பக்கங்கள்

சனி 20 2016

அய்யா..வணக்கம்.....

அய்யா..வணக்கம்
நான் இமயமலைக்கு
செல்ல வேண்டும்
எந்தப் பக்கம்
செல்ல வேண்டும்
என்று சொன்னால்
உங்களுக்கு புன்னியம்
கிட்டும் எனக்கு
அலைச்சல் குறையும்.

அய்யா வணக்கம்
இமய மலைக்கு
செல்ல வரும்
வழியில் ஒரு
அன்பரிடம் வழி
கேட்டேன் அவர்.
தெற்கால போயி
மேற்கால திரும்பி
வடக்கால போகவும்
என்றார் நானும்

வடக்கால வந்து
நிற்கிறேன் இமய
மலையைக் காணோம்

அய்யா வணக்கம்
தாங்கள் சொல்வது
நிஜம் தானாஅய்யா
அப்படி என்றால்
இமய மலை
எந்த பக்கம்
சென்றது என்று
தாங்கள் சொன்னால்
தேடிச் செல்வதற்கு
பேரு உதவியாக
இருக்கும் அய்யா..

அய்யா வணக்கம்
கோபித்துக் கொள்ளாதீர்கள்
இமயமலைக்கு நான்
செல்வது சிரைக்க
அல்ல அய்யா
உலக நண்மை
வேண்டி தவம்
இருக்க அதனால்
தான் தங்களிடம்
இமயமலை எந்தப்
பக்கம் சென்றது
என்று கேட்க்கிறேன்

.

வெள்ளி 19 2016

உன்னைப் பார்க்க வேண்டும் போல்......



உன்னைப் பார்க்க
வேண்டும் போல்
தோன்றுகிறது ஆனால்
நீ எங்கு
இருப்பாய் என்பதுதான்
எனக்கு தெரியவில்லை

ஒரு நாள்
வெற்றிக்காக பல
நாள் தோல்வியில்
என் வாழ்க்கை
ஓடிக் கொண்டு
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா...?

புதன் 17 2016

சந்தோசத்தில்.பிறந்த.சந்தேகம்


அன்றைய வேலையில்.. மாரியம்மா...யாருடனும் பேசாமல் மூஞ்சியை இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வைத்துக் கொண்டு மள மள வென்று தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். சாப்பாட்டு வேளையில் கூட அவள் சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தாள். உடன் வேலை செய்தவள்கள்  அவளின் முகத்தை பார்த்ததும்..வழக்கம் போல்.. பேசப் பயந்து போய் பேசாமல் இருந்துவிட்டனர்.

இதைக் கண்ட அவளின் தொடுப்பு கருப்பசாமி... அவளுடன் பேசுவதற்கு தனியாக கிடைக்கும் நேரத்தை எதிர்பார்த்து  காத்துக் கொண்டு இருந்தான்..ஒருவழியாக வேலை முடிந்து எல்லோரும்  வீட்டுக்கு செல்லும் நேரத்தில் கடைசியாக வந்த மாரியம்மாளிடம் பேச்சுக் கொடுத்தான்...

“என்னடீ..... வீட்டில் பிரச்சனையா...???

“அவனை முறைத்துப்பார்த்தவள்.... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ஆமாம், எல்லாம் உன்னால்தான் என்றாள்....

“ என்னடீ..சொல்ற..... என்னலா...... எப்படி...டீ......???

“ஒன்னும்..தெரியாத மாதிரி நடிக்காத.....

“ அடியே... பயமா...இருக்குதுடீ... கொஞ்சம் விளக்கமா..சொல்லேன்....

“ கால நேரமெல்லாம் நீ...என்னய..நிணச்சிகிட்டு, இருந்ததால.... வந்த வினை  என்றாள்

கருப்பு சாமி..தலை குனிந்து பேசாமல் இருந்தான்...பிறகு மாரியம்மாளே நடந்த விபரத்தை சொன்னாள்...

மாரியம்மாளும் அவளின் கனவன் செல்லக்கன்னுவும். சந்தோசமாக இருந்தபோது.... மாரியம்மாளுக்கு விக்கல் எடுத்தது. வந்த விக்கல் விடாமல் வந்து கொண்டு இருந்தது.  அதைக் கண்ட செல்லக்கன்னு சந்தோசமாக அவளிடம் விக்கலைப்பற்றி பேச்சுக் கொடுத்தான்.

