பக்கங்கள்

சனி 22 2017

மக்களை சந்திக்க காத்திருக்கும் ஏழைப்பங்களான்....

1917ம் வருடம் ...ரசியா  நாட்டில் புதிய ஆட்சிதொடங்கி பத்து நாட்கள்தான் ஆகியிருந்தன.

“உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற உத்தரவுப்படி, பணக்கார விவசாயிகள்,பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அணைத்தும் ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டது.

இப் புதிய ஆட்சி வீழ்ந்து பழைய எஜமானர்கள் மீண்டும் வந்து செமத்தியாக உதைத்து, கொடுத்த நிலத்தையும் பிடிங்கிக் கொள்வார்களோ என சில விவசாயிகளுக்கு பயம் இருந்தது. அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்க்காக ஒரு கிராமத்து விவசாயிகள் தங்கள் பிரதிநிதியை, நாட்டின் ஆட்சித் தலைவரிடம் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ள முடிவு செய்தார்கள்.

அந்த கிராமத்து பிரதிநிதி தலைநகரத்திலுள்ளஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து, விவசாயம்,நிலம் சம்பந்தமான அதிகாரியை பார்த்தும் திருப்தி அடையாமல் தலைவரைத்தான் பார்க்க வேண்டுமென  கிராமத்தார்கள் சொல்லியிருக்கிறார்கள்,அதனால் வேறு வழியே கிடையாது  ஆட்சித் தலைவரைத்தான் பார்த்தாக வேண்டுமென கூறி, ஆட்சித்தலைவரை பார்த்து பேசி விட்டுச் சென்றார்.

விவசாயிகள்,தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதும்,அவர்களது வாழ்க்கை நிலமை, புதியசோசலிச அரசு பற்றிய அவர்களது அபிப்பிராயங்கள் என்ன உதவிகளை எதிர் பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு உடனடியாக செய்து கொடுப்பதுதான் அத் தலைவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. அந்தத் தலைவர் தனக்கு நேரமில்லையென எப்போதும் சொன்னதேயில்லை. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் அவரை நேரில் சந்திக்க எப்போதும் வந்து கொண்டே இருந்தார்கள் அந்தத் தலைவர்தான் ஏழைப்பங்களான் தோழர் லெனின்.


ஆனால் இந்தியா என்றொரு நாட்டின்   தென்கோடி தமிழகத்திலிருந்து, வயதான விவசாயிகள் நாட்டின் தலைநகரத்திற்கச் சென்று பனியிலும் வெயிலிலும் வாடுகிறார்கள்.சரியான உணவும் உறங்க இடமமின்றி சாலையில்கிடக்கிறார்கள். விதவிதமான போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
விவசாயிகளின் நிலமை மோசமாக இருக்கிறது.விவசாயிகளுக்கு கொடுத்த கடனை ரத்து செய்யுங்கள். முறையான் வறட்சி-வெள்ள நிவாரணம் கொடுங்கள். காவிரி நதிநீர்  மேலாண்மை வாரியம் அமையுங்கள் விவசாயத்தை மேம்படுத்த நதிகளை இணையுங்கள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள்.  எப்படியாவது பிரதமரை பார்த்து மனு கொடுத்து பேசி விடவேண்டும் என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே கிடப்போம். பிரதமரை சந்திக்க முடியாவிட்டால் சாவோம் என்று கிடக்கிறார்கள்..... நாற்பது நாட்கள் ஆகியும் இந்திய பிரதமரான செல்ஃபி மகான் மோடிக்கு அவர்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை...  


வெள்ளி 21 2017

வார்டு நம்பர் 193.....

விட்டத்துக்கு அடியில் கம்பி போட்ட குறுகிய சாளரம். சுவர் அருகே இரும்பு மேஜை. அதனருகில் இரும்பு நாற்காலி, மூலையில் தரைமேல்  குவியலாய் கிடந்தன புத்தகங்கள்.. படிக்க அனுமதித்தார்கள். அவரின் சகோதரிகளும் நதேழ்தாவும் விளாதீமிர் இல்யீச்சுக்குத் தேவைப்பட்ட புத்தகங்களை கொண்டு வந்து தந்தார்கள். நதேழ்தா அன்று இரவு கைது செய்யப்படவில்லை. விளாதீமிர் இல்யீச் லெனின் சிறையில் இடப்பட்டதுமே  அவரின் தாயாரும் சகோதரிகளும் மாஸ்கோவிலிருந்து வந்துவிட்டார்கள்.

