பக்கங்கள்

வெள்ளி 03 2014

ஈரை பேன் ஆக்கி....பேன்-னை பெருமாள் ஆக்கி..................

www.geevanathy.com 









பட்டணத்து வாக்காளர்
ஒருவர் பட்டிகாட்டு
வாக்காளரிடம் இப்படிக்
கேட்டார்.............

“ரெட்ட இலக்கி”
ஓட்டு போட்டீயே
என்னா? கிடச்சதது
என்று...................

அது கேட்டு
பட்டிக்காட்டு
வாக்காளர் இப்படிச்
 சொன்னார்...........

அந்து துளைபோட்டு
எலி கொரித்துவிட்டு
மக்கிபோன மிச்ச
மீதியை கடைசியா.......

மாதத்தில் பனிரெண்டு
நாளுக்கு என் குடும்பம்
சாப்பிட விலையில்லா
அரிசி தர்ராங்க..............

விலையில்ல அரிசி
இட்லிக்கு  வர வே
மாட்டேன் என்று
சொன்னாலும் அதை
அரைக்க விலை
 இல்லா கிரைண்டர்
தந்தாங்க.............

வராத இட்லிக்கு
சட்னி அரைக்க
விலையில்லா  மிக்ஸி
கொடுத்தாங்க..................

உண்ட மயக்கம்
தீர்க்க... மின்
பில் கட்டும்
 டேபிள் விசிறி
தந்தாங்க..............

தூங்கி எழுந்தவுடன்
சோம்பல் போக்க
வேலை செய்வதற்கு
ஆடு......மாடு.
தாராக.................

 வரும் பொங்கலுக்கு
பொங்க வைக்க...
பொங்க சரக்கோட
இலவசமாக வேட்டி
இல்லாதவுகளுக்கு
வேட்டியும் சேலை
இல்லாதவுகளுக்கு
சாயம் போகும்
சேலையும்...............

பொங்கல சந்தோசமாக
டாஸ்மாக் அருந்தி
கொண்டு ஆடுவதற்கு
ஒரு நூறு ரூபாயும்
இலவசமா தரப்
போறாங்க...................

பட்டியல் போட்டு
சொல்லி முடித்த
பட்டிக் காட்டு
வாக்கு ஆளர்..
பட்டணத்து வாக்கு
ஆளரிடம்  கேட்டார்.

பட்டணத்து வாக்கு
ஆளர்க்கு எதுவும்
கிடைக்கலீயோ..........
என்று.................

“சட்டு என்று” பட்ட
ணத்து வாக்காளர்
சொன்னார்...........

“ஓ.....கிடச்சிருக்கே...!!!.....

காலை விடிந்தவுடன்.
நகரத்து வாசிகளுக்கு
குறைந்த விலையில்
“அம்மா..”..உணவகத்தில்
இட்லி சட்னியுடன்
குடுக்குறாங்க......................

மதியம் சாம்பார்
சாதத்துடன் சப்ளை
பன்னுறாங்க...................

சாப்பிடும் போது
விக்கி கிட்டா........
சாப்பிட்ட பின்பு
தாகம் எடுத்தா
“அம்மா” வாட்டர்
நீட்டுறாங்க............

வரும் பிரதம..
தேர்தல்ல ரெட்ட
இலைக்கே ஓட்டு
போட்டா....................

அம்மா செங்கோட்டை
எக்ஸ்பிரசுல போயி

செங்கோட்டை நாற்
காலியில் ஒக்காந்தங்
கண்ணா..................

ஈரை பேன் ஆக்கி
பேன் னை பெருமாளா
ஆக்கி. அந்தப்
பெருமாள. எல்லார்க்கு
கிடைக்க செய்து
விடுவாங்கல்ல...........

என்ன நான்
சொல்றது...........!!!!!!!!!!






வியாழன் 02 2014

முட்டையை அடை காத்த சிறுவன்.......


ta.wikipedia.org 

அய்ந்து வயதான தன் மகனை தேடினாள் தாய் ஒருத்தி.

