பக்கங்கள்

சனி 14 2017

தீபாவளி என்றால் என்ன? என்ன...?


 (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உருவம்) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து  சுருட்டிய பாயை விரித்தார்.

3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்..

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

1. பூமி தட்டையா? உருண்டையா?

2. தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?

3. எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

4. சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து செல்ல முடியுமா?

5. எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

6. விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

7. அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

8. பூமி மனித உருவா? மிருக உருவமா?

9. மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

10. பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

(பெரியார் எழுதிய "இந்து மதப் பண்டிகைகள்" என்னும் நூலில் இருந்து)

வியாழன் 12 2017

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ??

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?


1) அது என்னை கீழ்ஜாதி என்றது
2) அது என்னை சூத்திரன் என்றது
3) அது என்னை வேசிமகன் என்றது
4) அது என் தாயை வேசி என்றது
5) அது என்னைப் பஞ்சமன் என்றது
6) அது என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அது என்னை தொட்டால் தீட்டு என்றது
8) அது என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அது என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அது என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அது என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அது என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அது என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அது என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அது என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அது என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அது என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அது என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அது என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அது என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அது என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அது என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அது என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அது என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அது என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அது என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அது என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அது என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அது என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அது என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அது என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அது என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அது என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அது; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்            போக்கியது
35) அது என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அது என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அது என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அது என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அது என்னைப் படிக்காதே என்றது
40) அது என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அது என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அது என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அது என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அது என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அது என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அது என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அது என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அது என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அது என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அது என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அது செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அது என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அது  விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.


செவ்வாய் 10 2017

உண்மை என்னவென்றால்.....

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது. 

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும். 

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம். 

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும். 

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது. 

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது. 

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது. 

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது. 

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ). 

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது. 

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம். 

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல. 

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும். 

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும். 

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. 

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல். 

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது. 

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?

அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது. 

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள். 

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான். 

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது. 

பல நாடுகளில்

காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள். 

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது. 

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள். 

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம். 

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும். 

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும். 

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இயற்கை கொடுத்த அறிவு இது. 

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும். 

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும். 

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு. 

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள். 

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. 

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம். 

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும். 

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல். 

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல். 

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே. 

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள். 

இதை தான் 

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே. 

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது. 

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு 

1 - அலோபதி சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம்

அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு. 

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். 

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே. 

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை. 

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும். 

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும். 

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான். 

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும். 

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன். 

நன்றி

ஹீலர்.இரா.மதிவாணன்.

திங்கள் 09 2017

பாசிசத்தை முறியடிக்க தன் மகனை இழந்த தோழர்


இட்லரது எதிர்பாராத அதிரடித் தாக்குதலால் ஆரம்பத்தில் சோவியத் ரஷ்யா நிலைகுலைந்தது என்னவோ உண்மை தான். எங்கும் குழப்பம் நிலவியது. ஒரு சில புல்லுருவிகள் இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டனர். புதிய புரளிகள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் நாட்டைவிட்டி ஓடிவிட்டார் என்ற வதங்திகள் கூட பரப்பப்பட்டன. செம்படையின் தொடந்த பின்வாங்கல் மக்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. தோல்வி மனப்பான்மை வளரத் தொடங்கியது. 

மக்களின் பயத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்ட வேண்டும். சோர்ந்து போனவர்களுக்குத் தெம்பூட்ட வேண்டும். பின்வாங்கும் செம்படைகளின் கட்டுப்பாட்டை மேலும் உயர்த்த வேண்டும். அதன் தொடக்கக் கட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். புதிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் ஆயுதத் தளவாடங்களைப் பல நூறு மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும். செம்படை வீரர்களின் மன உறுதி மேலும் வலிமையாக்கப்பட வேண்டும். பீதியை கிளப்பும் எதிரிகளின் எடுபிடிகளையும். உளவாளிகளையும் தனிமைப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உழைக்கும் வர்க்க முன்னணிப் படையாகிய கம்யூனிஸ்ட் கட்சியில் ராணுவக் கட்டுபாட்டை ஏற்படுத்த வேண்டும். இவ்வேலைகளைச் செய்யாமல் போனால் நாடு அடிமைப்படுத்தப்படும்.

