பக்கங்கள்

வெள்ளி 21 2014

இந்தியாவின் ஆபத்தான ஆறுகள்..ஆறு....???




Cauveri in Trichy.jpg

அனு உலைக்கு எதிராக இந்தியாவின் காந்தி கண்டுபிடித்த அமைதிவழியில போராட்டத்தை நடத்தி அந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் இந்திய அரசின் கெண்டைக்கால் மயிரைக்கூட அசைக்க முடியாது என்று நிருபித்தவர்கள்.

கடைசியில்  டெல்லியில் 49 நாட்கள் ஆண்டும் எதுவுமே செய்ய முடியாமல்  ராஜினாமா செய்து பெருமை பெற்று ஜனநாயகத்தை தூக்கி  நிறுத்த , எளிய தமிழர்களை இளிச்ச வாயர்களாக ஆக்கும் ஆ...ம்.. ஆத்மீ கட்சியில் இணைத்துக் கொண்ட அனுஉலைக்கு எதிரான போராட்டகுழு

தமிழ்நாட்டில் உள்ள   ஆறு ஆறுகளை ஆபத்தான ஆறுகள்   என    பட்டியலிட்டுள்ளது.

அந்த பட்டியலில் உள்ள இந்தியாவையும் தமிழ்நாட்டையும்  ஏற்கனவே நாசப்படுத்திய  ,இனி படுத்த போகும் ஆறுகள். இவைகள்தான்.

காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக, வலது கேப்மாரி,இடது கேப்மாரி,  முதலிய கட்சிகள்தான்.

(இவைகளுடன் அந்தந்த கிளை ஆறுகளும்  ஆபத்தான ஆறுகளுடன். சேர்ந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்)

இந்த எளிய மக்கள் கட்சிதானா !!அம்மாம் பெரிய ஆறுகளை தடுத்து நிறுத்தப்போகுது.......????

 ஆற்றின் போக்கையே தடுத்து நிறுத்த போவதாக சவால் விட்ட எளிய மக்கள் கட்சி டில்லியிலுள்ள ஆறுகளையே தடுத்து நிறுத்த முடியல.............

இது எப்படி தமிழ்நாட்டு ஆறுகளை தடுத்து நிறுத்தப்போவுது. என்னதான்  அனு சக்திக்கு எதிரானவர்கள்  உண்மை அறிக்கை விட்டாலும் ஆற்றில் விழந்த மக்களை கரை சேர்க்கத்தான் முடியுமா??

நூறு பலசாலிகளை ஒல்லியான கதாநாயகன் அடித்து வீழ்த்துவது போல தமிழ் நாட்டிலேயும்   ஒருவாட்டி  பாக்கலாம்.

வியாழன் 20 2014

சாதிவெறியர்களின் வக்கீரமான கொடூரங்கள்................

ta.wikipedia.org -




பெண் நிழலில் வாழ்ந்து போ…
OlehArulezhilan






தமிழ்காரன்.
































மகிழ்நன் பா.ம-ன் படம்.
மகிழ்நன் பா.ம சேர்த்துள்ளார் — Jagan Michael மற்றும் 7 பேர் பேர்களுடன்
காவி மதவாத கும்பல்கள் நம் எதிரிகள்.

கொஞ்சமாவது சுயமரியாதை என்பது இருந்தால்...

இந்த கும்பலுக்கு வாக்களியாதீர்கள்...

தமிழக மண்ணில் வேர் பாய்ச்ச விடாதீர்கள்.
=========================================

எத்தனைபேருக்கு தெரியும் இந்த கொடுமை ?? அன்று குமரி மண்ணின் மைந்தர்களை( இன்று இந்து என கூறி கொள்ளும் மதம்) அடிமை படுத்தியது!! உறவுகளே சிந்தியுங்கள்!!

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று.

இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான்(சாணார் ,புலையர் ,.....) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.

சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

தாலி அறுத்தான் சந்தையில் மேலாடை அணிந்து சென்ற பெண்களின்,தாலி அறு தெறிந்தும் ,மேலாடைகள் கிளிதெறிந்தும், மார்பகங்கள் வெட்டி விசப்பட்ட கொடுமைகளும் எத்தனை பேருக்கு தெரியும் ?