பல இடங்களில் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை அந்தத்தாயால்.

மகனின் தந்தை வந்தபோது.அவரிடம் மகனை தேடி அலைந்ததை தெரிவித்தாள். அது கேட்ட தந்தை தாயை கடிந்து கொண்டார்.

தன் மகனைத் தானே தேடிச் சென்றவர். சிறிது நேரங்கழித்து மகனுடன் வந்தார்.

தேடி தவித்துப்போன தாய், மகனை பார்த்தவுடன்.“ எங்கே இருந்தான்” என்று கேட்டாள் தாய்

. நமது தொழுவத்தில் வைக்கோலைப் பரப்பி அதில் வாத்து முட்டைகளை வைத்து அதன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தான். என்று தந்தை சொன்னார்.

“ஏன்? அப்படி இருந்தான் என்று தாய் மீண்டும் கேட்டாள்.

காலையில் வாத்து தன் முட்டைகள் மேல அமர்ந்திருப்பதை பார்த்தவன். வாத்தின் உடம்பு சூட்டினால் குஞ்சாக வருவதை தெரிந்து கொண்டு.தானும் வாத்து முட்டைமேல் அமர்ந்திருந்தான்  என்றார் தந்தை

 பொது மக்களுக்கு பயன்படாத எதையும் கண்டுபிடிக்க போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்ட ஆராய்ச்சியாளர்தான் அந்தச் சிறுவன்.

யார் அந்தச் சிறுவன் ? உங்களுக்கு தெரிகிறதா?????????......தெரிந்தால் சொல்லுங்களேன்.
.




புதன் 01 2014

வாழ்த்தா............................எதுக்கு??????

eluthu.com -













அம்பது வருசத்தை கடந்துவிட்ட எனக்கு இரவில்  சரியாக தூக்கம் வருவதில்லை. சனவரி 1யை முன்னிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால் எழுப்பப்பட்ட வெடிச்சத்தத்தாலும் கூச்சலாலும் அமைதியாக படுத்திருக்க முடியாமல் புரண்டு கொண்டு இருந் தேன். அதன் பலனாக அதிகாலையில் நன்றாக தூங்கி கொண்டு இருந்த நேரத்தில்.............

என் கைப்பேசி விடாமல் ஒலித்தது. விடாது ஒலித்ததன் பயனாக, அந்தத் தூக்கத்திலும் கேட்காத  என் காதுக்கு ஒலி கேட்டு, எழுந்து நமக்கு பெரிய வீடும் இல்ல, சின்ன வீடும் இல்ல, அதிகாலையில்  யாரா இருக்கும் என யோசித்து  கைப்பேசியை எடுத்து

 “யாரு, என்ன விசயம் ” என்ற போது,

“வாழ்த்துக்கள் அண்ணே” சொன்னது.ஒரு குரல்.

“வாழ்த்துக்கள் அண்ணே” என்று சொன்னது. என் காதுக்கு “வாழ்த்துக்கள் வெண்ணே” என்று  பதிவானது.

ஒரு கணம் “என்னடா.......“வாழ்த்துக்கள் வெண்ணே”ங்கிறாங்கே...........என நிணைத்து நிதானத்துக்கு வந்து...............

“வாழ்த்தா..................எதுக்கு”?? திரும்ப கேட்டபோது.........

“புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதில் வந்தது.

“புத்தாண்டா”........அதத்தான் “தைலிருந்து ஏப்ரல்லுக்கு மாத்திட்டாங்கல்ல” என்றபோது........

“அது தமிழ்புத்தாண்டு.........இது ஆங்கில புத்தாண்டு  என்றது எதிர்முனை.

“ நான்.ஆங்கிலேயேன் இல்லையே”.............. என்றேன் திரும்பவும்.

“நீங்கள்,ஆங்கிலேயேன் இல்லையென்றாலும். ஆங்கிலேயே காலண்டர்கள் தேதிகைளைத்தானே பயன்படுத்துகிறீர்கள். அதற்குத்தான் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்.

