பக்கங்கள்

சனி 21 2014

இந்தியாவை தூக்கி நிறுத்தட்டும் இந்தீ......

படம் புதிய தலைமுறை











தப்புத் தப்பாய் என் மொழிகள்
என் தாய் மொழியில் தேற
முடியா என்னிடம் இடை
சொறுகலாய் ஆங்கிலமும்
இந்தீ யும்...................


வாதியும் தமிழர்
பிரதிவாதியும் தமிழர்
வழக்காடுபவரும் தமிழர்
வாதங்களை கேட்பவரும்
தமிழர்.........


இதில் வழக்கும் வழக்கு மொழியும்
ஆங்கிலமாக கோலோச்சும்போது.
ஆங்கிலத்துக்கு துனையாக இந்தீயும்
அலுவல்.மொழியாக இருந்து---

ஏழு கடல் தூரத்துக்கும்
ஏழுமலை உயரத்துக்கும்-
இந்தீயாவை தூக்கி
நிறுத்தட்டும் ...........

இந்தப் பெருமையில்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழர்கள் முழ்கி திளைத்து
ஆங்கிலத்தையும் இந்தியையும்
ஏற்று தமிழ் மொழியை தாரை
வார்த்து அழிக்கட்டும்.

ஒழிக! தமிழ்!

வாழ்க! ஆங்கிலம்!

வளர்க! இந்தீ!!




வெள்ளி 20 2014

அவர்களின் உலகம் தனி உலகம்!!!

படமsocratesjr2007.blogspot.com









அவர்கள் ஆறுகளை கடந்தார்கள்
மலைகளையும்,பள்ளத்தாக்குகளையும்
இருண்ட காடுகளையும் கடந்தார்கள்

மாநிலங்களின் எல்லைகளை துடைத்து அழித்தார்கள்
அங்கு வழங்கிய மொழிகள் அவர்களுக்கு தடையாக இல்லை

அவர்கள் அந்த மக்களோடு ஒன்று கலந்தார்கள்
அந்த மக்களின் உள்ளங்களை படிக்க கற்றுக் கொண்டார்கள்

 ஆம்...அவர்களின் உலகம் தனி உலகம்.

நன்றி!
விடியல் பதிப்பகம்.

மூடர்கூடத்துக்கு ஆக்டோபஸ் பாதுகாப்பு...

படம்  திருப்பதி ஏழுமலையான்















பாக்கி ஸ்தானின் தீவிரவாத அமைப்புகளின் ஹிட் லிஸ்டில்.ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழு மலை யான் என்ற  வருமானம் அதிகமுள்ள மூடர் கூடம் உள்ளதால். இந்த மூடர் கூடத்தின் பாதுகாப்பை அதிகரிக்க ஆந்திரா முடிவு எடுத்துள்ளது.


ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் ஹைதரா பாத்தில் உள்ள அக்டோபஸ் -ன் தலைமையகம் தெலுங்கானாவுக்கு சொந்தமாகிவிட்டது.

.
தீவிரவாதிகள் மூடர் கூடத்தை தாக்கும் சமயத்தில், அக்டோபஸ் படை பிரிவு உடனே பதில் தாக்குதல் தொடங்கி , உலகை காக்கும் ஏழு மலை யானை பாது காக்க வசதியாக இருக்கும என்பதற்காக, திருப்பதிக்கு அருகில் ரேனி குண்டா விமான நிலையத்தில் ஆக்டோபஸ் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.

400 கமண்டோக்களுடன் 4 பிரிவு ஏற்ப்படுத்தப்பட்டு, அதில் ஒரு பிரிவு மூடர் கூடத்தின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதன் 18 2014

அய்யா.. ...வாஞ்சி நாதனைத் தெரியாதைய்யா, தோழர் வாஞ்சி நாதனைத்தான் தெரியும்மைய்யா!!!!