நானும் என் அப்பச்சி (தாத்தா)துண்டுகள் கட்டி திரிந்ததை பார்த்தவன் !! நானும் சாதி கொடுமையால் சில உயர் சாதி இல்லத்தில் சிரட்டையில் தண்ணிர் குடித்தவன் !! இந்த நிலையை மறந்து, படித்தோம், சம்பாதிக்கிறோம் என்பதால் வரலாறை மறக்கலாமா ? மீண்டும் இந்த கொடுமை தலை தூக்கிட மதவாத கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் !!

நன்றி : Marshal Nesamony

பெண்  மக்களை மேல் சட்டை கூட அணிய விடாமல்  வக்கிரம் பிடித்த ஆணாதிக்க வெறிக்கும் சாதிவெறிக்கு. உதாரணம்தான் மேலே காணும் படம்.

 சாதிவெறி வாசிகள் ரெம்பவும் கொடூர குணமும் வக்கிர எண்ணமும் கொண்டவர்களாகத்தான் வெ்வவேறு வடிவங்களில்  இன்னமு்ம் இருக்கிறார்கள.

புதன் 19 2014

ஓட்டு போடச் சொல்லும் அய்யாமார்களே!!!

உயிராதாரமான அக்கறைக்குரிய பிரச்சினைகள் என்று கருதும் விவகாரங்களில் வாக்குறுதிகள் தரும் இந்தக் கட்சிக்கு வாக்களித்தால்.

வாக்குகளில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் போட முடியாது.

கம்பெனி-நிறுவனச் சட்டத்தில் உள்ளதைப்போல ஒப்பந்த மீறல்,நம்பிக்கை தூரோகம் என குற்றஞ்சாட்டி வழக்கு போட்டு,பொயய்யான வாக்குறுதி அளித்த கட்சியை தண்டிக்கவும் முடியாது.

அப்படியே! ஊழல் செய்தவர்களை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது வழக்கு நடத்தி இந்த நூற்றாண்டுக்குள் விசாரனை நடத்தி அவர்களை தண்டித்துவிட முடியாது.

இப்படி முடியாது,முடியாது,முடியாது எதுவுமே முடியாத போது  இந்திய போலி ஜனநாயகத்தை  பாதுகாக்க..ன்னு  சொல்லி ,எதுக்குய்யா....... ஓட்டு போடுங்க..........ஓட்டு போடுங்கன்னு.  கூவுங்றீங்க..............

செவ்வாய் 18 2014

சொன்னா...நம்ப மாட்டீங்க.....இதுதான் உண்மை....!!!

என் தொழிலில் நிறைய வேலை வரும்போது
செலவும் வருமானத்துக்கு அதிகமாகவே வந்து விடுகிறது.

போன்பில்,கரண்ட்பில்,அரிசிசெலவு,காய்கறி செலவு
முன்பு வாங்கியிருந்த கடனுக்கான வட்டிச்செலவு

இப்படியாக வர்ர வருமானத்துக்கு அதிகமாகவே
செலவு வந்து என் கழுத்தை நெருக்குது

எப்படித்தான் குன்னி குன்னி பார்த்தாலும்
செலவுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

ஏனென்றால் அந்தச் செலவுகள் எல்லாம் மிகவும்
அத்தியாவசியமானவை செலவுகள் ஆகும்.

வாடகையில்லாவீட்டைத்தவிர குடும்பவழி
சொத்து ஏதும் கிடையாது.. அந்த வீட்டீன் மேல்
என் தந்தையாரின் பன்னையார் போட்ட வழக்கும்
“வாய்தாராணி” வழக்கு போல்  பன்னையார் செத்தும்
 வழக்கு நடத்திய வக்கீலும் செத்தும் பதினேழு வருடத்தை
கடந்து பதினெட்டாம் வருடத்தை நோக்கிச செல்கிறது.

என்னிடம் பீடி,சிகரெட்,காபி.டீ ,டாஸ்மாக்போன்ற செலவுகள்
ஏதும் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்று
வரைக்கும் கிடையாது. இனிமேலும் தொடர்வதற்க்கான
வாய்ப்பும் இருக்காது. கிடைக்கவும் கிடைக்காது....

