ஆத்திரத்தை அடக்கி
ஆளுகிறவன்
மூத்திரத்தை அடக்க
முடியாமல் ஒதுங்க
இடம் தேடி
அலைகிறான் ...
![]() |
2020 ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை என் பக்கத்து வீட்டுக்காரன் எம்பிஏ படித்தவன். சங்கி ஸ்கூலில் வேலை பார்ப்பவன். சங்கியாக மாறி என்மீது அபண்டமாக பழி சுமத்தி புகார் செய்து, சங்கி ஸ்கூலின் பிரமுகரின் சிபாரிசை தலை மேல் ஏற்று அவசர போலீஸ் 100க்கு போன் செய்து. சட்டத்துக்கு புறம்பாக. சிவில் வழக்கில் மூக்கை நுழைத்து எனக்கு பல வழிகளில் செலவையும் இம்சையும் அழித்தது. என் பகுதியை சேர்ந்த எடப்பாடி போலீஸ்.
2021ஆண்டு ஆகஸ்டு மாதம்...... என் மீது புகார் கொடுத்த அதே சங்கியானவன் தன் சித்தப்பனின் மகனை தூண்டிவிட்டு, என்னை தரக்குறைவாக பேசியும். என்வீட்டு பாத்ரும் அடைப்புகளான தட்டிகளை கிழித்தும் கம்புகளை உடைத்தும் நான் சற்றும் எதிர்பாரக்காத வகையில் என்னை அடித்தும்விட்ட சங்கியின் சித்தப்பா மகன் மீது , நான் 100க்கு போன் செய்தும் தாமதமாக வந்த போலீஸ் அவனை கைது செய்யாமல் என்னை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லிவிட்டு.. அவனை பத்திரமாக அனுப்பிவிட்டது. கேட்டால் அவன் புல் போதையில் இருக்கிறான் என்றது. காவல் நிலையத்தில் புகார் செய்து நாலு நாட்களுக்கு என்னை அலையவிட்டு, பின் அவன் விசாரணைக்கு ஆஜராகததால் அவனை விசாரனைக்கு ஆஜராகுமாறு அவனுக்கு அழைப்பானை அனுப்பியுள்ளது மு.க. ஸ்டாலின் போலீஸ்
மறுமணம் பாவமல்ல...
மறுமணம் என்பது மாபெரும் பாவமல்ல
மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல
காமத்தில்தான் ஆண்களின் பங்கு
நாங்கள் காலமும் செய்ய
இங்கு ஆயிரம் உண்டு
பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றுமில்லை
உள்ளன்பு உயர் தியாகம்,
இவை இன்றி வேறில்லை
மகர் கொடுத்து பெண்ணெடுத்து
மாடு போல நடத்துபவனை
நெஞ்சை ஏறி மிதித்து
மீண்டு வந்தால் பாவமில்லை.
நாங்கள் கட்டிலை அலங்கரிக்கும் பொருளில்லை
நீங்கள் காத்தில் விளையாடும் பொம்மை இல்லை
சமுதாயம் தூற்றும் என அஞ்சி கொண்டு
சாகும்வரை உரிமை இழக்க
நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை
உள்ளத்து உணர்ச்சிகளை புரியாமல்
வெறும் உடல் தின்னும் மிருகத்தை
கட்டிக் கொண்டு பண்பாடு கலாச்சாரம்
என்று சொல்லிக் கொண்டு நாங்கள்
படும்பாட்டை சரி செய்யா சமுதாயமே!
வந்துவிட்டு, உண்டுவிட்டு சென்று விடுவீர்
எங்கள் வாழ்க்கை வீணாய் போய்விட்டால்
நீயா தருவீர்...?? காமத்தில் மட்டும்தான்
ஆண்களின் பங்கு.. நாங்கள் காலமும்
செய்ய இங்கு ஆயிரம் உண்டு
மெட்டி போடு,
மேளம் தட்டி ,மேடை மீது,
தாலி கட்டி கையைப் பிடித்தவன்
கயவன் என்றால் நானா பொறுப்பு???
முதல் வாழ்க்கை முறிதல் பாவமில்லை
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை
மனம் பார்த்து மனம் கொள்ளும் ஆண்களின்
கூட்டம் மறுமணம் ஆணினும் கை பிடிப்பவன்
ஆண்டவனின் தோற்றம், திருமணம் தோற்பதால்
வாழ்க்கை ஒன்றும் இருளல்ல.........
மறுமணத்தை தேடும் பெண்
மட்டமான பொருளுமல்ல
நாங்கள் வாழ்வில் தடுக்கித்தான் போனோம்,
தவறி ஒன்றும் போகவில்லை,
தேற்றாவிடியினும் பரவாயில்லை
தூற்றாமல் செல்லுங்கள்
ஓஷோ- --தமிழ்
.
.
டீ கடைக்கு
எதிரே.. சிசி கேமரா
பொருத்தப்பட்டதால் செனட்
சபை கலைக்கப்பட்டது..
----------------
செனட் சபை
கலைக்கப்பட்டதால்
வருமானமின்றி
டீ கடை
மூடப்பட்டது....
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...