இந்த வேலைகள் எளிமையானவை அல்ல. அதுவும் நாடு முழுவதும் எரிந்து கொண்டும், வெடித்துச் சிதறிக் கொண்டும் இருந்த நேரத்தில் இது மேலும் கடினமானது. சாத்தியம் அற்றது என்று கூட சொல்லலாம். சாதாரண மனிதர்களாலோ, தலைவர்களாலோ செய்யவே முடியாத காரியம். ஆனால் இதை ஸ்டாலினால் சாதிக்க முடுயும் என உணர்ந்த மக்கள் அவரை செம்படையின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் ரஷ்யா தன் எதிரியை வீழ்த்த தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. தேசத்தின் மேற்குப் பகுதி எதிரியால் அச்சுறுத்தப்பட்டதால், அங்கிருந்த தொழிற்சாலைகள் அனைத்தையும் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்க்க உத்திரவிட்டார் ஸ்டாலின். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஆலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிரம்மாண்டமான எந்திரங்களின் பிரிக்கப்பட்டப் பாகங்களைச் சுமந்து சென்றனர் தொழிலாளர்கள். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள், காடுகள், மலைகள், பனிப்பாலைவனங்கள் என எல்லா இடர்பாடுகளையும் கடந்து லட்சக்கணக்கான தொழிலாளார்கள் தங்களின் எந்திரங்களோடு நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

எந்திரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. பெரும் ஆலைகள் எழுந்தன. அவை ஆயுதத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டன. எந்திரத் துப்பாக்கிகள், டாங்குகள், போர்விமானங்கள் முதலிய நவீனரக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

சோசலிசத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களை செம்படையில் சேருமாறு அறைகூவல் விடுத்தார் ஸ்டாலின். அதை ஏற்று 50 லட்சம் கம்யூனிஸ்டுகள் செம்படையில் சேர்ந்தனர். அபாயகரமான போர்முனைகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். தங்கள் வீரத்தாலும் தியாகத்தாலும் மற்ற வீரர்களுக்கு உணர்வூட்டினர்.

எப்போது வேண்டுமானாலும் மாஸ்கோவை எதிரிகள் கைப்பற்றக்கூடம். அதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாஸ்கோவை விட்டு வெகு தொலைவிற்கு மாற்றப்பட்டன. அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கு குடிபெயர்ந்தனர். ஸ்டாலினையும் மாஸ்கோவையும் விட்டு வெளியேற அனைவரும் நிர்பந்தித்தனர். ஸ்டாலின் இதற்கு சம்மதிக்கவில்லை. இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார். 

இதுவே மக்கள் மனவலிமை இழக்காமல் இருந்ததற்கு காரணம், சோதனைகளை வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உண்டு என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர். சோவியத் ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸ்டாலின் இருந்தார். தான் மட்டும் பாதுகாப்பாக மாஸ்கோவைவிட்டு வெளியேறினால், அது மக்களின் மன உறுதியைக் குலைக்கும் என்று உணர்ந்தார். ஆகவே பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலின் செம்படையுடன் உழைக்கும் மக்களுடன் மாஸ்கோவில் தங்கினார்.

இரவு பகலாக பல மாதங்கள் தொடர்ச்சியாக மாஸ்கோ தாக்கப்பட்டது. எப்போதும் அதன் மீது குண்டு மழை பெய்தது. செம்படை கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு நிர்வாகம் முதலியவற்றை இயக்கும் பொறுப்பை இதன் நடுவே தான் அவர் நடத்த வேண்டியிருந்தது. அவரது இந்த வீரச் செயல் நாட்டு மக்களுக்கு உத்வேகமூட்டியது.

இதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார். அதில் பெரிய சொல் அலங்காரம் இல்லை எளிமையாக பேசினார். சக தோழனிடம் பேசுவதைப் போல பேசினார். தங்கள் நட்டை மட்டுமல்ல, உலகத்தையே காப்பாற்றும் வரலாற்றுக் கடமை சோவியத் மக்களுக்கு இருக்கிறது என்றார். உலகையே அழிக்க வந்த பாசிஸ்டுகளை கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஒழிக்க முடியும் என்ற உணர்வை ஊட்டினார். "இனி ஒரு அடி பின் வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரைப் போராடுவோம்" என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்றுக் கட்டளையிட்டார். உரையைக் கேட்ட அனைவரையும் அந்தக் கட்டளை தீப்பொறி போல் பற்றிக் கொண்டது. மக்கள் மனதில் அந்த தீப்பொறி எரிமலையானது. அது போர்களத்திலும் வெளிப்பட்டது.

செம்படை உறுதியுடன் எதிர்த்தாக்குதல் தொடுத்தது. உயிரைத் துச்சமென மதித்து செம்படை வீரர்கள் வீரச்சமர் புரிந்தனர். பாவெலின் படைப்பிரிவு முற்றுகை இடப்பட்டது. 500 பேர் இருந்த படைப்பிரிவில் 60 பேர் மட்டுமே உயிருடன் எஞ்சியிருந்தனர். ஐந்து நாட்களாக உணவோ உறக்கமோ இல்லாமல் பாவெல் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவனது தலையிலும் தொடையிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் துப்பாக்கியால் எதிரிகளின் டாங்கிகளை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தான். அவனது சிந்தனையில் ஒரு முழக்கம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. "ஒரு அடி பின்வாங்க மாட்டோம் - கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம்".

ஜெர்மானிய போர் விமானங்கள் தாக்கத் தொடங்கின். எங்கும் கருப்புகையும் தூசியும் சூழ்ந்தது. செம்படை இருந்த அகழிகளில் பிணக்குவியல். விமானத்தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மானிய டாங்கிகள் சுட்டபடி செம்படையின் அகழிகளை நோக்கி முன்னேறின. படைப்பிரிவின் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்பாளர் கையில் ஒரு எறிகுண்டை எடுத்தார். உரக்க முழக்கமிட்டார். "கம்யூனிஸ்டு கட்சி வாழ்க! தோழர் ஸ்டாலின் வாழ்க! என்னைப் பின் தொடருங்கள் தோழர்களே."

அகழியின் மீது ஏறினார். ஜெர்மன் டாங்குகளை நோக்கி வேகமாக ஓடினார். பாவெலும் இதர வீரர்களும் எறிகுண்டுகளை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து ஓடினார். முன்னால் ஓடிய கட்சி அமைப்பாளரை ஒரு பீரங்கி குண்டு சிதறடித்தது. பாவெல் ஒரு டாங்கியின் மீது தன் எறிகுண்டை வீசினார். டாங்கி வெடித்து சிதறியது. பாவெலின் தோழர்களும் இதே காரியத்தைச் செய்தனர்.

ஜெர்மானியர்களின் டாங்கிகள் தகர்க்கப்பட்டன. ஏராளாமான இழப்புகள் இருந்தாலும் அன்றைய சண்டையில் செம்படையின் கை ஓங்கியிருந்தது. ஜெர்மானியர்கள் மாஸ்கோவை விட்டு 100 கீலோ மீட்டருக்கு அப்பால் பின்வாங்கினர். முதல் முறையாக பாசிஸ்டுகளுக்கு பலத்த அடி விழுந்தது.

உலகப் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலக மக்களுக்கு இட்லரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை சுடர்விட்டது. பிரிட்டன் - அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்கள் கொடுத்த நெருக்குதலின் காரணமாக அந்த நாடுகள் சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு ஒப்பந்தம் செந்து கொண்டன. ஜெர்மனியில் தலைமறைவாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாசிச எதிர்ப்புப் போராளிகள் மாஸ்கோ சண்டையின் வெற்றியைக் கொண்டாடினர். ரூடி தன் தோழர்களிடம் சொன்னார்

"சோவியத் ரஷ்யா வெற்றி பெறும் - உலக
உழைக்கும் மக்களுக்கு விடிவு வரும்!
தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!"

 செம்படையின் எழுச்சியும் இட்லரின் வீழ்ச்சியும்!
போர் இழுத்துக் கொண்டே சென்றது. இட்லர் சோவியத்தின் மீது படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. செம்படை வீரர்கள் ஒரு கோடிக்கும் மேல் உயிர்த்தியாகம் செய்து தாய் நாட்டைக் காத்தனர். செம்படையின் வீரம் இட்லருக்கு ஆத்திரமூட்டியது. தான் கைபற்றிய மேற்கு ரஷ்யப் பகுதி மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பாசிஸ்டுகள் வெறியாட்டம் போட்டனர். ஒவ்வொருவராக கொலை செய்யக் கூட இட்லருக்கு பொறுமையில்லை.

எனவே விஷ வாயுக் கொட்டடிகள் என்ற ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தான். கொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு பெரிய கொட்டடியில் அடைக்கப்படுவர். காற்றோடு விஷ வாயு கலந்து செலுத்தப்படும். ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் மடிந்து போவார்கள். இதே போல பல கோடி மக்களை இட்லர் கொலை செய்தான்.

சோவியத்தைத் தோற்கடிக்க தன் போர்த்தந்திரத்தை மாற்றினான். இட்லர் தெற்கே அமைந்திருந்த ஸ்டாலின்கிராடு என்ற நகரத்தைத் தாக்கினான். அதைக் கைப்பற்றுவதன் மூலம் மேற்காசிய நாடுகளைப் பிடிக்க முடியும். அவற்றின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி புதிய பலத்துடன் சோவியத் ரஷ்யாவைத் தாக்கி அழிக்க முடியும் என திட்டமிட்டான். (இந்தியாவை கைபற்றுவது கூட அவனுடைய திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.)

1942 செப்டம்பரில் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. தன்னுடைய மிகச்சிறந்த படைகளை இந்த போருக்கு அனுப்பி வைத்தான் இட்லர். தான் அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் படைகளையும் திரட்டி ஸ்டாலின்கிராடின் மீது ஏவினான்.

நாலாபுறங்களில் இருந்தும் ஸ்டாலின்கிராடு சூழப்பட்டது. கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத கோரத்துடன் ஸ்டாலின்கிராடு தாக்கப்பட்டது. ஜெர்மானிய விமானப்படை நகரைத் தரைமட்டமாக்கியது. மண்மேடுகளுக்குப் பின்னால் இருந்து செம்படை தாக்கியது. ஸ்டாலின்கிராடின் உழைக்கும் மக்கள் ஆண்களும் பெண்களும் செம்படையுடன் சேர்ந்து போரிட்டனர். தங்களின் தலைவரின் பெயரில் அமைந்த நகரைக் காக்க ஒப்பில்லாத தீரத்துடன் அவர்கள் சண்டை செய்தனர்.

இந்த உக்கிரமான சண்டை 200 நாட்கள் நீடித்தது. பல லட்சம் செம்படை வீரர்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

பாசிஸ்டுகளுக்குப் பாடம் புகட்டப் புதிய திட்டமொன்றை ஸ்டாலின் வகுத்தார். முற்றுகையிடப்பட்ட செம்படையைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தி ஜெர்மானிய படையை சுற்றி வளைத்து கொள்வது என்பது தான் அந்த திட்டம். இதை செய்து முடிக்க வீரர்கள் அசாத்தியமான உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் போரிட வேண்டியிருக்கும். எதிர்த் தாக்குதல் குறித்த அறிக்கை ஒவ்வொரு செம்படை வீரனுடைய உள்ளத்திலும் ஊடுருவியது.

