பக்கங்கள்

சனி 26 2014

கையெழுத்தும்..தலையெழுத்தும்...





நான்  பள்ளி கூடத்துக்கு  போயி ப டிக்கும் காலத்தில் என்னுடைய வாத்தியாரு,வகுப்புல. அடிக்கடி சொல்வாரு ........



அடே, பயல்களா கையெழுத்து நல்லா இருந்தால்தாண்டா உங்க தலையெழுத்து நல்லா அமையும் என்று ,.அன்று அவர் சொன்னது
என் மண்டைக்கு  புரிய வில்லை.

ஆனால்- பின்னாளில் , இந்தியாவுக்கு ஓரே ஆளா நின்று, பிரிட்டீஸ்காரனிடம் ஒத்தைக்கு ஒத்தையா   சண்டையிட்டு.., பிரிட்டீஸ்காரனை விரட்டி அடித்து அதன் மூலம் விடுதலை வாங்கித்தந்தாக

செவிட்டு காதுக்களுக்கும் கேட்கும்படியாக  ஒவ்வொரு தடவையும் சங்கு ஊதி சொல்லும்போதும் ,.

அந்த ஆளு படம் போட்ட காகிததுக்கு  கஷ்டப்பட்ட போதும்  நிணச்சேன்

அந்த ஆளு  கையெழுத்து நல்லா இல்லாத காரணத்தால்தால்தான் நம்ம தலையெழுத்தும், இந்திய நாட்டு  சராசரி மக்களின் தலையெழுத்து நல்லா அமையவில்லை என்று........

எல்லா வளமும் இருந்தும் உழைக்க தயாராக இருந்தும்.. அஞ்சுக்கும் பத்துக்கும் பரிதவிக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் 200க்கும் 500க்கும் விலைபோகியிருக்கத்தான் முடியுமா???

 அன்றைக்கு அந்த ஆளு கையெழுத்து நன்றாக இருந்திருந்தால்.  இன்னிக்கு  நாடே கொள்ளை. போயிருக்குமா...? அட, போகத்தான் விட்டுருப்போமா.......?

அந்த ஆளே!.... என் கையெழுத்து நல்லா இல்லேன்னு, அப்பவே புலம்பி இருக்காரு................... புலம்பி என்ன பன்ன...........தலையெழுத்த
மாற்றவா..முடியும்.

கொள்ளை போன்து போனது தானே...............

வெள்ளி 25 2014

ஆளுவது அதிகார வர்க்கம்! ஆடுவது தேர்தல் நாடகம்!

உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர் திரைப்படம்) – வீடியோ!
படம் வினவு.

தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டங்கள் ,திட்டங்கள் போடுவதும், அதை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம் அதை நடைமுறைப்படுத்தி நிர்வகிப்பதுமான இரட்டை ஆட்சி முறைதான் இந்திய நாட்டில் பிரிட்டீஸ் காரன் காலந்தொட்டு ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கிறது.

இத்தகைய  ஜனநாயக இரட்டை ஆட்சி முறையில் ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் செய்யும் லஞ்ச ஊழல்கள், முறைகேடுகள்,அராஜகங்கள்,அடக்குமுறைகள் போன்ற வற்றிக்கு பின்னே
ஜனநாயகம் என்ற வலைக்குள் ஒரு பெரிய கொள்ளைக்கூட்டமே ஆதாயம் அடைகிறது.

இந்தக் கொள்ளைக்கூட்டம்தான். இந்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகள்
இவர்கள் அந்நிய- பன்னாட்டு ஏகபோக தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்நாட்டை கொள்ளை அடிக்கவும் கொளுக்கவும். இந்திய நாட்டின் ஏராளமான விளை நிலங்களை வளைத்து குவித்து கொண்டு இருக்கின்றன.

இவர்களின் சுரண்டல்களையும் கொள்ளைகளையும் பாதுகாப்பதற்குத்தான். இந்நாட்டின்  போராடும் கூலி-ஏழை விவசாயிகள் தொழிலாளர்களை  ஒடுக்குவதற்கும் இவர்களின் நலனை பாதுகாப்பதற்கும்  சேவை செய்வதற்கும்தான் ஜனநாயகம்,தேர்தல்  உரிமை,கடமை என்கிற பெயரில் ஓட்டுகட்சிகளும், அதிகாரிகளும் நாடகமாடுகிறார்கள்.

