பக்கங்கள்

சனி 19 2017

ஆப் கி மோடி சர்கார்....நமஸ்கார்.....

*அனுப்புநர்*
   *குசும்புகாரன்*
    *தருமபுரி மாவட்டம்*
     *தமிழ்நாடு*

*பெறுநர்*
*மாண்புமிகு மோடி   அவர்களுக்கு,
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.

நாள் - 21.6.2017

ஐயா வணக்கம்,

*பொருள் -* தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக 
                     எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.

அந்த மூன்று கூட்டத்திலும் , "நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் !*

 மீட்டவுடன் *ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன்* என்றீர்கள் !அதையும் *நூறே நாளில் தருவதாக*ப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் !

 உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் ! இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் ! பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் !

நீங்கள் *வாக்குத்தவறாத பிரம்மச்சாரி* என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார். ஐயா , 

நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,உங்கள் வாக்குறுதியை நம்பி *பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் !*

வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. நூறுநாளில் தருவதாக,தங்கள் வாக்குறுதியை நம்பிக்  கடன் வாங்கி விட்டேன்.

100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது !

ஐயா நீங்கள் மானஸ்தன் !

பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் !

*நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் !*

 எனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் !

ஆனால்,ஐயா
கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.  உங்கள் 
*மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்!* உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

 ஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை . அதில் பல வங்கிகளும் அடக்கம். உங்கள் *அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் !*

ஜி.....விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல !

என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை !

அதன் மூலம் உங்கள் *நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை !*

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். நாங்கள் அனைவரும் உங்களுக்கே வாக்களித்தோம்.

 மொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் !* வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே  வாக்களிப்போம். இது உறுதி ! உடனடியாகக் கீழ்க்காணும் 
எனது *வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும் !*

இது அவசர வேண்டுகோள் ஐயா ! *நல்லவேளை நான் விவசாயி இல்லை..* 

 இந்நேரம் கடனுக்காக என் *கை காலை முறித்திருப்பான்  வங்கி அடியாள் !* ஜி

ஐயா..

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?

தயவுசெய்து *உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள் !*

வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது *நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது !*

ஜெய்ஹிந்த்..

ஸ்வச் பாரத்...

ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...

*இணைப்பு -*
தலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.

*குறிப்பு -*
 ஜி ...
இதுகுறித்துப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன். 

*முக்கியக் குறிப்பு -*
ஐயா இக்கடிதத்தைப் பகிரும் *என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும்* 15,00,000 செலுத்தவும் .
 நன்றி. !

வியாழன் 17 2017

பத்து கிலோ கோதுமைக்காக இந்த அவமானம்...!!!


ஒரு மாதத்திற்கு
வெறும் பத்து
கிலோ கோதுமைக்காக
இந்த அவமானம்

நாஜி ஜெர்மனியில்
யூதர்களை அடையாளப்படுத்த
மஞ்சள் நட்சத்திர
இலட்சினை கட்டாயமாக
சுமக்கச் செய்து
பின்னர் குறி
வைத்து அழித்து
ஒழித்தது போல....

.....

ராஜஸ்தான் மாநிலம்
டௌசா பாலி
பாரன் மாவட்டம்

வீட்டுச் சுவரில்
மஞ்சள் நிற
பெயிண்டின் பின்னணியில்
சிவப்பு மையால்
இந்தீயில் குடும்பத்
தலைவரின் பெயருடன்
“நான் ஏழை”
நான் அரசாங்கத்தின்
தேசிய உணவு
பாதுகாப்பு சட்டத்தின்
கிழ் உதவிபெறுகிறேன்
என்று எழுதப்பட்டுள்ளது..


குறிப்பு--

பத்து கிலோ
கோதுமைக்காக இப்படி
அவமானப் படுத்தும்
இதே அரசைத்தான்
தமிழகத்தில் அமைக்க
பொரி ராதாவும்
இந்தியிசையும் அரை
கூவி அழைக்கிறார்கள்.

நான் ஏழை..

செவ்வாய் 15 2017

அந்த பேச்சுக்கு என்ன பொருள்....???