செம்படையின் எதிர்தாக்குதல் தொடங்கியது. எதிரியின் படைகளை ஊடுருவிச் சென்றது செம்படை. எதிரியை சுற்றி வளைத்தது. சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்ட நரியைப் போல ஜெர்மானியப் படை அல்லல்பட்டது. ஸ்டாலின்கிராடின் மீது படையெடுத்து வந்த 35 லட்சம் பேர் கொண்ட படை தோற்று ஓடியது. ஜனவரி 31, 1943-இல் ஜெர்மானிய தளபதியான பௌலுஸ் என்பவன் 4 லட்சம் பாசிஸ்டுகளுடன் சரணடைந்தான்.

மற்ற நாடாக இருந்தால் சரணடைந்த பாசிஸ்டுகளை ஒரே நொடியில் கொன்றிருக்கும். அவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் அப்படிப்பட்டவை. ஆனால், சோவியத் ரஷ்யா அப்படி செய்யவில்லை. அவர்களை மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது. அங்கு அவர்களுக்கு மனிதர்களாக வாழ்வது எப்படி என்று கற்றுத் தரப்பட்டது. காரணம், இது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய உயர்ந்த பண்பு.

ஸ்டாலின்கிராடு சண்டை வரை, பாசிஸ்டுகள் மற்றவர்களை அடிக்கத்தான் பழகியிருந்தனர். ஸ்டாலின்கிராடில் முதன்முறையாக அவர்கள் அடிவாங்கினர். இட்லரின் அழிவு காலம் ஸ்டாலின்கிராடு சண்டையில் இருந்து தொடங்கியது. இந்த வெற்றிக் கிட்டிய பிறகும் செம்படைகளுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை. இது ஆரம்பக்கட்ட வெற்றிதான். இன்னும் ஒரு கோடி ஜெர்மானியப் படைகளை சோவியத் ரஷ்யாவை விட்டு விரட்ட வேண்டியப் பணியும் இருந்தது.

ஸ்டாலின்கிராடு சண்டையில் ஏராளமான முன்னணி தளபதிகளை இட்லர் இழந்தான். அவர்களில் பலர் செம்படையல் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது இழப்பு இட்லருக்குப் பேரிடியாக இருந்தது. அதில் ஓரிருவரையாவது மீட்டுவிட முயன்றான். சண்டையிட்டு அவர்களி மீட்க முடியாது. ஆகவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தான் இட்லர்.

ஸ்டாலினுடைய மூத்த மகன் யாக்கவ். சாதாரண சிப்பாயாக செம்படையில் பணியாற்றி வருபவன். ஸ்டாலினும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாக்கவுக்கு எந்த சலுகையும் வழங்கியதில்லை. சாதாரண சோவியத் குடிமகனாகவே யாக்கவ் வாழ்ந்தான்.

எல்லைப்புறத்தைக் காவல் காத்த யாக்கவ் போரின் முதல் நாளில் இருந்தே சண்டையில் ஈடுபட்டான். அவனுடைய படைப்பிரிவு சுற்றி வளைக்கப்பட்டது. இறந்தவர்கள் போக மற்றவர்கள் சிறைபிடிக்கபட்டனர். யாக்கவும் அவர்களில் ஒருவன்.

யாக்கவ் ஸ்டாலினுடைய மகன் என்பதைத் தெரிந்து கொண்ட இட்லரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. சோவியத் ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான ஜெர்மானிய தளபதியை விடுதலை செய்தால், தான் யாக்கவை விடுவிப்பதாக பேரம் பேசினான். இதை ஏற்காவிட்டால் யாக்கவைக் கொன்று விடுவதாக மிரட்டினான்.

தன் மகன் மீது பாசம் கொண்ட ஸ்டாலின் அவனுடைய நிலையை எண்ணி வருந்தினார். ஆனால் தன் மகனுடைய மகனுடைய உயிரை காப்பாற்ற வேண்டி இட்லரின் தளபதியை விடுவிக்க முடியாது என உறுதியாக அறிவித்தார். அந்த ஜெர்மானிய தளபதி விடுவிக்கப்பட்டால், அவன் வகுக்கும் திட்டங்களின் மூலம் பல லட்சம் செம்படை வீரர்கள் கொல்லப்படுவர். ஆகவே அவனை விடுதலைச் செய்வதற்கு பதிலாகத் தன் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு தியாகியாவதே மேல் என்ற முடிவு செய்தார்.

