பக்கங்கள்

வெள்ளி 14 2014

“புறம்போக்கு”சிறைச்சாலையை மையப்படுத்தும் படமாம்...

ஜூலியஸ்பூசிக் http://ta.wikipedia.org/s/3r3t


சிறைச்சாலை வழியாகத்தான் மனித நாகரிகம் வளர்கிறது என்று சொல்கிறார். “புறம்போக்கு” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான் ஜனநாதன்.

இதற்கு ஆதரவாக அவர்,  “தூக்கு மேடை குறிப்புகள்” என்ற நூலை எழுதிய ஜூலியஸ் பூசிக்-கை பற்றி சொல்கிறார்.செக்கோஸ்லோவோக்கியாவின் கம்யூனிஸ்ட்  தோழர் ஜூலியஸ் பூசிக்  இட்லரின் நாஜிக் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு  கொல்லப்படுகிறார். ஜூலியஸ் பூஷிக் கொல்லப்பட்டவுடன் அவரின் சிறைக் குறிப்புகளை தேடி எடுத்து  அவருடைய மனைவி ”தூக்கு மேடைக் குறிப்புகள்” என்று வெளியிடுகிறார்...

மனித நாகரிகம் சிறைச்சாலை வழியாகத்தான் வளருகின்றது என்று சொல்லியிருக்கிறார். நிலவுகின்ற (முதலாளித்தவ,பாசிச)அரசியலையும் அதன் தத்தவத்தை எதிர்த்தபோது .சிறை பிடிக்கப்படுகிறார். சிறையில் அடைக்கபட்டவுடன் அவருடைய தத்துவம் நடைமுறைப்படத்தப்படுகிறது. வரலாறு முழுக்க சிறைச்சாலை வழியாகத்தான் சமூகம் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஜூலியஸ் பூசிகக் சொன்ன குறிப்புகளின் ஒரு விஷயத்தை  இந்தப் படத்தில் சொல்கிறேன் என்றார்.இயக்குநர்

கூடவே.....பகத்சிங் சிறையிலிருந்த போது நிகழ்ந்த சம்பவத்தையும் தன் “புறம்போக்கு” படத்தில் குறியீடாக  பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்.

இந்தப்படத்திற்க்காக உண்மையான சிறைச்சாலையாக இரண்டு கோடி செலவில் 150 கார்பெண்டர்களுடன் முப்பது நாட்களில் அமைத்து 500 பேர்களுடன் 55 நாட்கள் சிறைச்சாலை படப்பிடிப்பு நடந்தது. கல்யாண நாள் மாதிரி இருந்தாக  தெரிவித்தார்.

சிறைச்சாலைக்கு போகாதவர்களால் சிறைச்சாலை அனுபவம் தெரிய வாய்ப்பில்லை.என்றாலும் . தனியாக சிறைச்சாலை சென்று வந்தவர்களுக்கு   சிறைச்சாலை அனுபவம் பற்றி “ புறம்போக்கு” படம் வந்தப்பிறகுதானே தெரியும். ஜனநாதனின் சிறைச்சாலை ரியாலிட்டியா??? சினிமாத்தனமா...? என்று......................

rsz_purampokku (1)
http://puthucinema.com/

செய்கின்ற தொழிலை ஈடுபாட்டோடு செய்து வளர்ச்சி அடைந்தவர்கள்...!!!

படம்-வினவு.
ஒரு ரூபா சம்பளத்துக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னுத்தி ஒன்றாம் ஆண்டில் ஆட்சி தொழிலுக்கு வந்து அய்ந்தே வருடத்தில் 66கோடியே 65 இலட்சம் உழைத்து, .செய்யும் தொழிலை ஈடுபாட்டோடு செய்து வளர்ச்சி அடைந்து காட்டி“.ஊழல் ராணி”,“வாய்தா ராணி” என்ற பட்டங்களை பெற்று தமிழக தொழில் முனைவோர்க்கு முன்னுதாரணமாக விளங்கி காட்டினார்.


அடுத்தாக ஒருவர்.சிறந்த “மலை முழுங்கி மலைக்கள்ளன்”  என்ற அரிய பட்டத்துடன் மைய அரசால் பலமுறை விருது பெற்ற ..தான் செய்கின்ற கிரானைட் தொழிலை ஈடுபாட்டுடன் செய்து ஒரு மலையையே காணாமல் ஆக்கிய  பெருமையுடன் அடி முதல் நுனி வரை போடு பணம் போட்டு சிறந்த தொழில் வளர்ச்சியை  காட்டி தொழில் முனைவோர்க்கு எடுத்துக்காட்டாக தெரிந்தார்.