விவைாசி உயர்வு, வேலைவாய்ப்பினமை, போன்ற அத்தியாவசிய மானவற்றிக்கு இவர்கள் வழியில் மனு கொடுத்தும் பலன் கிடைக்காத போது  போராடினாலோ, தடியடி ,துப்பாக்கிசூடு ,பொய்வழக்கு என்றுநடத்தி அடக்குவது வாக்காள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரவர்க்கமும் போலீசும்தான்.

உலகத்திலே பெரிய ஜனநாயக நாடாக பீத்திக் கொள்ளும் இந்திய ஜனநாயக நாட்டின் இந்திய அரசியல் சட்டமோ மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு குடியிருப்பு கல்வி,மருத்துவம்,போன்ற அடிப்படை உரிமைகளை அது உத்தரவாதம் செய்யவில்லை.

ஆனால், பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்கள், அவற்றின் தரகர்களான தரகுமுதலாளிகள்,  மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக சொத்துரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இவர்களின் சுரண்டலும் கொள்ளையும் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.
அதனால்தான் இவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது   இவர்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்க்காகத்தான் போலீசும் அதிகாரவர்க்கம் மற்றும் நீதிமன்றங்களும்  அடக்குமுறை போன்றவற்றை ஏவி பாடுபட்டு சேவை செய்கிறது.

 நடத்துகிற தேர்தல்களை ஜனநாயகத் தேர்தல்களை் என்று கூறி மக்களை ஏய்க்கிறது. தரகுஅதிகார முதலாளிகளையும்,நிலப்பிரபுக்களையும் இவர்களுக்கு சேவை செய்கிறவர்களையும் பாதுகாக்கும் சர்வதிக் காரத்துக்கான  உரிமைதான் இந்தத்தேர்தல்கள்.

இந்தச் சர்வாதிகாரத்தை தெரிந்தோ தெரியாமலோ  அங்கீகரித்து ஓட்டு போடுவது என்பது இந்த போலி ஜனநாயகத்தை பாதுகாத்து நியாயப்படுத்துவதற்கு ஒப்பானது.

தற்போது நிலவும் இரட்டை ஆட்சி முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு  சட்டதிட்டங்களை நிறைவேற்று வதற்கே உரிமை உள்ளது.(சில சட்டங்கள் இந்த பிரதிநிதிகளுக்கு தெரியமலே நிறைவேறும்) இந்த பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறை படுத்துவதற்கும்
கிடப்பில் போடுவதற்கும் இந்த அதிகார அரசு நிர்வாகங்களுக்கே அதிகாரம் உள்ளது.

இப்படி உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள் தரகுஅதிகாரமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுகளுக்கு ஆதாயமாக இருந்தால் உடனே நிறைவேறுவதும், மக்களுக்கான அடிப்படை திட்டங்களாக இருந்தால் கிட்ப்பில் போடப் படுவதைப்பற்றியும் எவரும் ஒன்றும் செய்யமுடியாது.

இதற்கு மாற்றாக.தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே சட்ட திட்டங்களை இயற்றவும்,இயற்றிய சட்டங்களை அமுல்படுத்தவுமான அதிகாரமுள்ளவர்களாகவும்,தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்யும்போது எந்த மட்டத்தில் இருந்தாலும், ஊழல். முறைகேடுகள், போன்ற குற்றமிழைத்தால்  அவர்களின் பதவி,பொறுப்புகளை ரத்து செய்துவிட அதிகாரம் அளிக்கும் தோதலே ஜனநாயகத்தேர்தல் ஆகும்.

இத்தகைய புரட்சிகரமான ஜனநாயகத் தேர்தலின் ஆட்சியிலேதான் அணைத்து மட்டங்களிலும்  மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களுக்கு பொருப்பானவர்களாக, சேவை செய்யக்கூடியவர்களாக, மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்களாக இருக்கமுடியும்.

இத்தகைய ஆட்சிமுறையினைக் கொண்ட தேர்தலே உண்மையான ஜனநாயகத் தேர்தலாகும். இந்தத் தேர்தலினால் நடத்தப்படும் ஜனநாயகம் உண்மையான ஜனநாயகமாகும்.

இப்படி இல்லாத எந்தத் தேர்தலும் போலித் தேர்தலே அன்றி ஜனநாயகத் தேர்தலாக இருக்க முடியாது.