எந்த நேரத்திலும் மக்களை நேசித்தவர் தோழர் ஸ்டாலின். அவர்களுக்கா தன் உழைப்பையும் வாழ்வையும் மட்டுமல்ல தன் அருமை மகனையே தியாகம் செய்தவர் தோழர் ஸ்டாலின். அதனால்தான் அவர் சோவியத் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார்.

ஸ்டாலின்கிராடில் இருந்து செம்படையின் வெற்றிப்பயணம் தொடங்கியது. எதிரியின் படை, படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டது. இட்லரின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் ரஷ்யாவிலிருந்து பாசிசப் படை விரட்டியடிக்கப்பட்டது.

சோவியத் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உலகம் இதுவரை கண்டிராத வக்கிரமாக போருக்குப் பின்னால் கிடைத்த வெற்றி இது. உலகத்தின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திய இட்லரின் படை ஸ்டாலினுடைய செம்படை முன்னால் மண்டியிட்டது.

இருப்பினும் செம்படைக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. இட்லரின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடந்த ஐரோப்பாவையும் செம்படை நிச்சயம் மீட்கும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தையே விடுவிக்கும் வரலாற்றுக் கடமையை செம்படைக்கு சுமத்தியுள்ளனர் ஏகாதிபத்தியவாதிகள்.

1945 ஜனவரியில் இருந்து அதை நிறைவேற்றும் பணியில் செம்படை இறங்கியது. இதுவரை தன் நாட்டு மக்களுக்கானப் போராடிய செம்படை பிறநாட்டு மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியது. இந்தப் போரில் அந்தந்த நாடுகளின் உழைக்கும் மக்களும் செம்படையுடன் இணைந்துப் போரிட்டனர்.

பாசிஸ்டுகள் தோற்று ஓடினர். ஒவ்வொரு நாடாக விடுவிக்கப்பட்டது. பல்கேரியா, போலந்து, ஹங்கேரி, கிரேக்கம், அல்பேனியா, ருமேனியா, செர்பியா, யூகோஸ்லாவியா, செக்கஸ்லோவாகியா, ஆஸ்திரியா என்று பட்டியல் நீண்டபடி இருந்தது. பாசிஸ்டுகளின் கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் செம்படையின் வீரத்தையும் ஸ்டாலின் தலைமையையும் நெஞ்சாரப் பாராட்டினார்கள்.

ஐரோப்பாவை விடுவித்த செம்படை ஜெர்மனியின் எல்லையை நெருங்கியது. சோவியத் ரஷ்யா வெற்றி பெறுவது உறுதியானவுடன் அதுவரை பயந்துக் கிடந்த பிரிட்டனும், அமெரிக்காவும் போரில் குதித்தன. அவர்களின் படைகள் பிரான்சில் இறங்கின. 

இட்லருக்குத் தன்னுடைய தோல்வி துல்லியமாகத் தெரிந்தது. இருந்தாலும் சோசலிச சோவியத் ரஷ்யாவிடம் தோற்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அதனால் அமெரிக்க பிரிட்டன் படைகளிடம் தன் நாட்டை ஒப்படைக்கத் திட்டமிட்டான். ஆகவே தன்னுடைய படைகள் அனைத்தையும் செம்படைக்கு எதிராக குவித்தான். பிரிட்டன் - அமெரிக்க படைகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் (பயத்துடன்) ஜெர்மனியை நோக்கி முன்னேறின.

இதைப் புரிந்து கொண்ட தோழர் ஸ்டாலின் "இந்த மே தினத்திற்குள் பெர்லினை செம்படை பிடிக்கும், ஜெர்மன் பாராளுமன்றத்தின் மேல் செங்கொடிப் பறக்கும்" என பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இந்த சூளுரையின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்ட செம்படை வீரர்கள் உணவு, உறக்கம் மறந்துப் போரிட்டனர். வர்க்க உணர்வு கொண்ட ஜெர்மனியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். பாசிஸ்டுகளின் உறுதிக் குலைந்தது. செம்படை முன்னேறியது.