வைகுண்டராஜனின் சூறையாடல்
http://www.vinavu.com/2013/09/18/vaigundarajan-garnet-puja/
இந்த இருவருக்கும் ஈடு இணை இல்லாதவராக சொல்லும் அளவுக்கு கடலையே கொள்ளை அடிக்கும் தொழிலை  மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து மைய அரசின் சி.பி.ஐ யே கானவில்லை என்று பொய் சொல்லுமளவுக்கு மிக நேர்த்தியான முறையில் தெற்கத்திய தாது மணல் கொள்ளையன் என்ற பெரும் பட்டத்தை சுமக்க விரும்பாதவராக காட்டிக் கொள்ளும் பெருமை மிக்க தொழிலதிபராக ஓடி ஒளிந்து தன்னை முன்னிலை படுத்திய  தெற்கத்திய தொழில் முனைவவோராக காட்டிக் கொண்டு வருபவர்

 வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !  

ஆக தமிழ்நாட்டில் மட்டும் “செய்கின்ற தொழிலை ஈடுபாட்டுடன் செய்து வளர்ச்சி அடைந்தவர்கள்களின்.செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்து உயர்ந்தவர்களின“ வரிசையில் முதலிடத்தை பிடித்த முப்பெரும் (கொள்ளையர்கள்) மாமனிதர்கள் இவர்கள்..................


வியாழன் 13 2014

இந்தத் தொடரைப் பற்றி புகார் இருந்தால் தெரிவிக்கவும்...

www.tamilula.com



உலகத்தில் இருக்கும் ஸ்டார் டீவியின் பல கிளைகளில் ஒன்றான தமிழக ஸ்டார் விஜய்டீவியில் ஒளி-ஒலி பரப்பாகும் “தெய்வம் தந்த வீடு” தொடரில்

புதன் கிழமை12/11/14 அன்று  காட்டிய காட்சியில் சித்ராவின் மருமகளான சீதா மயக்கம் தெளிந்து முழித்து பார்த்தபோது எதரில் கிருஷ்ணன் சிலை இருப்பதைக் கண்டதும் வேண்டிக் கொள்கிறாளாம்

பக்தி பரவசத்தில் எழுந்திருக்க முயன்றபோது கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது கூமுட்டை சீதாவுக்கு தெரியவருகிறதாம். கட்டுலிருந்து விடுபட முயன்றபோது முடியவில்லையாம்.

சுற்றும் முற்றும் பார்க்கிறாள் சீதா.... பாஞ்சாலிக்கு அவ்வுளோ சேலை கொடுத்து உதவிய மாதிரி..இந்த சீதாவுக்கும் கிருஸ்ணன் உருவில் இருக்கும் கண்ணன் ஒரு “கத்தி”யை கொடுத்து உதவுகிறானாம்.

என்ன பிரயோசனம் கொடுத்த “கத்தி”யோ மொட்டை கத்தி யாக இருக்கிறது.
திருடன் வீட்டில மொட்ட கத்தியா இருக்கும்.. கத்தி கொடுத்த பகவான் பதமுள்ள “கத்தி” கொடுத்து இருந்தால்...தொடரில் நடித்திருந்த சீதா அந்த கத்தியால்  கயிரை அறுத்து தப்பித்தால் என்று ஆறுதல் அடையலாம் 

 கிருஷ்ணன் கொடுத்ததோ..மொட்டை  “கத்தி”  அதை வைத்துக் கொண்டு எப்படி அறுத்து இருப்பாள்..... யோசித்த போது அதையும் ஒரு வினாடிக்குள் காட்டி முடித்துவிட்டார்களாம்.....

 அதோடு அந்த மொட்டக்கத்திய காட்டிய போது...“ இந்தத் தொடரைப்பற்றிய புகார் இருந்தால் தெரிவிக்கவும் என்று  வேறு அறிவிப்பு வந்ததாம்....

இதைப்பற்றி ரெண்டு தொடர் ரசிக மாமணிகள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு இருந்தார்களாம் மொட்ட  “கத்தி”ய பற்றி நாம எப்படி புகார் தெரிவிக்கிறது என்று...

களவானிபய. கிருஷ்ணன் .சீதாவுக்கு மொட்ட....“கத்தி”ய கொடுத்துப்புட்டான்டா..........!!!!!!!!!!!!!

