பக்கங்கள்

சனி 17 2018

நினைவலைகள்-21.

ஏன்? தமிழ் மீது கோபப்பட்டார்  பெரியார்...




தமிழ்மொழியை சாடிய பெரியார் க்கான பட முடிவு








பார்ப்பனிய சமஸ்கிருத  ஆதிக்கத்தின்  கீழ் தமிழ்மொழி அடிபணிந்து தாழ்ந்து கிடந்த நிலையில்  சமஸ்கிருத பண்டிதர்கள் தமிழை நீச பாசை என்று திட்டினார்கள்.இதைக் கேட்டுக் கொண்டு  இருந்ததோடு இல்லாமல்.. கோயில் கருவரைக்குள் சமஸ்கிருதம் இருக்க... வாசல் ஓரத்தில்  “ இங்கே செருப்புகளை விடவும்” என்ற கேவலமான நிலையில்  புலவன் என்றும்  வித்து துவான் என்றும் பெயர் சூட்டிக் கொண்ட தமிழ் அறிஞர்கள்  சும்மா இருந்த காரணத்ததால்தான் ் தமிழ் மொழி சாதி காக்கும் மொழி, காட்டுமிராண்டிகளின் மொழி  என்று சாடினார் பெரியார்---

  சில விழுதுகள்.. பெரியார் அன்று சொன்னதை..இன்று அதைப்பிடித்துக் கொண்டு  தொங்கோ தொங்கு என்று தொங்குகின்றனர்..

தாய் மொழியில் பற்று இல்லாமல் இருக்கும்வரை..தமிழர்களின் தமிழ்மொழி முன்னேற்றமடையாது..


வெள்ளி 16 2018

நினைவலைகள்-20.

சாதியத்தை தூக்கி பிடித்த   ஈலக்கியங்கள்........



மகாபாரதம் க்கான பட முடிவு






இலக்கியம் என்ற பெயரில் சாதியத்தை தூக்கிப்பிடித்தவைகள் இவைகள்..

இராமாயணம். மகாபாரதம். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம்,

சமணர்களையும், பௌத்தர்களையும் அன்றே கொடூரமாக தாக்கியவர் சம்பந்தர். அவர் பாடியதுதான் தேவராம்

பிராமணியத்தை எதிர்த்து எழுந்தவைதான் மணிமேகலை, திருக்குறள். நீலகேசி...இவற்றை புகழ்ந்து பேசுவோர் இன்று யாருமில்லை..

புதன் 14 2018

நினைவலைகள்-19.

  தமிழ் மக்களை ஏமாற்றி விட்ட கம்பன்....


கம்பன் க்கான பட முடிவு



முன்னோரு காலத்தில் பசுமலை மேல் நிலைப்பள்ளியில் படித்த போது   தமிழ் பாட நேரத்தில் தமிழ் ஆசிரியர் சொன்னார்... கம்பனின் கவிதைகளில் அய்ம்பதை படித்தால் அவர்கள் ஒரு கவிஞானக ஆகலாம் என்று.

வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கவிஞனாக ஆகும் ஆசையில் கம்பனின் கவிதையை மனப்பாடம் செய்து கொண்டு இருந்தனர்..அப்போதே அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற பட்டத்தை போட்டுக் கொண்டனர்.  நான் படிக்காமல் இருப்பதை கண்டு பலர் தமிழ் ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தனர்

 தமிழ் ஆசிரியர் என்னை இரண்டு மொழி பேசுபவன் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு என்னிடம் கேட்டார். உன் தாய் மொழி என்ன என்று தமிழ்தான் என் தாய் மொழி அதில் கூட நான் தேறவில்லை அய்யா என்றபோது நம்ப மறுத்து  ஏன்? கம்பன் கவிதை  உனக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டார்...

பிடிக்கவில்லை என்பதைவிட  கம்பன் கவிதை பாடப்புத்தகத்தில் நாலுவரி, ஐந்து வரியாக இருப்பதால் படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. அய்யா..திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள் ரெண்டே வரி..படிப்பதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது அய்யா.. என்றபோது.. என்னை மேலும் கீழுமாக பார்த்தவர்... சரி..உட்கார் என்றார்.. அதிலிருந்து அவர் வகுப்புக்கு வாந்தால் என்னைத்தான் தமிழ் புத்தக்தை வாசிக்கச் சொல்வார்.. நானும் பிழையில்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்தி அழகாக வாசித்துவிடுவேன்.. இடையிடையே அர்த்தங்களையும் கம்ப ராமாயண கதைகளையும் அவிழ்த்து விடுவார்... தமிழ் பாட வகுப்பு முடியும்வரை.. நானும் தமிழ் அய்யாவும் நின்று கொண்டே  இருப்போம்... பின்னாளில் அது எனக்கு தண்டனை தந்ததாக நினைத்துக் கொண்டேன்...