நன்றி! புதியஜனநாயகம்.

http://www.vinavu.com/2011/11/07/10-days-that-shook-the-world/

வியாழன் 24 2014

இங்கு அக்மார்க் நீதிி வழங்கப்படும்

இங்கே இருந்து இந்தியா முழுவதற்கும்
நவீன இயந்திரத்தின் உதவியுடன் அரைத்து ,உடைத்து,பொடிசெய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உயர்ரக சுத்தமான அக்மார்க் நீதி எம்.ஆர்.பி விலைக்கே கிடைக்கும்.க்ரெடிட்,டெபிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.சவுகான் பாப்டே ஸ்டோர்சில் பார்ப்பனர்களுக்கு என சிறப்பு கவுண்ட்டர் 24 மணிநேரமும் செயல்படும்.இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.வாய்தாக்கள் கிப்ட் வவுச்சர்களாக வழங்கப்படும்.அப்பாவிகளுக்கும் ,சிறுபான்மை மக்களுக்கும் அதிரடி நீதி கூட்டுகளவாணிகளின் மனசாட்சி திருப்தி அடையும் வகையில் அக்மார்க் நீதி வழங்கப்படும்.

http://www.vinavu.com/2014/04/24/jayalalitha-wealth-case-hrpc-demo-against-judiciary/
நன்றி!! மனித உரிமை பாதுகாப்பு மையம், & வினவு (குரு)

புதன் 23 2014

ஆணாதிக்கத்திலிருந்து தப்பாத தமிழ்நாட்டு மகாகவி......

படம்.pennkal.blogspot.com


















ஆங்கிலேயேனை எதிர்த்த மகாகவி  அவனுக்கு பயந்து புதுவைக்கு
தப்பித்தார்.

ஆனால் தன் இரத்தத்தோடு கலந்துவிட்ட ஆணாதிக்கத்திலிருந்து பென்னரிமைப்பற்றி   வலியுறுத்தியாக      சொல்லப்படும் மகாகவிஅதிலிருந்து தப்ப முடியவில்லை...என்பதான் இந்தச் சம்பவம்.

மகாகவி தன் மனைவியை  செல்லம்மாளை கூப்பிட்டார்.மகாகவி கூப்பிட்ட உடனே செல்லம்மாள் வரவில்லை.இதனால் கோபம் கொண்ட மகாகவி

தான் கூப்பிட்ட உடனே தன் மனைவி வரவில்லையே என்றகோபத்தால் அடுப்பில் இருந்த குழம்பை சட்டியோடு தூக்கி போட்டு உடைத்தார்.

தகவல்... கி.ராவின் கதை சொல்லியிருந்து க. பஞ்சாங்கம்

வலிப்போக்கன் : சிறுதுளி பெருவெள்ளம்

செவ்வாய் 22 2014

என்னப்பாத்தா..........கேட்ட.........???



நல்ல காலத்திலே பொல்லாத காலமாக தூங்க முடியாம,தூக்கந்தான் வராம.. தவிக்கும் தூங்கா நகரத்தின் ஒரு பகுதி பெரியார் நிலையம்...

அதிகாலை 5.30 மணி அளவில் வழித்தடம் 30 எண் கொண்ட ஒரு பேருந்து ஒன்று கூட்டமில்லாமல் ஒண்றிரண்டு பேருடன் மேற்கு புறமான பாலத்தில் மெதுவாக சென்றது.

அதன் ஓட்டுநர் எவ்வித பரபரப்பு இல்லாமல் பாலத்தை கடந்து  பேருந்தை ஓட்டிச் சென்றார். மொசகுடி பங்களா என்றும் டிராவல்ஸ் பங்களா என்றும் டி.பி. பங்களா என்றும் டிபி மெயின்ரோடு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ரோட்டைக் கடந்து. நிற்க வேண்டிய நிறுத்தத்தில் ஏற வேண்டிய பயணிகள் இல்லாததால் வேகமெடுத்து அரசரடியை தாணடியது

பேருந்து நடத்துனரோ ஏறிய பயணிகள் இருவருக்கும் பயண சீட்டை கொடுத்துவிட்டு சுறு சுறுப்பாக நின்று கொண்டு இருந்தார்.

பேருந்து அரசரடியைத் தாண்டி காளவாசலை நெருங்கிய போது ஒருவர் ஓடியபடி பேருந்தில் ஏறினார். நடத்துனருக்கு அருகில் நின்றதால் நடத்துனர்
பயணசீட்டுக்கு காசுக்காக கையை நீட்டினார்.

ஏறியவரோ... நா...ன் போலீசு...... என்றார்.

