பக்கங்கள்

சனி 13 2014

சப்- கோர்ட்டிடம் கேள்வி கேட்டு, பதிலை தானே சொன்ன அய்- கோர்ட்..

சென்னை உயர் அற மன்றம்


கோவை சார்பு நீதி மன்றத்தில் நடந்த சிவில் வழக்கில் அளித்த தீர்ப்பை  எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அப்பீல் செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட நீதி மன்றம் , ஜெ.யின் சொத்து குவிப்பு வழக்கு போட்டியில் கலந்து கொள்ளவதற்கு என்னவோ.. 89 தடவை வாய்தா போட்டு தள்ளி வைக்கப்பட்டது. அதில் ஓரிரு முறை மட்டுமே நீதிபதி இட மாற்றம் என்று காரணம் கூறப்பட்டது.

இந்த 89 முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்ட கால அளவு ஐந்து வருடங்கள் 4மாதம் ஆனது. இந்த தாமத்தை எதிர்த்தும் வழக்கை விரைந்து முடிக்கவும் உத்தரவிடக்கோரி அய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அய் கோர்ட்டு , சார்பு நீதி மன்றமும். மாவட்ட நீதி மன்றமும் ஒரே வளாகத்தில் இருந்தும், வழக்கின் ஆவணங்களை கொண்டு செல்ல ஐந்து ஆண்டுகள் ஆகுமா...என்று கேள்வி கேட்டது.

பிறகு இந்தக் கேள்விக்கு, பத்து ஆண்டுகள்  கழித்து பதில் வந்தால் என்ன செய்வது என்று நிணைத்ததோ என்னவோ... கேள்வி கேட்ட அய் கோர்டடே தான் கேட்ட கேள்விக்கான பதிலை தானே சொல்லியது.

ஆவணங்கள் கம்யூட்டர் மயமாக்காமல் இருப்பதுதான் காரணம் என்று பதில் சொல்லிவிட்டு ,வழக்கு ஆவணங்களை கம்யூட்டர் மயமாக்க அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துவிட்டு..

சார்பு நீதிமன்றம், விசாரித்த அப்பீல் வழக்கை, விசாரிக்கும் மாவட்ட நீதி மன்றத்துக்கு  ,வழக்கின் ஆவணங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென்றும், மாவட்ட நீதி மன்றம் வழக்கை ஒரு மாதத்திற்க்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உத்தரவு போட்டு அய் கோர்ட்டு வழக்கை முடித்துவிட்டது. இனி என்ன  வழக்கின் ஆவணங்களை அனுப்பவதற்குள்ளும்,  வழக்கை விசாரிப்பதற்குள்ளும் வழக்கு தொடுத்தவன் சாக, வழக்கை நடத்தியவன் இல்லாமல் போக, வழக்கு தொடுத்தவனின் வாரிசும் டாஸ்மாக் போதையில் போய்ச்சேர... வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதற்குள் ஆண்டுகள் கடந்து போகும்..


வெள்ளி 12 2014

ஆறு வாழைப்பழத்தை 167 பேருக்கு பிரித்து கொடுத்த சிறைக்கதை!!!

சிறையில் அடைப்பதற்கு முன்னால் அனைத்து கைதிகளையும் ஜட்டி வரை கழட்டி பரிசோதனை செய்து அங்க அடையாளங்களை குறித்துக்கொள்வது தான் சிறை வழக்கம். நமது தோழர்களையும் அப்படி உடைகளை கழட்டச் சொன்னார்கள், ஆனால் முன்னணியாக நின்ற தோழர்கள், “நாங்கள் கிரிமினல்கள் இல்லை அரசியல் கைதிகள் எனவே உடைகளை எல்லாம் கழட்ட முடியாது” என்று கூறியதோடு, “யாரும் சட்டை பட்டனைக் கூடக் கழட்டக் கூடாது” என்று கூறிவிட்டனர். “மச்சம் தானே வேணும் இதோ பார்த்துக்க”ன்னு ஒவ்வொருவரும் தமது அடையாளங்களை காட்டினோம். உடைகளை கழட்ட மறுத்ததும், “ஐயா, சட்டையை கழட்ட மாட்டேங்கிறாங்கய்யா”ன்னு ஜெயிலரிடம் போய் முறையிட்டனர், ஜெயிலர் வந்தார்.