வருனாசிரமவீரன், சுதந்திர போராட்ட வீரானான கதை என்ற தலைப்பில் முக நூலில் நான் கண்டதையும் படித்ததையும் ஒரு பதிவாக பகிர்ந்தேன்.

அதைப்படித்த வீர வாஞ்சி நாதனின் வழிவந்த புரட்சியாளர் ஒருவர்.  வாஞ்சிநாதனைப் பற்றி ஒனக்கு தெரியுமா என்று  ஒருமையில் கேட்டார்

அவருக்காக. இந்தப் பதிவு....

அய்யா... தெரியாதய்யா............. நீங்க இப்படி கேட்பீங்கன்னு.... வருனாசிரம வீரன் வாஞ்சிநாதனை நிச்சயமாக தெரியாதய்யா..............

 மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழ்நாடு-ன்  மதுரைக்கிளை இணைச் செயலாரும்  தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையின் வழுக்குரைஞராக இருக்கும் தோழர் வாஞ்சி நாதனைத்தானய்யா எனக்கு தெரியும்மய்யா..............

அய்யா... தெரியாதுய்யா.... ஆஷ் துரையை சுட்ட வாஞ்சி நாதனை..

தனது அரசியல் செல்வாக்கால்,பணபலத்தால் கடந்த  20 ஆண்டு காலமாக தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி மாவட்ட முழுவதையும் தனது கட்டப்பாட்டில் வைத்துக் கொண்டு தாண்டவமாடிய தாது மணல் கொள்ளையனின் ஆட்டத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்த  தோழர் வாஞ்சி நாதனைத்தானய்யா தெரியும் என்றபோது.............

அந்த வர்னாசிரமத்தின் வீர புருட்சியாளர்  இந்தா வர்ரேன்னு சொல்லாம போயிட்டாரு..........ங்கய்யா.......... திரும்பி வந்தா... அவருக்காக....


தோழர் வாஞ்சிநாதனை மேலும் தெரிந்து கொள்ள..




http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90555
மண்ணின் மைந்தன்!
இயற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை எதிர்த்து இடைவிடாமல் போராடும் வாஞ்சி நாதன், 'மனித உரிமைப் பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பின் மூலம், கடந்த ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்த வழக்கறிஞர். தென்தமிழகக் கடலோரப் பகுதியில் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளைக்கு எதி ராகச் செயல்படும் இவரது தலைமையிலான உண்மை அறியும் குழு, தாது மணல் ஆலைகளுக்குள் புகுந்து, அதன் செயல்பாடுகளை முதன்முதலாக உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயற்கை அன்னை மெச்சும் மண்ணின் மைந்தன்... இந்த வாஞ்சிநாதன்!
 — Vanchi Nathan உடன்



செவ்வாய் 17 2014

ஒரு வருணாசிரம வீரன் சுதந்திர போராட்ட வீரனான கதை.