இரண்டு ஆயிரத்து
பதி ஏழாம்
ஆண்டு சூன்
மாதம் இருபத்தி
ஒன்னாம் தேதி

காந்தியின் சபர்மதி
ஆசுரமத்தில் ராட்டையில்
நூல் நூற்றுக்
கொண்டே மேதகு
பாரத பிரதமர்
மோடி பசு
பயங்கர வாதம்
குறித்து கடுமையாக
பேசினார் பசுக்களை
காப்பது சரிதான்
ஆனால் இது
காந்தியின் தேசம்
இங்கே பசுக்களை
காப்பதற்க்காக கொலைகள்
செய்வதை பிரபல
பசு நேசரான
காந்தி ஏற்றுக்
கொள்ள மாட்டார்
..................................



இதை பின்பாட்டு
கோஷ்டிகள் ரீபப்ளிக்
டைம்ஸ் நௌ
கொண்டாடி மகிழ்ந்தன

அப்படியென்றால்
அன்றைக்கும் இன்றைக்கும்
மேதகு பிரதமர்
பேசிய அந்த
பேச்சுக்கு பொருள்


அமைதிப்படை அமாவாசை
வசனம்தான் பொருள்

“ டேய் மணியா.....
நீ கொளுத்தும்
போது நான்....
அய்யையோ வேண்டாம்
வேண்டாம் என்று
கத்துவேன் அதெல்லாம்
டூப்பு .....நீ.கரெக்ட்டா
இழுத்து போட்டு
கொளுத்திடு என்பதுதான்”


திங்கள் 14 2017

எழுபத்தியோராவது ஆண்டின் சுதந்திரம்


எழுபத்தியோராவது ஆண்டின்
இந்தியா  பெற்ற
சுதந்திர சூளுரை


ரோசம் இல்லா
மக்களுக்கு ரேசன்
பொருள் எதற்கு?


மானம் இல்லா
மக்களுக்கு இனி
மானியம் எதற்கு??

சினம் இல்லா
மக்களுக்கு இனி
சிலிண்டர் எதற்கு???

குட்டக் குட்ட
குனியும் குரங்கின
மக்களுக்கு கொடுங்கோல்
ஆட்சிதான் சரி............

மெல்லச் சாவார்கள்
சுதந்திரம் பெறாத
இந்திய மக்கள்.....

இருப்பவன் எல்லாம்
வெளி நாடு
ஓடிப் போயிடுவான்
மல்லையா” போல
சூ..தந்திரமாய்....

இல்லாதவன் எல்லாம்
அடிமையாக சாவான்
விவசாயிகளை” போல

இனியும்  துணியாமல்
இருந்தால்  உமக்கு
துணியும் மிஞ்சாது.....

ஓட்டு போட
உயிரை மட்டும்
விட்டு விட்டு
ஊனமாக்கி பிச்சை
எடுக்க விட்டு
விடுவார்கள் சுதந்திரம்
கொண்டாட பாக்கியம்
பெற்ற  பாதகர்கள்

ஆளும் அரசின்
திட்டம் தெரிந்து
அவர்களின் கொட்டம்
அடக்காமல் இருந்தால்
நட்டம் சாமனியர்க்கே.

 வா ஒழுங்காய்
ஒன்று கூடு
வீரமாய் போராடு...

இல்லை என்றால்
உன் இனமே
முற்றாய் அழிந்து
விடும் மண்ணோடு


ஞாயிறு 13 2017

ஜனநாயக நாட்டில்.. இரு வகை திருடர்கள்.

இந்தீய ஜனநாயக
நாட்டில் உங்களின்..
பணப்பபை கடிகாரம்
செல்பேசிகளை திருடுபவன்
ஏழைத் திருடன்

அதே நாட்டில்
உங்களின்எதிர்கால
கனவு கல்வி
தொழில் மகிழ்ச்சி
நிம்மதிகளை திருடுபவன்
அரசியல் திருடன்.


ஏழைத் திருடன்
உங்களை தேர்வு
செய்கிறான்..

அரசியல் திருடனை
நீங்கள் தேர்வு
செய்கிறீர்கள்...

ஏழைத் திருடனை
காவல்துறை கைது
செய்து..  சிறையில்
அடைக்கும்.....

அரசியல் திருடனுக்கு
காவல்துறை பாதுகாப்பு
கொடுக்கும்............

ஏழைத் திருடனை
வெறுப்பாய் பார்ப்பீர்கள்

அரசியல் திருடனை
மகிழ்ச்சியுடன் பாராட்டுவீர்கள்..

 சொன்னது சரியா...??????

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...