“நீங்கல்லாம் என்ன அமைப்புப்பா” என்றார்.
“பு.ஜ.தொ.மு” என்றோம்.
“ஓ.. ம.க.இ.க வா! சரிய்யா, இவங்க கம்யூனிஸ்டுகள் இவங்களை சட்டையை எல்லாம் கழட்டாம அப்படியே அடையாளத்தை குறிச்சிக்கங்க”ன்னு சொன்னார். இந்த முதல் சம்பவமே எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்டோம். முதல் நாள் இரவு குடும்பத்தை நினைத்து ரொம்ப கஷ்டமா இருந்தது. பல தொழிலாளிகள் மிகவும் மன வருத்தத்தில் உடைந்து போகும் நிலையில் இருந்தாங்க. நானும் அப்படி தான் இருந்தேன் பிறகு எப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு எழுந்தோம். முன்னணியாக இருந்த தோழர்கள் 167 பேரையும் சுகாதாரக் குழு, மருத்துவக் குழு, உணவுக் குழு, குடிநீர் குழு, விசாரணைக் கைதிகளை சந்திப்பதற்கான குழு, தொண்டர் குழு என்று ஆறு குழுக்களாக அமைத்தனர். ஒரு குழுவுக்கு 10 தோழர்கள் இருந்தனர். இந்த குழுக்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டன.
எனக்கு சிறை அனுபவம் புதிதாக இருந்ததால், என்னடா இது சிறைக்குள்ள வந்தும் குழு அது இதுன்னு பண்ணிக்கிட்ருக்காங்களேன்னு தோணிச்சி. ‘நாம ஒரு போராட்டத்தில் கலந்துகிட்டு கைதாகி வந்திருக்கோம், ரெண்டு நாள்ல வெளிய போகப் போறோம், ஏதோ நிரந்தரமா இங்கேயே தங்குறதுக்கு ஏற்பாடு செய்ற மாதிரி குழுவெல்லாம் அமைக்கிறாங்களே’ன்னு கொஞ்சம் எரிச்சலாவும் கூட இருந்துச்சி, பிறகு தான் அது எவ்வளவு சரியானது என்பதை புரிஞ்சிக்கிட்டேன்.
அமைப்பு கூட்டங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் செல்லும் போது தோழர்கள் புதிய ஜனநாயக சமூக அமைப்பைப் பற்றி விளக்குவார்கள். புதிய ஜனநாயக அரசில் நாம் தான் அரசு, நாம் அமைப்பதுதான் அரசாங்கம். மக்கள்தான் அரசை நடத்துவார்கள். அந்த அரசில் ஒவ்வொரு குடிமகனும் தலைவனாக இருப்பான். மக்கள் கூட்டாக உழைப்பார்கள், உழைப்பவர்களுக்கு தான் உரிமைகளும் அதிகாரமும் இருக்கும், மக்களைச் சுரண்டுபவர்கள் கொள்ளையடிப்பவர்களுக்கு அதிகாரம் இருக்காது, இப்படித்தான் சீனாவில் மாவோ தலைமையிலான சீன அரசு இருந்தது என்று விளக்கும்போதெல்லாம் அதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. ஆனால் சிறையில் இந்த ஏழு நாட்களில் நாங்கள் 167 பேரும் ஒரு குட்டி அரசாங்கமாகவே இயங்கினோம். நாங்கள் குழுக்களாக இயங்கியது போலத் தான் புதிய ஜனநாயக சமூக அமைப்பும் இயங்கும், ஆனால் அது இதை விட பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான குழுக்களைக் கொண்டு இயங்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
இனிமேல் சிறையில் கற்றுக்கொண்ட ஒழுங்கு முறைகளை எனது குடும்பத்திலும் அமுல்படுத்துவேன். இந்த மாதிரியான முறைகளை கடைபிடித்தால் ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை எவ்வளவோ குறைத்துக் கொள்ள முடியும், முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு பொருந்துகின்ற இந்த முறைகள் ஒரு நாட்டிற்கு ஏன் பொருந்தாது? இதை ஒரு நாட்டிற்கு பொருத்தினால் அந்த நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உண்மையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசை நம்மால் கட்டியமைக்க முடியும், அதை நாமே நிர்வாகம் செய்யவும் முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையை இந்த சிறை அனுபவம் தான் எனக்கு அளித்தது.
உதாரணத்திற்கு பார்த்தீங்கன்னா தினமும் வெவ்வேறு தொழிலாளர்களின் உறவினர்கள் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில நாட்கள் உறவினர்கள் குறைவாக வருவார்கள், உணவுப் பொருட்களும் குறைவாக வரும். அப்படி ஒரு நாள் மொத்தமே ஆறு வாழைப்பழங்கள் தான் வந்தது. சரி இந்த ஆறு வாழைப்பழத்தை எப்படி 167 பேருக்கு பிரித்து கொடுக்கப்போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் தோழர்கள் அதையும் 167 பேருக்கு பகிர்ந்தளித்தனர். தனியாக நின்று யோசித்தால் என்னடா இது முட்டாள்தனமா இருக்கு, 167 பேருக்கு ஆறு பழம்னா தோல் கூட கிடைக்காதேன்னு தான் தோணும், ஆனால் உண்மை அப்படி இல்லை. கூட்டாக சிந்திக்கும் போது, கூட்டாக உழைக்கும் போது அனைத்தையும் செய்ய முடியும் என்பதையும் இதில் கற்றுக்கொண்டேன் என்றார்.தோழர் அசோக்குமார் :

http://www.vinavu.com/2014/09/10/prison-experience-strengthens-gsh-workers/
நன்றி! வினவு.