அன்று வியாழக்கிழமை-   சந்திப்பு நாள். விளாதீமிர் இல்யீச் புத்தகங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, கதவுப் பக்கம் முதுகு காட்டியபடி மேஜை அருகே நின்று கொண்டார். கதவில் வட்டப் பார்வைத் துளை இடப்பட்டு இருந்தது. கண்காணிப்பாளன் நிமிடத்துக்கு ஒரு தரம் அதன் வழியாக உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். கதவுப் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு நின்றவாறு விளாதீமிர் இல்யீச்லெனின் ரொட்டியின் மெதுவான பகுதியைப் பிய்த்து உருண்டை பிடித்து விரலால் அழுத்திக் குழிவு ஏற்ப்படுத்தினார். இதுதான் அவர் ரொட்டியால் செய்த மைக்கூடு. மைக்குப் பதில் பால், ஒரு புத்தகத்தை எடுத்து அதன் வரிகளின் நடுவில் பாலினால் எழுதத் தொடங்கினார். ஒரு சொல் எழுதுவார்.பால்  உலர்ந்தது சொல் மறைந்துவிடும். அந்தப் புத்தக்த்தை
இன்று வீட்டுக்கு கொடுத்து அனுப்புவார். நதேழ்தாவோ. சகோதரிகளோ, அந்தப் பக்கத்தை விளக்கருகே காட்டி சூடுபடுத்துவார்கள். சொற்கள் மெதுவாக,  புகைப்பட ஃபிலிமின் நெகட்டிவ் போல ஒவ்வொன்றாகப் புலப்படத் தொடங்கும்-அப்போது கடிதத்தை தாராளமாக படிக்கலாம். அதில் விளாதீமிர் இல்யீச் லெனின் எழுதியது துண்டுப் பிரசுரம்.

டிசம்பர் 8,9 ம் தேிதி இரவில்  ” போராட்டச் சங்கத்தைச்” சேர்ந்த நூற்று அறுபது பேர் விளாதீமிர் இல்யீச்சுடன் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கைதால் “ சங்கம்” சிதறிவிடவில்லை. வெளியே ” சங்க்கதினால்” தொடங்கப்பட்ட வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன. விளாதீமிர் இல்யீச் லெனின்  சிறையில் இருந்த படியே வேலை நிறுத்தக்காரர்களுக்காகத் துண்டு பிரசுரங்கள் அனுப்பினார்.

கதவின் மறுபுறம் சாவி கிலுங்கிற்று, பூட்டு கிளிக்கிட்டது. கண்காணிப்பாளன் உள்ளே வந்தான். விளாதீமிர் இல்யீச் ரொட்டி மைக்கூட்டைப் பாலுடன் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

கண்காணிப்பாளன்அருகே நெருங்கினான். சுற்றும்  முற்றும் பார்வையை செலுத்தினான். சந்தேகத்துக்கு  இடமான எதையும் காணாமல் அறையிலிருந்து வெளியேறினான்

விளாதீமிர் இல்யீச் இன்னொரு மைக்கூடு செய்து எழுத்து வேலையைத் தொடர்ந்தார்.

ஒரு மணி நேரம் சென்றதும் சாவி மறுபடி கிலுங்கியது. விளாதீமிர் இல்யீச் மணப் பெண்ணைக் கண்டு பேச அழைத்துச் செல்லப்பட்டார். நதேழ்தா கன்ஸதன்தீனவ்னா இரட்டை அழிக் கம்பிகளின் மறுபுறம் காத்திருந்தார். கை குலுக்குவது கூடாது. தலையை அசைக்க மட்டுமே செய்யலாம். புன்னகைக்கலாம். விளாதீமிர் இல்யீச்சைக் கம்பிக் கிராதிகளின் மறுபுறம் காண்பது வேதனையாய் இருந்த போதிலும் நதேழ்தா புன்னகை செய்தார். அவர் சிறிதும் மனம் சோராமல் இருந்தார்.

நதேழ்தா , இல்யீச்சின் தாயார் சார்பிலும் சகோதரிகள் சார்பிலும் முகமன் தெரிவித்தார்.அவர்கள்  நலமாக இருக்கிறார்கள். தங்களை நிணைத்தக் கொண்டு  இருக்கிறார்கள்.. தங்களை நேசிக்கிறார்கள் என்று கூறினார்.