முக நூலில் .......கண்டதும் படித்ததும் 


ViduthalaiEpaper -உம், Prince Ennares Periyar -உம் யுவான் சுவாங்-இன் புகைப்படம்-இனைப் பகிர்ந்துள்ளனர்.
யுவான் சுவாங் என்பவர் Nazar Frnd மற்றும் 5 மற்றவை ஆகியோருடன்
ஆஷ் துரை எனும் கொடுங்கோலனை வீரவாஞ்சி சுட்டு சாய்த்தான்,இது வரலாற்றுப் பதிவு.ஆனால் மறைக்கப்பட்ட வரலாறு என்று இணையதளம் முழுவதும் வேறு மாதிரியாக செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன,அயோத்திதாச பண்டிதரும் அவ்வாறே பதிவு செய்துள்ளாராம்.
குறிப்பிட்ட சாதியினரும்,கடவுள் சிலைகளும் மட்டுமே குற்றால அருவியில் குளிக்கலாம் என்ற நிலையை மாற்றி,இயற்கையை அனுபவிப்பதில் என்ன பாகுபாடு என்று கேட்டு எல்லோரையும் அருவியில் குளிக்க அனுமதிக்க உத்தரவிட்டாராம்.
தன்னுடைய அலுவலக சிப்பந்திகள் வர்ண அடிப்படையில் பிரிந்து அமர்ந்து உணவு உண்பதை மறுத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுமாறு உத்தரவிட்டார்.
அலுவலகத்தில் எல்லோருக்கும் பொதுவாக குடிநீர் பாத்திரம் ஏற்பாடு செய்தார்.
பிரசவ வலியால் துடித்த அருந்ததியினப் பெண்ணைக் காப்பாற்ற பலத்த எதிர்ப்பை மீறி அக்ரகாரம் வழியே அப்பெண்ணை ஆஷ்துரையும் அவர் மனைவியும் கொண்டு சென்றனர்,குதிரை வண்டியை மறித்த இளைஞர்களை சாட்டையால் விளாசினார்,அடிவாங்கி ஓடிய இளைஞர்களுள் ஒருவர் வாஞ்சிநாதன் என்கிறது ஒரு செய்தி.
வாஞ்சியின் இறுதிக் கடிதத்தில் இருக்கும் பஞ்சமன்,கோமாமிசம் உண்ணும் மிலேச்சன் போன்ற வார்த்தைகளும் வாஞ்சியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலே கூறிய செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரையை சிறப்பிக்க சமத்துவநாயகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.
இன்று ஆஷ்துரையின் நினைவு நாள்,சமத்துவ நாயகனை போற்றி வணங்குகிறேன். Prince Ennares Periyar திராவிடப் புரட்சி

மக்களை கொல்லும் முதலாளிகளிடத்தில் என்னவெல்லாம் இருக்கிறது.



 நிறைய இருக்கிறது அவற்றில் முக்கியமான  சில.............

ஒன்னு. அவர்களிடத்தில் மிகுதியான பணம் இருக்கிறது

ரெண்டு. அவர்களிடத்தில்  கல்வியும் அறிவும் இருக்கிறது.

மூனு.  அவர்களிடத்தில் கடவுள்- மதம் என்ற ஏமாற்று வித்தை இருக்கிறது.

நாலு.  அவர்களிடத்தில் பொய்யை மெய்யாக்கும் பத்திரிக்கை மற்றும்    

ஊடகங்கள்  தொலை காட்சி இருக்கிறது

அஞ்சு.. அவர்களை காக்க நீதி மன்றங்களும், ஆயுதம் தாங்கிய
முப்படைகளும் இருக்கிறது.

ஆறு.. அவர்களுக்காக சேவை செய்ய அரசியல் கட்சிகள் இருக்கிறது.

ஏழு.. அந்த அரசியல் கட்சிகளுக்காக ஓட்டு போடுவதற்கு படிப்பறியா- படித்தறிந்த.மயங்கும் கூட்டம் இருக்கிறது.


திங்கள் 16 2014

புதிய தொல் பொருள் ஆரயாச்சியாளர் “நான்தான் பாலா”


உலகில் உள்ள மொழிகள் எல்லாம்  சமஸ் கிறுதா மொழியில் இருந்தே தோன்றின. தமிழ் மொழியும் செம் மொழியாவதற்கு முன்பே , சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தோன்றின என்று புதிதாக வந்துள்ள தொல்பொருள் அகழ்வராய்ச்சியாளரான “நான்தான் பாலா”என்பவர் தன் கண்டு பிடிப்பை  கடை பரப்பியுள்ளார்.

இவர்  அகழ்வாராய்ச்சியாளர் ஆவதற்கு முன். தமிழ்நாடு தலைமைச செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக சில வருடங்களாக பணி புரிந்தாகவும்

அதிலிருந்து  சமஸ்கிறுத மொழியாளர்களின் கலைஞானாக ஆகி ,பிசியானதும் அந்த வேலையை உதறித்தள்ளியதாவும் ஆராய்ச்சி  தெரிவிக்கின்றன..