நடத்துனரோ...... காலையிலே ஓசி போனியா....என்றபடி மனத்துக்குள் நிணைத்தவராக......... ஏறிய பயணி போலீசு மாதிரி தெரியாததால் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

கோபம் கொண்ட போலீசு என்று சொன்ன நபர்... ஏண்டா....என்னப் பாத்தா...கேட்ட என்ற மாதிரி  “பளார் .” என்று ஒரு அறை விட்டார்.

“பளார்” அறையை பெற்ற நடத்துனர்  கத்த ஆரம்பித்துவிட்டார்.

பேருந்தில் ஏறிய நபர்க்கும் நடத்தனருக்கும் பயண சீட்டில் வாக்குவாதம் எற்பட்டு கொண்டு இருப்பதை கவனித்துக் கொண்டே மெதுவாக ஓட்டி வந்த நடத்துனர்.

 “பளார்” என்று நடத்துனர்..வாங்கியதும் சட்டென்று பேருந்தை நிறுத்திவிட்டு அவரும் சத்தம் போட ஆரம்பித்தவிட்டார்.

“பளார்” விவகாரம் அறிந்ததும் அடுத்தடுத்து வந்த பேருந்து ஓட்டுனர்களும் பேருந்தை ஆங்கங்கே நிறுத்திவிட்டு அணி சேர்ந்தனர்.

அணி சேர்ந்தவுடன்..“நடத்துனரை தாக்கிய போலீசை கைது செய்” என்று கோஷங்களும் மறியலும் நடைபெற்றது.

“பளார்” பரபரப்பு பற்றி செய்தி அறிந்ததும்  பக்கத்தில் இருந்த இரு காவல் நிலையங்களிலிருந்து போலீசார் களும், பொக்குவரத்து துணை மேலாளரும்,பொது மேலாளரும்  சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

தடியடி எதுவும் நடத்தாமல் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் “பளார்”விட்ட போலீஸ் அதிகாலையிலயே போதையில் இருந்ததாக கூறி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்,

நடத்துனர்.“பளார்” அடி வாங்கியதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..

முழு விசாரனைக்கு பொறவு “பளார்” விட்ட போலீசு மீது போலீசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பிறவு, ஆங்கங்கே...குண்டக்க..மண்டக்கா நிறுத்தி இருந்த பேருந்துகள் “நாங்க  யாரு.”ன்னு சொன்ன மாதிரி...சர்ர்ரு.....புர்ர்ரன்னு புகையை கக்கியபடி உருண்டு ஓ......ஓ.......ஓடின.............


திங்கள் 21 2014

லோட்டாவுமில்லை....நேட்டோவுமில்லை...

புனிதமாக்கப்படும் தேர்தல்
http://www.vinavu.com/2014/04/14/psuedo-democratic-elections-cartoons/
















வாக்காள பெரு மக்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!!

உலகத்திலே பெரும் ஜனநாய்க நாடான இந்தியாவில் மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதற்க்காக 16வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சில இடங்களில் நடந்து முடிந்து ஓட்டுப் பெட்டிகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் இரு தினங்களில் நடைபெற இருக்கிறது.

கல்தோன்றா..மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடீயான தமிழ்க்குடியில் ஏப்ரல் 24ல் சித்திரை 11-ல் வாக்கு பதிவு நடைபெறப்போகிறது.

இந்தத் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே ஒரு கட்சியை சார்ந்தவங்க பிரதம வேட்பாளரு இவர்தான்னு ஒரு ஆள அறிவிச்சு தேர்தல் பரப்புரை செய்தாங்க........

இன்னொரு கட்சிகாரங்க....யாரு பிரதமருன்னு அறிவிக்க முடியாம அல்லாடிக்கிட்டு இருந்தாங்க.. கடைசியில அவுங்களும்  தங்களுடைய அருமைகளை சொல்லி பரப்புரை செய்துகிட்டு வாராக...

மூத்த குடியர்கள் வாழும் தமிழ் நாட்டிலோ...கூட்டணி பேரம் அமையாமலும் தேர்தல் சீட்டு கிடைக்காமல்....அந்தக் கட்சியில் இருப்பதா....வேணாமா என்று குலுக்கு சீட்டு போட்டு பார்த்தும் எதிலும் முடிவு கிடைக்காமல் சில இடதுவலதுகள்  குண்டியில எத்து வாங்கிய பின்னும் சொரனை கெட்டு வாழ வழியின்றி தனிதனியாக போட்டியில் குதித்து தங்களுடைய பராமக்(அக்)கிரமங்களை  ரெண்டு வருஷமாக பருவ மழை தவறிய போதும் முளைக்க வழியில்லாத போதும் அள்ளி விதைக்கின்றன.