பிறகு விசயத்திற்க்கு வந்தார்கள். ஆனால், இரட்டைக் கிராதி வரிசைகளுக்கு நடுவே அரசியல் போலீசுக்காரன் நடமாடிக் கொண்டு இருந்தவன். அவர்கள் இருவரின்  ஒவ்வொரு  சொல்லையும் உற்றுக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

“ நூலகப் புத்தகங்களை  இன்று சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தேன். அதோடு மரீயாவின் புத்தகத்தையும்தான்” என்று கூறி நதேழ்தா கன்ஸ்தீனவ்னாவைக் கூர்ந்து மிகக் கூர்ந்து நோக்கினார் விளாதீமிர்.லெனின்

“ இவர் மரீயாவின் புத்தகம் என்று அழுத்திச் சொன்னதும் .. ஓ..!  அப்படியா!! புரிகிறது, கடிதத்தையோ, துண்டு பிரசுரத்தையோ மரீயாவின் புத்தகத்தில் தேடிப் பார்க்க வேண்டுமாக்கும்!!” என்பதை தன் மனதுத்துக்குள் குறித்துக் கொண்டார் நதேழ்தா.

” விளாதீமிர் இல்யீச் லெனின் மேலும் சங்கேதப் புதிர் போட்டார்.

“ என் வார்டு நம்பர் தெரியுமா ? ” என்று கேட்டார்.

“ தெரியாமல் என்ன ? நிச்சயமாகத் தெரியும். நூற்றுத் தொண்ணூற்று மூன்று ” 

“ எதற்க்காகக் கேட்டார்? என்று வீணாகக் கேட்காமல், துண்டு பிரசுரத்தை193வது பக்கத்தில் தேட வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் நதேழ்தா.

அரசியல் போலீசுகாரனை இருவரும் வெகு சாமர்த்தியமாக ஏய்த்தார்கள்.

 போலீசுகாரன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான்.

“சந்திப்பு நேரம் முடிந்துவிட்டது.”

ஒரு மணி நேரம் எப்படியோ பறந்து விட்டதும் பிரிய மனமில்லை.. துயரம் கவ்வுகிறது.

“மறு சந்திப்புவரை, விளாதீமிர்! நலமே இரு, ஏங்காதே .” என்று நதேழ்தா கூறினார்.

விளாதீமிர் இல்யீச் லெனின் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நடந்தவாறே திரும்பி பார்த்தார். அவர் கண்ணுக்குள் மறையும் வரை நதேழ்தா அப்படியே நின்று கொண்டு இருந்தார்.

பூட்டுத் துளையில் சாவி திருப்பப்பட்டது. இல்யீச் மறுபடி வார்டுக்குள் புகுந்தார். சந்திப்பின் நினைவு அவர் உள்ளத்தில் நிறைந்திருந்தது. இல்யீச் மனக் கண்ணால் காணலானார்.

விளாதீமிர் இல்யீச் லெனின் அரையிருட்டில் நெடுநேரம் குறு நடையில் உலாவியவாறு நதேழ்தாவைப் பற்றி கனிவுடன் எண்ணமிட்டார்.


 தோழர்..நதேழ்தா கன்ஸ்தன்தீனவ்னா

மரீயா பிரிலெழாயெவா-  எழுதிய லெனினின் வாழ்க்கைக் கதையிலிருந்து



வியாழன் 20 2017

பிரச்சினை இன்றி சாராயக்கடை தொழில் சிறக்க...

சார். போராட்டம்
மறியல் போன்ற
பிரச்சினை இன்றி
சாராயக்கடை தொழில்
சிறக்க ஒரு
வழி இருக்குசார்,
சொல்லட்டுமா சார்.

சார் அப்படி
என்னை ஏளனமாக
பார்க்காதிங்க  சார்

குடியை விடு
படிக்க விடு
மாதிரி எதுவும்
இல்ல சார்


நான் சொல்ற
வழியை பின்
பற்றினால் சாராயக்
கடை தொழில்
எந்த பிரச்சினை
இன்றி  சும்மா
பிச்சுகிட்டு போகும்
சார்.....சொல்லட்டும்மா...


சார்.நான்
சொல்ற வழியை
குடியை விடு
படிக்க விடுன்னு
கிண்டலுக்கு சொல்றேன்னு
நிணைக்காதிங்க சார்.

நல்லா கவனமா
கேளுங்க  வேணுன்னா
குறிச்கூட வச்சுகுங்க..