தியாகத்தின் விளைநிலத்தை சாதியத் தலைவராக மாற்றிய சாதி வெறியர்கள்..

http://mathimaran.files.wordpress.com/2008/07/voc11.jpg
  




வ.உசியின் பிறந்த நாள் அன்று இந்தியப் பேரரசரின் குரு-உத்சவ் க்கு கலந்து உரையாடுவதற்க்கான ஏற்பாட்டு பரபரப்பில் பள்ளிகள் முழ்கிவிட்ட நிலையில்.சுதேசிப்போர்க்கப்பல் தளபதி வ.உ.சியை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் ஓட்டுக்காக சில அரசியல்கட்சிகள்  வ.உ.சிக்கு சடங்குத் தனமாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்ட நிலையில்,.. சாதிவெறி குலத் தெய்வத்தின் சாதிய வெறியர்கள் போலவே வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்து வந்தது . செக்கிழுத்த செம்மலையும் சாதிய தலைவராக்கிவிட்டார்கள். என்பதையே காட்டியது.

எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல்விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டி களங்கப்படுத்தியது “சுதந்திர இந்தியா” தன்னுடைய சித்தரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிருந்துதான் பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிளோ, தேச விடுதலைக்கு துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

இப்படிபட்ட துரோகிகள் நிறைந்த இந்த நாட்டில்தான்.போர்க்குணமுள்ள தலைவராகவும்,இணையில்லா தியாகியாகவும் திகழ்ந்த வ.உ.சியை தியாகத்தையும் துரோகத்தையும் பகுத்து பார்க்காத  கயவர்கள்

சுதேசி போர்க் கப்பல் தளபதியை..வெள்ளாளர் சமூகத் சாதியத் தலைவராக மாற்றிவிட்டார்கள் . வெள்ளாள சமூக சாதிய வெறியர்கள்.

இப்படிபட்ட தியாகித்தின் விளைநிலத்தை சாதியத் தலைவராக மாற்றிதற்கு, சுழி போட்டு வழிகாட்டியாய் இருந்தவர்கள்.சாதி வெறி குலத் தெய்வத்தை சர்வதேச தரத்துக்கு தூக்கி நிறுத்த அயராது பாடுபடும்  ஜாதிய வெறியர்கள்தான்.என்பது  எத்தனை பேருக்கு தெரியும்.

வியாழன் 11 2014

பட்டையை கிளப்பும் தேர்தல் அதிகாரியும்..துாள் பரப்பும் பாஜக கட்சியினரும்

election logo
http://tamil.webdunia.com/


மதுரை மா...நகராட்சி வார்டு 85-ல் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக ஹரிகர சுதன் போட்டியிடுகிறார். அவருக்கு மாற்று வேட்பாளராக  கர்த்திகேயன் மனு செய்தார்.

வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் ஹரிகரசுதனுக்கு மன்மொழிந்தவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக தகவல் பரவியது.

தேர்தல் அதிகாரி பழனிச்சாமியும் இதை உறுதிப்படுத்தும் விதமாக  அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு நோட்டீஸ் போர்டில் ஒட்டினார்.

தகவல் அறிந்து வந்த பாஜ வேட்பாளர் ஹஹரிகரசுதனும் கட்சியினரும் விரைந்து வந்து தேர்தல் அதிகாரி அறையை முற்றுகையிட்டனர்.

ஹரிகரசுதனுக்கு முன்மொழிந்த பாஸ்கரன், மாற்று வேட்பாளரான காத்திகேயனுக்கு முன்மொழிந்த சரவணக்குமார் இருவரும், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து கையெழுத்துட்டு  மனுக்களை வாபஸ் பெற்று சென்று விட்டதாக கூறி,அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களை காட்டினார் தேர்தல் அதிகாரி.