ஆக.. இந்த 16வது தேர்தலில் 5முனை போட்டியாககட்சிகள் தேர்தல் போட்டியில் குதித்து உள்ளன.

ஒவ்வொரு கட்சிக்கும் சொந்தமான பல சேனல்கள் கொண்ட தொலைக்காட்சிகளும்,ஒவ்வொரு கட்சிக்கும் சார்பான கொள்கை விளக்க செய்தி ஊடகங்களும் தங்களின் கொள்ளை வசதிக்கேற்ப தொழில் நுட்ப வசதிகளுடன் தங்களுடைய கொள்ளைகளையும். இனிமேல் செய்யப்போகிற கொள்ளைகளையும் பட்டியலிட்டு பரப்புரை  செய்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தக் கட்சிக்காரனைப்பற்றி அந்தக் கட்சிக்காரனும்.அந்தக் கட்சிகாரனைப்பற்றி இந்தக் கட்சிக்காரனும் தங்கள் தங்கள் வண்டவாளங்களைபற்றி  அவர்களுக்கு தெரிந்தே அள்ளி  வாக்காளர்கள் ஆகிய உங்கள் முன்னால் எந்தவொரு குற்ற வுணர்ச்சி இல்லாமல் திருடனை பற்றி திருடனே பிடித்த கதையை வாக்காளர்கள் ஆகிய நீங்களே வாய பொளக்கும் அளவுக்கு அள்ளி தொளிக்கிறார்கள்.

ஆக. இவர்களின் பரப்பரையின்படி எந்தக் கட்சியும் ,அந்தக் கட்சியின் சார்பாக போட்டிடும் எந்தவொரு வேட்பாளனும் நல்லவனில்லை என்பதும் எவன் வந்து ஆண்டாலும்  இதுதான் கதி மோட்சம் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இந்த  மனநிலையில் இருக்கும் வாக்காளரை தாசா செய்யும் நோக்கத்தில் என்னையும் ஒரு வேட்பாளானாக அனைத்து தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளேன்.

நான் நீங்கள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் லோட்டா அல்ல, அதே சமயத்தில் ஒலக ரவுடியான அமெரிக்காவின் கூட்டுப்படையான நேட்டோவும் அல்ல....பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நோட்டா.....என்றால் அதுவுமில்லை... யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டாதான் நான்.

இந்தத் தேர்தலில் நான் நிறுத்தப்பட்டுள்ளது காலத்தின் கட்டாயம். நான் மற்ற பணக்கார கட்சிகளின் சார்பாகவோ...சுயேச்சைகளின் சார்பாகவோ நிறுத்தப்படவில்லை.... வாக்காளாராகிய  உங்களின் கோபத்தை தணிப்பதறக்காக..மடை மாற்றம் செய்வதற்க்காகத்தான் நிறுத்தப்
பட்டுள்ளேன்.

என்னை நிறுத்தியவர்களும் சரி,என்னை விறும்புகிறவர்களும்சரி.எனக்காக பரப்பரை எதுவும் செய்ததில்லை. நான் எந்தவொரு வாக்கு உறுதியையம் நான் தரவில்லை. என்னை விரும்பி என்க்கு ஓட்டளித்து பெருவாரியான வெற்றி அளித்தாலும் அதனால் வாக்காளர்களாகிய உங்களுக்கு எந்த நன்மையும் என்னால் விளையபோவதில்லை........... எனக்கு நீங்கள் அளித்த ஓட்டுக்கள் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை..

ஆகவே, நோட்டாவான எனக்கோ....அல்லது மற்ற கொள்ளக்கார கட்சிகளுக்கோ ஓட்டு அளித்தால் ஒரு மன்னும் விளையப்போவதில்லை.செக்கு மாட்டுத்தனமாக அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை வரும் தேர்தலால் ஊழலை ஒழிக்கவும் முடியாது.. ஊழில் திளைத்தவர்களை தண்டித்துவிடவும் முடியாது. சமீபத்திய உதாரணம் வாய்தா ராணி வழக்கும் வாய்தா ராஜாக்களான நீதிபதிகளுமே நல்ல உதாரணம்.

