பக்கங்கள்

வெள்ளி 01 2016

உன்னைப்போல் ஒருவன் உண்டா....



வழிய வந்த
செல்வத்தை காலால்
எட்டி உதைக்கும்
உன்னைப் போல்
ஒருவன் உண்டா.?

நன்றி கெட்ட
மானிடன் நீ
அமுதம் தேனுமான
அவள் உன்னை
கைப்பிடித்த குற்றத்திற்காக

அவளை வாழ
வைக்கத் தெரியாமல
குடிகாரனாக ஆகிவிட்டதோடு
நில்லாமல் சந்தேக
பிராணியாக ஆகி
விட்டாயேடா  நீ.......


வியாழன் 30 2016

ஜெனரல் டயர் இன்னும் சாகவில்லை..


சுட்டேன் சுட்டேன்
குண்டு தீரும் வரை
சுட்டேன் சுட்டேன்
இன்னும் குண்டுகள்
இருந்து இருந்தால்
எல்லோரையும் கொன்று
குவித்து இருப்பேன்
ஆங்கிலேய ஆட்சியை
எதிர்த்தால் என்ன
நடக்கும் என்று
அவர்கள் மனதில்
பயத்தை விளைவிக்கத்தான்
சுட்டேன் சுட்டேன்
 என்று கொக்கரித்தான்
ஜெனரல் டயர்

அந்த டயர்
இன்னும் சாகவில்லை
சென்னை உயர்
நீதி மன்றத்தில்
தலைமை நீதிபதியாக
அமர்ந்து இருந்து
 தமிழக வழக்குரைஞர்
அனைவரும்  பயம்
கொள்ளும் விதத்தில்
34(1) என்ற கருப்பு
சட்டத்தின் மூலம்
தான் இன்னும்
சாகவில்லை  என்று
பயம்  காட்டிக்
கொண்டு இருக்கிறார்




புதன் 29 2016

ஒரு நாள் நடு இரவில்..



அவர் சிறுவனாக
இருந்த காலத்தில்
நடு இரவில்
ஒருநாள்

அவரின் அம்மா
அதிகாலை சமயம்
வேலைக்கு  செல்ல
வேண்டும் என்பதால்
தெருக் குழாயில்
தண்ணீர் பிடிக்க
பல தடவை
அவரை எழுப்பினார்.

பகல் எல்லாம்
நாயாய் அலைந்து
ஊர் சுற்றிய
அலுப்பில் எழுந்திருக்க
அவர் மறுத்து 
விட்ட போது

அவர் அம்மா
ஒரு ஆயுதத்தை
எடுத்து சுங்கு
பிஞ்சு போகும்
எழுந்திரு என்ற
உடன் அறக்க
பறக்க எழுந்து
ஓடினார் தெரு
குழாயை நோக்கி....

செவ்வாய் 28 2016

இவன் அவன் ஆளுய்யா...!!!..



முடுச்சு அவிக்கியா?
மொள்ள மாரியா..??
கேப் மாரியா..???
ஊர் சுற்றியா..????
குடி காரனா..?????
பொறுக்கியா.. தூ....??????
நாயி இவன்
அவன் ஆளுய்யா..!!!!!




திங்கள் 27 2016

எவ்ளோ..முன் ஏற்றம்



அன்று-

தொழில் அகத்தில்
வேலை செய்யும்
தொழிலாளர்கள் அனைவரையும்
வேவு பார்க்க
கருங்காலிகள்.

இன்று-

தொழில் அலுவலகத்தில்
வேலை செய்யாத
ஊழியர்களை வேவு
பார்க்க சிசிடிவி
கேமரா... அப்பே...ய்
எவ்வளோ..முன் ஏற்றம்..



ஞாயிறு 26 2016

அருள் வாக்கு சொன்ன சக்தி அம்மன்.


போடா முட்டாள்
கோவிலு கோவிலா
ஊரு ஊரா
அலையும் கேன
கிறுக்கு பய புள்ள
மவனே!  எனக்கு
அடுத்து  உலகத்தில்
சக்தி வாயந்த
பெண் மணியாக
இரண்டாவது
இடத்தில். இருக்கும்
ஹிலாரி கிளிண்டனிடம்
பக்தி கொண்டு
வேண்டுதல் செய்
அடுத்து அவள்
ஆட்சியில் உன்
பக்தியை மெச்சி
அருள் பாவிப்பாள்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...