பக்கங்கள்

சனி 06 2013

பெண் வக்கீல் கமலாவை புகழ்ந்த அமெரிக்க அழகன் ஓ..பாமா..!!!



ஆணழகன் ஓ..பாமாவும், இந்திய வம்சாஅழகி கமலாவும்




அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலாகாரிசை அட்டரினி ஜெனரலாக நியமித்தார் அமெரிக்க அதிபர் ஓபாமா.

இந்நிலையில்  இருவரும் தேசிய ஜனநாயகக் குழுவுக்கு நிதி பிச்சை கேட்டு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஆணழகன், அழகியை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இதைப்பற்றி அமெரிக்காவிலுள்ள ஜனநாயகத்தின் நாண்காவது தூண்களான நியூ யார்க் பத்திரிக்கை வெட்கக் கேடு என்றும்,வாஷிங்டன் போஸ்ட் ஓபாமாவும்,கமலாவும் நீ........ண்....ட கால நண்பார்கள். அதனால் ஆணழகன் அழகியை மோகமாக வர்ணிக்கவில்லை மாறி மாறி தூற்றி உள்ளன.

இதைப்பத்தி  ஒரு தோழரிடம்  கேட்டபோது அவர் சொன்னார்.
இந்தியாவின் தலைநகரமே! அமெரிக்காதான்னு  ஆகிப்போச்சு,அமெரிக்க கம்பெனியிலும் ஒலக வங்கியிலும் வேலை பார்த்தவர்களால்,உப்பிட்டவரை உள்ள்ளவும் நினை என்பதற்கு ஏற்ப.. பெயரளவான ஜனநாயகத்தை பணநாயகத்துக்காக, இந்தியாவையே அமெரிக்காவுக்கு கூட்டி கொடுத்தாச்சு......  இதுல ஆணழகன் இந்திய வம்சாவளியை புகழ்ந்தால் என்ன? கொஞ்சினால் என்ன? எதுவும் திரும்ப வந்துவிடப்போவதில்லை.
  

அவர் சொன்னது உண்மைதானே...................

படம்.. உதவி.. தமிழ்மீடியா.

வெள்ளி 05 2013

தண்ணீர் பஞ்சம் தீர...ஆ.அ..கிரி காட்டும்வழி.



 
தமிழ்நாட்டில்  கோவில்கள்.மன்றங்கள், இல்லங்கள் தோறும் கூட்டு வழிபாடு நடத்தினால் தண்ணீர் பஞ்சம் தீரும்.

இந்த கூட்டு வழிபாட்டுக்கு குறைந்த்து 11பேர் வேண்டும். ஒருமை பாட்டுடன் பிர்ராத்தனை செய்தால்  உறுதியாக மழை பொழிந்து அணைகளில் நீர்மட்டம் உயரும் கடும் வெப்பம் நீங்கிடும் என்று ஆ........  தீனம் கூறினார்.

அட போங்கய்யா..........

பதிகம்பாடிய திருஞானசம்பந்தரே........ ஆ......தினம்..தினம் சொல்வதை நம்பாமல்.  கொடைகாணல், ஊட்டி,சிம்லானு பறந்துகிட்டு இருக்காறாரு

இவர இன்னமுமா நம்புதுக.............




வியாழன் 04 2013

அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை


அவள் பணக்கார
பத்தினியாகவுமில்லை .
சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை

மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை

அவள் சொல்லும்
மனிதர்கள் அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை
போகப் பொருளாய்தானே
பார்த்தார்கள்- அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை........

தன் தொழில் தர்ம்ம் காக்க
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!

பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்கு
காட்டை பெற்று நோய்
வாய்ப்பட்டு இறக்கும்போது
அந்த மேலான மனிதர்களா?
தாங்குகிறார்கள். மண்தானே
தாங்குகிறது.

மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னனூட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.









செவ்வாய் 02 2013

தமிழகம் தவறவிட்ட இன்னொரு பெண் முதலமைச்சர்.!!!



