பக்கங்கள்

சனி 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-34


Related image




பல நேரங்களில்
பல .இடங்களில்
நடக்கும் காணும்
சம்பவங்கள் ஆத்திரத்தை
ஏற்ப்படுத்துகின்ற போது
 பொருள் இடம்
ஏவல்களை கண்டு
ஆத்திரத்தை அடக்கிட
முடிகிறது..ஆனால்...

சில நேரங்களில்
சில இடங்களில்
வரும் உடல்
இம்சையான சிறுநீர்
கழித்தலை இடம்
பொருள் ஏவல்
 கண்டு அடக்கு
அடக்கு என்று
மனது தூண்டினாலும்
அடக்க முடிவதில்லை...

ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க
முடியாது என்பது
 அவதிபட்ட பின்
தெரிந்த உண்மை


வெள்ளி 15 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-33

Image result for திக்


நண்பர் வந்தார்
வந்தவர் என்னை
கடிந்து கொண்டார்

அவர் என்னை
பார்க்க வரும்
போதெல்லாம் வேலை
செய்து கொண்டு
இருப்பதை கண்டு

அவர் அரசு
ஊழியர் ஓய்வு
பெற்று ஓய்வூதியம்
பெற்று வருகிறார்
அளவான குடும்பம்
தொல்லையில்லா வாழ்க்கை


அவரை சமாதானம்
படுத்த அவருடன்
கடை வீதிக்கு
சென்று ஒரு
கடையில் நின்று
கொண்டு இருந்தபோது...

ஒரு பெண்
எனைப் பார்த்து
“அண்ணே ஓம்
பையணுக்கு கல்யாணம்
வச்சிருக்கேன் செலவுக்கு
உதவு என்றாள்....

திக்  என்றெது
நண்பர்க்கு எனக்கோ
பகீர் என்றது..

நண்பரை நான்
பார்க்க நண்பர்
எனை பார்க்க..

சிலநேர அவகாசத்தில்
தேநீர் கடையிலிருந்து
எப்ப வச்சிருக்க
எவ்வளவு வேணும்
என்ற படி
ஒரு ஆண்குரல்...


நாங்களிருவரும் நாட்டு
நடப்புகள தெரிந்து
கொாண்டதால் சம
நிலைக்கு வந்தோம்....


அப்பா....அப்பப்பா.......
...........................


ஞாயிறு 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-32


Image result for போக்கிடம்




 ஒரு வழியாக நோக்காடு
இம்சையிலிருந்து விடுபட்ட
மறு நிமிடமே வேலை
தேக்கம் வந்து
மனதில் புகுந்து கொண்டது.

இரண்டு நாட்களாகவது
சும்மா இருக்கலாம்
என்று நிணைத்த
எனக்கு வேலைகள்
தேக்கம் மனதில்
புகுந்து விட்டு
சும்மா இருக்க
விடாமல் துரத்தியது.

ஏற்கனவே..மருமகன்களிடம்
 பொருப்பை ஒப்படைத்து
விட்டு  இந்த
இம்சையிலிருந்த விடுபடலாம்
என்று நிணத்து
விடுபட்டு இருந்த
நேரத்தில் விடாத
 இம்சைகள் பல
மொத்தமாக வந்து
தாக்கியது. அலோ,
இன்ன வேலை
கொடுத்து இவ்வளவு
நாளாகியது.இன்னும்
முடித்து கொடுக்கவே
இல்ல சார்.
போன் அடித்தால்
யாரும் எடுக்க
மாட்டுகிறார்கள் என்று
பலரும் சொன்னபோது
நான் எடுத்த
முடிவு அந்த
ஒரு மாதத்திற்குள்
சின்னா பின்னமாகிவிட்டது.
அந்த தொழிற்கூடத்திற்கு
நானே நிறுவனன்,
நானே தொழிலாளி
நானே கடனாளி
அனைத்திற்கும் நானே
பொறுப்பு என்று
பொட்டில் அடித்துவிட்டார்கள்.

அப்போதும் தேங்கிய
வேலைகளை விரைவாய்
முடித்து தற்க்காத்தேன்.

இப்போதும் இரண்டு
வார நோய்
அவதிக்குப் பின்
ஓய்வெடுக்க நிணைத்த
போது...பலர்
பலவிதமாக சொல்லிய
கடமையைய் செய்
பலனை எதிர்பாராதே..
என்று ஓதியதில்.. ...

எனக்கும் வேறு
போக்கிடம் இல்லாததை
சுட்டிக் காட்டியதாலும்
உடலும் மனமும்
நல்ல நிலையில்
இருக்கும்வரை  அக புற
இம்சைகளை  சகித்து..
ஓதுவார்கள் ஓதியதை
மனதில் கொண்டு
பலனை எதிர்பாமல்.
 உழைக்க இருக்கிறேன்...

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...