேர்தலையும் “தேர்தல் நீதிமன்றம்”தான் நடத்த வேண்டும்.

இதற்க்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இடைத்தேர்தல் நடத்தாமல் அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரை அந்தத் தொகுதியில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துவது. எம்எல்ஏ கட்சித் தாவல் செய்தாலோ,ராஜினாமா செய்தாலோ,பொதுத்தேர்தல் வரு்ம்வரை
தொகுதி பிரதிநிதியாக மாவட்ட ஆட்சியரே செயல்பட வேண்டும்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும். சுயேச்சை எம்பி,எம்எல்ஏக்கள் அரசியல் கட்சியில் சேர அனுமதிக்ககூடாது. ராஜ்யசபா எம்பியை மெம்பர் ஆப் ராஜ்யசபா என்று அழைக்க வேண்டும்.

வோக்காளர் அடையாள அட்டையை குடும்பக் கார்டுடன் இணைக்க வேண்டும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறமோ அந்தச் சின்னம் தெரிய வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளை பதிவு செய்ய  குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்படியாக 16 ஆலோசனைகளை மத்திய மாநில அரசகளுக்கும், மத்திய-மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி உள்ளதாகவும், தான் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

 இவரின் மனுவை விசாரித்த தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் மத்திய-மாநில உள்துறை செயலர்களுக்கும் தேர்தல் ஆணையர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

தாக்கல் செய்த கிருஷ்ணன் மனுவானது  ஒலகத்திலே பெரிய்...........ய ஜனநாயக நாட்டிலே சாத்தியமான்னு....

நீதி அரசர்கள் இந்த நூற்றாண்டுக்குள் சட்டுபட்டுன்னு விசாரித்து சொல்வார்களா.?...அல்லது அரசின் கொள்ளை முடிவில் நாங்கள் தலையிட மாடடோம் என்று சொல்வார்களா.?......அல்லது கோடிக்கணக்கிலே வழக்குகள் தேங்கி கிடக்கயிலே........வேலைகெட்ட  வேலையிலே இது வேறையான்னு வழக்கே உகந்தது இல்லைன்னு தள்ளுபடி செய்வார்களா.?அல்லது மறு விசாரனை தேதி குறிப்பிடாமல் கிடப்பில் போட்டு விடுவார்களா?- ன்னு  மத்திய- மாநில உள்துறை செயலர்களும்,தேர்தல் ஆணையர்களும் எப்போ நோட்டீக்கு பதில்  அளிக்கிறார்களோ....அ துக்கு பின்னாடிதான் தெரியவரும்.

அதுவரைக்கும் அடுத்த வேலைக்கு ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.




திங்கள் 17 2014

சொன்னதும்.........சொல்லாததும்......


 சொன்னது-----உழைப்பின்றி உயர்பவர்கள் திருடர்கள்.
 சொல்லதது----அம்பானி,டாடா போன்றவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்,

சொன்னது--உன்து அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்.
சொல்லாதது--டாம்பீகத்தையும் செருக்கையும் விட்டுவிடக்கூடாது.

சொன்னது--மனோ தைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
 சொல்லாதது--பொய் சொல்வதையும் இல்லை என்று சாதிப்பதுமே வாய்மை

சொன்னது--உழைப்பு என்றும் வீண் போகாது.
சொல்லாதது--அதனால்.சாகும்வரை கூலி உயர்வு கேட்டு போராடக்கூடாது.

 சொன்னது--மனிதனின் ஆசை எப்போதும் குறைவதில்லை.
சொல்லாதது-- லாப வெறியுள்ள முதலாளிகளின் ஆசை எப்போதும் குறையாது

சொன்னது--நீயும் வாழு, பிறரையும் வாழ விடு
 சொல்லாதது--தொழிலாளிகள்  முதலாளிகளைப்போல் வாழ ஆசைபடக்கூடாது

கருத்தும்.... கேள்வியும்............

“பசித்திருப்பவனுக்கு உணவு கொடுத்தால் அவனுக்கு நீதான் கடவுள்.”

அப்போ........தங்கக்காப்பு கொடுத்தால்.....................

”பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை  தட்டிக் கொடுப்பதுதான்”

சொரிந்துவிட்டால்..என்னவாம்................


”உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வாரம் பத்து முறை மனைவியிடம் ஐ லவ் யூ சொல்லங்கள்”

அப்படிங்களா...... மனைவி இல்லாதவுக.......... .........


.

ஞாயிறு 16 2014

ஒலக நாட்டாமையின் ஓங்கார பேச்சு...............

வர்த்தக வாய்ப்புக்காக பிரான்ஸ் நாட்டைச் செர்ந்த பெரு நிறுவனங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள்,அடங்கிய சுமார் 100 பேர் கொண்ட குழு கடந்த வாரம் ஈரான் சென்றது.

இதனால் கோபம் கொண்ட ஒலக நாட்டாமை, அவர்களையும் மற்ற நாட்டினரையும் கண்டித்து....

தற்போதுள்ள பேச்சு வார்த்தையில் ஈரான் பின் வாங்கினாலோ,பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலோ, ஈரான் மீதான பொருளாதார தடை அதிகரிக்கப்படும். இதனால்........

ஈரான் மீதான பொருளாதார தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒலக நாட்டாமை.

கிராம நாட்டாமை கிராமத்தவர்களுக்கு உத்தரவு போட்டது மாதிரி, ஒலக நாட்டாமை ஒலக நாடுகளுக்கு எச்சரிக்கை விட்டிருக்கு..................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...