பக்கங்கள்

சனி 26 2016

முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும்ஆடிய ஆட்டத்தை பாத்தியா..?

நண்பரை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற போது.. நண்பரின் பக்கத்து வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டது. என்னவென்று தெரிந்து கொள்ள  அந்த வீட்டை எட்டிப் பார்த்தேன்.

நண்பரின் உறவுக்கார பெண்மணி ஒருவர் தெரிந்தார். என்னவென்று கேட்டேன்...

முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும் ஆடிய ஆட்டத்தை பாத்தியா..? என்று கேட்டார்.

இல்லையே என்றேன்.

அங்கே பார்    என்றார்....


அகன்ற சின்னத்திரையில் முன்னால் முதல்வரும்  இன்னால் முதல்வரும் கடைசியாக போட்டி போட்டு ஆடிக் கொண்டு இருந்ததை பார்த்தேன்.நான் பார்த்த சிறிது  நேரத்தில் அவர்களின் ஆட்டம்முடிந்துவிட்டது. பின் யூடிப்பில் முதலிருந்து கடைசி ஆட்டம்வரை கண்டேன்..

அந்த கண் கொள்ளாக் காட்சியை தாங்களும் பார்க்க.....



வெள்ளி 25 2016

தமிழ்நாட்டில.... யார் ? யாரை..ஆழ்வார்கள்..???

படம்-swamiindology.blogspot.com

பேயை ஆளபவர்.......பேயாழ்வார்

பூதத்தை ஆள்பவர்........பூதத்தாழ்வார்.

 மங்கையை ஆள்பவர்..... திருமங்கையாழ்வார்

நம்மை ஆள்பவர்.........நம்மாழ்வார்..


.2016 மே 19க்கு பிறகு தமிழ்நாட்டை இவர்களில் யார் ?? யாரை ஆழ்வார் களோ...???


வியாழன் 24 2016

அறிவு உள்ள ஊடக- நாளேடு முண்டங்களுக்கு.....

படம்-malarum.com


அரிசி இருக்கல
அரிசி அதில்
 கற்களை கலந்தால்
 அது கலப்படம்..


சீனி தெரியுமா..
சீனி அதுல
ரவையை க் கலந்தால்
அதுக்கு பேரும்
கலப்படம்  தான்


அறிவு கெட்ட
ஊடக முண்டங்களே!..
நாலு கால்
பொட்ட  நாயை
சாதி வெறியன்
மணம் முடிப்பதுதான்
கலப்பு மணம்.

தன் சொந்தத்திலோ
ஒரே சாதியிலோ
மணம் முடிப்பது
 அது  அகமணம்.


மேல்சாதி இளைஞன்
மேல்சாதி பெண்ணை
மணம் முடிப்பது
சாதி மறுப்பு
மணம் அல்ல..

அறிவு கெட்ட
நாளேடு முண்டங்களே!
கௌசல்யா சங்கரை
மணந்து இருப்பது
நீங்கள் எழுதி
பரப்பும் கலப்பு
மணம் அல்ல
அதுசாதி மறுப்பு
திருமணம்........முண்டங்களே
திருந்திக் கொள்ளுங்கள்.



புதன் 23 2016

அன்று போல் இன்று இல்லை..




அன்று 23.3.2011ல்
மாவீரர்கள் நிணைவு
நாளில் எனது
வலிப்போக்கன் என்ற
வலைப்பதிவை  தொடங்கிய
போது என்ன
எழுதுவது எப்படி
எழுதுவது எதற்கு
எழுதுவது ஒன்றும்
புரியாமல் கோழியைப்
போல் குப்பையை
கிளிறினேன்   ஒன்றுமே
கிடைக்கவில்லை.....குப்பையைத்
தவிர..........................

இன்று எழுதுவதற்கு
நிறைய இருக்கிறது
என் மனவோட்டத்தில்
தொடராய் ஓடுகிறது
அந்தத் தொடர்
ஓட்டத்தின் ஊடே
கடைசியாய் நான்
என்னால் சேர்ந்து
ஓட முடியவில்லை
என்றாலும் ஓட்டம்
முடியும்வரை நானும்
ஓடிக் கொண்டே
இருப்பேன் ஐம்பதை
தொட்ட பின்தானே
படிக்கவும் எழுதவும்
ஆரம்பித்தேன் அதனால்
ஓட்டத்தில் நான்
வெற்றி பெறாவிட்டாலும்
இருக்கும்வரை எழுதிக்
கொண்டே இருப்பேன்.



திங்கள் 21 2016

போலீசு ஆன..அர்னாப் கோசுவாமி.

arnab-umar-khalid
படம்-வினவு


நீ   ஒரு தீவிரவாதி
அதை முதலில் ஒப்புக் கொள்
உன்னிடமிருந்து விளக்கங்கள்
எதையும் நான் கேடக
விரும்பவில்லை......

நீ ஒரு தீவிரவாதி
நீ ஒரு பயங்கரவாதி
ஒப்புக் கொள்
ஒப்புக் கொள்

----அர்னாப் கோசுவாமி.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...