இட்லரின் கொடுங்கோன்மயில் இருந்து தங்களை மீட்ட செம்படையை வாழ்த்தி வரவேற்றனர் ஜெர்மானிய மக்கள். சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன. சிறை முகாம்களில் வாடிய மக்களுக்கு விடுதலை கிடைத்தது. 14 ஆண்டுகளில் சிறை முகாம்களில் கசக்கிப் பிழியப்பட்ட ஆல்பிரடு சுதந்திர காற்றை சுவாசித்தார். தங்களை விடுவித்த செம்படைக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். உழைக்கும் மக்கள் ஸ்டாலினுடைய படம் மற்றும் செங்கொடியை ஏந்தி முழக்கமிட்டபடிச் சென்றனர். ஆல்பிரடும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டான். பலம் அனைத்தையும் திரட்டி உரக்க முழக்கமிட்டான்.

"தோழர் ஸ்டாலின் நீடூழி வாழ்க!
செம்படை நீடூழி வாழ்க!"

30 ஏப்ரல் 1945 செம்படை பெர்லினின் வாசலில் சண்டையிட்டது. கடுமையான சண்டை. விடிந்தால் மே தினம். மே தினம் முடியும் வரை மிச்சமிருக்கும் பலமனைத்தையும் திரட்டிப் போரிட இட்லர் உத்திரவிடுகின்றான்.

. ஸ்டாலினுடைய சூளுரையும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் செங்கொடியும்
அன்றைய இரவு பெர்லினின் மூலை முடுக்குகளில் எல்லாம் சண்டை நடந்தது. நள்ளிரவில் பெர்லினுடைய மையப் பகுதியை அடைந்தது செம்படையின் முன்னணிப் படை. தோல்வி தன் வீட்டு வாசலைத் தட்டியவுடன் குப்புற விழுந்தான் இட்லர். ஒரு கோழையைப் போல தற்கொலை செய்து கொண்டான். கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற பாசிஸ்டு ஒழிந்தான்.

அவன் தற்கொலை கொள்ளும் முன் தன் பாசிஸ்டு படைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தான். "எக்காரணம் கொண்டும் செம்படையிடம் மட்டும் மண்டியிடாதீர்கள்". இதுவே இந்த உத்தரவு. இட்லர் இறந்த பின்னும் பாசிஸ்டுகளின் படை சண்டையிட்டது.

முன்னணிப் படையில் குறைவான எண்ணிக்கையிலே வீரர்கள் இருந்ததால் செம்படையின் பணி கடினமாகியது. இருந்தாலும் எதிரியின் எதிர்ப்பை முறியடித்து விடிவதற்குள் பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டது. கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பொழுது ஏறிக் கொண்டே இருந்தது. பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது செங்கொடியைப் பறக்க விடவேண்டும் என்ற தோழர் ஸ்டாலினுடைய கட்டளையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதை நிறைவேற்ற யெகராவ், கண்டாரியா என்ற இரு செம்படை வீரர்களும் முன் வந்தனர். கையில் செங்கொடியுடன் குண்டு மழைக்கு நடுவே பாய்ந்தோடி பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இதற்குள் கட்டிடத்தில் இருந்த பாசிஸ்டுகள் அதற்கு தீ வைத்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய புகையானது கண்களை மறைத்தது. தகிக்கும் வெப்பமும் கடுமையாக இருந்தது. இதற்கிடையில் உச்சிக் கோபுரத்திற்கு செல்லும் படிக்கட்டைக் கண்டுப்பிடித்து மேலே ஏறினர் யெகராவும், கண்டாரியாவும்.

சிறிது நேரத்தில் அவர்கள் அந்த மிக உயர்ந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்றார்கள். வழுக்கும் உச்சி கோபுரத்தின் மீது உறுதியாக ஏறத் தொடங்கினார்கள். பக்கத்துக் கட்டிடத்தின் மதில் சுவருக்கு பின்னால் இருந்து இயந்திரத் துப்பாக்கியால் அவர்களை சுடத் துவங்கினான் ஒரு ஜெர்மானியன்.