இப்படியும்  இருந்தும் அடிக்கிற வெய்யிலுல
பச்சை புல்லுகூட கருகி தவிக்கிறபோது
விவைாசி உயர்வினாலும் வேலையில்லா
திண்டாட்த்தினாலும் நானும் தவிக்க வேண்டியதாகிறது.

வந்த வேலயை முடித்துவிட்டு. அடுத்து வர்ர வேலை
இல்லாம சுனங்கிப் போயி கிடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நேரம் பாத்து நேரத்துக்கு கிடைக்காத உணவை
நேரத்துக்கு சாப்பிடாததால் வந்த வயிற்றுவலியாலும்,
தலைவலி.நெஞ்சுவலியாலும் வரும் நோய்களை
தாங்க முடியாமல் , மருத்துவ சிகிச்சைக்கு கடன் கிடைக்காம
அல்லாட வேண்டியிருக்கிறது.

இந்த நிலமை சாபமா? வரமா? ன்னு யோசிப்பபோ....
ரெண்டுமே....... இல்லைன்னு தோணுச்சு....................

என் நிலமை எனக்கு மட்டுமா? இல்ல...... பலபேருக்கு இருக்குன்னு
தெரிந்தப்போ.....இந்த நிலமை  விதியா??ன்னு என்று பார்த்தால்

விதியில்லை!! சதியின்னு தலைவலியோடு நச்சுன்னு
மண்டையில வந்து விழுந்துச்சு..................

இந்த சதிக்கு காரணமானவர்கள் யாருன்னு தேடினால்
அவிங்கதான்..................வாரானுக.....பலவித வாக்குறுதிகளோடு
 பல வண்ணங்களில்    உங்களைத்தேடி.........................

திங்கள் 17 2014

இந்த கூத்தையும் பார்க்க வேணும்..........

தேர்தல் கூத்தை கண்டு கொண்டு இருக்கும் நீங்கள் கொஞ்சம் இடை வெளிக்காக இந்தக் கூத்தையும் பார்க்க வேணும்.



நக்கீரன் சுற்றுலா.
படத்தில் உள்ள கூத்த பத்தி... நான் என்னத்த சொல்ல..............நீங்கதான் சொல்லனும்.

ஞாயிறு 16 2014

நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் சொல்லுங்கண்ணே.....




அண்ணே.. நானு முதல் முறையாக வாக்காளாராக ஆகியிருக்கேன் அண்ணே. நடக்கப்போற  ஜனநாயகத் தேர்தல்ல...........மனதில் உறுதியுடனும் மனசாட்சிபடியும் கண்ணியத்துடனும்  வாக்களித்து இந்திய ஜனநாயகத்தை தலைக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை வச்சு சொல்லுறாங்கண்ணே அதனால நிக்கிற பல கட்சி வேட்பாளர்கல்ள  நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க ஒரு எளிமையான டிப்ஸ்சு கொடுங்கண்ணே...........

என்னப்பா ..... நல்ல பொருளை கண்பிடிக்க சொல்லும் நுகர்வோர்  மாதிரி, வேட்பாளர்களை கண்பிடிச்சு சொல்லுங்க என்று கேட்குற....

ஆமாண்ணே, அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை ஓட்டு கேட்டு  வருகிறவங்க நல்லவங்களா? கெட்டவங்களாஃ? பாத்து சிந்தித்து ஓட்டு போடுங்கன்னு சொல்றாங்கல... பொருள வாங்குறது விட  ஓட்டு போடுறது ஒரு படி மேல  இல்லீங்கலாண்ணே

ஓ....அப்படியா........ அட போப்பா...“கரையான் புற்றெடுக்க,கரு நாகம் புகுந்த கதையா” எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கன்னு கண்டுபிடிக்க முடியாமத்தான். நானு ஓட்டு போடுறதையே விட்டுட்டேன்ப்பா..........

நிஜமாவாண்ணே.... ஓட்டு போடலைன்னா எதுவும் ஆகாதாண்ணே......

ஒன்னும் ஆகாது... இந்தா எனக்கு விவரம் தெரிஞ்சு ஓட்டுரிமை பெற்ற நாளிலிருந்து ஓட்டே போட்டதில்லைப்பா........... நானு ஓட்டு போடலைன்னு எந்த வேட்பாளர்களும் பதவி ஏற்க மாட்டேன்னு சொல்லலைப்பா...