ஏமாளிகளின் ஒட்டு மொத்த ஆதரவால் தமிழகத்தை புர்ச்சி தலவரு அண்ணாயிச வழியில் ஆட்சி செய்து கொண்டு இருந்தபொழுது......

தன்னுடன் நடித்த ரத்தத்தின் ரத்தமான ஒரு நடிகையை தன்னுடன் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதற்கு முன்னோடியாக ஆளுங்கட்சியின் சார்பாக தமிழக மேலவை தேர்தலில் போட்டியிடும்படி ஆசீர்வதித்தார்.

புர்ச்சி தலவரின் ஆசீர்வாதத்தையும் ஆணையையும் ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட முயன்றபோது, அந்த நடிகையை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு விதி வருமாணவரிதுறை மூலமாக விதி சதி செய்து விட்டது.

புர்ச்சி தலவரின் ஆசீர்வாததிற்கும் ஆணைக்கும் முன் காலத்தில் அந்த நடிகை கடன் தொல்லையால் அவதிப்பட்டதால்.“தான் திவாலாகி விட்டதாக“ அறிவிக்கும்படி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து ஆணையும் பெற்றார்.

 இதனால் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டதினால்,
கடன்களை அடைத்து முடிக்காமல். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம்.. 

திவாலான நடிகை தேர்தலில் போட்டியிடுவதை  தெரிந்து கொண்ட வருமாண வரித்துறையினர் அந்த நடிகை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு  வழக்கு போட்டனர்.

இதை அறிந்த புர்ச்சி தலவரு,ரொக்கமாக 90.00.000 லட்சத்தை கொடுத்து, கடனை அடைக்கச் சொல்லி உயர் நீதி மன்றத்தில் செலுத்த செய்தார்.

90,00.000 ரூபாயை கடனாக பெற்றதும் தவறு, ரொக்கமாக 
கடனை அடைத்த்தும் தவறு என்று மீண்டும் அந்த நடிகை மீது   வருமாணவரித்துறை வழக்கு போட்டது.

இந்த சிக்கலினால் அந்த நடிகை மேலவை தேர்தலில் நிற்க முடியாமல் போய்விட்டது. அந்த சதி இல்லையென்றால் தேர்தலில் வெற்றி பெற்று,அப்புறம் அமைச்சராகி, புர்ச்சி தலவரின் கூடவே இருந்து. புர்ச்சி தலைவரு மண்டய போட்டதும் ஏகோபித்த ஆதரவுடன்  தமிழ்நாட்டின் முதல் அமைச்சரா ஆகியிறுப்பார் தமிழகத்தை சனியும் ஓரளவு பிடிக்காமல் இருந்திருக்கும்.

வருமாணவரிதுறையின் சதியால் புர்ச்சி தலவரின் ஆசிப் பெற்றும் அந்த நடிகையை  தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டது விதி அன்ரைக்கு பிடித்த சனிதான் இன்றுவரை தமிழகத்தை  ஆட்டி படைக்குது.

அந்த நடிகைக்குப்பின்தான் தமிழகத்தின் இருண்டகாலம் புர்ச்சி தலவரின் அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற காப்பகத்தின் கொள்ளை பரப்பு செயலராகி.வீதி உலா வந்து சட்ட மேலவை உறுப்பினராகி, புர்ச்சி தலவரு மண்டய போட்டதும் சக்களத்தி சண்டையில் ஓய்வு எடுத்து, அதுக்கு பெறவு. புர்ச்சி தலவரின் வானுலக ஆசியுடன்  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

அப்புறம், அந்த நடிகைக்கு புர்ச்சி தலவரு கடனை அடைக்க  90,00,000 பணம் என்னாச்சுனா... கட்சிக்காக நாட்டிய நிகழ்ச்சி நடத்தியதாக கட்சிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, வருமாணவரித்துறைக்கும் கணக்கு காட்டப்பட்டது.