இதைப் பார்த்து கொண்டிருந்த பாவெல், அவர்களுக்கும், செங்கொடிக்கும் ஸ்டாலினுடய சூளுரைக்கும் நேரவிருந்த ஆபத்தைப் புரிந்து கொண்டான். தன் துப்பாக்கியால் சுட்டபடி எதிரியின் எந்திரத் துப்பாக்கியை நோக்கி ஒடத் தொடங்கினான். எந்திரத் துப்பாக்கி தன் திசையை மாற்றியது. பாவெலைக் குறி வைத்து சுட்டது. குண்டுகள் பாவெலுக்குள் ஊடுவருவி வெடித்துச் சிதறின.

பாவெலோ தான் வைத்திருந்த எறிகுண்டை வீசியெறிந்தான். எந்திரத் துப்பாக்கி நொறுங்கியது. கீழே விழுந்த பாவெல் அண்ணாந்து பார்த்தான். ஜெர்மானிய பாராளுமன்றத்தின் மேல் செங்கொடி பறந்துக் கொண்டிருந்தது. பாவெலின் தோழர்கள் ஸ்டாலினுடைய சூளுரையை நிறைவேற்றி விட்டனர். இரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பாவெலின் முகம் புன்னகைத்தது. செங்கொடியைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.

பாசிச எதிர்ப்புப் போரில், எதிரியை வீழ்த்த உயிர்நீத்த கோடிக்கணக்கான தியாகிகளில் ஒருவனாக பாவெல் மாறினான். அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கொடி ஏறியவுடன் பாசிசக் படைகள் சரணடைந்தன. 14 ஆண்டுகளாக உலகை ஆட்டிப் படைத்த பாசிசக் கூட்டம் உழைக்கும் மக்கள் படையிடம் மண்டியிட்டது.

உலகின் உழைக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர். சோவியத் ரஷ்யாவிற்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உழைக்கும் மக்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். எங்கு பார்த்தாலும் செங்கொடிகள், ஸ்டாலின் படங்கள். பாசிசத்தை கம்யூனிசம் வென்றது. எதிர்காலம் கம்யூனிசத்திற்கே என்பது நிரூபணமானது.

 இரண்டாம் உலகப் போரை முறியடித்தப் பெருமை தோழர் ஸ்டாலின் தலைமயிலான செம்படைக்கே!

உலகையே அச்சுறுத்தியப் பாசிசத்தை ஒழித்து இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தனர் சோவியத் மக்கள். இதற்கு அவர்கள் புரிந்த தியாகம் ஈடு இணையற்றது. பாசிஸ்டுகளை வீழ்த்த் 3 கோடி ரஷ்யர்கள் உயிர் துறந்தனர். 1710 நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் முற்றாக எரிக்கப்பட்டன. 32,000 பெரிய ஆலைகளும் 98,000 கூட்டுப் பண்ணைகளும் அழிக்கப்பட்டன.

இத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் அவர்கள் மனம் தளராமல் போராடினார்கள். இட்லரின் பெயரைக் கேட்டதும் அஞ்சி நடுங்கின மற்ற நாடுகள். அமெரிக்காவும், பிரிட்டனும் முக்காடு போட்டு ஒளிந்து கொண்டன. இப்படி எல்லோரையும் பயமுறுத்திய இட்லரை சோவியத் ரஷ்யா வீழ்த்தியதன் ரகசியம் என்ன? சோதனைகளைத் தாங்கி கொண்டு எதிரிக்கு பதிலடிக் கொடுக்கும் மன உறுதியை சோவியத் மக்கள் பெற்றதன் மர்மம் என்ன?

இதற்கெல்லாம் ஒரே பதில் பாட்டாளி வர்க்க தலைவர் ஸ்டாலினும், சோவியத் செம்படை வீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான். சோவியத் மக்களின் பலத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஸ்டாலின்,

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...