பாஸ்கரன், சரவணக்குமார் இருவரும் தன்னுடன் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும்போது, அவர்கள் வந்து கையெழுத்து போட்டு மனுவை வாபஸ் பெற்றதாக சொல்வது பொய் என்றும் இது அவர்கள் கையெழுத்து இல்லை. போலி கையெழுத்துகளை போட்டு, அதிகாரிகளும், அதிமுகவினரும் சேர்ந்து நாடகம் நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டி கோஷமி்ட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

மாநகராட்சி கமிஷனர்., இவர்களுக்கு பதில் சொல்ல மறுத்து, காரில் ஏறும்போது, காரை மறித்து எதிர்ப்பைக் காட்டினர். அங்கு இருந்த போலிசார் பாதுகாப்பாக கமிஷனரை அனுப்பி வைத்தனர்.

பாஜக வேட்பாளரோ.. எங்களில் யாரும் கையெழுத்து போட்டு வாபஸ் வாங்கவில்லை. ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த நாடகம் தேர்தல் ஜனநாயகத்துக்கே எதிரானது. அதிமுகவின் அராஜகம் எல்லை மீறி போகிறது என்றார்.

பாஜவின் நகர் மாவட்ட தலைவர் முத்தனசாமி என்பவரோ..“ எங்கள் ஆட்கள் வாபஸ் பெற வந்திருந்தால், இங்குள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகி இருக்குமே? அதைக் காட்டச் சொல்லுங்கள் என்று தன் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.

பாஜ பிரச்சார அணியின் மாநிலத் துணைத் தலைவர் சசிராமன். “தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிச்சாமியின் ராஜினாமா கடிதத்தை தெருவில் போகிற ஒருவர் கொடுத்தால் அவரை ராஜினாமா செய்யச் சொல்வார்களா? என்றும் இந்த அநியாயத்துக்கு (அ)நியாயம் வேண்டும் என்று தூள் பரப்பினார்.

புதன் 10 2014

பட்டையை கிளப்பும் தமிழக அரசு........

inioru.com



மக்கள் நல பணியாளர்களுக்கு  மீண்டும்  வேலை தர முடியாது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்...........


பட்டையை கிளப்பிய நடிகரும், துாள் பரப்பிய நடிகையும்


http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_922675728798.jpg



ஹீரோக்கள் கடுமையாக உழைப்பதில்லை. நான் மட்டுமல்ல. எந்தக் ஹீரோவும் கடுமையாக உழைப்பதில்லை. கடுமையாக உழைத்தேன் என்று ஹீரோ சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லி பட்டையை கிளப்பினார் நடிகர்.

தமிழ் சினிமாவில் புதிய அலை வீசு கிறது. இளைஞர்கள் சாதிக்கிறார்கள். சித்தார்த கடின உழைப்பாளி. அவரு சினிமா பைத்தியம். இந்த வருடம் அவருக்கு பெரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது என்று ஹீரோவுக்கு பிடித்த ஹீரோயின் சொல்லி தூள் பரப்பி விட்டார்.

செவ்வாய் 09 2014

பட்டையை கிளப்பிய பாண்டியன்.....!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_14948236943.jpg


எங்கள் கட்சி ஆயுதப் போராட்டம் வேண்டாம் என நிணைக்கிறது.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

கம்யயூனிஸ்ட் கட்சிகாரர்களை தொட்டவர்களை விடக்கூடாது.

(அடேங்கப்பா...எவ்வளவு   பில்..............டப்பு)

திங்கள் 08 2014

ராமரையே ஏமாற்றிய பாஜக...........

http://www.dinamani.com/


ராமர் கோயிலை பாஜக நேரடியாக கட்ட போவதில்லையாம்.

பின்னே....!!!

ராமரின் வானரங்களையே சித்தாளாக, கொத்தனார்களாக ஆக்குன பிறவு அவுக மூலமாகவே ..கட்ட போறாங்களாம்.

ஞாயிறு 07 2014

முன்னால் போனால் கடி, பின்னால் போனால் உதை..


http://www.dinamani.com/


முன்னால் போனால் கடி,பின்னால் போனால் உதை என்பது ஒரு பழமொழி அந்த பழமொழிக்கு இந்த சம்பவத்தை உதாரணமாக கொள்ளலாம்.

சட்டீஸ்காரில் சுக்மா மாவட்டத்தில் கடந்த மார்ச் 11 தேதி அன்று நூற்றுக்கு மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.எப. வீரர்களும், மாநில போலீசாரும் உயிரிழந்த சம்பவத்தின் போது

சீ.ஆர்.பி. எப் வீரர்கள் சிலர் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்க்காக  தப்பி ஓடி விட்டார்கள். தப்பி ஓடிய வீரர்கள் மீது கடமை தவறிய குற்றத்திற்க்காக சஸ்பென்ட செய்யப்பட்டனர்.


( சஸ்பென்ட் ஆனால் என்ன? உயிர்க்கு ஆபத்தில்லாமல், பாதி சம்பளம் கிடைக்குமில்ல)

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...