பக்கங்கள்

வெள்ளி 16 2017

ஒன்று போனால் இன்னொன்று.............

ஒரு தெருவுல
ஒரு நாயி
இருந்திச்சு அந்த
நாயி தெருவுல
போவோர் வருவோரை
கடிக்க முடியாமல்
குரைத்துக் கொண்டே
இருந்திச்சு அந்த
நாய்க்கு பயந்து
அந்த தெரு
வழியாக போவதை
தவிர்த்த நான்
இன்று மறதியால்
சென்று விட்டேன்
நாய் குரைக்கும்
சத்தம் வரவே
இல்லை சந்தோசப்பட்டு
நடந்த எனக்கு
அது  நீடிக்கவில்லை
வடக்கு திசையிலிருந்து
நெற்றியில் நாமமிட்ட
கொழுத்த நாயொன்று
உறுமிக் கொண்டு
கடிப்பதற்கு நாலு
கால் பாய்ச்சலில்
என்னை நோக்கி
ஓடி வந்தது.

அய்யோ.அய்யோ..
குரைக்காத நாயி
கடித்து விடுமாமே...

புதன் 14 2017

வினா எழுப்ப அனுமதி தந்தால்........

வகுப்பறையில்  ஒரு நாள்
“உயிருள்ளவை நகரும் ”என்றார்
ஆசிரியர்...  அப்போது..

ஜன்னல் வழியே எட்டி
பார்த்த மாணவன் ஒருவன்
“ஸ்கூட்டர் நகர்கிறதே, அதற்கு
உயிர் இருக்கிறதா” என்று
கேட்டான்............

யோசித்தார் ஆசிரியர் பின்
“அதனை உயீருள்ள ஒருவன்
ஓட்ட வேண்டியதாய் இருக்கிறது
என்று விளக்கினார்.............

மற்றொரு மாணவன் நேற்று
மரத்திற்கு உயிர் இருப்பதாக
சொன்னீர்களே! மரம் நகரவில்லையே
என்று கேட்டான்.

ஆசிரியர்  மீண்டும் யோசித்தார்

 வினா எழுப்ப அனுமதி
தந்தால் இப்படி அறிவு
பூர்வமான கேள்விகள் வரும்

என்பதனை தவிர்க்கவே
அதனை அனுமதிப்பல்லை..

கேள்வி கேட்க கற்றுத்தர
வேண்டிய கல்வி இன்று
கேள்விக்கிடமின்றி மக்களை
காயடிக்க பயன்படுகிறது.


நன்றி! வினவு..     கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் நேர்முகத்திலிருந்து

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...