பிறகு பத்தாவதில் ஆங்கிலத்தில் பெயிலாகி அய்ந்து வருடம் படித்தபோதுதான் கம்பன் என்னை மட்டுமல்ல தமிழ் மக்களை ஏமாற்றியது எனக்கு தெரிந்தது.

திருவள்ளுவருடைய கொள்கைகளையும் அவரின் பாட்டின் அருமையையும், திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்கு (அதாவது சமஸ்கிருதர்களின்)   பலியான கம்பனால்..இந்நாட்டில் நிலவிய திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுவிட்டது.

ஆரியப் பண்புகளையும் ஆரிய நடைமுறைகளையும் போற்றி புகழ்ந்து.. அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுத் தமிழில்பாடி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டான் கம்பன்..

 தமிழ் மக்கள் அனைவரும் ஒரே சாதி என்கிறது குறள். மக்கள் நாலு வர்ன சாதிகள் என்று சொல்கிறது இராமாயணம் (கீதையும்)

அன்று இயற்கையோடு இயைந்திருக்கக்கூடிய கருத்துக்களை கூறியது வள்ளுவரின் குறள்.. ஆனால். 

இராமாயணமும் (கீதையும்) அறிவுக்கு மாறான பல கட்டுக் கதைகளை காட்டுமிரண்டித்தனமான, நடந்திருக்க முடியாத. நடத்திக் காட்ட முடியாத சாத்தியமற்ற தாறுமறான கதைகளை கூறுகிறது.. நான் படிக்கும் காலத்தில் தமிழ் அய்யா கூறிய கதைகள் இன்றும் என் நினைவுக்கு வருகின்றன.

ஆரியக் கடவுள்கள் எல்லாம் ஒழக்கம் கெட்டவைகள்... பிறர் மனைவி மீது ஆசைப்படுவதும், பின் வஞ்சகமாக அனுபவிப்பதுதான் கடவுளின்  நடவடிக்கைகள். ஆரியக் கடவுள்கள் எல்லாம் முறைகெட்டவைகள்,

கடைசியாக எனக்கு தோன்றியது இதுதான்.

உண்மைத் திராவிடன் தீட்டியது திருக்குறள்
திராவிடத்துரோகி தீட்டியது இராமாயணம்...

அன்று தமிழ் அய்யா என்னை மேலும் கீழும் பார்த்தது... அவர் வரும் எல்லா வகுப்பு  நாட்களிலும் என்னை வாசிக்க சொல்லி என்ற போர்வையில் நிற்க வைத்தது எல்லாம் என் நினைவுக்கு  இப்போது வந்து ஆட்டம் போடுகிறது .

ஞாயிறு 11 2018

நினைவலைகள்-18.

இரு  பார்வைகள்....


மச்சவதாரம் க்கான பட முடிவு








மீன் வியாபாரி
மாரியம்மாள் என்
வீட்டிற்கு வந்தார்
மீன் வாங்கச்
சொல்லி நான்
உத்தரவு விட
வேண்டினார் காசு
இல்லை என்ற
போது பிறகு
தாருங்கள் என்றார்

அய்யோ கடவுளின்
மச்ச அவதாரம்
சாப்பிட்டால் சாமி
குத்தம் ஆகிவிடாத
என்ற போது..

ஒன்றும் ஆகி
விடாது. சாட்சி
தானே என்றார்


பின் ஒரு
நினைவு வந்தது
மீனை வெள்ளக்காரனும்
 தமிழனும் பார்த்த
பார்வை  என்ன....



கடலிலே மீனைப்
பார்த்த வெள்ளைக்காரன்
சப்மரீன் செய்தான்

அதே கடலில்
மீனைப் பார்த்த
தமிழன் மச்சவதாரம்
என்று வணங்கினான்


----கலைஞரின் சந்தனக் கின்னத்திலிருந்து மாற்றி

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...