 திருட கொடுத்த கத்தி பட கதையாசிரியர்  பராவாயில்லை..“கத்தி” பார்த்துவிட்டார்.


பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த தலைமையாசிரியர்..

www.vikatan.com



மதுரையைச் சேர்ந்தவர் ஞான செல்வின்ஸ்டார். இவர்  மெட்ரிக்பள்ளிகூடத் தொழில் செய்து வருகிறார் . இவர் நடத்திவரும் பள்ளிக்கூடத்தில் சுந்தர் என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார்

 ஒரு நாள் மெட்ரிக் பள்ளி நடத்தும் முதலாளியின் கல்வி கொள்ளையில் கூட்டணி சேர்க்காததாலோ அல்லது பங்கு  தொகை கொடுக்காததால் என்னவோ..???  மெட்ரிக்பள்ளிக்கூட தலைமையாசிரியர் மாணவர்களிடம்  வசூலித்த கல்விக் கட்டணம் ரூபாய் 2.5 இலட்சத்துடன்  கடந்த பத்து நாட்களுக்கு மேலாகியும்  பள்ளிக் கூடத்திற்கு வராமல்  டிமிக்கி கொடுத்து தலைமறைவானார்.

ஆக..இப்படிபட்ட நல்ல  பழக்கவழக்க வழிமுறைகளுக்கு மெட்ரிக்பள்ளிக்கூடத்தின்  தலைமையாசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

புதன் 12 2014

இதற்குத்தான் ஆசைப்பட்டார் ஒளிஓவியர்..


  • பருவ கால இயற்கை சூழலால் ..எட்டானக்கனியாக மாறிப்போன நிலத்தடி நீர்மட்டம்


  • ஒருபவுன் தங்கமும் ஒரு மூட்டை முந்திரிப்பருப்பும் ஓரே விலையாக இருந்தது ஒரு காலம்.



  • இன்று தங்கம்  20 ஆயிரத்தைக கடந்தவிட்டது. முந்தரிபருப்பு பழைய விலையான 2500 லே விற்கிறது



  • மேய்கின்றமாட்டின் கால்தடம் பதித்தாலும்தண்ணீர்  ஊறிய பூமியில் இன்று தண்ணரில்லை. ........... இப்படி      உதிர்த்தவர்


முப்பது ஆண்டு கால சினிமா வாசம் இருந்தாலும் தந்தை வழி கிராமமான பத்திரக் கோட்டையில்  விடாபிடி விவசாயியாக வலம்  வரும்.ஒளி ஓவியரான் தங்கர் பச்சான்தான்

குழந்ததையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறார்கள்...


படம்-www.vikatan.com

சாராயக் கடையை திறந்து அதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு நல்ல லாபமும் அதிகமான வருமானமும் அடைந்து வரும் தமிழக  நாட்டை ஆண்டுவரும் ஆட்சியாளர்களைப் பற்றி தெரியாதார் யாருமில்லை...

 குடிமக்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் இப்பேர்பட்ட தமிழக அரசு  தமிழ்நாட்டு குடிமகன்களின் குடிப்பழக்கத்தால் மாநிலத்தில் திருட்டு,வழிப்பறி, கொள்ளை.கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும்.

விடுமுறை காலங்களில் குடித்துவிட்டு டூவீலர், கார் முதலிய வாகனங்களில் வலம் வருவதால் விபத்துக்கள் ஏற்ப்பட்டு பலர் உயிரிழந்து வருவதாகவும் போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினாலும் குடிகார குடிமகன்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று ஒப்புக்கு புலம்புகின்றனர்.

சாராயக் கடை வியாபாரத்திலிருந்து வரும் பெரும்பாலான வருமானத்தொகை போலீசுக்கே செலவிடப்படுவதால்..தாங்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதாகக் காட்டுவதற்க்காக சிற்சில இடங்களில் பிளக்ஸ் போர்டை மாட்டி வைத்துள்ளனர். அதிலும் அந்த விளம்பரத்தில்கூட  கள்ள சாராயத்தை குடித்து  பொசுக்குன்னு சாக வேண்டாம். நல்ல சாராயத்தை குடித்து  பலருக்கும் பல அவதி கொடுத்துவிட்டு சாகுங்கள் என்ற ரீதியாக வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. இப்படியாக தங்கள் விழிப்புணர்வை காட்டிவிட்டு..

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 62 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதாக புள்ளி விபரக் கணக்கு காட்டுகிறார்கள்.

கள்ளச்சாராய சாவை தடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் சாவதை காரணமாக காட்டி கள்ளச்சாராயத்தை ஒழிக்காமல்... நல்ல சாராயம் தருகிறேன் என்று சொல்லி  பலபேர் சாவோடு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் குழி பறித்துள்ளனர்.

 கள்ளச்சாராயத்தை தடுக்கவோ, நல்லச் சாராயக்கடையை இழுத்து மூடவோ விரும்பாத வக்கற்றவர்கள். இனி வரும் காலங்களில் போதையில் வண்டி ஓட்டினால் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப் போறாங்களாம். பழைய சட்டங்களின்படியே இந்தச் புதியச் சட்டமும் சாராயம் குடிக்காதவர்களை  புடுச்சு சிறையில் தள்ளுவதற்கே பயன்படும்.

முன்னோரு காலத்தில் சாராயம் குடித்தவர்களை ஊதச் சொல்லி கண்டுபிடித்து அடித்து இழுத்துச் செல்வார்கள். இனியும்  ஊதச் சொல்லி ஏண்டா குடிக்கவில்லை என்று கேட்டு குடிக்காதவர்களை  அடித்து இழுத்து செல்வார்கள்.

இது குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுகிற கதையாகத்தான் இருக்கும்

செவ்வாய் 11 2014

அடுத்தவர் கதையை அபகரித்தவர்களே!! என்னிடம் வாருங்கள் நான் பாதுகாப்பு தருவேன்.

படம்-tamil.thehindu.com


கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கோபி கத்தி யதோடு நில்லாமல் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் நிருபிக்க...

கதை திருடிய இயக்குநர் தரப்பு அம்பலப்பட்டு நிற்பதை கண்டு இயக்குநர்ர் அவர்களை காப்பாற்றுவதற்க்கும் .பாதுகாப்பதற்குமாய், மற்றும் எல்லா வற்றுக்கும்மாய்..

“சங்கத்தின் உறுப்பினர் அட்டையுள்ளவர்கள் தங்கள் கதையின் தலைப்புடன் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும். இதற்க்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் இது இலவச சேவையாக செய்யப்படும்.கதை மற்றும் தலைப்புகள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்து உதவி இயக்குநர்களுக்கு ஒரு ஆப்பு வைத்தும் கதை திருடிய இயக்குநர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துள்ளார்.

தமிழ்திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்கி..ரமன்




திங்கள் 10 2014

தமிழால் பிழைத்து..தமிழின் மானத்தை விலை பேசும் கோல்டன் முத்து.

                                 Vinavu Thalam


தருண் விஜய் என்ற உத்தரகணட் மாநில பாஜக எம்பியான இவர். வட மாநிலங்களில் .

திருவள்ளுவர் பிறந்த நாளை  இந்திய மொழிகளில் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும்,அநீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றும்

தமிழ் இந்தியாவின் இரண்டாவது மொழியாக இருக்க வேண்டும் என்றும்  கஞ்சாக கவிஞன் வாரனாசியில் வாழ்ந்த வீட்டை நிணைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி குரல் கொடுத்து வருவதாகவும்.

அதற்க்காக ..தமிழால் பொழைக்கும் கோல்டன் முத்து, தருண்விஜய்ன் குரல் ஓங்கி ஒலித்தற்க்காக வெற்றித் தமிழர் பேரவை சார்பாக  அவர்க்கு கொடுக்கும விமான வரவேற்பு விழாவிலும் சென்னையில் (11.11.2014-) நடத்தும் பாராட்டு விழாவிலும்..

தமிழால் பொழைக்கும் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டு கோளை விடுத்து  இருக்கிறார்  கோல்டன் முத்து

இதே தருண் விஜய்  இதே ஊத்தவாயால் ஆகஸ்டு 23.2013-ல் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகையில்

சமஸ்கிருதம்தான் இந்தியா.
சமஸ்கிருத்தை நீக்கினால்
இந்தியா அழிந்துவிடும்

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும்
சமஸ்கிருதம் தேவை..

உயர் பதவிகளை பெற சமஸ்கிருதம்
படித்திருக்க வேண்டும் என்ற நிலைமை
முன்னோரு காலத்தில் இருந்ததை
மீண்டும் உருவாக்க வேண்டும் என்று
-கொக்கரித்தவர்.

ஒரு வருடத்துக்குள் அந்தர் பல்டி..ஆகாச பல்டி கொக்கா மக்கா பல்டி அடித்த சமஸ்கிருத-பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டுவதோடு

தமிழால் பிழைத்த நன்றிக் கடனுக்காக தமிழின் மானத்தையும் விலை பேசுகிறார் கோல்டன் முத்து   .

