பக்கங்கள்

சனி 15 2014

உரிமையை நிலை நாட்டச் சொல்லும் விளக்கெண்ணெய்கள்........





தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய உரிமை.வாக்களிப்பது நமது தலையாய கடமை, நல்லவர்களை.மக்கள் சேவையில் ஆர்வம் உள்ளவர்களை தங்கள் பிரதிநிதியாக அனுப்புவது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை

ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் நல்லவர், சிறந்தவர் என்பதை முடிவு செய்து,அவர்க்கு நமது வாக்கை அளித்து நமது உரிமையை நிலை நாட்டுவோம்.

மக்கள் தீர்ப்பே? மகேசன் தீர்ப்பு? அதனால் நல்லவர்களுக்கே  ஓட்டு போடுவோம். இப்படியாக அடுக்கடுக்காய் வழிகாட்டுதல்கள்.அறிவுரைகள், நெறிமுறைகள்.

இது தேர்தல் திருவிழாவின் போது தூக்கி வீசப்படும் .ஜனநாயகம்,வாக்காளர் உரிமைகள், மகேசன் தீர்ப்புகள், மண்ணு,மட்டை.மசிறு ,மற்றும் மறவாமல் வாக்களிப்போம், ஜனநாயகத்தை காப்போம் இப்படி ஊத்தவாயர்களின் கொள்ளை முழக்கங்கள்.

மண்ணு மட்டை.மசிறு என்று எதை எதையோ சொல்லும் எழுதும் வெண்ணெய்கள் சிந்திக்க விடாமல் தொலைக்காட்சி,சினிமா,டாஸ்மாக்  போதை  சாதி வெறி,மதவெறி,குடி,கூத்தி,களவு கொள்ளை.கொலை போன்ற எல்லா வகையான சீரழிவுகளில் வாக்காளைனை தள்ளிவிட்டும்....

வேலையிண்மை, கல்வியிண்மை,விலைவாசி உயர்வு, வாழ்க்கை நிச்சயமற்ற தன்மை.அடக்குமுறை போன்ற எல்லாவகையான கொடுமைகளிலும் அல்லல்பட்டு சிக்கி பின்னாமாகி தவித்து கிடக்கும் வாக்காளனை.....

சிந்தித்து வாக்காளியுங்கள்.நல்லவரையே தேர்ந்தெடுங்கள், உரிமையை நிலை நாட்டுங்கள் என்று எதை எதையோ சொல்லும் எழுதும் விணக்கெண்ணெய்கள்..ஜனநாயகத்தின் உரிமையை நிலைநாட்ட அந்த நல்லவர். அந்த வல்லவர். இன்னானென்று சுட்டிக்காட்டாமல். சொல்லாமல் இந்த வெண்ணெய்கள் மட்டும்  தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து தவறி ,தப்பித்து ஓடிவிட்டு, உச்சானி மேட்டிலிருந்து பாதுகாப்பாக இருந்து கொண்டு

மதி மயங்கி நோக்காடால் இப்பேவோ,அப்பவோன்னு புலம்பி தவிக்கும் வாக்காளனிடம் வாக்கு அளியுங்கள்.கடமையை செய்யுங்கள் ,ஓட்டு மட்டுமே போட உள்ள உரிமை யை நிலை நாட்டுவோம்  என்று  தங்களின் ஊத்த வாயால்  தேர்தல் திருவிழா சீசனில் ஓதுகிறார்கள்.

வெள்ளி 14 2014

தனித்து போட்டி ஏன்? ஒரு புன்னாக்கு விளக்கம்!!



காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளையும் பாஜகவின் மதவாத கொள்கைகளையும் லெப்ட்டு ரைட்டுகளான நாங்கள் ஆதியிலிருந்தே எதிர்த்தே வந்தோம்.

காங்கிரஸ் பாஜக அல்லாத  ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற பேராசையில் அதிமுகவுடன் மகிழ்ச்சியாக காலில் விழுந்தோம். விழுந்ததோடு அல்லாமல் அதிமுகவை தொங்கோ தொங்குன்னு தொங்கினோம். கயிறு பலமாக இல்லாத காரணத்தால் கயிறு அறுந்துவிட்டது அதனால் எங்களால் மேலும் தொங்க முடியவில்லை.

இருந்த போதிலும்,அதிமுக தலைமை எட்டடி உதைத்து தள்ளியபோதும் அதற்கு மாறாக பதினாறு அடி வேகத்தில் வந்து காலில் விழுந்தோம். கால்களை விடாமல் பிடித்திருந்தும் பலன் ஏதும் இல்லை.

ஏனென்றால்,எங்களைவிட,காலில் விழுந்து தூங்கி விடுபவர்கள் அதிமுகவில் அதிகமிருப்பதால் எங்களை மிதித்தாலும் பரவாயில்லை என்று இருந்த எங்களால் அவர்களுக்கு பயனில்லை என்று தவறாக கணக்கிட்டு விட்டார்கள்.

ஆகையினால், மகிழ்ச்சியாக காலில் விழுந்த நாங்கள்,மகிழ்ச்சியாக கால்களை தொட்டு எழுந்தோம்.

அடுத்த சில தினங்களில் எங்களின் தன்மான சிங்கங்களான லெப்ட்டு, ரைட்டுவின் கொள்கை வீரர்களை அறிவிப்போம், தேர்தல் திருகுவிழா முடிந்த பின்போ, பிரதமர் பதவியின்போதோ அல்லது அடுத்த தேர்தலிலோ நாங்கள் காலில் மகிழ்ச்சியாக விழுந்து எழுந்ததற்கு பலன் இல்லாமலா போகும்?????