“அட, இதுக்கெல்லாமாவா ..........வாழ்த்துச்சொல்லுவாங்க.,என்றுவிட்டு..............எதுஎதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லனும் என்று நானும் ஒரு சில தியரியை சொன்னேன்.

எனக்கு கல்யாணம் ஆகி.............ஆகியிருந்தால் அந்த நாளுக்கு வாழ்த்து க்கள் சொல்லலாம், எனக்கு குழந்தை பிறந்திருந்தால் அந்த நாளுக்கு, குடிசை வீட்டிலிருந்த நான், சென்டிரிங் வீட்டிற்கு மாறியிருந்தால் அந்த நாளுக்கு, இப்படி பல டிப்சுகளை சொல்லி இவற்றுகளுக்குத்தான் வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்றேன்................

இப்படியாக.நானும் வாழ்த்துக்கள் சொன்ன வருத்தப்படாத வாலிபரும் முப்பது நிமிடத்துக்கு மேல் பேசி, வருத்தப்படாத வாலிபரை,வருத்தப்படும் வாலிபராக ஆக்கி விட்டேன.

....இனி யாருக்காவது வாழ்த்து சொல்லும்போது,கண்டிப்பாக என்னை ஞாபகத்துல வச்சுருக்குவாருல்ல...............

நான் சொன்ன மொக்கைகளை “வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சொல்லி.வருத்தபடுவாருல......, கோபம் கொப்பளிக்க  “காலையில ஒருத்தனுக்கு வாழ்த்து சொன்னேன்டா”.......  என்ன கொன்னுன்டான்டா என்று சொல்லுவாருல.............

அதனால.............வாழ்த்து சொல்லும்போது, காரணகாரியம்,நேரம்காலம் பாத்து
சொல்லனும்..புரியுதா.....................

செவ்வாய் 31 2013

மரணத்தில் வென்ற மாவீரர்கள்........................



பகுத்தறிவை பரப்பியதற்க்காக நஞ்சருந்தி கொல்லப்பட்டார் சாக்ரடீஸ்
kuttybala4165.blogspot.com -


இந்திய சுதந்திரத்திற்க்காக போராடியதால் தூக்கில் போடப்பட்டார் பகத்சிங்.


www.vinavu.com -












ஆங்கிலேயனை எதிர்த்த போரில் வீரர்களுடன் வீரராக செத்துக் கிடந்தார் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான்
படம் .வினவு.
கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் நக்சல்பாரிக் கவிஞர் சரோஜ் தத்தா
www.luckylookonline.com -





















திங்கள் 30 2013

2013ம் ஆண்டின் இந்திய (அ) நீதிமன்றத்தின் நீதி(பதி)களின் (அ)யோக்கிய சுவடுகள்........



பிப்ரவரி 9. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்பட்டவர் அப்சல் குரு. என்பவர்.

அப்சல் குரு , குற்றவாளி அல்ல என்பதற்க்கான தடயங்கள்.சாட்சிகள், மற்றும் வாக்குமூலங்கள் போன்றவற்றை.எவற்றையுமே பரிசிலிக்காமல்

பினையில் விட்டால் சாட்சியங்களையும் தடங்களையும் அழித்துவிடுவார். என்று கூறி பினை மறுக்கப்பட்டு ஒரே வருடத்தில் விசாரனை நடத்தப்பட்டு   இந்திய நீதி மன்றத்தால் தூக்கிலேற்றப்பட்டவர்.
                                           ------------------------------



நவம்பர் 27. அதே இந்திய (அ) நீதி மன்றம்.  சங்கர மடத்தின் கொள்ளையர்களான  கொலைகாரர்கள். சங்கரராமனை கொலை செய்தற்க்கான  தடயங்கள்,சாட்சியங்கள்,மற்றும் வாக்குமூலங்கள்  போன்றவைகள் ஆனித்தரமான ஆதாரங்கள் இருந்த போதும்.