மேலும்...அறிய...http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/

ஞாயிறு 09 2014

ஒன்னுக்கு ரெண்டு அடித்துக் கொண்ட வக்கிரம்

அம்மா போலீஸ்
படம்- வினவு


விருதுநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான ஒரு பெண் போலீஸ். தன்னுடன் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆண் போலீஸ் ஏட்டுவுடனும், எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் இன்னோரு ஆண் போலீஸ் ஏட்டுவுடனும் (கள்ள) தொடர்பில் இருந்து வந்துள்ளது.

அந்த ஒன்னை ( பெண் போலீசை)யார் வைத்துக் கொள்வதில்(ஆண்போலீஸ்) ரெண்டுக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில்

ஒரு நாள் எஸ்பி அலுவலக ஆண் போலீஸ் ஏட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்த அந்த பெண் போலீஸ்-ன் வீட்டுக்கு இரவில் சென்றது

.(எதுக்குன்னு சென்றதுன்னு என்ன கேட்கக்கூடாது.அது கோழி பிடிக்கிறவனை பிடிக்க  போச்சுன்னு நிணைச்சுகிறனும்)

அப்போது. காவல் நிலைய ஆண் போலீஸ் ஏட்டு, அந்தப் பகுதியில் ரோந்து வந்தது.

 ( சத்தியமா..சொல்றேன் ரோந்துக்குத்தான் வந்தது..அப்படித்தானுங்கய்யா பேப்பர்ர்ர்ல..........போட்டு இருக்குது)


எஸ்பி அலுவலக ஏட்டுவின் டூவிலர்....தன்னுடைய பெண் போலீஸ் வீட்டின் முன் நிற்பதை கண்டது  ரெண்டில் ஒன்றுக்கு. வந்ததே.......ஆத்திரம்.....

( மூத்திரம் வரலையான்னனு கேட்குறீங்களா...?? இதுக.. அடிக்கிற அடியில சந்தேக கேசுல புடுச்சுட்டு போயிருக்கிற..அப்பிராணிகளுக்குத்தான் மூத்திரம் வரும்)

ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க எதிராளின் பைக்கை அடித்து நொறுக்கியது. பின் ஆத்திரம் அடங்காமல் வீட்டீற்குள் சென்று எதிராளியான போலீஸ் ஏட்டுவை தான் வைத்திருந்த வாக்கி டாக்கியால் தாக்கியது.

எதிராளி ஏட்டுவுக்கும் கோபம் வந்தது. ரெண்டும் அடிதடியில் ஈடுபட்டு கட்டிபுரண்டு வீட்டின் முன்பு  வந்து  “ பாரதத்தாயின் பொன் மொழிகள்” ஆன வசவுகளால் திட்டிக் சவுண்டு விட்டுக் கொண்டு இருந்தது.

ஒன்னுக்குக்காக அடித்துக் கொணட ரெண்டுகளின் பொன் மொழி  வசவு சவுண்டுகளை  கேட்டு. அக்கம் பக்கத்தில் தேன் தமிழோசை கேட்டு ஓடி வந்த போது..., ஏட்டு ரெண்டும்  உடனடியாக அவ்விடத்தைவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது.

புருஷன் உள்ள அந்த ஒன்னை.(பெண் போலீசை).. யார்  உரிமை பாத்தியம் கொள்வதில் (ஏட்டுகள்) ரெண்டுகள் அடித்துக்கொண்டு சண்டையிட்டது. அந்தப் பகுதிக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதானாப்பா....பெண்ணாயிருந்தாலும் ஆணாயிருந்தாலும் “நான் உங்களுக்கு உதவலாமா.... ?” என்ற மக்களின் நண்பனின்” வக்கிரபுத்தி” 

உங்களின் நண்பனின் வக்கிரபத்தியை அச்சு அசலா படிக்கனுமா...?? இங்க போயி படிங்க....http://www.vinavu.com/2014/10/17/amma-police-atrocities/


ஒரு பழைய சரக்கின் போர் பிரகடனம்

படம்-www.dinamani.com

காங்கிரஸின்
சொத்தை யாரும்
அபகரிக்க..........
முயன்றால்
நேரில் சென்று
நானே.....
(போரிட்டு) காங்கிரஸின்
சொத்துக்களை
மீட்பேன்...............!!!!!!!!!!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...