புதன் 12 2014

கேட்டாயே..ஆத்தா...நச்..நச்என்று கேள்வி???









காங்கிரஸ“ கட்சியின் சின்னம் “கை” அதனால் அனைவரின் கையையும் வெட்டி விடவேண்டும் என்றோ,கையுறை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ கோரி மனு கொடுப்பாரா???


சில கட்சிகளுக்கு “சைக்கிள்” சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஒட்டக்கூடாது என மனு கொடுப்பாரா???

ஒரு கட்சிக்கு “மாம்பழம்” சின்னம் உள்ளது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்யவேண்டும் என் மனு கொடுப்பாரா???

 “காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது பழமொழி அதே போல அதிமுகவை கண்டு அஞ்சும் திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் இரட்டை இலை போல் தோன்றுகிறது.

 செய்தி்் (படம்) அம்மா. வாட்டர். அம்மா உணவகம், அம்மா   சிற்று ஊர்ந்து களிலுள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டும் என்று திமுக பொருள் ஆளார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

அதை முன்னிட்டு ஆத்தாவின்   நச் நச்சென்ற கேள்விஃஃஃஃ

செவ்வாய் 11 2014

விதியை மீறினால்.....ஓட்டு போட தடை..!!!

குடி மக்களின் குடி உயர  டாஸ்மாக் விற்பனை  செய்யும் அதிகாரி ஒருவர் கூறியதாவது.

தேர்தல் விதி முறைகளை மீறி..குடித்துவிட்டு ஓட்டு போட வரும் குடி மக்களுக்கு தேர்தலில் ஒட்டு போட தடை விதிக்கப்படும்.

நாட்டை ஆள்வதற்கு நடாத்தப்படும் தேர்தலில் குடி மக்கள் குடித்து விட்டு வந்து ஓட்டு  போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி  குடிமக்கள் போதையுடன் வந்தால் ஓட்டுரிமையே ரத்து செய்யப்படும்.

தேர்தலின் போது குடிமக்களுக்கு குடி விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனை கூடத்தின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மீறி விற்பனை செய்தால் கடை அடியோடு காலி செய்யப்படும்.

மீண்டும் டாஸ்மாக் சரக்கு விற்பனை தொடங்க, ஓட்டுரிமைக்கு தடையில்லா சான்று பெற ..தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள் 10 2014

நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் நாட்டை ஆளும்..

இந்திய பண நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் இந்திய நாட்டை ஆளும். மற்றொன்று அதுக்கு பக்கபலமா இருந்து எதிர்கட்சி என்ற போர்வையில ஜால்ரா தட்டும்.

பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்திடமிருந்து தனி சாம்ராஜியமாக நடைபோட்டு வருகிற காலந்தொட்டு  வல்லராச போகிறதாக பீத்திகிட்டு திரிகிற இந்தக்காலம் வரை நாணயத்தின் இரு பக்கங்களில் ஒன்றுதான் ஆண்டு வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த இரு பக்கங்களைத்தவிர மூன்றாவது பக்கம் நாணயத்தில் இருக்க வாய்ப்பில்லை. அதுகள் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றில் அணி வகுத்து கொள்ள வேண்டிய நிலைதான்.

இந்திய நாணயத்தின் இருபக்கங்களில் ஒன்று காங்கிரஸ்,மற்றொன்று பாரதீய ஜனதா, மூன்றாவது பக்கத்துக்கு அல்லாடுபவைகள் உதிரிகட்சிகள் இரு பக்கங்களில் ஒன்றை தொங்கியே  கிடக்க வேண்டியதுதான்.

நாணயத்தை நாணயமிக்க நாணயமாக மற்றவல்ல நக்சல்பாரி புரட்சியாளர்களோ..... சிதறு தேங்காய்கள் மாதிரி சிதறிக் கிடக்கிறார்கள்.

எங்கள் வழிதான் சிறந்தது, நாங்கள் காட்டும் வழிதான் சரியானது என்று தததுவத்துக்குள் தத்துவம் பேசிககொண்டு வீறுநடை போட முடியாமல் கிடக்கிறார்கள்.


இவர்களின் உழைக்கும் மக்களோ, இலவசங்களுக்கு மயங்கி, அடிபட்டு மதிபட்டு,மெய்ஞானத்தை மறந்து ,மீடேற வழியின்றி  அஞ்ஞானத்தில்
முழ்கி கிடக்கிறார்கள்.

 இந்திய நாணயத்தின் இரு பக்கங்களேர் அழுக்கேறி,பாசிப்படர்ந்து கோரமாய் காட்சி அளித்து பயமுறத்துகிறது.

120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சாம்ராஜ்யத்தை  நாணயத்தின் இருபக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் ஆளும் அதுதான் பூதகரமாக கண்ணுக்கும் சித்தத்திற்கும்  தெரிகிறது ..பதிகிறது.

தூக்கத்தை கலைத்துவிட்டு தூங்கிவிடும் கதை கவிதைகள்...

நல்ல தூக்கத்தில்தான்
எனக்கு கவிதைகளும்
கதைகளும் தோன்றும்

தோன்றியதை நினைத்து
எழுத உட்கார்ந்தால்
தூக்கத்தை கலைத்து
என்னை எழுப்பிவிட்ட
கவிதைகளும் கதைகளும்
தூங்கிவிடும்.....................

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...