பக்கங்கள்

சனி 27 2016

புர்ஹான் வானி ஏன் தீவிரவாதியானார்...???


புர்ஹான் வானி

புர்ஹான் வானி தனது 16-ஆவது வயதில் ஏன் தீவிரவாதியானார்? புர்ஹானின் வயதையொத்த காஷ்மீரத்து இளைஞர்கள் புர்ஹானை ஏன் ஆராதிக்கிறார்கள்? குண்டடிபட்டுச் செத்துப்போவோம் அல்லது கண்களை இழந்து வாழ்நாள் முழுக்க குருடனாய்த் திரிவோம் அல்லது தனிக் கொட்டடிச் சிறையில் அடைக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், கையில் கற்களோடு தெருவில் இறங்கி இராணுவத்தோடு ஏன் மோதத் துணிகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான காரணங்களை காஷ்மீரில் இந்திய அரசுதான் ஒவ்வொரு  நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனை பாகிஸ்தானில் தேடி பயனில்லை.
காஷ்மீரில் 1989-ல் வெடித்த ஆயுதப்போராட்டம் அடுத்த பத்தாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பிறகு, அங்கே அமைதி திரும்பி விட்டதாகவும், காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களது எடுபிடிகளும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 2002, 2008 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அமைதிக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன. ஆனால், இந்த அமைதி காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை எந்தவிதத்திலும் மழுங்கடித்துவிடவில்லை என்பதை 2008-லும், 2010-லும் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.
2008-இல் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு, அந்த ஆண்டு வரவிருந்த தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது.


இந்தத் தடையைஎதிர்த்து”ஜம்மு-காஷ்மீர் பகுதியை, ஆசாத் காஷ்மீரோடு இணைக்கும் சாலைகளைத் திறந்துவிட வேண்டும்; அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” ஆகிய மூன்றுஅரசியல் கோரிக்கைகளை முன்வைத்து காஷ்மீர்பள்ளத்தாக்குமக்கள்நடத்தியபோராட்டத்தை ஒடுக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர்.இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து காஷ்மீர் முசுலீம்கள் போராடியதையடுத்து, காங்கிரசு கூட்டணி அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக ஊதிப் பெருக்கிய ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கும்பல், காஷ்மீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை ஏவிவிட்டது.

2010-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து வந்த டுஃபாயில் மட்டூ என்ற சிறுவன் அரசுப் படையினரால் அநியாயமாக, தெருநாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 120 பேர் கொல்லப்பட்டதோடு, அப்போரட்டத்தில் கலந்துகொண்டு, அரசுப் படைகளின் மீது கல்லெறிந்த ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களும், 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் ஒருமுறை போலீசு நிலையத்தின் வாசலை மிதித்துவிட்டாலே, அதோடு வாழ்க்கையே முடிந்துவிடும். குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், போலீசார் கூப்பிடும்போதெல்லாம், அது இரவோ, பகலோ மறுக்காமல் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். போலீசு நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்புகளை, அடி உதை உள்ளிட்ட சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
காஷ்மீரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நிலைமை, காஷ்மீரிகளுக்கு இரண்டு வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்று, அவர்கள் போலீசின்-இராணுவத்தின் ஆள்காட்டிகளாக மாற வேண்டும் அல்லது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்குத் தனது அண்ணனைப் பறிகொடுத்த, அரசுப் படைகளின் சித்திரவதைகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளான புர்ஹான் வானி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். போராளிஅமைப்புகளிலிருந்துவிலகி, போலீசிடம் சரணடைந்தாலும், அவ்வாறுசரணடையும்இளைஞர்கள்அமைதியாக வாழ்வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்பதற்கு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குரு ஓர்எடுத்துக்காட்டு.

ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதியான புர்ஹான் வானி, தான் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது இயக்கம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது. யாத்திரை செல்வது அவர்களின் உரிமை, தங்களது மதக் கடமையை நிறைவேற்றுவதை நாங்கள் மட்டுமல்ல, எதுவும் தடுக்காது” என குறிப்பிட்டுள்ளார். அதே அறிக்கையில், “காஷ்மீர் பண்டிட்டுகள், தமது சொந்த ஊருக்குத் திரும்புவதோடு, காஷ்மீர் முசுலீம்களுக்கு அருகிலேயே பழையபடி வசிக்கலாம்; அதற்கு மாறாக, இசுரேலில் யூதர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் முயற்சியை எதிர்க்கவே செய்வோம்” என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த இளைஞனை நாட்டிற்கு எதிரான ஒரு பெருந்தீமை போலச் சித்தரித்துக் கொன்று போட்டுவிட்டது, மோடி அரசு. அதனைக் கண்டித்தும், தங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடத் துணிந்த காஷ்மீர் மக்களின் மீது கொடிய “பெல்லட்” தாக்குதலை நடத்தி, கிட்டதட்ட 50 பேரைச் சாகடித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண் பார்வையைப் பறித்துக் குருடாக்கி, ஆயிரக்கணக்கானோரைக் கொடுங்காயப்படுத்தி, இந்து தேசிய அரசு பயங்கரவாதம் தனது இரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது


puthiya-jananayagam-august-2016-back



நன்றி! வினவு..