பிறகு “நான்தான் பாலா”வாகி வந்த போது. பண்பலை ஒன்றில் தான் அகழ்வாராய்ச்சின் போது தான் கண்டுபிடித்த மேற்படி உண்மைகளை வெளியீட்டு பரபரப்பை எதிர்பார்க்கிறார்.

மேலும் செய்திகளுக்கு இணைப்பை படியுங்கள்.

.

ஞாயிறு 15 2014

பள்ளிக்கூட த்தில் ஆஜராகமல் டிமிக்கி கொடுக்கும் தோழிகள்..--உருவகக்கதை

www.vinavu.com













வாரத்தின் முதல்நாள் திங்கள் கிழமை என்பதால் அந்த வாத்தியார் தன் வகுப்பறையில் அமர்ந்து  மாணவ-மாணவிகளின் பெயரை அழைத்தபடி வருகைப்பதிவேட்டில் குறித்துக்கொண்டு இருந்தார்.

வாத்தியார் பெயர் சொல்லி அழைக்க, பெயருக்கு உரிய மாணவ -மாணவியர்கள் “உள்ளேன் அய்யா” என்று  சொல்வதன் மூலம்  தங்கள் வந்து இருப்பதை உறுதி படுத்திக் கொண்டனர்.


ஒரு பெயரை வாசித்தபோது “ உள்ளேன் அய்யா” பதில் இல்லாததால் , மூக்கின் நுனியில் வந்து நின்ற கண் கண்ணாடியை ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு  தலை நிமிர்ந்து பார்த்தார்  வகுப்பறை அமைதியாக இருந்தது.

அடுத்த பெயரையும் வாசித்தார். அதற்கும் பதில் இல்லை. அந்த இரண்டு மாணவிகளும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால் மற்ற மாணவ- மாணவிகளிடம்  கடுமையாக நடந்து கொள்வது மதிரி நடந்து கொள்ளாமல், பவ்வியமாக தோழிகளான இந்த ரெண்டு மாணவிகள் வகுப்புக்கு வராதது பற்றி தெரியுமா? என்று கேட்டார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்தான். முதலில் வாசித்த மாணவி ஆஜராகத காரணத்தை  சொன்னான்.

அய்யா, அவுக வீட்டுக்  நீச்சல் தொட்டியில் மீன் பிடிக்கும் பணி   அதிகமாக இருப்பதால் அந்த மாணவி ஆஜராகவில்லை என்றான்.

ரெண்டாவது மாணவியைப்பற்றி கேட்டபோது அந்த மாணவனே ஆஜராகி சொன்னான்.

“ அவுக வீட்டு நீச்சல் குளத்தில் பிடித்த  மீனை ,குழம்பு வைத்து சாப்பிட்டபோது மீன்முள் பற்களில் குத்தி விட்டதால். பற்களில் வலியெடுத்தது. அதனால் வலியை பொறுக்க முடியாததால் பற்களில் ஆப்ரேசன் செய்து உள்ளார்..

 என்னிடமே  எதுவும் பேச முடியாமல் சைகையில்  காட்டியபோது , “உள்ளேன் அய்யா” என்று  நீங்கள் அழைக்கும்போது, எப்படி பேச முடியும் அதனால்  வரவில்லை என்றான்.

அந்த மாணவனைப் பார்த்து வாத்தியார் சொன்னார். பரிட்சை நெருங்குவதால்  யாரும் வகுப்புக்கு வராமல் கட் அடிக்கக்கூடாது என்று போன மாசமே  தலைமையாசிரியர் உத்தரவு போட்டார் அல்லாவா, அதனால அடுத்த தடவையாவது வகுப்புக்கு வரச் சொல்லு என்றார். வகுப்பாசிரியர்.