“ அன்பே..இப்படி விக்கல் வந்தால் என்ன செய்வே —செ. கன்னு

“ தண்ணி குடிப்பேன்”- மாரியம்மா...

“தண்ணி குடிச்சும் நிக்கலேன்னா...அவன்

“ உங்க்கிட்ட வந்து சந்தோசம் பெறுவேன்”-அவள்

“அப்படியும் நிக்கலேன்னா....

“ அப்படியும் நிக்கலேன்னா... டார்லிங் என்னஇது இந்த நேரத்தில நிணச்சுகிட்டு.. என்பேன்..என்றாள்...

“ என்னது டார்லிங்கா.... அது யாரது என்று அவன் கேட்டபோது..அய்யோ என பல்லைக் கடித்தவள் சற்றும் தாமதிக்காமல் தங்களைத்தான் டார்லிங் என்று சொன்னேன் என்று மழுப்பினாள்.

“நான்தான் உன் அருகில் உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறனே.. அப்படி இருக்கும்போது ,என்னால் உனக்கு எப்படி விக்கல் வரும்... என்றான்..

“ வந்துவிட்டதே.....

“ நிச்சயமா..என்னால் வராதே..... உண்மையைச் சொல்...அந்த  டார்லிங்க் யார்?

“சத்தியமா.... தாங்கள்தான்..

“ சத்தியம்  சக்கரைப் பொங்கல் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். சொல்..அந்த டார்லிங்க் யார்..........???

“ அய்யோ... சந்தோசமா இருந்த நேரத்தில....இப்படி சந்தேகப்படலா..மா... என்று சொல்ல....அப்போது செல்லக்கன்னுவின் தொடுப்பின் கனவன் வீட்டிற்குள் வர........


அன்றைய பொழுது முடிக்கு வர..அதிகாலை எழுந்தவுடன் மீண்டும் அந்த டார்லிங் யார் என்று அவள் கனவன் கேட்க..  ..வாய்ச் சன்டையிட்டு வேலைக்கு வந்து சேர்ந்த விபரத்தை அவளின் தொடுப்பான கருப்பூ சாமியிடம் சொல்லி முடித்தாள்.

இப்போது கருப்பூசாமி,.. என்ன சொல்வது என்று குழம்பத் தொடங்கினான.... “உன்னை நான் நிணைக்கவில்லை என்று உண்மையைச் சொன்னாலும் வம்புதான்... “நிணைத்தேன் என்றுபொய்ச்  சொன்னாலும் வம்புதான். இவளிடம் என்ன சொல்வது..இவளிடம் பெரும் சந்தோசத்தை இழக்க விறும்பாத கருப்பூ சாமி யோசிக்கத் தொடங்கினான்

.மாரியம்மாளின் கனவனின் கேள்வியான அந்த டார்லிங் யார்?? என்று.....


செவ்வாய் 16 2016

இருப்பவனின் சூதந்திர கொண்டாட்டம்...!!!!!!!!!!




இருப்பவனின்  இருப்பதை காக்க
இல்லாதவனின் இல்லாத்தை பறிப்பதுதான்
இந்தீயாவின் எழுபதாவது  சூதந்தீரம்.

அந்த இல்லாதவனிடம் இல்லாததை
இருப்பதாக சொல்லி அதை
பாதுகாப்பதாக பில்டப் செய்து
காட்டுவதுதான் இருப்பவர்களின் சூதந்தீர
கொண்டாட்டம்...  சூ.தந்திர கொண்டாட்டம்.........









ஞாயிறு 14 2016

தொலைக்காட்சியில் .. எழவு காட்சி,


“கொடுத்து வச்சவிங்கடா “ அவிங்க....

“யாருண்ணே...

“ அவிங்கதான்டா.... தொலைக்காட்சி காரனுங்க...

“எப்படிண்ணே... கொடுத்துவச்சாங்கே...

“அட...இப்படித்தாண்டா....சினிமா பிரபலங்கள்ல ஒவ்வொருத்தரா செத்ததினால.. அந்த எழவு காட்சிய காட்டி காட்டியே .அவன் பொழப்பு ஜோரா ஓடுதில....

“ அட..ஆமாண்ணே... நமக்கும வேல  வெட்டி இருந்தா..இப்படி...தொலக்காட்சியில  எழவு காட்சியத்தான் பாத்துகிட்டு இருப்போமா...????

“அதனல..தாண்டா...அவிங்கல...சொல்றேன்... கொடுத்து வச்சவங்கஎன்று..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...