வியாழன் 25 2016

குண்டுகளைவிட.... கற்கள் வலிமையானவை...

காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது.

புர்ஹான் வானி
புர்ஹான் வானி

புர்ஹானி வானி கொல்லப்பட்ட மறுநாள் தொடங்கி கடந்த இருபது நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பத்து மாவட்டங்களை ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ் கொண்டுவந்து, மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்த பிறகும்; தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்களை அனைத்தையும் முடக்கிய பிறகும்; காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை விதித்து, அவற்றை முடக்கிய பிறகும்; ஏறக்குறைய ஐம்பது காஷ்மீரிகளை சிறிய ரக குண்டுகளால் (pellet guns) சுட்டுக் கொன்ற பிறகும்; இக்குண்டுகளால் தாக்கப்பட்டோரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கண்பார்வையை இழந்து, குருடர்களாக ஆக்கப்பட்ட பிறகும்; ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தி, அவர்களை முடமாக்கிய பிறகும்; பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய காஷ்மீர் மக்களின் போராட்டம் தணிந்துவிடவில்லை.


இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின்  குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளில் உள்ள கற்கள் வலிமையானவை என்பதை காஷ்மீர் பள்ளத்தாக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி வருகிறது. ஒப்பீட்டுரீதியாகச் சொன்னால், பாலஸ்தீன மக்கள் யூத இனவெறி இசுரேலிய அரசுக்கு எதிராக நடத்திய இன்டிஃபதா போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை காஷ்மீரத்து இளைஞர்கள் இந்து பாசிச இந்திய அரசுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள்.

நன்றி! வினவு.

புதன் 24 2016

இந்தீயாவில் மீண்டும் மனுதர்ம ஆட்சி...!!!

 புதிய கல்வி கொள்கையல்ல
கல்வி மறுப்பு கொள்கையால்
ஐந்தாம் வகுப்பிற்கு மேல்
தொழிற் கல்வி என்பதன்
மூலம் சாதித் தீண்டாமையை
நிலை நாட்டும் குலக்கல்வி

பெண்களுக்கு டி.டி.எச் மூலம்
வீட்டிலேயே கல்வி அளிப்பது
என்பது ஆணாதிக்கச் சமூகச்
கொடுமையின் கீழ்  அடிமைப்
படுத்திக் கொள்ளும்  சதி...

சூத்திரனுக்கு எதுக்கு கல்வி..?
காசு இல்லாதவனுக்கு எதுக்கு கல்வி  ?

இந்தீய சேட்டுகள்-பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்
சதித் திட்டத்தால் இந்தியாவில்

மீண்டும் மனுதர்ம ஆட்சி..!
மீண்டும் காலனிய ஆதிக்கம்...!

புதிய கல்விக் கொள்கை - 2015
படம்-வினவு

திங்கள் 22 2016

ஒரு பூகம்பம் என்று ஒன்று வந்தால்.......




தெய்வங்கள் பெயரைச்
சொல்லி கோல்
ஆட்டும் இந்திய
திருடர் நாட்டில்

பழனிக்கும் சபரி மலைக்கும்
மாலை போட்டும்
மாலை போடாலும்
இருக்கும் உத்தம
பக்தி மான்களும்

தெருவுக்கு ஒரு
கோயில் கட்டி
அதற்கு ஆடியில் 
கடவுளின் வழிபாடு
என்று சொல்லி
தெரு ரோட்டையே
மறித்து பக்தியை
காட்டி ஆட்டம்
போடும் பக்தர்களும்
பக்த கேடிகளும்

ஒரு பூகம்பம்
என்று ஒன்று 
வந்தால் அந்த
பக்தி மான்களும்
பக்த மாக்களும்
பக்த கேடிகளும்
உடனே ஓடி
ஒளிவது கடவுள் 
குடி இருக்கும் 
கோவிலுக்கு உள்ளே..
அல்ல அல்ல

அவர்கள் அனைவரும்
பதறிஅடித்து 
நான் முந்தி
நீ முந்தி
என்று ஓடி 
வந்து நிற்பது 
நடுத் தெருவுக்குதான்..

ஞாயிறு 21 2016

பவனி வரும் அவர்கள் நீதிபதிகளாம்..............


நெடி உயர்ந்து
பிரமாண்டமாக நிற்கும்
கட்டிடங்கள் அவை
நீதி மன்றங்களாம்
அங்கு டவாலி
மணி அடித்து
கூவிக் கொண்டே
முன் செல்ல
பின் பரி
வாரங்கள் புடை
சூழ கருப்பு
அங்கிக்குள் புகுந்து
கொண்டு காலனிய
ஆதிக்க பந்தாவோடு
பவனி வரும்
அவர்கள் நீதிபதிகளாம்.......
நன்றி!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...