| மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் ! |
பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கெதிராய் போராட்டம் நடத்தி.அடிமை தலை அறுத்து இந்திய குடி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்க்காக அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தியதாக பெருமையாக கூறப்படும் ஆண்டு 1950.
இதே ஆண்டில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய அடிமை தனத்தின் திரவமான கோகோலா இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்கடுத்தப் பட்டது.
1977ல் இந்தக் கோகோலா வெளியேற்றப்பட்டு சிரித்தே அறியாத மண்மோகனின் மூதாதையரான நரசிம்மராவால் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயமான “காட்” ஒப்பந்தத்தின் மூலமாக 1993ல் புத்தம் புதிய காப்பியக் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுவதும் உள்ள சந்தையை கைப்பற்றி கோலோச்சும் கம்பெனியாக திகழ்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில்தான் அதிகமாக முதலீடு செய்து இருக்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.
இந்த மாபாதக நிறுவனங்களால் இந்தியாவில் ஆண்டுதோறும் உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.
இந்திய ஜனநாயக அரசியல் சட்டம். இந்திய குடி மக்களை மாக்காளக மாற்றிவிட்டு ,இந்த மாபாதகர்களைத்தான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .




