பக்கங்கள்

வியாழன் 20 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-89.

மறந்தால்தானே... நினைப்பதற்கு...!!!!!!!!!!!!




எனது தாயார் 2013ல் எடுத்தது.




அந்த அம்மா... என் அம்மாவை பற்றிக் கேட்டதும்                        எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை....எல்லோரும் கேட்கும் “ நல்லா இருக்கியா ” என்ற கேள்விக்கு  ரெடிமேடாக  வந்து உதிக்கும்   “ .... நல்லா இருக்கேன்” என்ற பதிலையே அந்த அம்மாவுக்கும்.....  நான் சொன்ன பதிலை ஒப்புக்கு அந்த அம்மா ஒப்புக் கொண்டாலும் என்னைக் கண்டு பரிதாபப்பட்டு... முனு முனுத்தார்கள்... விபதெ்தொன்றில் கேட்பதில் பிரச்சினை ... என்பது அந்த அம்மாவுக்கு எங்கே ? தெரியப்  போகிறது...



அந்த அம்மா என்னைக் கண்டு பரிதாபப்பட்டது இதுக்கு தானிருக்கும் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்... மக..மக என்று மகன  இப்படி தனிக்கட்டையாக ஆக்கிப்பிட்டதைதான் சொல்லி  பரிதாப்பட்டு இருப்பார்.



அந்த அம்மா கேட்டதும் எனக்கு சற்று தூக்கி வாரிப் போட்டது மாதிரித்தான் இருந்தது. என் தாயார் இறந்து  இன்றோடு மூன்று வருடங்களாகிறது. 20.09.2018 இன்று மூன்றாவது நிணைவு தினம்....  இந்த மூன்று வருடங்களில் என் அம்மா என் கனவிலோ..அல்லது நினைவிலோ..வந்ததே இல்லை... உண்மையைச் சொன்னப்போனால் நானும் நிணைக்கவே இல்லை.... ஏன்?இப்படி என்று எனக்கும் சிந்திக்கவும் இல்லை...“  மறந்தால் தானே நிணைப்பதற்கு” என்பது மாதிரியும் இல்லை...



சிறுவனாக இருந்த காலத்தில்  என் அம்மா...என்னை அடித்துவிட்டபோதும்
நான் கோபித்துக் கொண்டு ஓடிவிடுவேன் என்ற பயத்தில்.. என்னை அடித்துவிட்டு எனக்கு பதிலாக என் அம்மா அழுவார்... வாங்கிய அடியை பொருட் படுத்தாமல் தாயார் அழுவதை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும் இனிமேல் அம்மாவை அழ வைக்க கூடாதென்று தீர்மானம் எடுப்பேன். அந்தத் தீர்மானம் மறுநாள் எந்த திக்குக்கு சென்றது என்றே எனக்கு தெரியாமல் போகும்...



என் சகோதிரி  வயதுக்கு வந்து ஏழாவது படிக்கும் காலத்திலே... தன் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து முடித்த காலத்திலிருந்து வரதட்சனை கொடுத்து தாளவுமில்லை.. முற்றும் பெறவுமில்லை.. இன்று வரை தொடர்ந்து கொண்டதான் இருக்கிறது. அதற்கு  ஆணித்தரமான சாட்சி  “கல்யாணம் ஆகாமல் சுத்த பிரம்ச்சாரியாக இருந்து கொண்டு  சகோதரிக்கும் அது பெற்ற நான்கு  பிள்ளைகளுக்கும், எந்தவித ஆசாபாசத்தையும் விரும்பாமல்  இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கும் நானே தான்.”..



என் தாயார் முதல் சகோதிரி தொடங்கி.. அவரின் கணவர் மற்றும் அவர்கள் பெற்ற பிள்ளைகள் வரை எதுவும் என் பேச்சை.. நான் சொல்லும் வழிகளை பின் பற்றுவதில்லை...  அததுகள் என்னை ஒரு பகடை காயாக.. பொன் முட்டையிடும் வாத்தாகத்தான் என்னை பயன்படுத்தி வந்ததுகள்.... வேண்டாத பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவாய்க்கு மேல் செலவு செய்து... அதனால் உண்டாகும் கடன் சுமையெல்லாம் அதுகள் சுமப்பதில்லை.. கவலை கொள்வதில்லை. அந்தச் சுமையும் நான்தான் சுமக்க வேண்டும்... என் தாயார் இருந்தவரை..தப்போ..சரியோ....மூச்சே விட்டதில்லை....நான்..



என் தாயாரின் மூன்றாவது நிணைவு தினத்திலிருந்துதான்  தைரியமாக மூச்சுவிட முயன்று இருக்கிறேன்... அதற்கு முதல் படியாக...20.09.2018.-ல்  எனக்கு நானே ..காலையிலிருந்து மாலை வரை உண்ணாவிரதமும் மௌன விரதமும் மேற்க்கொள்கிறேன். இதில் வெற்றி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி..தோல்வி அடைந்தால் ...................

 முதலிருந்து  மீண்டும் தொடரும்  இம்சைகளும் அதை நோக்கிய எனது போராட்டமும்தான்....


திங்கள் 17 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-88.

அந்த நாள் நினைவுகள்..என் நெஞ்சில் வந்தது..


Image result for மிளகாய்Image result for மிளகாய்




பெத்துராஜ் கடைக்கு போவதற்கு  சங்கடமாகத்தான் இருந்தது. கடையில் அவர் இருந்தால் தைரியமாக போய் வாங்கலாம்.... அவருடைய வீட்டுக்காரம்மா இருந்து விட்டால்......இப்படியே சிந்தித்த வண்ணம் போனவன்.. அவர் கடைக்கு முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கடைக்குள்ளே பார்த்தால்.... பெத்துராஜ் மனைவி...வேறு வழி இல்லை. அவரை பார்த்தபோது... ஒருவித கேலிப் புன்னகையுடன்...எனைப் பார்த்தார்...நான் சைகையால்  வண்டியில் கட்டும் வயர் என்று சொல்லி முடிக்கும் முன்  ரேப்பா  என்றார் கிண்டலாக..... தலையை மட்டும் ஆட்டி  விட்டு அவரைப் பார்த்தேன்.

சில நாட்களுக்கு முன் அவர் கடைக்கு சென்றபோது “ரோப்”“ என்பதற்கு மாறாக “ரேப்பு”  ஒன்னு கொடுங்க என்று  சர்வசாதரணமாக கேட்டேன்.. அவர் அதிர்ச்சியடைந்தவராக திரும்பவும்  என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.  நான் அதன் அர்த்தம் தெரியாமல்..“ அதாங்க வண்டியிக்கு பின்னால கயிறுக்கு ரப்பர் மாதிரி இழுத்தா வரும்ல” அந்த ரேப்பு ஒன்னு கொடுங்கன்னு கேட்டேன். ”களுக்” கென்று சிரித்தவர். நான் கேட்டதை கீழே குனிந்து எடுத்துக் கொடுத்தார். நான் வாங்கிக் கொண்டு கடையைவிட்டு நகரும்வரை சிரித்துக் கொண்டே இருந்தார்..

அவருடைய சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழித்தேன்.. தாடியோடு திரிந்த நான் சேவிங் செய்து கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்து சிரித்திருப்பார்கள் என்று நிணைத்தேன் அந்த நினைப்பு தப்பு என்று மறுநாள் தான் எனக்கு புரிந்தது. ரோப்புக்கு பதிலாக நான் ரேப்பு என்று கேட்டு இருக்கிறேன் என்று...ஒரு வழியாக அதை வாங்கிக் கொண்டு பண்டல்களை கட்டி டெலிவரி செய்யும் நேரத்தில் என் மருமகன் ..பெத்துராஜ் கடையில் வாங்கிய வயரை  ”ரோப்” என்று சொன்ன பிறகுதான். பெத்துராஜ் மனைவி சிரித்த சிரிப்புக்கு காரணம் தெரிந்தது.

 இன்னொரு ரோப்பு வாங்க வேண்டும் என்று நிணைத்தபோதுதான் எனது தர்மசங்கடத்தை  விவரித்தது.... இந்த தடவை சரியாகச் சொன்னபோதும் அவர் புன்னகை தாளாமல்.. என்னை பார்த்தபடியே கைகள் இரண்டையும் மேல தூக்கி தேடினார். அந்த சமயத்தில் முழுமையாக தெரிந்த அவர் மார்பகத்தை, பார்க்காமல்   தலை குணிந்து நின்றேன். அவர் பேசிக் கொண்டே என்னை மேலே பார்க்கச செய்தார்.. சிறிது நேரத்தில் கடைக்க வேறு ஒருவர் வந்தவுடன் மேலே தூக்கிய கைகளை போட்டுவிட்டு  வந்தவர் கேட்டதை கொடுத்துவிட்டு... நான்  சரியாக  ரோப்பு என்று சொன்னதை .. ரேப்பைக் காணோமே..என்றபடி மீண்டும் கைகைளை மேலே தூக்க ஆரம்பித்தார் இருங்க... இருங்க...அன்றைக்கு கீழே இருந்து எடுத்துக் கொடுத்தீங்களே..அங்க பாருங்க...என்றபோது... மீண்டும் கிண்டல் புன்னகை மாறாமல் அவர் நெற்றியை தட்டியபடியே.. சிறிது நேர காத்திருத்தலுக்கு பின்.. நான் கேட்ட ரோப்பை எடுத்துக் கொடுத்தார்.

இந்த சம்பவம் என் பள்ளிப் பருவத்தில் நான் வாய் உளறி கொட்டிய நினைவுகளை கிளறி விட்டதோடு... கடை அண்ணாசியின் நினைவையும் தூண்டிவிட்டது.

நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த காலம் என்று நிணைக்கிறேன். பள்ளிக்கு போகாமல் டிமிக்கு கொடுத்துவிட்டு ஊர் சுற்றி வந்த நான் பசி  பொறுக்க முடியாமல் வீட்டுக்கு வந்தபோது.. என் தாயார்  ஒரு நாளுக்கு முன் ஆக்கி வைத்திருந்த பழையது தண்ணியும் கஞ்சிமாக இருந்தது.

தொட்டுக் கொள்வதற்கு வெஞ்சனம்  .. தட்டுமுட்டியில் தேடியபோது   எதுவும் கிடைக்க வில்லை. அதனால்  நான் சோர்ந்து  போயி உட்காரமல் நெடுநாட்களாக என் டவசர் பையில் கிடந்த பத்து பைசாவை கொண்டு ஒரு பச்ச மிளகாயை வாங்கி நறுக்கென்று கடித்து.. இருக்கிற தண்ணியும் கஞ்சியையும் உள்ளே இறக்கி விடலாம் என்ற  முடிவோடு...

அண்ணாச்சி கடைக்கு சென்றேன். அங்கு இருவித மிளகாய்கள் இருந்தன.. ஒன்று  குண்டு மிளகாய், இன்னொன்று குச்சி மிளகாய்.. கையில் வைத்திருக்கிற பத்து பைசாவில் மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற நிணைப்பில் அண்ணாச்சிடம் விலை கேட்டேன்.

நான் எப்படி கேட்டனோ..அப்படியே... அண்ணாச்சியும் பேசினார்.. அண்ணாச்சி  இந்த குண்டு முல எவ்வளவு?  குச்சி முல எவ்வளவு என்று.... கடைசியல் குச்சியில ஒன்றும் குண்டுல ஒன்றுமாக வாங்கி வந்து நறுக்கென்று கடித்து அந்த உரப்பில் எல்லா தண்ணியையும் கஞ்சியையும் என் வயிற்றுக்குள் இறக்கி விட்டேன்.

குண்டு மிளகாய்..குச்சி மிளகாய் என்று நான் கேட்பதற்கு பதிலாக வெள்ளந்தியாய் நான் கேட்டதும்...அண்ணாச்சியும் நான் கேட்ட வாரத்தையிலே சொன்னதும் கடைசி பெஞ்சுக்காரனான எனக்கும் தெரியவில்லை அருகில் நின்றவர்களும் கவனிக்கவில்லை ..  ரோப்பு-வை ரேப்பு என்று கேட்திலிருந்து அந்த பழைய நினைவுகள் பச்சையாய் நினைவுக்கு வந்தது. இன்று நான் இருக்கிறேன்.  அண்ணாச்சி அவரில்லை.. ...

ஞாயிறு 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-87.

யாரு...யாரை.... விசாரிப்பார்கள்..!!!
Image result for எடப்பாடி
1
Image result for ஐ.ஜி முருகன்
2
Related image
3







ஆளும் எடப்பாடி மீது உள்ள ஊழல் வழக்கை விசாரிப்பது விஜிலென்ஸ்.

அந்த விஜிலென்ஸ் ஐ ஜி  முருகன் மீது பாலியல்  வழக்கு விசாரனை.

இந்த ஐ ஐியை விசாரிப்பது டிஜிபி ராஜேந்திரன்.

டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு.

இந்த டிஜிபி ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது எடப்பாடி

இந்த எடப்பாடி மீது ஊழல் வழக்கு..

இதில் யாரு யாரை விசாரித்து தண்டிப்பார்கள்

எல்லாத்தையும் ஊத்தி மூடுற வேலைதான் நடக்கும்..


இப்பவாச்சும் நம்புங்க மக்கா... நாடு குட்டிச் சுவரா போச்சுன்னு..

நரகலில் நல்லரிசி பொறுக்க முடியுமா...????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...