அன்னிக்கு மட்டும் அந்த நடிகைக்கு விதியும் சதியும் இல்லாம இருந்திருச்சுன்னு வச்சுக்கோங்கோ....... இன்னிக்கு பச்சை ஆடை உடுத்திய இருண்டகாலத்துக்கு பதிலா வெண்ணிற ஆடை நடிகையின் ஆட்சிதான் நடந்துகிட்டு  இருக்கும்.   வீதியிலே போகிற சனியும் தமிழகத்தை இந்த ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டியிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்காது





திங்கள் 01 2013

போராட்டத்தை படமெடுத்து காசு பார்க்கும் முன்னால் காம்ரேட்டு



1994ல் என் பொண்டாட்டி தாலியை வித்து அமைதிப்படையைஎடுத்ததாக முன்னால் காம்ரேட்டும் சாதி வெறியை மறைத்து கிராமத்தின் அழகை கொட்டகையில் காட்டிய இமயத்தின் சீடர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அது உண்மையோ,பொய்யோ நமக்கு தெரிந்து எதுவும் ஆகப் போவதில்லை. ஆனால் 2013ல் அமைதிப்படையின் இரண்டாம் பாகமான நாகராஜன் சோழன் எம்.ஏ.,எம்,எல்,ஏ., படமெடுக்கும் கதைப்பற்றி ....

மழைவாழ் மக்களின் போராட்டத்தை படமெடுத்து வித்து காசக்கப் புறப்பட்டுள்ளார். 

ஏற்கனவே,பரதேசி பாலா “தேயிலைத தோட்டத்தின் வலிகளைபடமெடுத்து காசும் புகழும் பெற்றுவிட்டார். 

எந்தச் சினிமாக்காரனும் உள்ளதை உள்ளவாறு படமெடுத்தாக வரலாறு கிடையாது. அப்படியே ஒரு சில படங்கள் வந்ததாக  சொன்னாலும் அன்று நடந்த கொடுமைக்கும் இன்று நடக்கும் அநியாயத்துக்கும் என்னடா வழி என்று ஒரு பயலும் சொல்றது கிடையாது.

“ரோஜா,வனயுத்தம், இப்படிபட்ட பல வகையான  பல படங்களில் உண்மைச் சம்பவத்தை மறைத்தும் வியாபார உத்தியான “செண்டிமெண்டை”  புகுத்தியும் படமெடுத்து  இதுதான் உண்மைச்சம்பவம்  ரசிகனை கேனையாக்கி இருக்கிற சிந்தனையும் மழங்கடிக்கும் வேலையை அணைத்து சினிமாக்காரனும் செய்து வரும் வேலையை  முன்னால் காம்ரேட்டும் செய்து வருகிறார்.

அந்த வகையில் முன்னால் காம்ரெட்டுக்கு 50வது படமாகவும்,புருட்டு தமிழனுக்கு 200வது படமாகவும் இருந்தாலும் இதனால் போராடும் மலைவாழ் மக்களுக்கு பெருமையையோ, அவர்கள் போராடுவதற்கு புதுத் தெம்மையோ தரப்போவதில்லை.




ஞாயிறு 31 2013

மனசாட்சி மரத்துப்போன சமூகம்...



கத்தியின்றி. ரத்தமின்றி, விடுதலை வாங்கிக் கொடுத்த காந்தியின் இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்கரத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

ஒவ்வொரு 7 நிமிடத்திலும் பெண்கள்மீது வன்முறைகட்டவிழ்த்துவிடப்படுகிறது.

ஒவ.வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சினை சாவு 
நடக்கிறது.பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக 
பதிவாகியுள்ள 93.000 வழக்குகள் இன்னமும் விசாரனைக்கே வரவில்லை

பெண்களுக்கு எதிரான குற்றங்களும்,பாதுகாப்பற்ற சூழல் 
நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4வது இடத்தில் அகிம்சையின் தேசம் உள்ளது.

 திராவிட கொழுந்துகள், இலைகள் ஆண்ட தமிழகத்தில் பல்வேறு நீதி மன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக்குற்ற வழக்குகள் உள்ளீட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கின்றன. இதில் பாலியல் வல்லறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதம் 14 14வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.


உதவி...புதியஜனநாயகம் இதழ.




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...