இன்னொரு மாணவன் எழுந்து சொன்னான். சார், அவன் பொய் சொல்றான் சார், என்றான்  கொடுத்த வீட்டுப்பாடத்த  எழுதல சார். கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றதுன்னு, பயந்துகிட்டு வரல சார். என்றான்.

சார், அவன் பொய் சொல்றான் சார், அவனுக்கு அந்த ரெண்டு பிள்ளைகளும் இவனுக்கு சாக்லேட் தராததால் கொள்மூட்டி விடுறான் சார்.என்றான்.முதல் மாணவன்.

ரெண்டு மாணவர்களும் சொல்வதை கவனித்த வாத்தியார் சரி சரி,   தலைமையாசரியர் சீக்கிரமாக பாட்த்த நடத்தி முடிச்சிறமுன்னு உத்தரவு போட்டு இருக்காருப்பா அதனால,  கொஞ்சம் மனது வச்சு வரச் சொல்லங்கப்பா.....மத்தவங்களுக்கு பள்ளிக்கூடத்து மேல மதிப்பு மரியாதை இல்லாமா போயிடும்ப்பா என்றார். வாத்தியார்.

கடைசி பெஞ்ச் மாணவன் தன் சக மாணவனிடம் புலம்பினான்.

“பார்ரா.......வாத்தியாரின் ஓரவஞ்சனைய.... நாம மட்டும் ஆஜராகலைன்னா வானத்துக்கும் பூமிக்கும்  குதிப்பவரு.......  பெரிய இடத்து பிள்ளைக ன்னதும் குலையுறது...பாருடா.. என்றான்.

நீதி.

இல்லாதவங்களுக்குத்தான் சட்டம் தன் கடமைச் செய்யும். இருக்கப்பட்டவங்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கும்


கூலிங் கிளாஸ் அணியாத மணமகனை தேடும் நடிகை...




சார், நீங்கள் இஞ்சீ னீயரா,அல்லது திபை்பட இயக்கு நாரா, அல்லது தோழிலு அதிபரா...அதோடு கூலிங் கிளாஸ் அணியாதவரா...அப்படி என்றாள். அதிக வசதியுள்ள  நடிகைக்கு மணமகனாகும்  ஒரு வாய்ப்பு  உங்களுக்கும் இருக்கிறது.


மணப்பெண்னான நடிகை உதிர்த்த முத்தங்களை அல்ல, முத்துக்களை படியுங்கள்.

ஒரு ஆணின் கண்களும், உதடுகளும் உண்மையையும் அவரது எண்ணங்களையும் பிரதிபலிப்பதாகும்.

ஒருவர் என்ன நிணைக்கிறார் என்பதை கண்களும் உதடுகளும் காட்டிக் கொடுத்துவிடும். அதனால்தான். எனக்கு மாப்பிள்ளையாக வர தகுதியுள்ள இன்ஜினீயர், திரைப்பட இயக்குநர், தொழில் அதிபர் இவர்களில் கூலிங் கிளாஸ் போட்டு இருப்பவர்களை தவிர்த்து விடுகிறேன்.

குறிப்பு.

அதிக வசதியுள்ள இந்த நடிகைக்கு. அடுத்த ஆண்டு திருமணம் முடிக்க பெற்றோர்களால் முடிவு செய்து இருப்பதால்...

மேற்படி இன்ஜினீயர்,திரைப்பட இயக்குநர், தொழில்அதிபர். கடைசிநேர முடிவினை தவிர்ப்பதற்க்காக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 நிணைவிற்கு...  கூலிங்கிளாஸ் போட்டு, ஜீன்ஸ்பேண்ட் அணிந்து வசதியுள்ள பெண்களை காதலித்து , கல்யாணம் செய்து ,வசதியற்றவர்கள் வசதியானவர்களாக மாறுவதை தவிர்க்கவே, இந்த ஏற்பாடு்

ஆளப்பிறந்தவர்கள்   புரிந்து கொள்க......

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...