பினையில் விட்டால் சாட்சிகளை கலைப்பார், தடயங்களை அழிப்பார் என்று கண்கூடாக தெரிந்திருந்தும்  பினை வழங்கப்பட்டது.

கொலைக்குற்றவாளிகள்.தங்கள் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றக்கோரி மனு செய்தபோது.தலை வணங்கி நமஸ்கரித்து ஏற்றுக் கொண்டு ,புதுச்சேரி  நீதி மன்றதுக்கு மாற்றியது.

  கொலையான சங்கரராமனின் (பாதிக்கப்பட்டவர்கள்) மகள் புதுச்சேரி நீதி மன்றத்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது. அதனால் வழக்கை சென்னைக்கே மாற்றக்கோரி மனு செய்த போது,மனுவை ஊதாசீனப்படுத்தி,நிராகரித்து

கொலைகாரர்களான ஜெயேந்திரன்,விஜயேந்திரன் உட்பட அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின் அனைவரும் சமம் என்று ஊளையிடும் இந்திய (அ)நீதி(பதி)கள் நிறைந்த (அ)நீதிமன்றம்.

2013ம் ஆண்டில் இந்திய நீதியின் சுவடுகள் .................

1.சங்கரராமன் கொலை வழக்கில், கொலை குற்றவாளிகளுக்கு நீதி விற்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளால் நீதி வாங்கப்பட்டுள்ளது.

2. அப்சல் குரு வழக்கில்,  குற்றமற்றவர் தூக்கலிடப்பட்டு,நீதி மறுக்கப்பட்டுள்ளது.

3. ஜெயலலிதா வழக்கில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று மொத்த ஆட்சி காலத்தில் ரூபாய் 60/- மட்டுமே பெற்றவர். 66 கோடி சொத்து சேர்த்த வழக்கில் நீதி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய (அ) நீதி மன்றத்திலே...................தனியார்மயம்.தாராளமயம்,உலக மயத்தால் நீதியும் வியாபாரமாக்கப்பட்டுள்ளது.





ஞாயிறு 29 2013

யானையை புடுச்சு பானைக்குள் அடக்க முயலும் கேச்ரிவால்....



ஆமஆத்மியின்  டெல்லிமுதல்வர்  ராம்லீலா மைதானத்தில் இருந்து டெல்லி வாழ் மக்களுக்கு யானையை புடிக்க ஒரு வழி சொல்லியிருக்கிறார். இப்படி.................

மக்களே!  உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். லஞ்சம் வாங்குவோரை  திருத்த (தண்டிக்க அல்ல) ஒரு வழி வைத்திருக்கிறோம். நாங்கள் இரண்டு நாளில் போன் நம்பர் தருவோம், அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் நீங்கள் போனாலும்.அங்கு யாராவது லஞ்சம் கேட்டால்..உடனே, அங்கேயே உட்கார்ந்து லஞ்சம் தர தயராக இருங்கள். எங்கள் லஞ்ச ஒழிப்பு படை வந்து கையும் களவுமாக பிடித்து விடும்

அப்புறம்........................

அப்புறமென்ன.......................யானையை புடிச்சு பானைக்குள் அடைத்த கதைதான்......................

ஐஐடி யில் மெக்கானிக் படித்த மூளைக்கு ஒரு வழி தெரிந்தால்.......... லஞ்சத்திலே ஊறி கொளுத்து வளர்ந்துள்ள யானைக்கு எத்தனை வழி தெரிந்திருக்கும்.............

லஞ்ச ஒழிப்பு படையே லஞ்சம் வாங்குவது தெரியாத ஐஐடி முதல்வர் லஞ்ச யானையை பிடித்து பானைக்குள் அடைக்க போகிறாராம்.

கேப்பையில் நெய் ஒழுகிறது என்று நம்பும்  கேனையர்களாக இருக்குவரை.இப்படிபட்ட கூத்துகளும் நடக்கும்தான்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாத்துகிறவர்கள் இ.இ..இருப்பார்கள்.இதுவும் ஐஐடி மூளை சொன்னதுதான்....                                                                                                    


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...