ஆக...தமிழகத்து வாக்காளர்களே!.....மாத்தி மாத்தி ஓட்டு போடுவதே தங்கள் தலைவிதி என்று நொந்து போகாமல். வெந்ததை தின்று விதி வந்து சாவோம் என்று எண்ணாமல் ...உழைக்க ஏன்?வேலையில்லை....குடிக்க ஏன்?தண்ணியில்லை..ஏன்?.  கல்வி இல்லை? மருத்துவ வசதி இல்லை ?நிம்மதியான வாழ்க்கை இல்லை. சந்தோசமான இறப்பு இல்லை இதற்கு காரணம் என்ன? யார்.இதற்கு பொறுப்பு??ஃ என்பதனை சிந்திப்பதற்க்காக.முதல் வேலையாக  முதல் சுழியாக  ஓட்டுப் போடுவதை நிறுத்துங்கள் சிந்திக்க முற்ப்படுங்கள்........

அந்த சிந்தனை மூலமாக வருங்கால சமுதாயத்திற்கு நல்லதொரு தொடக்கமாக அமையட்டும் என்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றியை தெரிவித்து இத்துடன் என்பரப்புரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி!!1

கருப்புக்குடை வேண்டாம். கருப்பு கண்ணாடி மாட்டிக்கிடலாமா...?



காலையிலயே வெயிலு மண்டையை பொளந்திருச்சு... இந்த வெய்யில்ல ஜனநாயகத்த காப்பத்த வேண்டி ஒவ்வொரு கட்சிக்காரனும் ஓட்டு போடு ஓட்டு போடுன்னு பிச்சை   கேட்டு வாரானுக.....அவிங்களுக்குத்தான் வயித்து வலி கொளுத்தும் வெய்யிலுல வாரனுங்க என்றால் ......நானு இந்த பாழாய் போன வழுக்கு மண்டையை வச்சுகிட்டு இந்த வெய்யிலுல போக முடியுமாடா.........குடையை தேடி எடுடா .......குடைய பிடிச்சுட்டே போயிட்டு வந்துடுறேன் என்றார்.அவர்.

மாமா....வெயிலுல கருப்பு குடைய பிடித்துக் கொண்டு போகக்கூடாது மாமா. கருப்புக் குடைய பிடித்துக் கொண்ட போனால் சூரிய ஒளிக்கதிர்கள் ஒங்க மேலயே இறங்கும் மாமா...என்றான் மாப்பிள்ளை.

“டேய், தேடி எடுத்து தர்ர சோம்பேறி பட்டுக்கிட்டு, இப்படியெல்லாம் அரிவியல் காரன் சொல்ற மாதிரி கத சொல்லக்கூடாது மாப்ள”... என்றார்.

“இல்ல மாமா...பேப்ரோட   கூட வருமே?..........அந்த புத்தகத்துல போட்டு இருக்காங்கே மாமா.......அதத்தான் சொன்னேன்மாமா...என்றான் மாப்பிள்ளைக்காரன்.

“அடப் போடா,  பக்கத்த நெரப்புவதற்க்காக அவிங்க எதையாவது ஔறி கொட்டுவாங்கே....அதப்போயி நம்பிகிட்டு............... நம்ப கிட்ட எது இருக்கோ அதத்தாண்டா பயன்படத்தனும்.....சரி..... கருப்புக் குடை வேண்டாம் என்றால் கருப்பு கண்ணாடி அணியாலாம்மா.............

”கருப்பு கண்ணாடியப்பத்தி ஒண்ணுமே போடலியே மாமா....”

“அதெப்படி போடுவான்...பத்தரிகைகாரன் வேலையே அதுதாணேடா.........
ஜனநாயகத்தின் நாலாவது துண்ன்னு சொல்லுவான்.......ஜனநாயகத்தை காப்பாத்த  ஓட்டு போடுங்கன்னு சொல்லுவான்.  கட்சி மாறிகள் மாதிரி இவனுங்களும் கட்சி மாறுவான்  ஓட்டு வாங்கிப்போயி ஜனநாயகத்த   நட்டமா நிறுத்தப்போற அந்த நல்ல வெண்ணயின் வண்ட வாளங்களை சொல்ல மாட்டான்.  எல்லா வெண்ணெயும் நல்ல வெண்ணெய்களா இருக்கேடா  அதுக்கு மாற்று எண்ணடான்டா சொல்லமாட்டான் அதுமாதிரி தாண்டா இதுவும் என்றார்.

மாப்பிள்ளக்கு மாமா சொன்னது புரிவது மாதிரி இருந்தது........குடையை தேடி கண்டுபிடித்து கொடுத்தான்...





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...