சாலையோரக் கடைய
மூடிட்டு குடியிறுப்பு
பகுதியில வச்சா
இப்படித்தான் மறியல்
ஆர்ப்பாட்டம்  சாராய
பாட்டில் உடைப்பு
பறிப்பு போன்ற
பிரச்சினை எல்லாம்
வரும்.மக்கள்
எல்லாரும் நம்ம
போலீசு படைக்கு
பயந்து போயி
இருந்தாலும் சில
குடியின்னே என்னான்னு
தெரியாத சில
சில்லு வண்டு
பேர்வழிகள்தான் சார்
சும்மா கிடக்கும்
மக்கள உசுப்பி
விடுறாங்க சார்.

முறைக்காதிங்க சார்
சொல்றேன் சார்
ஏன் அவசரப்
படுறிங்க அந்த
வழியைத்  தானே
சொல்ல வர்றேன்

சார் கிராமப் பகுதியில
இருக்கிற சாராயக்
கடையை எல்லாம்
அந்தந்த கிராம
அலுவலகத்திலும் டவுனை
ஒட்டியுள்ள கடைகளை
ஆர் ஐ அலுவலகத்திலும்
கூட்டம் அதிகமாக
இருக்கும் கடைகளை
எல்லாம் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்திலும்
அதிக வருவாய்
தரும் கடைகளை
அந்தந்த காவல்
நிலையங்களிலும்  எலைட்
மற்றும் உயர்ரக
சாராய கடைகளை
எல்லாம் போலீஸ்
ஆணையர் மற்றும்
எஸ்பி அலுவலகத்திலும்
திறந்து வைத்தால்
எந்த பிரச்சினையும்
இல்லாம நாம
கல்லா கட்டலாம்
சார். மறியல்
ஆர்ப்பாட்டம் அது
இதுன்னு எந்த
பிரச்சினை இல்லம
நம்ம சாராயக்கடை
தொழிலும் சர்வதேச
அளவுக்கு சும்மா
பிச்சுகிட்டு ஓடும்
சார். உங்க
அம்மா மேல
சத்தியம் சார்
எவனைப்பத்தியும் நிணைக்காம
உங்க அம்மா
மாதிரி தகிரியமா
மனசு வைத்து
உத்தரவு போட்டால்
எல்லாமே ஜெயம்
ஆகும் சார்
அப்புறம் பாருங்க
எல்லாருடைய கல்லாப்
பெட்டிகளும்  எந்தவித
பிரச்சினை இல்லாம
நிரம்பி வழியப்
போவதை கண்கூடா
பாப்பீங்க சார்..

சார் மனசு
வைத்தால் எல்லாம்
முடியும் சார்....


புதன் 19 2017

ஆகவே...மக்களே...! .......


மக்களே !
விழிப்பு  இருங்கள்  !!

கோட்டையை பிடிக்க
எதிர் கட்சிகள்
சதி செய்கின்றன

வெயில் உஸ்சனம்
அதிகம்  என்று
சொல்லி வெளியே
செல்ல விடாமல்
தடுத்து உங்களை
தொலைக்காட்சி முன்
அமர வைத்து
அதன்மூலம் அதிமுக
மீது  வெறுப்பை
உண்டாக்க சதி
நடக்கிறது ஆகவே

மக்களே விழிப்புடன்
இருந்து கோட்டையை
பிடிக்க எதிர்
கட்சிகள் செய்யும்
சதியை முறிடியுங்கள்

ஞாயிறு 16 2017

இனி நான் தண்ணி அடிக்க போவதில்லை

இனி நான்
தண்ணி அடிக்க
போவதில்லை..ஆச்சரியப்
படாதீர்கள் உண்மையாகத்தான்
சொல்கிறேன் இனி
நான் தண்ணி
அடிக்க  போவதில்லை

நாலு நாளைக்கு
ஒரு தடவை
வரும் தண்ணீரை
போர் போட்டு
குழாய் வைத்திருக்கும்
வீட்டுக்காரர்கள் எல்லாம்
மோட்டாரில் உறிஞ்சி
எடுத்து விட
அடி குழாயில்
விட்டு விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
வந்தும் வராததுமாய்
ஒரு மணி
நேரத்துக்குள் நின்று
விடும் தண்ணியை
சிரமபட்டு அடித்து
எடுக்கும் தண்ணியை
என் வீட்டார்
சிக்கனமாக பயன்
படுத்தாத காரணத்தால்
அடி குழாயில்
இனி நான்
தண்ணி அடிக்க
போவதில்லை வீட்டில்
உள்ளவர்களே குழாயில்
அடித்து எடுத்து
அனுபவப் படட்டும்

மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டவை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...