ஆமா, டிப்ஸ்சுன்னு சொன்னியே,அது என்னப்பா...?

அண்ணே,ஓட்டல்ல சாப்பிட்டு  சர்வர்க்கு தர்ற டிப்ஸ்சு இல்லேண்ணே.நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க எளிமையான வழியை சொல்றதுக்கு தானே டிப்ஸ் சு.......

அட,...டிபஸ்சுக்குகூட ரெண்டு அர்த்தம் இருக்கா...........!!

ஆமாண்ணே.,

ஆமா..தம்பி..ஓட்டு போடு,மனசாட்சிபடி ஓட்டுபோடு,டிப்ஸ் வாங்காமல் ஒட்டு போடுன்னு சொல்றவங்க யாரும்.நல்ல வேட்பாளரை சுட்டிக்காட்ட டிப்ஸ் கொடுக்கலையா.....தம்பி........

இல்லண்ணே..., நான் படிக்கும்போது மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாதன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னவங்களும் சரி, மூச்சுக்கு முப்பதாயிரம் தடவை நல்லவங்களுக்கு ஓட்டு போட்டு ஜனநாயகத்தை தலைக்க சொன்னவங்களும் சரி,... யாருமே நல்ல வேட்பாளரை கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்ச சொல்லலேண்ணே.........அதனால யாருக்கு ஓட்டு போடுறதுன்னு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்குண்ணே..............எனக்கு,

நல்லவுக யாருன்னு சொல்லாம ஓட்டு போடு. ஓட்டுபோடுன்னு புலம்புகிறாங்கண்ணே...........

சரி, முதல் முறையா.....ஓட்டுரிமை வாங்கியிருக்கே...யாருக்காவது போட்டு தொலைக்க வேண்டியதுதானேப்பா............

அதெப்படிண்ணே.......வாக்காளர் கடமைன்னு ஒன்னு இருக்குலேண்ணே.....
அந்தக் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டாமண்ணே..... என்னோட படிச்ச பயல்கள பாதிபேரு..டாஸ்மாக் கடையிலும் சினிமாகாரி காரன்கள் பின்னாடியும் விழுந்து கிடக்குறாங்கண்ணே......... அவிங்கள மாதிரி......விழுந்து கிடக்கச் சொல்லுறிங்களா.............???

சே.சே....அந்த அர்த்தத்துல  சொல்லலப்பா....சரி உங்க குடும்பத்துல் இருக்கிறவங்க போன தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட்டாங்க.........

எங்க வீட்டாளுக்கெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பாத்தெல்லாம் ஓட்டு போடத் தெரியாதுங்கண்ணே........... டீ.வியில  யாரு அதிகமாக தெரியுறாங்களோ யாரு இலவசம் அதிகமா தர்ராங்களோ....அவுக சார்ந்த கட்சிக்கு தாண்ணே ஓட்டு போட்டு இருக்காங்க......

அட,உங்க வீட்டு அனுபவம் அப்படியா...!!! சரி.... உன் அனுபவத்திலே எந்தக் கட்சி நல்லக் கட்சியா தெரியுதுன்னு ஒன்ன சொல்லேன்.

அது தெரியாமத்தாண்ணே..ஒங்ககிட்ட டிப்ஸ் கேட்டேன்.

சரி..தம்பி..........இப்பத்தான் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என்று  நோட்டா பொத்தான் வந்திருக்குல்ல....அத அமிக்கிறு... இந்த தேர்தல்ல அவரு ஒருத்தருதான்  நல்ல வேட்பாளரா தெரியுறாரு......!!!

அப்போ.............நோட்டாவுக்கே...ஓட்டு போட்டுலாம்ண்ணே......

 இருப்பா........அந்த வேட்பாளரு மேலேயும் சந்தேகமாக இருக்குதுப்ப............ இந்த நொட்டாவானது  புதிய மொந்தையில் பழைய கள்ளா தெரியுதுப்பா.........அழுகி நாறும் பிணத்திற்கு அலங்காரம் செய்வது போல் இருக்குதுப்பா இந்த “நோட்டா”

?????????????ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...